ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, May 23, 2009


குட்டி ரேவதியும் குருவிக் கதையும்


மிக சுவாரஷ்யங்களை விதைத்துப் போய்க் கொண்டிருக்கின்றது வாழ்க்கை. இப்போது தான் துப்பட்டா புகழ் குட்டி ரேவதி பற்றிப் பிரஸ்தாபிக்கப் போக சுடச் சுட வந்து விழுந்திருக்கின்றது கவிதை ஒன்று.

அதுவும் ஏடாகூடமான என்ணங்களைத் தான் எப்போதும் போல் இப்போதும் எனக்குள் ஏற்படுத்துகின்றது.

இதோ கு.ரேவதியின் கவிதை ..



//அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்

எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி

புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்

ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால் இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே//


அடர்ந்த கரும்புதர்களிற்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின...இருக்கலாம் என் மூளைக்குள் ஆகாய விமானங்களும் ஏதேதோ இரைச்சல்களும்..அப்போது தான் அனுபவித்த ஒரு நினைவு கூடுகின்றது.

அதிகாலை ஆமாம் அப்போது தான் ஒரு முடிவு அல்லது முடிக்க வேண்டிய நேரம் வருகின்றது. அவற்றின் பறத்தலுக்காய்...அல்லது கூடலின் முடிவு ..அவ்வாறுதான் இருக்கும்.

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் மேலெழுந்து இறங்கும் மார்பும் சுவாசித்தலுக்காக அலையும். கைப்பிடி கொள்ளக் கூடிய காற்றை நெஞ்சினுள் இறக்கி... வியர்த்து விட்ட சுவாசத் துவாரங்களை ஆற்றுப்படுத்த முனையும். அதீத வேலையின் களைப்பு இவ்வாறு மறக்கப்படும்.

//புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்..//

பறக்க முடியாத குஞ்சுகள் தவ்வல்கள்... வழித்துத் துடைக்க வேண்டியவர்கள்.. "வல்லன வாழும் "தத்துவத்தில் தோற்றுப்போனவர்கள்.. வாழ்வதற்கு அருகதையற்றவர்கள்.

ஊழியின் பெருவலியல்ல.. வாழ்க்கையின் தத்துவங்களையும் சுவாரஸ்யங்களையும் நாம் தான் கொண்டிருக்கின்றோம். பிரபஞ்சத்தை வழி நடாத்துபவர்களே நாங்கள் தானே..

என் குஞ்சுகளும் கனவுகளும் எப்போதும் புதர்களைத் தேடியபடியே...

அது சரி தத்துவ விசாரத்தில் இறங்குமளவிற்கு குட்டி ரேவதிக்கு வயசாகிப் போய் விட்டதா?

கவிதைகளின் ஒரு சிறப்பே வாசகனின் எண்ணத்தைத் தூண்டி விடுவது தான். கவிதைகளுக்கு நேரடியான வாசிப்பு இருக்க முடியாது.. இருக்கக் கூடாது.. வாசிக்கும் மனதின் வியப்புகளால் கட்டமைக்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சிந்தனையைத் தூண்டிய குருவிக்கதைக்கும் குட்டி ரேவதிக்கும் ..துப்பட்டா விசிறிய வணக்கம்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil