ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 17, 2009


இந்தியாவை ஆளப்போராங்க தமிழங்க


இந்தியாவை ஒரு தமிழ்க்கட்சி ஆளப்போவுதுன்னா நமக்கெல்லாம் பெருமைதானேப்பா. அதும் உலகத் தமிழினத்தின் தானைத் தலைவரு் கறுப்புக்கண்ணாடி கழட்டா அறிவியல் ..ஆங் ...மேதை மஞ்சள் துண்டு மகிமையாளன்... மூணு பொண்டாட்டியிருந்தும் ஒத்துமையா எல்லாப் பிள்ளங்களையும் பேராண்டிங்களையும் அதுஅதுங்களின் இது இதுவான இன்னோரன்ன ஜந்துகளையும் அரவணைச்சு கூட்டுக்குடும்பத்தின் மாண்பு மதிப்பு இன்னா அது.. ஆங் ..பெருமை அல்லாம் பறை அடிச்சு பரப்பிக்கொண்டிருக்கும் பெருமையாளனின் கட்சி ஆண்டாலென்ன? குடும்பம் ஆண்டாலென்ன?

தமிழ் தெரிந்தவன் ஆட்சியில இருக்கையில் தமிழ் பேசும் நாம் யாராயிருந்தால் என்ன? நமக்கெல்லாம் அந்தப் பெருமையில பங்கிருக்குத் தானே.. எப்படியென்று கேட்டா எப்பிடி சொல்லி வெளங்கப்படுத்த..ஆங்.. ஒரு விளக்கம் தாறன்பா... வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வப்புலவனாம் திரு வள்ளுவர் நமக்கென்ன? மாமனா? மச்சானா? அவரை நாம் உரிமையுடன் கொண்டாடவில்லையா? முண்டாசுக்கவிஞன் பாரதி ..பாப்பான் அல்லவா? ஆனாலும் அவனை நாம நம்மாளு..தமிழ்க் கவிஞன் என்று கொண்டாடவில்லையா? மீசையை முறுக்கிக் கொண்டு திரியவில்லையா?

வாடிய முல்லைக்குத் தேரீய்ந்த பாரியைப் பார்த்து நம்மவன் இவன் என்று உள்ளம் பூரிக்கவில்லையா? மயிலுக்குப் போர்வை ஈய்ந்த பேகன்,சடையப்ப வள்ளல்., கீழக்கடல் எங்கும் கப்பல்கட்டி படை நடத்திய இராஜேந்திரசோழன் .. இவர்களெல்லாம் என்ன மாமனா? மச்சானா?

தமிழன் அல்லவா? அந்தத் தமிழைப்பேசுவதால் ஈனர் நமக்கும் பெருமை வந்ததல்லவா? மும்முடி வேந்தர்.. ஏன் தலையில் கல் சுமப்பித்த சேரன் செங்குட்டுவன் இன்னும் எத்தனை பேரால் நாம் நெஞ்சை நிமிர்த்தி நின்றோம். அப்பாடா.. கொஞ்சம் பொறு மூச்சி விட்டுக்கிரேன்.. எப்படித்தான் இப்பிடி தம் புடிச்சு பேசிக்கிரானுகளோ..

அத போல் இப்போதும் ஒரு டயம் வந்திரிச்சு. தமிழனையா..நாங்கள் தமிழன்..எங்க மொழி பேசுற நம்மாளு குடும்பமே டில்லியில் அரியணை கட்டிலில ஏறப்போகிது. பொறாமை அல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுங்க. அக்பரும், ஷாஜஹானும் ,ஒளரங்கசீப்பும் ஆட்சியியற்றிய டில்லி ஐயா டில்லி.. நன்றாக எண்ணிப்பாருங்க...காஞ்சியில் ஆண்டவனும் தஞ்சாவூரில் படை நடாத்தினவனும் ராஜாதிராஜன் ..வீராதி வீரன்னு கொண்டாடுரோம்.. டில்லி போய் ஆட்சி செய்யிரதுன்னா சும்மாவா?. நீங்க கிணத்துத்தவளங்களா இருக்காதீங்கப்பா...

இம்மன்னர்களின் புஜபலத்தால் கிடைத்ததல்ல உங்கள் வாக்குப்பலத்தால் கிடைத்தது. உங்களுக்கும் அருகதை இருக்கின்றது பெருமைப்பட..வேண்டுமென்றால்.. எந்தக்கோவிலிலும் வந்து சூடமேற்றி சத்தியம் செய்கின்றேன்.


கடந்த தடவை 16 இடங்களில் தனித்து வெற்றி பெர்ற கட்சி இம்முறை 18 இடங்களில் வென்றிருக்கின்ரது. 16 இடங்கள் கிடைத்திருந்தபோது 7 அமைச்சர் பதவிகளை வைத்திருந்தது . இந்த முறை இன்னும் ஒன்றிரண்டு கூடக்கிடைக்கலாம். உங்களுக்கு மறந்து போய் விட்டிருக்கும். சத்தியமாய் நம்புங்கள் 7 அமைச்சுப்பதவிகள் ..இதில் இரண்டு முழு கபினட் பதவி. இந்தத்தடவை குறைந்தது 3 கபினட் பதவி 5 அல்லது 6 இணை அமைச்சர் பதவி..நிச்சயம் வேண்டும் ..கேட்பார்கல் அதிலென்ன சந்தேகம் உனக்கு..

முடிக்குரிய இளவரசரும் அல்லவா களத்தில் குதித்திருக்கின்றார். அவர் வாள் சுழட்டலில் தான் 4 இலட்சத்து சொச்சம் தலைகள் உருண்டு வாக்காகச் சேர்ந்ததே..அவுரங்கசீப்பின் வாட்களுக்கு கூட இத்தனை அதிர்ஷ்டம் கிடைத்திராது.

தகவல் தொழில் நுட்பம் தொலைத்தொடர்பு,கப்பல்,சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலை இவற்றுடன் ரெயில்வே நிறைய செழிப்பான துறை. மாட்டித்தீவனப்புகழ் லல்லு "கிள்ளி" விளையாடிய துறை. வெட்ட வெட்டக்குறையாத தங்கச்சுரங்கம்... ஆனாலும் என்ன வங்கத்துப் பெண்புலி மம்தாவிற்கும் அதில் ஒரு கண்.. அவர் ஆண்டனுபவித்த துறையாச்சா..இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுமா அந்த அம்மா? அந்த அம்மா விட்டுக்குடுத்தால் எங்க ஐயா குடும்பத்துக்குத் தான் பட்டயம் எழுதிக்குடுப்பார்கள்.

அன்பு மணி கை விட்ட சுகாதாரம் இருக்கிறதே.. ஆமாம் அடகொக்கா மக்கா அதற்கு..படித்து இருக்க வேண்டுமே.. செல்வம் இருக்கும் இடத்தில் படிப்பு இருக்காதேடா.. "டாக்டர்" பட்டம் வாங்கிடலாம் என்கிறாயா? அடே படிக்காத பயலே நம்ம ஐயா வைத்திருக்கிற "டாக்டர்" பட்டம் வைச்சுக்கொள்ளுறது... ஊருக்கு ஊரு கீப்பு வைச்சுக்கொள்ராப்போல மற்றது வாசிச்சு வாங்கிறது.. அது வேற இது வேற...

படிக்கணும்டா..நம்ம தமிழ்ச் சாதி படிக்கணும்டா.. அதுதானே வாழ்க்கைக்கே வேட்டு என்று தெரிந்தும் வாக்குப் போட்டுக்கிட்டிருக்கோமே..அதை விடடா ..நம்ம ஐயா வீட்டில் இருந்து பெண்புலியும் ... புலி நம்மய்யாவிற்கு பிடிக்காத சொல்லாச்சே சரி சரி சிங்கம்னு மாத்திடுவோம்..சிங்கம்..சிங்களவன்.. அட இதுவும் நல்லாத்தான் இருக்கு நம்ம ஐயாவுக்கும் ஐயாவின் அம்மாவுக்கும்...பிடிச்ச சொல்லாச்சே...அவங்கம்மா.. அவங்க செத்துப் போய் நாளாச்சேன்னு சொல்லுறியா? அட அந்த அம்மா வேற இந்த அம்மா வேறடா... இவங்க கூட்டணியில இருக்கும் வரை ஐயாவிற்கு "அம்மா" வா ஆக்ட் குடுப்பாங்க..ஸ்டெப் மதர் ..மாதிரி.. இதெல்லாம் அரசியல் அப்பா..பெரிய வூட்டுச் சமாச்சாரம்...

நம்மையா டில்லி போக புல்லட் புரூவ் கார் டில்லி போயாச்சு..என்னா ஈழத்துக்கா போரார்னு ஆச்சரியப் படாத அப்பா.. அவரு டில்லி போனாலும் எங்க போனாலும் அவருக்கு அது தேவைதான்.. யாரையும் அவர் நம்ப முடியாமப் போனதால தான் வீட்டில இருந்தே மினிஸ்டர்களப் போடுராரு. ரெண்டு பிளேனு புக் பண்ணியிருக்காங்க.. அவ்வளவுக்கு ஜனத்தொகை அவங்க வூட்டில... ஒண்ணெடுத்தா ஒண்ணு இலவசம் குடுக்கிராப்பில ரெண்டு குட்டிப்பிளேன் இலவசமா குடுப்பாங்களோ என்னவோ...

என்னவோ போங்க.. ஈழத்தமிழனுங்க சாவும் போது தந்தி அடிக்கவே காசில்லம இருந்தவரு எப்பிடின்னு... வாயைத் தொறக்காத... முன்னாடியே சொல்லிட்டேன் .. பொறாமையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு வாங்கன்னு...

பெருமை மட்டும் படுங்கடா.. தமிழன் டில்லியில ஆளப்போறான் ..சந்தோஷப் படுங்கடா...

2 comments:

வாக்காளன் said...

vavutherichall.. jellusil???
panayanagam nu therinjum 2 naal munnadi varaikkum naangal dhan vetri vetri en padhivu poteenga??

இட்டாலி வடை said...

வாங்க வாக்காளன்!

அது வந்துங்க நாங்க உங்களை நம்பி ஜனநாயக வாதிங்களா கடைசி வரை இருந்ததும்...

உங்க தலைவரு ..உங்களையே நம்பாது எப்போதும் போல பணநாயகவாதியாய் இருந்ததும்...

தேர்தல் அன்னு ஈவ்னிங் நம்ம டாஸ்மாக் சம்பாதித்தது 20 கோடிக்கும் மேல... இது என் பணமா? உன் பணமா? அத்தனையும் உங்க ஐயா பணமுங்க..

குடுக்கிர மாதிரி குடுத்து எடுக்கிரமாதிரி எடுத்திட்டாரே... டாஸ்மாக்கெல்லாம் ஆளுங்கட்சியாளுங்களினதுன்னு நாந்தான் சொல்லணுமா?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil