ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Friday, May 22, 2009
முற்றுப் பெறாத முது தமிழ்ப்புராணம்
அ. முத்துலிங்கம் பற்றி அறிந்திருப்பீர்கள். அல்லது கேள்விப்படவேனும் செய்திருப்பீர்கள். ஈழத்து எழுத்தாளர்களில் தமிழகத்தில் "கண்டடையப்" பட்டவர். 60 களிலிருந்து எழுதுபவர்(?)என்னமோ என் கண்ணில் இந்த 2008 வரை அகப்படும் பாக்கியம் கிடைக்கப் பெறாதவர். நண்பர் ஒருவர் கட்டுக்கட்டாக அனுப்பி வைத்த புத்தக மூட்டையுள் வந்து இறங்கியவர். அப்படித்தான் அ. முத்துலிங்கத்துடனான என் அறிமுகம். இதிலென்ன வெட்கம் இருக்கின்றது.
உலகத்தில் இருக்கின்ற எல்லா அற்புதங்களையும் தெரிந்து வைத்திருக்கும் பாக்கியம் கிட்டியவர்களாகவா நாம் இருக்கின்றோம். குறைகளும் நிறைகளும் நிரம்பியவர்கள் தானே மனிதர்கள்.
ஜெயமோகன் கிலாகித்துப் பேசும் ஈழத்து எழுத்தாளர் தளைய சிங்கம் தான்.தளய சிங்கம் பற்றிய அனுபவத்துடன் முரண் பட்டுப்போன ஆர்.பி.இராஜநாயகத்தின் அனுபவத்தையும் ஒரு முறை படிக்க நேர்ந்தது.
ஓதுவாரின் பெண்டாட்டியை கள்ளிறக்கும் அவன் ஆழ்ந்து அனுபவிக்கும் அந்தக் கதை அதில் சொல்லப்பட்ட காமம் ஒன்றினாலேயே இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.ஓதுவார்களின் பாடல் கேட்கும் தோறும் அவர்கள் பெண்டாட்டிகளை யாரோ எங்கோ ஒரு முக்கில் அனுபவிக்கும் காட்சிதான் எனக்குத் தோன்றும் என்றும் அப்போது எனக்குத் தோன்றியது.அப்படி அது "நச்"சென்று மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. மற்றும் படி ஜெமோ அறிந்து கொண்டவை எதுவும் ஆர்.பி .ராஜநாயகம் சொல்லியதைப்போலவே எனக்கும் தோன்றவில்லை.அல்லது அப்படிப் படவில்லை.
அதையே அவர் அறிந்த ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் என்று வரிசைப்படுத்தும் கிரமத்தில் "எல்லாந்" தெரிந்தவர்கள் வரிசைப்படுத்தும் அதிகாரம் தெரிகின்றது.அவர் வரிசைப்படுத்தலில்,வழமை போலவே வரக்கூடியவர்கள்..
//மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப்,
செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
கல்வியாளர்களில் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள்
நம்பிக்கை நட்சந்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.//
அ. முத்துலிங்கம் கதைகளையும் ,கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது போன்ற தொகுப்புகளையும் படித்திருந்த எனக்கு அவரின் பேட்டி ஒன்றும் பெரிதான ஆச்சரியங்களைத் தராதது ஜீரணிக்கக் கஷ்டமான விடயமே.
அவரின் வாசிப்பனுபவம் கூட ஏதோ ஒரு காலத்தில் தொக்கி நிற்பதாகத் தான் தெரிகின்றது."கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் " இவர்களை விட்டு இன்னும் வெளியில் வரமுடியாது "நின்று" விட்டார் என்றே தோன்றுகின்ரது.
இளந் தலை முறையில் என்று " இராகவன், அனார் " அட.. பெயர்கள் புதிசாக இருக்கின்றப்னவே என்று பார்த்தால்...எதற்காக மறைக்க வேண்டும். இன்னும் என்னால் வாசிக்க முடியாதவர்கள்.
வ.ஐ.ச. ஜெயபாலன்..மற்றும் உலகப் புகழ் பெற்ற மஹாகவியின் வாரிசுகளையெல்லாம் விட்டு விட்டார். இன்னும் இருக்கின்றார்களே பெண்ணீயச் சிந்தனாவாதி அ.மர்க்ஸுடன் சேர்ந்து கள்ளுக்குடித்து வாந்தியெடுக்கும் தலீத்திய சிந்தனாவாதி சுகன் போன்றவர்கள் எப்படி இவர் கன்ணில் படாது போனார்கள். இனி பெண்ணீயத்தோழிகள்... லக்ஷ்மி ,ரஞ்சிதா போன்றவர்களையும் எப்படி விட்டு விட்டார்.
துப்பட்டா புகழ் குட்டி ரேவதி போன்றோரிடம் கேட்டால் ஒரு நீண்ட பட்டியலே கொடுப்பார்களே...
என்னவோ போங்கள்... ஆக முடிவில் எல்லோரும் சாதாரணர்களே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment