ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, May 19, 2009


இந்தியாவே வேண்டாம்


அழக்கூட முடியாத துக்கத்தில் எம்மக்கள் உறைந்து போயிருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையென்றிருந்த நட்சத்திரமும் உதிர்ந்து போய் விட்டது. இனி சிங்களவனின் காலடிகள் நம் வாழ்நிலமெங்கும் உழுது போகும். 58ஆம் 77ஆம் 83 ஆம் ஆண்டு இனக்கலவரங்களையும் விட மோசமான இனக்கலவரங்கள் நமது மண்ணிலேயே புதிய குடிவரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்படும். புதிய பன்சாலைகளிலிருந்து "பாங்" ஓதும் சத்தம் தினம் எம் காதுகளில் விழும்.

புத்தனின் மகிமைகளைக் கூறி அல்லது அடித்து உதைத்தேனும் எம்மை புதிய பெளத்தர்களாக மாற்றிக்கொள்வார்கள். இன்று சிங்களவரின் எடுபிடிகளாக இருக்கும் ஆனந்த சங்கரி ஆனந்த சங்கர தேரோவாகவும் டக்ளசு தேவானந்த தேரோவாகவும் கருணா கருணாகர தேரோவாகவும் மாறி தாம் செய்த பாவங்களுக்குத் துணையாக எம்மையும் மதம் மாற்றும் கைங்கர்யத்தில் ஈடு படுவர்.

ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்ற கோஷம் வலுப்பெறும். புத்தனால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம் கிடைத்ததென்று அவர்கள் சந்தோஷப்படுவர்.

இப்படித்தான் புதிய இலங்கை வடிவமைக்கப்படும். நாதியற்ற தப்பிப் பிழைத்த தமிழ்ச்சனம் வேறு வழியில்லாது தம் சுயம் இழந்து போகும். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பாலகிருஷ்ணன் ,பால்கிஷூன் ஆகவும் ராமகிருஷ்ணன், ராம் கிஷூன் ஆகவும் பெயரை மாற்றி இருக்கும் நாட்டுடன் அம்மோழி பேசி செம்மையாய் ஒட்டிக்கொள்வர்.

இலங்கையில் இருந்து வரும் டூரிஸ்ட்டைச் சந்திக்க நேர்ந்தால் எனது "கிறாண்ட்பா ப்ரொம் ஸ்ரீலங்கா" என்று ஸ்பீக்கிக் கொண்டு திரிய வேண்டியது தான்.

ஈழத்தமிழ் மக்களாகிய நாம் யாராய் எதுவாய் மாறிப்போனாலும் எந்த தேசத்தில் என்ன வடிவில் இருந்தாலும் இந்தியா என்ற ஒரு தேசம் எமது எதிரி என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். எம்மை நாசமாக்கிய கயவர்கள் என்பதை உங்கள் தலைமுறைக்கும் சொல்லிக் கொடுங்கள் . உங்கள் தொப்பூழ் கொடி உறவை அறுத்துப் போடுங்கள். அதில் விஷம் ஊறிவிட்டிருக்கின்றது. கொடிய உயிரைக் கொல்லும் விஷம். ஆலகால விஷத்தையும் விட கொடியது.

எம் ஆசைகள் ,எம் எண்ணங்கள்,எம் சுதந்திர வேட்கை,எம் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்கள் அத்தனையையும் இழந்து இன்று நாம் அனாதையாக நிற்பதற்கு இவர்கள் தான் காரணம் என்பதை தலைமுறைக்கும் சொல்லி வளருங்கள்.

பன்றியுடன் சேரவேண்டுமா? இந்தியாவுடன் சேர வேண்டுமா? என்ற கேள்வி வந்தால் தயக்கமின்றி பன்றியுடன் சேருங்கள். அதாவது சிறிது நன்றியாவது காட்டும்.

சுதந்திர ஈழம் போராட்டிப்பெற தெம்பிருந்தால் இந்தியாவை நெருங்கவும் விடாதீர்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கைக் காலம் தான். வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

5 comments:

Kanna said...

//பன்றியுடன் சேரவேண்டுமா? இந்தியாவுடன் சேர வேண்டுமா? என்ற கேள்வி வந்தால் தயக்கமின்றி பன்றியுடன் சேருங்கள். அதாவது சிறிது நன்றியாவது காட்டும்//

பல தமிழர்களின் தீக்குளிப்பு தியாகத்தை உதாசீன படுத்தாதீர்கள்...

எங்கள் ஆட்சியாளர்களுக்கு புரியவைக்கும் முயற்சியில் தோற்று கிடக்கும் எங்களுக்கு மேலும் அவமானத்தை கூட்டாதீர்கள்..


மாவீரனுக்கு வீரவணக்கம்....

:(

கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் வாழ்ந்து வரும் மாவீரனின் கனவை நனவாக்க்க தொடர்ந்து பாடு படுவோம்...

niranthan said...

இத்தனை அழிவுகளுக்கும் உடைந்தையாய் இருந்த டாக்டர் கொலைஞன் என்மோடு நின்று கண்ணீர் விடும் தமிழக உறவுகளுக்கும்,எமக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும்!!!

இட்டாலி வடை said...

வாருங்கள் கண்ணா!
//பல தமிழர்களின் தீக்குளிப்பு தியாகத்தை உதாசீன படுத்தாதீர்கள்...

எங்கள் ஆட்சியாளர்களுக்கு புரியவைக்கும் முயற்சியில் தோற்று கிடக்கும் எங்களுக்கு மேலும் அவமானத்தை கூட்டாதீர்கள்..


மாவீரனுக்கு வீரவணக்கம்....//

நீங்கள் தமிழனா? இந்தியனா?

உங்களை இந்தியன் என்று வடவன் ஆட்சியிலிருப்போன் என்றும் ஏற்றுக்கொண்டதாக என் அறிவுக்கெட்டிய வரையில் அறியேன்..

தமிழகம் தான் இப்படியொரு போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டியது..எப்போதாவது அது நடக்கத்தான் போகின்றது..

இட்டாலி வடை said...

வாருங்கள் நிரந்தன்!

//இத்தனை அழிவுகளுக்கும் உடைந்தையாய் இருந்த டாக்டர் கொலைஞன் என்மோடு நின்று கண்ணீர் விடும் தமிழக உறவுகளுக்கும்,எமக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும்!!!//

இப்போதும் ஈழத்தமிழர் பற்றி ஏதோ பிதற்றுகின்றார்.. தேர்தல் முடிந்து விட்டது என்று யாராவது அவருக்குச் சொல்லுங்கள் ..வயது போனாலே ஞாபக மறதியும் கூடவே வருகின்றது...

இனி தமிழகத் தமிழனின் உதவியும் தேவைப்படாது.. ஏனெனில் ஈழதமிழன் என்ற ஒரு இனமே இல்லாது போகச் செய்யப்படும்.. அது தான் நவீன இலங்கை

மகேந்திரன் said...

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil