
சராசரித் தமிழனுக்குள்ள கேள்விகள் தான் என்னிடமும் தொக்கி நிற்கின்றன. சிங்களச் சிறிலங்காவின் "படங்காட்டல்" பற்றி நிறையவே சந்தேகம் இருக்கின்றது. சாதாரண புலி வீரர்களையே "அம்மணமாகப்" போட்டு ஷோக்காட்டிய சிங்கள வெறுப்பு வாதம் புலித் தலைவரின் உடல் கிடைக்கும்போது அவ்வளவு கமுக்கமாக எரித்து கடலில் கரைத்து விடாது.
சிங்களப் படைத் தளபதியினதும் சிங்கள அரசியலாளர்களினதும் முன்னுக்குப் பின்னான வெளிப்படுத்துகைகள் என் சந்தேகத்தை இன்னும் இன்னும் விரித்துச்செல்கின்றன.
ஆனாலும் இன்று பிரபாகரன் சுயமாக இல்லாது "சூழ் நிலை"க் கைதியாக எங்கோ ஒரு இடத்தில் முடக்கப் பட்டிருக்கின்றார். பிரபாகரனின் இறப்பு பற்றி முன்னுக்குப் பின்னாக அறிக்கை விடும் செல்வராஜா பத்மநாதன் தன்னும் சுயமாக இயங்குகின்றாரா? என்பதைப் பரிசீலனை செய்து கொள்வது தமிழீழ அனுதாபிகளுக்கு நன்மை பயக்கும். அவரும் ஒரு சில சக்திகளின் "ஆசையை" முன்மொழியக் கூடும் அல்லது அடிபணியக் கூடிய நிலையில் இருக்கக் கூடும்.
பத்மநாதனின் அறிக்கையையே மறுதலிக்கக் கூடிய அளவிற்கு அறிக்கைகள் விடுமளவிற்கான "தொடர்புகளை" வைகோ மற்றும் நெடுமாறன் கொண்டிருக்கக் கூடும். அப்படியான தொடர்புகளை புலித் தலைமையும் கடைசி வரை பேணவே விரும்பும்.
இவ்வகையான முரண்பாடுகளூடான தகவல்கள் புலித் தலைவர் ஒரு "சூழ்நிலைக்கைதி"யாக இருப்பதான சந்தேகத்தைத் தான் அதிகரித்துச் செல்கின்றது. நம்பக்கூடாத "சக்தி"களை நம்பியதால் புலித் தலைமை இவ்வாறான ஒரு இக்கட்டை அடைந்திருப்பதாக நிறையவே நம்பிக்கை கொள்ளலாம்.
எது எவ்வாறாக இருந்த போதும் புலித் தலைமையின் உயிர் வாழ்தல் அல்லது இறப்பு அடுத்து வரும் சர்வதேச நாடுகளின் அரசியல் காய் நகர்த்தலிலேயே தங்கியிருக்கின்றது. மேற்கு நாடுகளின் மேலேயே இதற்கான சந்தேகங்கள் குவிந்திருக்கின்றன. மேற்கு நாடுகளின் நலன்களை அனுசரிக்கக் கூடிய அரசியல் முடிவுகளை புலிகள் எதிர்வரும் காலங்களில் எடுப்பது புலித்தலைமையை உயிரோடு மீட்டுவரக்கூடும்.
இன்று வரை புலித்தலைமை உயிருடன் இருக்கின்றது என்பதே என் கணிப்பு. சீனாவுடனான அவர்களின் போராட்டம் சிங்களத்துடனான எமது போராட்டத்துடன் நேர் கோட்டில் இப்போது சந்திக்கின்றன. எதிர்வரும் ஈழப்போர் இந்த நேர் கோட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படக் கூடும்.
(இது எனது கருத்து மட்டுமே)
2 comments:
Prabha is dead
காந்தி வாழ்ந்த காலத்தில் எத்தனை கோடிபேர்கள் வாழ்ந்திருப்பார்கள்.
காந்தியால் சுதந்திரம் கைகூடியது என்பதற்காக கட்டபொம்மனையும் பகத் சிங்கையும் மறந்தா போய்விட்டோம். இதில் யார் பிரபாகரன் என்பதைக் காலம் தான் கை காட்டும்.
Setha Paambai adikkum Suurargalai vittu Thallungal.
Puli alinthaalum Puli Puli thaan.Poonai Aagaathu.
sae kuvaravai vida sirantha veerar Thalaivar Prabakaran ena Ulagam Paesum.
Unmayai maraikka ninaikkum ettaparkalai ellam yaesum.
கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்kum intha Ulagil, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் பிரபாகரன் ena Ungalai Pola ennam konda Pala kodi Thamilargalil naanum oruvan.
( Nile Raja )
Post a Comment