ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 4, 2009


புறம்போக்குகள் மற்றும் சிலவற்றிற்கும்


"ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுசரைக் கடிப்பது" என்று ஒரு சொல்லடை இருக்கின்றது. போயஸ் கார்டன் அங்காள பரமேஸ்வரிக்கு ஒருவர் பதிவு போட்டிருக்கார். கருணாநிதி மகிமையே பிராப்தி என்று சாமியே வந்தது போல ஆடியிருக்கிறார்.

"ஏய்யா உங்க அரசியல் சித்து விளையாட்டுகளுக்கெல்லாம் அடிபட்டுச்செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தானா ..பலி.. உங்க ஐயா என்ன புடுங்கினார் அம்மா என்ன செய்தார் என்பதெல்லாம் .. உங்க அரசியலோடு இருக்கட்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் மக்கள் எல்லாம் தங்கள் உறவுகளுக்காகப் போராடுகின்றார்கள் ..உண்ணாவிரதமிருக்கின்றார்கள்.. மூன்று மணி முதுகுவலி விளையாட்டா இது? அவர்களைப்பற்றிப் பேசுவதற்கு நீ யார்?

ஜெ அப்படிச்சொன்னதால் சந்தோஷப்பட்டதில் என்னதவறு? துன்பப்பட்டு தண்ணீரில் இருந்து தத்தளிப்பவனுக்கு சிறு துரும்பு கிடைத்தாலும் மகிழ்வதில் என்னதவறு? கலைஞர் புடுங்குவார் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் தானே நாங்கள்...இன்று முதுகில் குத்தியது யார்?

தமிழனை அழிக்கவென்று இந்தியப்படை அனுப்பிய சோனியாவின் முந்தானையைப் பிடித்து அலையும் கலைஞரைப்பார்த்து வெறுத்துப் போய் இருப்பதில் என்ன தவறு? யுத்தத்தை தொடர்ந்து மக்களை அழிப்பதற்கு வசதியாக த்ந்தி அடித்து தந்தி அடித்து காலம் கடத்தியது போதாதென்று மூன்று மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்த நாடகம் ஆடியது யார்?

மேனன் வகையறாக்கள் தூது போய் போர் நிறுத்தம் பற்றியே கேட்கவில்லை இந்தியா எப்போதும் எங்களைப் போர் நிறுத்தம் கேட்டு நிர்ப்பந்திக்கவில்லை..அதைபற்றியே பேசவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஸே அறிவித்திருக்கும் போது.. சிதம்பரம் சொல்லி விட்டார் .. சிறிலங்கா போர் நிறுத்தம் அறிவித்து விட்டது என்று துண்டைத்தூக்கி தோளில்ப்போட்டுக்கொண்டு நடையைக்கட்டியது யார்? எத்தனை சுத்த அயோக்கியத்தனம்...

சரி போர் நிறுத்தம் நடக்கவில்லை..தெரிந்துவிட்டது.. இந்தியா கேட்கவில்லை..அதனால் செய்யவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஸே சொல்லி விட்டார்.. சரி இப்போதாவது உண்மை தெரிந்ததே என்று மத்திய அரசை ஏன் போர் நிறுத்தம் கேட்டு இவர் நிர்ப்பந்திக்கவில்லை?

அவருக்கு மனமில்லை.. தமிழன் எக்கேடு கெட்டால் என்ன? தன் நலன் தன் குடும்ப நலன் மட்டுமே முக்கியம்.. தமிழன் செத்தால் என்ன? தொலைந்தால் என்ன என்பவரிடம் போய்க் கேட்பது தானே?

"ஐயா..நீ தானே தமிழன் தமிழன் என்று பேசுகிறாயே.. அதை நம்பித்தானே நாம் உன் பின்னால் வந்தோம்..எம் தமிழர் சாகிறார்களே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மத்திய அரசை வற்புறுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வா என்று கேட்பது தானே?

அங்காளபரமேஸ்வரிக்கு ஆராத்தி எடுக்கும் நேரத்தில் உங்க ஐயாவிற்கு ஒரு கோவணம் கொடுத்து அவர் மானத்தை காத்துக்கொள்ளச் சொல்லலாமே?

நாங்கள் அப்படித்தான் ஐயா..யாராவது உங்களைக்காப்பாற்றுகின்றோம் என்றால் அவர்களுக்கு நன்றி சொல்லுவோன்ம்..வாழ்த்துச் சொல்லுவோம்.. ஏனென்றால் எங்கள் உறவுகள் ஒவ்வொரு கணமும் செத்து மடிகிறார்கள்.. கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார்கள்.. எந்த தேவலோகத்திலிருந்தாவது ஒரு தேவன் வந்து காப்பாற்ற மாட்டானா என்று கதறித் துடிக்கிறார்கள் ஐயா...

உங்களைப்போல் தின்ற சோறு செரிக்க கதை எழுதவோ கவிதை எழுதவோ தந்தி அடிக்கவோ எங்களுக்கு நேரமில்லை... உங்களால் உணர்வு பெற முடியாவிட்டாலும் உங்கள் மனம் மரத்துப் போய் இருந்தாலும் எங்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள்...

"தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு.."

எவ்வளவு எகத்தாளம் உமக்கு... தமிழீழம் வேண்டுமென்பது கனவல்ல..

அப்படித்தான் செய்வோம் ஐயா ..ஜெயலலிதா மட்டுமல்ல ..நீங்களோ..அல்லது எந்த ஒரு நாய் .. சிறு ஆறுதல் வார்த்தை சொன்னால் கூட நாங்கள் ..கற்பூரம் கொழுத்தி பூசிப்போம் ஐயா.. எங்களுக்குத் தேவை போர் நிறுத்தம்..எங்கள் மக்கள் உயிர்கள் காக்கப்பட வேண்டும்.. அதுதான் எங்களுக்கு முக்கியம்..

உங்கள் அரசியலை உள் குத்துகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.. எங்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.. இத்தனை தமிழ் உணர்வாளர்கள் கண்ணீர் விடுவது ....சும்மாவல்ல..உங்கள் குள்ள நரித்தலைவரின் தகிடுதத்தங்களைக் காப்பது உங்களுக்கு வேண்டுமானால் பெரிதாயிருக்கலாம்.. ஆனால் எம்மக்களின் துயரங்களை கேவலப்படுத்த வேண்டாம்..

இந்தியா சிங்களவனுக்கு ஆயுதம் கொடுக்கிறது..ஆளணி அனுப்புகின்றது.. அதைக்கண்டித்து ஒரு பதிவு போடத் துப்பில்லை... தமிழனாக இருக்க வேண்டாம் ..ஒரு மனிதனாகவேனும் இருக்கலாம் தானே...அட்லீஸ்ட் அதற்காக முயற்சிக்கலாம் தானே...

14 comments:

ராஜ நடராஜன் said...

முகப்பின் படம் பார்த்தாவது புறம் சொல்லுங்களய்யா.

Dr.Rudhran said...

உங்கள் உணைவுகள் புரிகிறது.. ஆனால் அந்தப்பதிவு ஈழ வலியை வேடிக்கை செய்வதைவிடவும் அரசியலின் அநாகரீகங்களைப் பற்றியதாகவே எனக்குத்தோன்றியது, மீண்டும் படித்துப்பார்க்கிறேன்

புலிகேசி said...

தனக்கு என்றால் தான் அவனவனுக்கு வலிக்கும் போல் இருக்கு பொத்திட்டு போடா

இட்டாலி வடை said...

ராவணன்:

ராவணன் has left a new comment on your post "புறம்போக்குகள் மற்றும் சிலவற்றிற்கும்":

லக்கிலுக் என்ற பதிவர் ஜெயலலிதாவை எவ்வளவு திட்டினாலும் யாருக்கும் கவலை இல்லை,ஆனால் அதைவிட கருணாநிதி என்ற நபர் ஒன்றுமே செய்ய இயலாத கையாலாகாத நபர் என்பதைப் புரிந்தும் இதுபோன்று பதிவுகள் எழுதுவதைப் பார்த்தால் மூளை இல்லாத வெறும் ..டமோ என்று தோன்றுகிறது.

கருணாநிதி எத்தனை ...னுக்கு வேண்டுமானாலும் ...விடலாம்,ஆனால் மற்றவர் எதுவும் பேசக்கூடாது.

உலகிலேயே மிகவும் மோசமான அரசியல் கோமாளி கருணாநிதிதான் என்பது உறுதி.

1969-ல் இந்திராவின் முந்தானையில் ஒளிந்துகொண்டு தமிழினத்தை அடகு வைத்த ஒரு நபருக்கு ஆதரவாக எழுத வெட்கமாக இல்லை.இந்திரா .... இல்லையா?
அன்று இந்திராவிடம் எத்தனை கோடி வாங்கினாராம் அந்த கருணாநிதி என்ற நபர்.
வாஜ்பாயை ஆதரிக்க எத்தனை கோடி வாங்கினாராம் அந்த நபர்.

விபச்சாரியிடமே திருடிய பண்பு எப்படி இருக்கும்.

பெரியாரின் தொண்டனாம்,மனைவி,துணைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதை தடுக்க முடியாத கோழைதானே அந்த நபர்.

தேவதாசி வழிவந்த நபருக்கு ... புத்திதானே இருக்கும்.இன்னும் இரண்டு மாதத்தில் மண்டையைப் போடப்போவது உறுதி.

இன்னுமொரு பதிவர் கருணாநிதி என்ற நபரை பழிப்பவர்களுக்கு ஆப்பு வைக்கப்போறானாம்.வேண்டுமானால் கொஞ்சம் பால் வாங்கிவைத்துக் கொள்வது நல்லது..கருணாநிதி என்ற நபருக்கு ஊற்ற...ஈழத்தமிழரை பழிப்பவர் ஒழுக்கமான முறையில் பிறந்திருக்க மாட்டார்.


=வாருங்கள் ராவணன் ! சில சொற்களை மறைத்திருக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. = இட்டாலி வடை

வெண்காட்டான் said...

thanks. Congress DMKya thurahta vendiyathu than muthal kadamai. thurrookikal

Kurai Ondrum Illai said...

நண்பரே !!!
கோபம் வேண்டம்!! ஆனாலும் என்ன செய்ய !!! உணவில் கொஞ்சம் உப்பும் , உணர்வில் அதிக நெருப்பும் இருக்கிறதே !
அபி அப்பா மற்றும் லக்கி லுக் போன்றவர்கள் தங்கள் மனசாட்சியை மறந்து எழுதிக்கொண்டு உள்ளார்கள்.
அடுத்தவனை ஏமாற்றுபவன் புத்திசாலி , தன்னை தானே ஏமாற்றுபவன் முட்டாள் !! மேற்கூறிய இருவரும் அவர் தம் தலைவரும் யார் என்பது யாவருக்குமே தெரியும் !

நண்பரே எதிரியை எப்படி வெல்ல வேண்டும் தெரியுமா ? அவரை நீங்கள் உங்கள் தலையில் இருந்து உதிரும் முடியை விடவும் கேவலமாக மதித்து உதாசீனபடுத்த வேண்டும்.
உலகிலேயே விலை மதிக்க முடியாத உங்கள் நேரத்தை அந்த குப்பை பதிவுகளில் செலவிட வேண்டாம்..

நான் கடவுளை நம்புகிறவன் . தெரிந்ததே தவறு செய்பவன் தன் கண் எதிரே தனக்குரிய தண்டனையை அடைவான் ..

இட்டாலி வடை said...

//ராஜ நடராஜன் said...

முகப்பின் படம் பார்த்தாவது புறம் சொல்லுங்களய்யா.//

வாங்க ராஜ நடராஜன்!

இட்டாலி வடை said...

வாங்க டாக்டர்!

"தமிழீழம் வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்காவென அவரவர் இருக்கும் பகுதிகளில் மேடை போட்டு அங்காளப் பரமேஸ்வரியாம் அம்மன் ஸ்ரீ ஜெயாவை பூஜை செய்து வழிபட்டு.."

இட்டாலி வடை said...

வாங்க புலிகேசி!

பொத்திட்டுப்போகணுமா ..? நீங்களா ? நாங்களா?

இட்டாலி வடை said...

வாங்க வெண்காட்டான் !

//Congress DMKya thurahta vendiyathu than muthal kadamai//

நிச்சயம்..

இட்டாலி வடை said...

வாருங்கள் குரையொன்றும் இல்லை !

//தங்கள் மனசாட்சியை மறந்து எழுதிக்கொண்டு உள்ளார்கள்....//

அதே தான்..

Unmai said...

//சோனியாவின் முந்தானையைப் பிடித்து அலையும் கலைஞரைப்பார்த்து //

தப்பா சொல்றீங்க!! சோனியாவின் சாரிக்குள் புகுந்து கொண்டு என்று இருக்க வேண்டும்.

லுக்கு எதை எழுதினா நமக்கென்னா!!
ஹிட்டுக்காக எழுதுறவங்க எத வேணுமின்னாலும் எழுதுவாங்க

Anonymous said...

சோனியாவின் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் ரத்து இந்த பிணம் தின்னும் பதிவர்களுக்கு விழுந்த முதல் அடி.

canadaramji said...

ஹிட்டுக்காக எழுதரவன் எல்லாம் ‘பிட் படம் பாப்பவனின் மன நிலையே.. அவனுங்களை விட்டு தள்ளுங்கள். இவனுங்க தான் கழகத்தையே தாங்குவதாக நினைப்பு...


ஐயா..நீ தானே தமிழன் தமிழன் என்று பேசுகிறாயே.. அதை நம்பித்தானே நாம் உன் பின்னால் வந்தோம் //// மிகச்சரியான உண்மை...


நான் கடவுளை நம்புகிறவன் . தெரிந்ததே தவறு செய்பவன் தன் கண் எதிரே தனக்குரிய தண்டனையை அடைவான் ...// இதுவும் சரிதான்.

பெற்றோர் செய்யும் பாவங்கள் பசங்க தலையில் விடியும் .. அதுவும் தெரிந்தே செய்தால் ஏழு ஜென்மத்திற்கும் விரட்டும் என்று எங்க ஊர் பாட்டிமார்கள் சொல்வதே நினைவிற்கு வருகிறது..

அய்யோ பாவம்... இது இவனுங்களுக்கும் சேர்த்து தான்...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil