ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 2, 2009


சிதறும் நம்பிக்கை - கலைஞர்கலைஞரின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கின்றது. சிங்கம் போன்று சிலிர்த்துக் கொண்ட கலைஞர் கனவாக காணாமல் போய் விட்டார். பயந்து நடுங்கி ஒடுங்கிப்போய் விட்ட கலைஞரைத்தான் பார்க்க முடிகின்றது. முதுமையும் அவரைத் தள்ளாட வைத்துவிட்டது. மனதிலும் உடலிலும் அந்தத் தள்ளாட்டம் தான்.

அவர் செய்த காரியங்களே செய்தியாயிருந்தது போய் அதை ஏன் செய்தோம் என்ற விளக்கம் கொடுத்து செய்தியாக்க வேண்டியிருக்கின்றது.

அண்மையில் இருந்த உண்ணாவிரதம் பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டியே உண்ணாவிரதம் இருந்தேன் என்று விளக்கியிருந்தார். அதை யாரும் நம்பவில்லை என்ற நிச்சயத்துடன். கூடவே சுய பச்சாதாபம் வேண்டிய ஓரிரு வரிகள் . நேசத்துடன் பழகிய நண்பர்கள் இன்று தூற்றுகின்றனர். அது ஓராயிரம் உளி கொண்டு தாக்குகின்றது என்னை என்று.

இப்படித்தான் அண்மையில் இன்னுமொரு கடிதம் உடன்பிறப்புகளுக்கு. உங்கள் மனதில் நானிருக்க ஏன் கவலைப்படவேண்டும் என்று கேட்டெழுதியிருந்தார். அவர் கவலைப்படத் தொடங்கி விட்டார். அவர் கைப்பிடி கட்சியிலும் மக்கள் செல்வாக்கிலும் சரிவதை நன்கு உணர்ந்ததனால் வந்த தன்னிரக்கம்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் எடுத்த முடிவு அவரைத் துரத்தத் தொடஙங்கிவிட்டது என்பது புரிகின்றது. மன்னனாக வாழ்ந்தவர் மண்கட்டியாக வீழ்வது பெரும் துர்ப்பாக்கியம். அந்தத் தவிப்பு அவர் பேச்செங்கும் விரவிக்கிடக்கின்றது.

அதே தவிப்பு ஈழத்தமிழ் மக்களிடமும். மலையாக நம்பியவர் கைவிட்ட தவிப்பு.

அது பிரமிள் கவிதை வரி ஒன்றை நினைவூட்டுகிறது

"தவிப்பு , நம்பிக்கையின் இனிய துகள்களாய்

சிதறி விழுகிறது "

1 comment:

ttpian said...

தமிழனை அழிக்க அயுதங்கலா?
அழிக்க நினைப்பர்வகளை,அழிப்போம்!
இனிமேல் இதாலி சமயல் இங்கே வேகாது!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil