ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 25, 2009


பொறந்தாலும் இப்படி ஒரு அப்பனுக்கு..

ஆசை ஐயா என் தணியாத ஆசை.. பொறந்தாலும் இப்படி ஒரு அப்பனுக்கு மகனாகப் பொறக்க வேணும்...கவிதை எழுதத் தெரிந்திருக்கோணும்.. தமிழைப் பிழிந்து கடிதம் எழுதத் தெரியோணும்... மாங்காமடையனுகள்( உடன் பொறப்புகள்)தலையில் முளகாய் அரைக்கவும் தேவையற்ற போது அசமந்தமாக தந்தி அடிக்கவும் தேவைப்படும்போது தொலைபேசியில் தொல்லை கொடுக்கவும் தெரிந்திருக்கோணும்...

இப்படி ஒரு அப்பன் கிடைக்காத காரணத்தால் ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பேரில் நானும் ஒருவன் என்பதால் அடுத்த பிறவியில் பிறக்க வேண்டிய அல்லது என்னைப் பொத்துப் போட வேண்டிய அப்பனின் தகுதிகள் குறித்து ஆராய்ந்த போது எனக்குப்பட்டது. திருக்குறள் தெரிந்திருக்கோணும் ..பொழிப்பு எழுதலாம் ஆனால் பொழைப்பாய் வைத்திருக்கக் கூடாது..இலக்கியம் தெரிந்திருக்கோணும்.. பேசலாம் எழுதலாம் ..என்ன இழவோ அதை வாழ்க்கையாய் நினைக்கக் கூடாது.. தேவைப்படும் போது தெளித்து விடும் அத்தர் போலும் தேவைப்படாதபோது போட்டு மூடி விடும் பொணம் போலவும் இருக்க வேண்டும்... அத்தனையிலும் காசு பார்க்கும் திறன் வேண்டும்...

அதுதான் இன்று ஒரு பக்கா ரவுடியை மக்கள் பிரதிநிதியாக்கியது.. மாண்பு மிகு அமைச்சராக டில்லி வரை அனுப்பி வைக்கின்றது

"தந்தை மகற்காற்றும் உதவி-அவையத்தில்
முந்தியிருக்கச் செய்யும் செயல்"

அடடா வள்ளுவனும் சொல்லிவிட்டான்।காப்பியடிக்கின்றான் கறுப்புக் கண்ணாடி ஜோராக வெளிக்கிட்டிருக்கின்றது மு.க அழகிரி காந்தி ஜோடி.


ஜோராய் கிளம்பிட்டாங்க


அப்பன் விட்ட அறிக்கையில் கலந்து விட்டிருப்பது தான் பேதி கொடுக்கும் "பார்முலா" யுக்தி. அதை அந்த அப்பனின் வரிகளிலேயே தந்து விடுகின்றேன்.

//தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு "பூஜ்யம்'தான் கிடைக்கும் என்று தில்லியில் உள்ள மீடியாக்கள் கருத்து வெளியிட்டன. அவற்றின் பொய்ப் பிரசாரத்தை உடைத்து, தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது.

இதையொட்டி, கூட்டணியின் சார்பில் அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் தில்லியில் என்னை (கருணாநிதி) சந்தித்தனர்.

காங்கிரஸ் இந்த முறை கையாளவிருக்கும் புதிய "பார்முலா' பற்றிக் கூறினர். அதுகுறித்து, கட்சியின் செயற்குழுவிலோ, உயர்நிலை செயல் திட்டக் குழுவிலோ சென்னை சென்று கலந்துதான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தேன்.

அதன்பின், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரும் அமைச்சரவையில் திமுக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பிரதமரின் விருப்பத்தின் பேரில், கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களோடு கலந்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் அமைச்சர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின், தொலைபேசியில் திங்கள்கிழமை மாலை என்னுடன் (கருணாநிதி) பிரதமர் பேசினார். கட்சியின் சார்பில் பரிந்துரைத்த பெயர்கள் அனைத்தையும் ஏற்பதாகத் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுக்கு அவர்கள் (அமைச்சர்கள் பட்டியலில் உள்ளவர்கள்) வர வேண்டுமெனவும் கூறினார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்' //

எனக்கெல்லாம் இதை வாசித்து வாந்தி பேதி தான் வந்திருக்கின்றது. ஆனாலும் கண்டிப்பாக அடுத்த பிறப்பென்றொன்று இருந்தால் இப்படிப்பட்ட அப்பனுக்கு மகனாக பிறக்க வேண்டும் அல்லது பிறப்பில்லாத நிலை வேண்டும்.

5 comments:

Raja said...

வயித்தெரிச்சல்!

இட்டாலி வடை said...

வாருங்கள் ராஜா! இருக்காதா பின்னே...ஊரான் பணத்தில் தன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால்...

வெற்றி said...

யெப்பா இட்டாலி வடை, இது உனக்கே ஓவராத் தெரியல?

யேன், ஜெயலலிதாவுக்கு தம்பியா பொறந்தா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு.

கூடப் பிறக்காத சசிகலாவே நோகாம நொங்கு துண்ணும்போது, நீ கூடப் பிறந்தயுன்னு வெச்சுக்கோ, இந்தியாவையே கலக்கலாம்.

புரியுதா? புரியாக்காட்டி மெயில் அனுப்பு டிஸ்கஸ் பண்ணலாம்.

இட்டாலி வடை said...

வாங்க விஜய ராஜு!

கூடப்பொறந்த தம்பியாய் பொரக்கிரதை விட ...குட்டிராஜா என்னாலும் முடி சூடும் இளவரசனாப் பொரக்கிறதில இருக்கிர பாதுகாப்பு எதுல கெடைக்கும் ....

ஆட்சிக்கு ஆட்சியாச்சு ..ஆஸ்திக்கு ஆஸ்தியாச்சு..

Unknown said...

ஈ... ஈ... ஈ...
கொடுத்து வச்ச பயலுக...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil