ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 23, 2009


மூக்குடைபட்ட மு.க வும் இரத்தக்கண்ணீர் வடிக்கும் உடன் பிறப்புகளும்


எல்லாம் அரசியல் என்று இலகுவாகத் தப்பிப் போக முடியும். அது ஒரு சாக்கடையான விடயம் தான். அப்படி நாறடித்து வைத்திருக்கின்றார்கள் இந்திய அரசியல் வாதிகள். நாற்றத்தில் சந்தணத்தையா முகர முடியும். ஆனால் சாணக்கியனின் சறுக்கல் தான் இதில் பேசப்படும் விடயம். எத்தனை இலட்சம் ஈழத்தமிழன் செத்தாலும் மத்திய ஆட்சியில் பங்கும் அமைச்சர் பதவிகளும் கொண்டு தந்தியும் தொந்திகரையும் ஒன்லி மூன்று மணி நேர உண்ணாவிரதமும் என்று காலத்தைக் கடத்தியவர் கலைஞர். இதை சாண(ம் ந)க்கியம் என்று உடன் பிறப்புகள் ஏற்றிப்பிடித்தார்கள்.

தலைவரும் பிளைட் புக் பண்ணி நண்டு சிண்டு குட்டி குருமான் என்று படை பட்டாளத்துடன் போய் இறங்கினார். உடன்பிறப்புகளும் கலைஞர் கொடி பறக்குதடா என்று பதிவு போட்டார்கள்.எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ரோபோ சிங் வாய் திறக்குமட்டும். காங்கிரஸ் தேறியதில் சோனியாவிற்கு தெம்பு வந்திருக்கின்றது.அதுவே சிங்கின் வாயில் துடுக்குத்தனமாகக் கொட்டியிருக்கின்றது.

அதிகாரம் செய்தே பழக்கப்பட்ட மு.க முதல் முறை அதிர்ந்து போய் இருக்கின்றார்.அதுவும் இத்தனை வயதிற்குப் பின்னர். சாதா இட்லியா சமித்துப்போக.. அவமானம் ஐயா ..அவமானம்.

பின்னே என்ன நொண்டிக்குதிரையில் போலோ ஆடுவதா? மத்திய ஆட்சி.சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர் போல் இவர்கள் போய் கூடாரம் அடித்துக் கொள்ளை அடிக்க வடக்கத்தி கள்வர் விட்டு விடுவார்களா என்ன?

இப்போது மு.க எதை எடுத்தாலும் இறங்குமுகமும் ஏமாற்றமுமாகத் தான் இருக்கின்றது. இதுவரை ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் போது வாயே திறக்காதிருந்த தினமணி சமயம் பார்த்து மு.க விற்கு வேட்டு வைத்திருக்கின்றது. டிஞ்சரும் பஞ்சும் கொண்டு போய் குற்றுயிர் தமிழருக்கு கட்டுப்போடாது டில்லியில் போய் உட்கார்ந்து மந்திரிப்பதவிக்கு தர்ணா நடத்துவது..அடுக்குமா? தர்மமா? ஐயகோ நியாயமா? என்று பகவத் கீதை ரேஞ்சுக்கு புத்தி மதி சொல்லியிருக்கின்றது.

அவனவன் சாதிக்கட்சி நடாத்தியே 7+1 கேட்கும் போது 17 இல் தனித்து வென்றவர்கள் எத்தனையும் கேட்கலாம்..கொள்ளையடிக்கலாம் என்ற ரீதியில் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் உடன் பிறப்புக்கள்.

கலைஞரை எதற்காகப் பாராட்டாவிட்டாலும் இப்படிப்பட்ட பேப்பர் ஸ்பாஞ்சுகளை உருவாக்கி வைத்திருப்பதைப் பாராட்டியே தீர வேண்டும்.அதெப்படி மு.க எதைச் சொன்னாலும் அதை உறுஞ்சி அப்படியே மாறிவிடுகின்றார்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil