ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, May 18, 2009


வேலிக்கு ஓணான் சாட்சிவெள்ளை வேட்டிக் கள்ளரெல்லாம் இப்போது சாட்சியம் சொல்ல வெளிக்கிட்டிருக்கின்றார்கள். இது வரை நடந்த இன அழிப்பிற்கு காரணமானவர்களே இவர்கள் தான். புலிகளைத் தடை செய்ததன் மூலம் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியதே இவர்கள் தான்.

இன்று தமிழ் மக்களின் தலையில் விழுந்த குண்டுகளின் சொந்தக் காரரும் இவர்கள் தான். பின்னே என்ன? கோழிப்பன்ணையே வைத்திருக்க வழியில்லாத சிங்களவன் கொத்துக் குண்டுகளையா தயாரிப்பான்? கொண்டை கபூன் பணியாரம் சாப்பிட்ட குடுமி அப்புகாமி இன்று கொலைவெறி பிடித்தலைந்ததற்கும் குவித்துப்போட்ட பிணமலைக்கும் இந்த வெள்ளைச் சட்டைக் கனவான்களே காரணம்.

ஒரு திருகோணமலையைப் பிடிக்க ஒரு அமெரிக்க மயிரை அதில் நட்டு வைக்க எத்தனை ஆயிரம் தமிழ் மண்டையோடுகளைக்குவித்திருக்கின்றார்கள். ஒரு மன்னாரில் கப்பல் விட இந்தியக் களவாணிகள் எத்தனை குழந்தைகளின் நடு முதுகைக் கீறி எடுத்திருக்கின்றார்கள்.

வெட்கமாய் இல்லை இவர்களுக்கெல்லாம். மண்டையோட்டு மாலையுடன் மலையாய்க் குவிந்திருக்கும் பிணங்களின் மேல் இந்தியாவின் தர்ம சக்கரக் கொடியை நடுவதற்கு.

//" வட பகுதியில் இடம்பெற்ற போரினால் உருவாகியிருக்கும் பாரிய மனிதாபிமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றது.//

வட பகுதியில் போர் ஏன் வந்தது? மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏன் வந்தது? மனிதாபிமானம் இல்லாத மிலேச்சர்கள் உங்களால். உங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்காக அப்பாவிகளுக்கு யுத்த வெறியை ஊட்டி ஆயுதங்களை விற்பதனால்... இத்தனை மனித அவலமும் தோன்றியிருக்கின்றது. தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய இத்தனை இறப்பையும் தடுக்காது விட்டது இன்னும் கொஞ்சம் "காசு" பார்க்கும் பேராசையால்.

புலிகள் பயங்கரவாதிகளா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் ஊரில் வந்து குண்டு போட்டோமா? இரயிலைக் கடத்தினோமா? எப்படி பயங்கரவாதிகள் ஆனோம். உன் ஆதிக்கத்திற்கு தடையான முள்ளென நினைத்தாய் தடை போட்டாய். ஒரு இனத்தையே நட்டாற்றில் விட்டாய்..

களவாணி இந்தியா ..மெளனம் காக்கின்றது 25 ஆயிரத்திற்கு மேல் அப்பாவி மக்கள் இந்த இரண்டு நாளில் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் அகிம்சை தேசம்.. தூ.. காறித்துப்ப வேண்டும். தர்மசக்கரத்தின் அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு..அதை பிய்த்து எடுத்து விட்டு ஒரு மண்டையோட்டை வைத்து விடுங்கள்..அது தான் இன்றைய இந்தியாவிற்குப் பொருத்தமானது.

இனி வருவார்கள் அகிம்சையின் தூதர்கள் ..அலட்டல் நாய்கள்...புண்ணிய பாரதத்தின் பதர்கள்...

1 comment:

Anonymous said...

I feel shame to be a Tamilian.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil