ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 10, 2009


சிறைக் கைதியா பிரியங்கா ?


தேர்தல் களம் சூடுகண்டவுடன் ஜெயலலிதா ஈழ ஆதரவு எடுத்தாலும் எடுத்தார் ..அதுவே இன்று வெற்றியைத் தீர்மானிக்கும் விடயமாகி விட்டது. பயந்து பயந்து அமுங்கி அமுங்கிக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் ஓங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். ஈழத்திற்காகக் குரல் கொடுத்ததற்காக சீமான் ,குளத்தூர் மணி,நாஞ்சில் சம்பத் போன்றோரை சிறையில் போட்டவர்களே ஈழம் அமைத்துக் கொடுக்க முன் வந்திருப்பது விசித்திரம்.

தமிழ்ச் செல்வனுக்கு கவிதையெழுதியதையே குற்றம் எனக் கூறி தி.மு.க ஆட்சியைக் கலைக்கக் கோரிய ஜெயலலிதாவால் தான் ராஜீவ் கொலை வழக்கின் ஆழங்களுக்குள் சென்று அரசியல் செய்ய முடியும். அதுதான் ஜெயலலிதாவின் துணிவு.இந்திய இறையாண்மை என்ற பீலா எல்லாம் ஜெயிடம் எடுபடாது. " கொல்லுராங்களே" என்ற கோஷத்துடன் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து சிறையில் போட முடியாது. இரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த போராடிய கருணாநிதியின் "வீரத்தைத்" தான் அன்று இரவு பயந்து நடுங்கிய எலிக்குஞ்சின் கதறலாக அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பினவே.

கருணாநிதி தமிழ் ஈழ ஆதரவு நிலை எடுப்பதை விட ஜெயலலிதா அந்நிலை எடுப்பது மிகவும் அனு கூலமானது. பல நன்மைகளைத் தரும். "ரோபோ" பிரதமரிலிருந்து கோத்தபாயா வரை அனைவரின் பேச்சுகளுக்கும் பதிலடி கொடுக்கும் திறனும் அஞ்சாமையும் அவரிடம் உண்டு. அவரின் புலிகளுக்கு எதிரான எதிர்ப்புக் காலத்தில் அத்தனைக்கத்தனை அவரை வெறுத்தவர்கள் கூட அதற்கும் மேலாக அவரை நேசிக்கும் ஒரு நிலையில் மாஜாயாலம் நிகழ்த்தியிருக்கின்றது அவரின் ஈழ ஆதரவுக்குரல்.

அவரின் துணிச்சலின் அடுத்த நகர்வு தான் பிரியங்காவின் நளினி சந்திப்பு பற்றி விபரம் வெளியிடப்படவேண்டிய கோரிக்கை. நளினி பிரியங்கா சந்திப்பு விபரங்களும் இராஜீவ் கொலை வழக்கில் சேர்க்கப்படவேண்டும் என்ற வற்புறுத்தல் விசாரணையின் திசையையே மாற்றி விடக் கூடும். ஏற்கனவே உள்ளூர் காங்கிரஸின் இரத்தம் படிந்த கரங்கள் அங்கு இருக்கின்றது என்பது சோனியா குடும்பத்தின் சந்தேகம்.

அன்று இராஜீவ் கொல்லப்பட்டபோது கூட இருக்கவேண்டிய மூப்பனார், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் சம்பவ இடத்தில் "காணப்"படாது போனது தற்செயலல்ல.

இந்த நிலையில் நளினி பிரியங்கா சந்திப்பு இராஜீவ் கொலை வழக்கில் சேர்க்கப்படுவது பல அரசியல் பூகம்பங்களை வெளிக்கொண்டுவரக்கூடும். அவை அனைத்தையும் புலிகளின் மீது திருப்பி விட்ட ரா மற்றும் காங்கிரஸ் பெரிய தலைகளின் உத்தி தான் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கும் ஈழப்போர். ஒரு சில காங்கிரஸ் தலைகளைக் காத்துக் கொள்ள இத்தனை உயிர்களை இந்திய அரசு இயந்திரம் பலிகொடுக்கின்றது.

இதன் மூலமாவது சோனியாவின் ஆவேசத்தை அடக்க முடியுமா என்று முயற்சிக்கின்றார்கள். சில ஆயிரம் தமிழர்களைக் கொன்றதற்கு இராஜீவைப் பலிகொடுத்தவர்கள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுக்க எப்படித் துணிந்தார்கள்?

ஜெயலலிதாவின் திடீர்க்கேள்வி மீண்டும் சில மனங்களை நிம்மதியில்லாது தவிக்க விட்டிருக்கின்றது. மணிசங்கர் ஐயரிடமிருந்து முதல் மறுமொழி வந்திருக்கின்றது. நளினி -பிரியங்கா சந்திப்பு "தற்செயலானது " என்று குறிப்பிட்டுள்ளார். இத்தனை பந்தோபஸ்துடன் நளினியைச் சந்தித்த பிரியங்காவின் விஜயம் எப்படி தற்செயலாக முடியும். அப்படியே தற்செயலானதொன்றாக இருக்க வேண்டுமாயின் பிரியங்கா சிறைச்சாலைப் பணியில் இருக்க வேண்டும். அப்படிப்பணியில் இருப்பதாயின் அவர் படித்திருக்க வேண்டும். படித்துப் பட்டம் பெறும் பழக்கம் தானே அவர் அம்மா முதல் சகோதரன் வரை கிடையவே கிடையாதே.

அவரும் தேர்தலில் குதிக்கும் போது ஒரு எம்.பில் பட்டத்தை எப்படியாவது வாங்கி விடுவார்.
சிறைச்சாலைப் பணியில் இல்லையென்றால் அவர் சிறைக்கைதியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் சோற்றுக் கூடத்திலோ அல்லது கழிவகத்திலோ நளினியைத் தற்செயலாகச் சந்தித்திருக்க முடியும். இத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்ற குற்றத்திற்கு சிறைக்கைதியாக இருப்பதும் பொருத்தமானதே.

சர்வதேச நீதிமன்றின் முன்னால் ஒரு நாள் விசாரிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகளே இவர்கள்.அதிர்ஷ்டக் காற்று எப்போதும் ஒரே பக்கம் வீசிக்கொண்டிருப்பதில்லை. ஒரு பிரபாகரனைப் பிடித்து விட்டால் ஈழப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஈழத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பிரபாகரன்கள் தான். அத்தனை தூரம் சுதந்திர ஈழ தாகம் அவர்கள் மனதில் ஊறியிருக்கின்றது.

"இந்த சந்திப்பிற்கு அனுமதி அளித்தது யார் என்றும், அந்த சந்திப்பின் போது என்ன பேசிக் கொள்ளப்பட்டது என்றும், மக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளது, வீணான பேச்சு "என்று மணி சங்கர் ஐயர் கூறியிருக்கின்றார். ஒரு ஜனநாயக நாட்டில் இதைக்கூட தெரிந்து கொள்ள முடியாதா? மணிசங்கர் ஐயர் கூறுவது தான் வீணான பேச்சு.

அமெரிக்காவில் ஒபாமாவிடம் கூட இதைக் கேட்டு விட முடியும். இங்கு ஜால்ராக்களிற்குப் பதில் சொல்லுவதிலேயே காலம் போய் விடும். இன்னும் பல ஜால்ராக்கள் இதற்காகவே வியூகம் வகுக்கக் கூடும்.அடுத்து"பசி"தம்பரத்திடமிருந்தோ மூணுகால் முகர்ஜியிடமிருந்தோ பதில் கிடைக்கலாம்.

ஆனாலும் ஜெயலலிதாவின் வாயை அடக்குவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. வெறும் சூட்கேசுக்காக வாயைப்பிளக்கும் தி.மு.க அரசியல் அவரிடம் இல்லை. அதனுடன் கூடவே அதிரடியும் இருக்கின்றது. அது தான் அ..தி.மு.க.அதற்கு கொடுக்க வேண்டியது பெரியவிலை. அதனால் தான் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டில் ஜெயலலிதாவையும் இராகுல் சேர்க்க வேண்டியேற்பட்டது.

இன்னும் பல ஆச்சரியங்களுக்குக் கதவு திறந்தே கிடக்கின்றது.

4 comments:

அறிவுடைநம்பி said...

தலைவா !!! பட்டய கிளப்புறீங்க !?! இதுக்கு பதில் எல்லாம் இந்த தேர்தல் முடிவில் தெரிந்து விடும். சும்மா இருந்தாலாவது நாலஞ்சு தொகுதி கிடைத்திருக்கும். இந்த அம்மா டெல்லில இருந்து வந்து நாற்பது தொகுதி ஜெயலலிதா கூட்டணிக்கு உறுதி செய்து விட்டது.

இட்டாலி வடை said...

வாங்க அறிவுடை(உங்களை) நம்பி(த்தான்)...

மாற்றம் முதலில் மனங்களில் வரவேண்டும்.. தமிழன் வாழ்வு உயர்ந்துவிடும்..இந்த அல்லக்"கை"கள் எல்லாம் அரபிக் கடலில் குதித்து விடுவார்கள்..

ttpian said...

ராகுல் காந்தி- இளஞ் சிங்கமாம்!
சோனிஆ தியாக திருவிளக்காம்!
சொல்வது யார்?
மஞ்ஜல் துண்டு!
உனது உடம்பில் ஓடுவது என்ன?ரத்தமா?சாக்கடையா?

இட்டாலி வடை said...

வாருங்கள் ttpian !

வந்தாலே அதிரடிதான்.. சாக்கடை ஓடினால் வீட்டில் வைத்திருக்க மாட்டார்களே.. கூவத்தில் அல்லவா போட்டு விடுவார்கள்...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil