ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, May 5, 2009


மார்க்ஸிசம் , டோலர்கள் இன்ன பிற



சிறிலங்கா தொடர்பாக பாதுகாப்புச் சபையில் ஆராயப்படுவதை ரஷ்யா எதிர்க்கின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற முறையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படுவதை சபை எதிர்க்கவில்லை. இதில் சிறிலங்காவின் தூதுவரும் கலந்துகொள்ள வேண்டும்" என விற்றாலி சுர்கின் பதிலளித்தார்.

"இவ்வாறு அதிகாரபூர்வமற்ற முறையில் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியத்தை சிறிலங்காவின் தூதுவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்" எனக் குறிப்பிட்ட விற்றாலி சுர்கின், அங்கு உருவாகியிருக்கும் தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்தியிருக்கும் அதேவேளையில், இந்த நிலைமைகளைச் சமாளிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் தம்மால் முடிந்தளவு உதவிகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுழற்சி முறையிலான தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் பாதுகாப்புச் சபையின் மே மாதத்துக்கான திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்து ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்தக் கூட்டங்களில் ஐ.நா. சபைக்கான சிறிலங்காவின் தூதுவரும் கலந்துகொள்வார் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் மே மாதத்துக்கான தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் தூதுவர் விற்றாலி சுர்கின் தெரிவித்திருக்கின்றார்.

இது மார்க்ஸிஸம் பேசும் ரஸ்யாவின் ,அரச பயங்கரவாதத்தால் கொலைசெய்யப்படும் மக்களைக் கொண்ட மக்களைக்கொண்ட ஈழம் தொடர்பான மார்க்ஸிஸப் பார்வை.

அதாவது ஈழம் தொடர்பான மேற்குலகின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடத்துடிக்கும் ரஷ்யா அப்பாவிமக்களுக்கு எதிராக சிறிலங்கா சிங்களப்பேரினவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் பயங்கரவாதம். இதற்கும் மேலாக இன்னுமொரு கம்யூனிஸ நாடான சீனா செயற்படுகின்றது.

இன்று ஈழத்து மக்களைக்கொண்று போடும் ஆயுதங்களில் பெரும்பங்கு சீனாவுடையதாகும். பாதுகாப்புச் சபையில் ஈழப்பிரச்சினையை அதிகாரபூர்வமாக விவாதிக்க முடியாது தவிர்க்கப்படுவதில்இவ்விரண்டு நாடுகளுமே பெரும் பங்கு வகிக்கின்றன.

இத்தகைய மனவியாதியுள்ளவர்களின் கோஷங்களை உயர்த்திப் பிடித்தே நம் உள்ளூர் டோலர்கள் நம் மக்களிக்கு விடுதலை வேண்டிக்கொடுக்கப்போகின்றனராம். என்ன ஒரு வேடிக்கை இது. இந்நாடுகளின் தயவில் நாடு சுடுகாடாகிய பின்னர் டோலர்கள் யாருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்போகின்றார்கள். இந்த அரஜாகம் பற்றி மூச்சு விடவே டோலர்கள் யாரையும் காணோம்.

கம்பூனிஸம் எம்மண்ணில் ஓடும் இரத்தத்தைப்பூசிப்பூசியே இன்னும் சிவந்து கொண்டிருக்கின்றது.

* * *
இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக் கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பை சிங்கள கடுப்போக்காளர்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பிரிட்டிஸ் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்ப்பட்டு இத்தகைய கடும் எதிர்ப்பால் சாதா தூதராகிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுண் உம் இடம் பெற்றிருக்கின்றார்.

"பொதுமக்களுக்காக கண்ணீர் சிந்துவதற்கு முன்னர் 1818 இல் கொல்லப்பட்ட 1,00,000 க்கும் அதிகமான மக்களுக்கு நட்ட ஈட்டை வழங்குங்கள்" என சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பிற்கு காரணம் தேடுகின்றார்கள்.

இலங்கைத் தீவை பிரித்தானியா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்த பிரித்தானிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்களவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடந்த வாரம் கொழும்புக்கு வந்தபோதும் முன்வைக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

சிங்களர்களிடையே இருக்கும் நாட்டுப்பற்று மீதான ஒற்றுமையைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் ஒறிஜினலும் டூப்ளிக்கேற்றுமாக நாம் சிதறி நிற்போமா? எத்தனை தமிழ் மக்கள் இறந்தாலும் காரியமில்லை புலிகள் அழியவேண்டுமென்று இப்போதும் புலிப்பாசிசம் பற்றி பிதற்றுபவர்களை என்ன சொல்வது?

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யமுடியாது.

* * *
கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடா, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்.

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.


புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் மக்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் பயன் தரத்தொடங்கி விட்டன. இதே போக்கை முன்னகர்த்தி போர் நிறுத்தம் மற்றும் நியாயபூர்வமான நீதி சார்ந்த அதிகாரப்பரவலாக்கம் என விரிவு படுத்தி ச் செல்ல வேண்டும். அதன் மூலம் சுதந்திரமான வாழ்வை ஈழத்தமிழர்களால் இலங்கையில் நடாத்த முடியும். இதுவே இது வரை தம்முயிரையீந்த மக்களுக்கு மாவீரர்களுக்கும் கிடைக்கும் மரியாதையாகும்.

* * *

சக்கர நாற்காலியில் சென்றாலும், பதவியை விடமாட்டேன் என்கிறார். கருணாநிதிக்கு ஓய்வு தரும் சக்தி வாக்காளர்களுக்கு உண்டு.

வெளியுறவுக் கொள்கை என்றால் அது அமெரிக்க உடனான அணுசக்திக் கொள்கை எனச் செயல்பட்டதன் காரணமாக, சொந்த உறவானத் தமிழர்கள் இலங்கையிலும் மற்ற நாடுகளில் துன்பப்படும்போது, அவர்களது நலன் குறித்த வெளியுறவுக் கொள்கையை நம்மால் உருவாக்க முடியாமல் போனது.

ஜெயலலிதா சொல்லியிருக்கின்றார். அவர் சொல்வதில் என்ன தவறு? உலகம் முழுவதும் 65 வயதில் வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதைக் கட்டாயமாக்கியிருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளுக்கும் இப்படியொரு கட்டாயத்தைக்கொண்டு வரவேண்டும். முதுமை வந்து விட்டாலே காது கேட்பது குறைந்து விடுகின்றது.கண் பார்வை மங்கி விடுகின்றது.ஞாபக சக்தி அடியோடு ஒழிந்து விடுகின்றது. என்ணற்ற நோய்கள் வந்து விடுகின்றது. இது நான் சொல்லவில்லை.ஆய்வுகள் சொல்கின்றது.

இத்தகைய குறைபாடுகளை வைத்திருப்பவர்களால் எப்படி ஒரு துடிப்பான ஆட்சியைத் தர முடியும். இளைஞர்களுக்கு திறமையானவர்களுக்கு நாட்டில் என்ன பஞ்சமா வந்துவிட்டது?

வீட்டில் இருப்பவர்களை மட்டும் "பழசுகள்" என்று ஒதுக்கும் இளந்தலைமுறை இவர்களை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள். இத்தகைய நடைமுறை கட்டாயமாக்கப்படும் போது பாராளுமன்றத்தில் நாலில் மூன்று பங்கு புது முகங்களைப் பார்க்க முடியும்.

1 comment:

Anonymous said...

அட நீங்க வேற..
கெழவனுக்கு 70 வயசுவரை அதுவே வேலை செஞ்சுதாமே...
மூளை வேலை செய்யாதா என்ன?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil