ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 1, 2009


அழுவாச்சி காவியம்

வப்பாட்டி புருஷனுக்கும்
வாழச்சொத் தெழுதிவைக்கும்
தலைவர்களே
ஒதுங்க இடமின்றி
ஓரினம் அழு கின்றதே
மனமிரங்க மாட்டீரோ

காசுக்குப் போகுமென்றால்
காகிதத்தில் கவிதை நிறைக்கும்
கவிஞர்களே
வேகாத வெயிலிலே
எம்மினம் தவிக்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரோ

கரையோர மணல்வெளியில்
கடல்நீரின் அலைமுகட்டில்
மனிதர்களே
தலைவேறு கால்வேறாய்
தமிழினம் மிதக்கிறதே
கண்திறக்க மாட்டீரோ

வற்றியகுளத்திலும் நீர் சுரக்கும்
வரட்சியோ உம்மனதில்
தமிழர்களே
ஒடுங்கிக்கிடக்கும் உயிர்க்குலையோடு
உதவிக்கலையுது நம்மினம்
உணர்வுகொள்ள மாட்டீரோ

1 comment:

ttpian said...

மஞ்சள் துண்டு அணிந்து மக்களை ஏமாற்றும்.....இது ஒரு பிழைப்பா?
மாமா வேலை பார்க்கலாம்!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil