ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, May 7, 2009
ஒரு செய்தியும் ஒரு வாழ்க்கையும்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவருக்கு நெருக்கமான ஒரு சில தளபதிகளும் இருப்பதாகக் கருதப்படும் கடைசி பதுங்கு குழியை வியாழக்கிழமை நெருங்கிவிட்டது இலங்கை ராணுவம். ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கும் இடையில் இப்போது இடைவெளி வெறும் 2,500 அடிகள்தான்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொலைப் படையாகச் செயல்படும் ""கரும்புலிகள்'' என்று அழைக்கப்படும் கடற்புலிகள் சுமார் 1,000 பேர் இப்போது அந்த இடத்தைச் சுற்றி அரணாக இருக்கின்றனர். இவர்கள் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மனித குண்டாகச் செயல்படுகிறவர்கள். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் போரிட்டு தங்களை மாய்த்துக்கொண்டு அவர்களையும் மாய்க்கத் தயங்காதவர்கள். இந்தக் காரணத்தாலும், அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கண்ணிவெடிகளை புலிகள் புதைத்து வைத்திருப்பதாலும் ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியவில்லை.
புலிகளின் கடைசிப் புகலிடம் இதுதான் என்பதால் போர் மிகக் கடுமையாக நடக்கிறது. புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ராணுவத்தை மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து கட்டிக்கொண்டே இருந்த மணல் தடுப்பு அரண்களையெல்லாம் இலங்கை ராணுவ தரைப்படை வீரர்கள் பீரங்கிகள் மற்றும் பலம்வாய்ந்த கவச வாகனங்களின் துணையோடு தகர்த்துவிட்டனர். இனி புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் தடுப்பு எதுவும் கிடையாது. அதே சமயம் அந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் இயற்கையான அரண் மட்டுமே புலிகளுக்குக் கேடயமாக இருக்கிறது.
புலிகளுக்கு வெளியிலிருந்து ஆயுத உதவியோ, ஆள் உதவியோ வருவதற்கு வழியில்லாமல் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. ராணுவத்தின் தரைப்படை, கடற்படை இரண்டும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்திருக்கிறது. விமானப் படையும் அவ்வப்போது அந்தப் பகுதி மீது பறந்து போர்க்கள நிலவரத்தைப் புகைப்படம் எடுத்து கொழும்பிலும் வன்னிப்பகுதியிலும் உள்ள ராணுவத் தலைமைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதைக் கொண்டுதான் ஒவ்வொரு தாக்குதலையும் ராணுவம் முடிவு செய்கிறது. கடைசி அரணும் தகர்ந்த இடத்தில் பிரபாகரன் இருக்கிறாரா என்ற சந்தேகமும் ராணுவத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் தற்காப்பையும் தாக்குதலையும் பார்த்தால் ""மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய'' தலைவர் ஒருவர் அவர்களுடன் இருப்பது புலனாகிறது.
- இது செய்தி
இந்த நிலையில் தம்மைத்தானே தமிழினத்தலைவர் என்று தூக்கி நிறுத்த விழைபவர்களும் அவரைத்தாங்கி அப்பிப்பிடிக்க முனைபவர்களும் என்ன செய்வார்கள்? பெண்டில் பிள்ளையையும் விட்டு விட்டு ஓடி ஒளிவார்கள் அல்லது காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சுவார்காள். ஆ..ஊ.. என்றால் கவிதையெழுதி புலம்பும் பேர்வழிகள் இப்போது வாய் மூடி மெளனிக்கும் காலம்.
ஐந்து கோடி தமிழர்களின் தலைவன் தமிழினத்தலைவராகலாம் -வாயால்,.... பதினைந்து இலட்சம் மக்களின் தலைவன் தேசியத் தலைவனாகலாம் - செயலில்.
இது செயல் புதிது காலம். முறத்தால் புலி விரட்டிய பெண்ணும் முதுகில் ஈட்டி குத்தி இறந்தவன் தாய் முலை அறித்து எறிந்ததும் இந்தத் தமிழ் நாட்டில் தானா? நம்பவே முடியவில்லையே..
இத்தனை அராஜகம் நடக்கும் இடத்திலும் தமிழுணர்வுடன் சிறை செல்லும் சீமானை முட்டாள் என்கின்றது ஒன்று அதற்கு ஜால்ரா அடிக்கும் ஒன்று "களி தின்னும் காலம்" என்கின்றது. ஏன்யா..எதால் யோசிக்கின்றீர்கள்... தாய்த் தமிழகம் ஏன்யா இப்படி...
- இது வாழ்க்கை
இனியும் நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment