ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 23, 2009


கெஞ்சல் மிஞ்சல் - மஞ்சள் துண்டு நாடகம்
வாக்குப்போட்டவர்கள் இங்கிருக்க இவர்கள் எதற்காக வாக்குவாதப்பட்டு சிண்டைப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் தெரியவில்லை. மக்களுக்கு ஏதாவது இதன் மூலம் செய்ய முடியும் என்ற ஏதாவது நம்பிக்கையிலா இவர்கள் இவ்வளவு தூரம் போராடுகின்றார்கள். குறிப்பிட்ட இலாகாக்கள் கேட்டு தி.மு.க கருத்து முரண்பாடு என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

அப்படி தி.மு.க கேட்கும் இலாகாக்கள் கிடைத்து விட்டால் உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு விமோசனம் வந்து விடுமா? என்று உடன் பிறப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும். பார்க்கும் போதே சாதாரண பாமரனுக்கும் தெரிகின்றதே கொள்ளையடிக்கும் ஆசைதான் முன்னிற்கின்றது என்று.

இவர்களை உங்கள் கட்சி கழகம் என்று தூக்கிப்பிடிக்க உங்களுக்கு கூச்சமாக இல்லையா? அல்லது நீங்களும் இப்படிப்பட்டவர்கள் தானா? உங்களுக்கு குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாது போய்விட்டதா?

ஆறரைக்கோடி தமிழர்களின் தலைவர் என்று பீற்றிக்கொள்ளும் இவர் உண்மையிலேயே "தலைமை"ப்பண்பைக்கொண்டிருக்கின்றாரா? வாக்குப் போட்ட உங்களுக்கு நிஜமாகவே வாந்தி வரவில்லையா?

இதை போல உலகில் எங்காவது நடந்திருக்கும் உதாரணம் ஏதாவது இருக்கின்றதா? நாங்கள் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தைக் கடந்து வர எண்ணமேயில்லையா?

நாட்டில் நல்லது நடக்காது இப்படிப்பட்ட தறிகெட்ட அரசியல் நிலவ நாங்களும் காரணம் என்று எப்போதாவது ஒரு பொழுதில் சிந்திப்போமா? மாற்றம் பற்றி யோசிப்போமா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil