ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 30, 2009


அழகிரி வடைகறி ஆன கதை


நம்ம அப்பி ஒரு பதிவு போட்டிருக்காப்ல. உலக மகா முக்கியமானது அந்தப் பதிவு.பேட்டை ரவுடி ..நாட்டு ரவுடி ஆகும் முஸ்தீபு அது... டில்லி வரை ரவுசு விட ஆரம்பிக்க...ஹைய்யோ ஹைய்யோன்னு கைதட்டல் ஆரம்பிச்சாச்சு... விசிலடி வேறு..

தனிப்பெட்டி போட்டு காலேஜிப்பசங்க ஊட்டுக்கு வாராங்க அதிரடி ஒண்ணு. அப்படியே மதுரைய மீட்ட சுந்தர பாண்டியன் வன்னிப்பக்கமும் ரயில விட்டு முகாமில இருக்கிர மக்களையும் மீட்டு வந்தா நல்லா இருக்கும்.அவ்வளவு துன்பத்தில நொந்து போயிருக்காங்க.

நம்ம கருப்பு கண்ணாடி கழட்டாத கலைஞரு பூங்காவுக்கு நாடா வெட்டிக்கிட்டிருக்காரு.. நாடா எல்லாம் கிடையாது... காலில் எழுந்து நிற்க முடியா தள்ளாமையிலும் காரில் உட்கார்ந்து ரிமோட்டில் ஓபனிங் செய்யுராரு... பொக்கரானில் குண்டு போட்ட கலாமு வீட்டிலிருந்தே ஓபனிங் செய்யும் வசதிகளைச் செய்து கொடுத்தால் நன்றாகவிருக்கும்..

இனி கார் வரை நடந்து செல்ல முடியாவிட்டாலும் கடைசி வரை முதல்வர் அவர் தானே.. அவருக்காக இது கூட செய்ய முடியாத விஞ்ஞானிகளா ஏரோ பேஸில ராக்கட் விடப்போராங்க..

அப்புரம்.. 40 க்கு 40 நாறிப்போனதால் ஜெயலலிதா அடிப்படை மெம்பர் கார்டு வித்துக்கிட்டிருக்காங்க. அடுத்த தேர்தல் வரை கொரநாட்டில போய் ஓய்வு எடுப்பதைத் தவிர அவுங்களுக்கு வேலையே இல்லாததால சுய வேலை உருவாக்கிக்கிட்டு இருக்காங்க.. சுய வேலை வாய்ப்புத் திட்டம்.. ம்.ம்.. உட்கார்ந்து யோசிக்கிராங்க..

அடுத்தது நாற்காலி காலியாகாது போக ஸ்டாலின் நச்சரிப்பு தாங்காம துணை நாற்காலி போட்டு கொடுத்திருக்காங்க.. நம்ம சார்லஸு இத்தனை படு கிழடு ஆகியும் இன்னும் இளவரசர் தான்.. மன்னர் ஆகாமலே இறந்து போகப் போகிரார். அம்மா அசைந்து கொடுக்க மாட்டேங்கிராங்க...இதை எலிஸபெத் கிட்ட இருந்து க.க.க.க.க கத்துக்கிட்டாரா(அட எத்தனை க...கருப்பு கண்ணாடி கழட்டாத கலைஞர் கருணாநிதி...)அல்லது க.க.க.க.க விடமிருந்து எலிஸபெத்து அம்மா கத்துக்கிட்டாங்களா?

இதே போக்கில் போனால் நம்ம அழகிரியும் ஒரு இணை நாற்காலி போட்டு பக்கத்திலேயே உட்கார வேண்டியது தான்..

இருக்கப்பட்ட அமைச்சர்களிலேயே மம்தா தான் ஏழை அமைச்சராம்..சில லட்சம் ரூபாதான் சொத்து வைச்சிருக்காங்களாம். அடுத்த தேர்தலுக்கு இடையில் கோடீஸ்வரி ஆகிடுவாங்களாம். ரயிலில போர நம்ம காசுதான் அவங்களைக் கோடீஸ்வரி ஆக்கப்போகுது..

இந்த அப்பா மகன் பாசம் ந்ம்மாளுங்களுக்கு மேலா வட நாட்டிலும் இருக்கு.. சிபு சோரன் தன் மகனின் கடைசி ஆசையை நிரைவேத்தப் போறாராம்.. அட இந்த அரசியலில இருக்கிரவங்க 'மக்கள்'னா தன் சொந்த மக்களையே நினைச்சுக்கிராங்க..

அழகிரிக்கும் அடிப்படை மெம்பர் காட்டு விற்கும் திட்டம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க... நானும் ஒரு துண்டைப் போட்டு இடம் பிடிக்கத்தான்... "நம்ம" எதிர்காலம் அங்க தான் இருக்கு... க.க.க.க.க விற்கு பிறகு அழகிரி வடை கறி தான் அதிகம் விற்கும்.

எழுதி வெச்சுக்குங்க ஸ்டாலினை எல்லாம் நாடு கடத்தி விட்டு அழகிரி அண்ணாச்சி அசராம அடிப்பாரு... நம்ம எம்.ஜி.ஆர் மாதிரி சத்துணவிற்கு முட்டை கொடுக்கிர மாதிரி ..எல்லாம் புஜ பல பராக்கிரமந் தான்.

ஸ்டாலின் அவுரங்க சீப்பா மாறி சாஜகான் போல க.க.க.க.க வை வீட்டுக் காவலில் வைத்து ஆண்டால் தான் உண்டு.. அப்புறம் எல்லாம் அழகிரியின் வடை கறி தான்... அப்பா.. இப்பவே வாசனை மூக்கைத் துளைக்கிரதே...

9 comments:

அபி அப்பா said...

நல்ல பதிவு!

இட்டாலி வடை said...

வாங்க அபி அப்பா!
எதை வைச்சு சொல்லுரீங்க ..இது ஒரு நல்ல பதிவுன்னு..

அபி அப்பா said...

எனக்கு வடைகறின்னா பிடிக்கும். நம்பினா நம்புங்க மாலை வரும் போது 8 மசாலா வடை வாங்கிவந்தேன் கிராண்ட் மால் வாசல் கட்டையீலே. நம்ம ரூம் மெட் ஒருத்தனும், மெஸ்மெட் ஒருத்தனும்.(மொத்தம்3 பேர் மெஸ்) ஆனா அவங்க அதிஷ்டம் இன்னிக்குன்னு பார்த்து லேட். வடை ஆறி போச்சு. மசால் வடை மாத்திரம் ஆறினா திங்க கஷ்ட்டம்.

உடனே அதிலே போய் ஒருத்தன் ரெடிமிக்ஸ் இட்லிமாவு பாக்கட் வாங்கிவர ஒருத்தன் கமகமன்னு வடையை பிச்சு போட்டு வடகறி செஞ்சாச்சு.

நானே 3 நாள் ஜுரத்திலே இன்னிக்கு தான் கஞ்சியில் இருந்து ரசம் சாதம் வரை வந்தேன்.

ஆனா சூடான இட்லியும் வடகறியும் என்னை ஈர்க்கவே ஒரு பிடி பிடிச்சுட்டு நெட்டை பார்த்தா உங்க பதிவு!

உடனே போட்ட கமெந்த் தான் இது!

நான் உங்களை சீரியசா எப்போதுமே எடுத்துப்பது இல்லை. நல்ல சிரிக்க வைக்கும் அரசியல் பதிவு உங்களுக்கு தோன்றுவதை நல்ல நகைச்சுவை நடையில் எழுதறீங்க!

இது உங்க பிளாக்! எதுவும் எழுத உங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கு. எனக்கு நல்லா தெரியும் நீங்க உங்களுக்கு பிடிக்காத பதிவிலே போய் வாந்தி எடுத்தது கிடையாது சில அனானிகளை போல!

இப்படிக்கு உங்கள் பதிவை
மீ தி பஷ்ட்டா படிக்கும்

அன்பு அபிஅப்பா

இட்டாலி வடை said...

அட அபி அப்பா..உடனும் சீரியஸ் ஆகணுமா..? எனக்கும் அபி அப்பா..ஹைக்கூ கணேஷ்...பலூன் மாமான்னு ஆதியான நண்பர்கள் இருந்தார்கள்... என்ன ஒரு ஐந்தாறு வருஷமிருக்குமா.. இப்போ எல்லாம் சொந்தப் பேரில் எழுத ..விருப்பமில்ல..யாரையும் காயப் படுத்தினாலும்..அவ்வளவு கோபம்... முகத்தை மூடிக்கொள்ளத்தான்...

உங்களை லக்கியை எல்லாம் பிடிக்காது போய்க்கொண்டிருக்கின்றது..க.க,க,க.க வை கண்ணை மூடி ஆதரிக்கின்றீர்களோ என்ற கோபம் தான்.. என்ன தான் கட்சி கொள்கைன்னாலும் ..அடிப்படை மனிதம் தாண்டியுமா?

அப்புரம்... உங்க உடல் சொஸ்தமாக.. அல்லா காப்பாத்துவாரு... உங்க ஊரில (அரபு எமிரேட்)அவர் தான் கடவுள்.

அங்கேயும் பிரச்சினை வரும் போல இருக்கு 20% இருந்த கிறிஸ்தவர்கள் 5& ஆகிட்டதா போப்பு ரொம்ப கவலைப்பட்டிருக்காரு...

அபி அப்பா said...

அட கோவம் எல்லாம் இல்லைங்க! நெசமாத்தான். சென்னையிலே பார்த்தீங்கன்னா வலைப்பதிவர் கூட்டத்திலே லக்கி ஜாலியா சிரிச்சு பேசுவாது எல்லாம் அவரின் வலை எதிர்ப்பாளர் கூடத்தான் இருக்கும்.

இன்னும் சொல்ல போனா அதிமுக பூத் பந்தல் என் வீடு தான். காபி சப்ளை எங்க அம்மாதான்.

அரசியல் வேற நட்பு வேற!

போன பின்னூட்டத்திலே என் கோவம் எதாவது இருந்தூச்சா. சத்தியமா இல்லை.

உங்க அன்புக்கு நன்றிப்பா. அல்லா, ஜீசஸ், ஈஸ்வரன் எல்லாம் ஒரு மண்ணு தான். மனித நேயம் தான் இப்ப ஒரே கேள்விகுறியா இருக்கு!அதான் கவலையுமா இருக்கு!

எம்.எம்.அப்துல்லா said...

//அல்லா, ஜீசஸ், ஈஸ்வரன் எல்லாம் ஒரு மண்ணு தான். மனித நேயம் தான் இப்ப ஒரே கேள்விகுறியா இருக்கு!அதான் கவலையுமா இருக்கு

//

அது!

வஜ்ரா said...

மு.க முத்து என்பவர் என்ன ஆனார் ?

அவருக்கு மட்டும் ஏன் ஒரு பதவியும் இல்லை ?

ரங்குடு said...

இவ்வளவு செய்த புண்ணியவான் கனிமொழிக்கும் ஏதாவது வழி செய்யாமல் இருப்பாரோ?

Anonymous said...

//மு.க முத்து என்பவர் என்ன ஆனார் ?

அவருக்கு மட்டும் ஏன் ஒரு பதவியும் இல்லை ?//

அட குறைந்த பட்சம் ஏன் ஒரு பதிவு கூட இல்லை...?????

:)

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil