ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 17, 2009


சாதாரண தமிழனா ? பிரபாகரன்


யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். பிரபாகரனைப் பற்றி ஒரு தனி மரியாதையோடு நினைக்கும் சாதாரண தமிழர்களில் நானும் ஒருவன். இன்று சிங்கள இராணுவம் பொறி வைத்து சந்து பொந்தெல்லாம் தேடிக்கொண்டிருக்கின்றது. கடற்கரையில் பரேட் அடித்து கொடி மாற்றுகின்றார்கள். இதோ பிடித்து விடுவோம் என்று சொல்லிச் சொல்லியே இனி பிடிப்பதற்கு இடம் இல்லாதபடிக்கு எல்லாம் பிடித்து விட்டார்கள். பிரபாகரனைத் தான் காணோம். ஒன்றாகத் தற்கொலை செய்தவர்கள் என்று 150 பேரின் பிரேதங்களையும் சேர்த்து வைத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றைக் கையைக் காட்டவும் கூடும்.

எது எப்படியிருந்த போதும் பலரின் கனவுகளில் குழப்பம் விளைவித்த பிரபாகரன் செய்த ஒரே குற்றம் தமிழனுக்கு ஒரு சொந்த நாடு வேண்டுமென்று நினைத்தது தான். ஏன் நானும் நீங்களும் செய்த செய்கின்ற குற்றம் தான்.குற்றம் என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டுப்போகட்டும். அது எங்களின் உரிமை ,தணியாத தாகம். அதே குற்றத்தை நாங்கள் இன்னும் இன்னும் மகிழ்ச்சியுடன் செய்வோம்.

இந்த நேரத்தில் தான் என்னிடம் பல கேள்விகள் இருக்கின்றன. பிரபாகரனைக் குற்றம் சாட்டும் நீங்கள் எவ்வளவு யோக்கியவான்கள் என்பதை உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். பிரபாகரனைப் பிடிக்காத மாற்றுக்கருத்தாளர்கள். உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை. சகோதர யுத்தம். சரி இயக்கங்களில் இருந்த நீங்கள் ஒரு கொலையும் செய்யவே இல்லையா? உங்கள் இயக்கக் காரனை..உங்கள் ஊர்க்காரனை.. அடுத்த இயக்கக் காரனை..

உங்களுக்கும் பிரபாகரனுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் என்ன காந்தி வழியிலா போராடினீர்கள்? இரத்தம் படிந்த கைகளுக்குச் சொந்தக் காரர்களே... பின்னர் என்ன புலிப்பாசிசம்? உங்களை விடவில்லை பிரபாகரன் நாட்டாமை காட்ட..அது தானே உங்கள் பிரச்சினை.

அடுத்து தோழர்கள்.. ஐயா அறிவு ஜீவிகளே.. போகாத ஊருக்கு வழி காட்ட வேண்டுமென்றால் உங்களிடம் தான் கேட்க வேண்டும். எடுத்தவுடன் கம்யூனிஸம் என்பீர்கள் சோஸலிஸம் என்பீர்கள். நீங்கள் தயாராய் இருந்தாலும் மக்கள் தயாராய் இல்லை ஐயா. உங்களுடன் கூட வர நானும் தான் தயாராய் இல்லை. கம்யூனிஸம் தோற்றுவிட்டது. கம்யூனிஸப்புரட்சி செய்த ரஷ்யாவே அதை விட்டு வெளியேறி வந்து அதிக காலமாகிவிட்டது. சீனாவில் மாவோ சாக மாவோயிஸமும் செத்து விட்டது. இப்போது சீனா சிவப்புச் சட்டை போட்ட முதலாளித்துவ நாடு புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கம்யூனிஸத்தையும் உங்களையும் வாழ விட மாட்டார்கள். அது தான் இன்றைய உலக ஒழுங்கு.எடுத்ததெற்கெல்லாம் புரட்சி என்று அதில் ஒரு வித வெறுப்பே வந்து விட்டது. சோத்துக்கு அலையும் மக்கள் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு புரட்சி செய்ய வரமாட்டான். அதையாவது நம்புங்கள்.

நீங்கள் எல்லாம் புலிகளுடன் இணைந்து அல்லது அவர்களுடன் சேர்ந்து போராடியிருந்தால் புலிகளும் இப்படிப் போயிருக்கவும் மாட்டார்கள் அவர்களும் அழிந்து மக்களும் அழிந்திருக்க மாட்டார்கள். ஏன் நீங்கள் செய்யவில்லை . உங்களுடைய கர்வம்..அதி மேதாவித்தனம்.. இவனுகளுக்குக் கீழே நாங்களா? என்ற அறிவு ஜீவிப் போதை.

இப்போ என்ன நடந்தது. புலியிருந்த இடத்தில் புல்லு முளைச்சிட்டுது. ஆனால் புலிகளைப் போல அல்ல ஒரு புல் வெளிகூட உங்களால் உருவாக்கிக் காட்ட முடியாது. ஏன் ஒரு குழுவாகக் கூட உங்களால் சேர முடியாது. மாக்ஸிஸம்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம்,தலித்தியம்,பெண்ணியம்..எத்தனை பேசுகிறீர்கள்.. புலிகளுக்கு எதிராகவேனும் உங்களால் ஒன்றாகச் சேர முடிந்ததா? 30 வருடகாலகாலம் புலிகள் போராட 30 குழுவாகப் பிரிந்து நின்று நீங்கள் செய்தது நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பியதுதான்.இன்னும் உங்களுக்குள்ளேயே ஒற்றுமையும் வரவில்லை தெளிவும் வரவில்லை. அப்படியொன்று வந்து நீங்கள் பெட்டி படுக்கையோடு வெளிக்கிட்டுப் போய்... சும்மா போங்கையா..அதற்குள் மூன்று தலைமுறை வாழ்ந்து மடிந்து போய்விடும்.

புலிகள் விட்ட இடத்தில் இருந்து யாராவது அல்லது புலிகளே தொடருவார்கள்.புலிகள் செய்ததெல்லாம் சரி இல்லாவிட்டாலும் அவர்கள் நின்ற இடம் சரிதான். மக்களை அவர்கள் நம்பாவிட்டாலும் மக்கள் அவர்களை மட்டும் தான் நம்பினார்கள். ஏனென்றால் மக்களுக்கு விரும்பியதைச் செய்து முடிக்க கடைசி வரை நின்றவர்கள் அவர்கள்.

சுதந்திரப்போராட்டத்தில் பகத் சிங் வரலாம் கட்டபொம்மன் வரலாம் காந்தியும் கூட வரலாம். யாராவது ஒருவர் சரியான வழியைக் காட்டுவார்கள். அந்த நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது. காந்தியால் சுதந்திரம் கைகூடியது என்பதற்காக கட்டபொம்மனையும் பகத் சிங்கையும் மறந்தா போய்விட்டோம். இதில் யார் பிரபாகரன் என்பதைக் காலம் தான் கை காட்டும்.

இந்த காந்தி வாழ்ந்த காலத்தில் எத்தனை கோடிபேர்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்களையெல்லாமா காலம் நினைவு கூர்ந்திருக்கின்றது. அது போலத்தான் உங்களையும் மறந்து விடும். காலமே மறக்கும் போது நாம் மறந்து விடக்கூடாதா? அதற்குள் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். நீங்கள் எழுதுவதால் எந்த பயனும் இல்லையென்றாலும் எங்கள் மனங்களை நிறையவே நோகடிக்கின்றீர்கள். துன்பம் வரும் பொழுதில் சிரிக்கச் சொன்னார்கள். சிரிக்க மறந்து எத்தனையோ காலமாகி இப்போது அழுவதற்கும் கண்ணீர் வற்றிப்போன பொழுதிலா? உங்களுடைய நகைச்சுவைகளை நாம் பார்க்க வேண்டும்.

அதுவும் ஒரே மண்ணில்ப் பிறந்து ஒரே காற்றைச் சுவாசித்த உங்கள் மனதில் ஏன் இத்தனை குரூரம்.நீங்களே இப்படியென்றால் தமிழகத் தமிழர்கள் என்ன செய்வார்கள். அவர்களின் வாழ்வும் வழிமுறைகளும் வேறானவை. அளக்கும் அலகுகள் வித்தியாசமானவை. சோற்றுக்கு வழியில்லையென்றாலும் தலைவனின் கட்டவுட்டுக்கு பாலூத்த மறக்காதவர்கள். நடிகைக்கு கோவில் கட்ட மனைவியின் தாலியை அடகு வைப்பவர்கள்.

அவர்கள் எப்படிப் புரிந்து வைத்திருப்பார்கள். தொப்பூழ் கொடி அது இதுவென்று எதையெதையோவெல்லாம் சொல்லி எங்கள் மனங்களில் அதீத ஆசைய வளர்த்து விட்டார்கள். அதே எதிர்பார்ப்புடன் நாங்கள் இருந்தால் அவர்களும் தான் என்ன செய்வார்கள்.ஏழைக்கேத்த எள்ளுருண்டையோ கூழோ ஏதோவொன்று எதிர் பார்த்தால் கொடுத்து விடுவார்கள். எங்கள் தாகம் தான் அடங்காத சுதந்திரம் ஆச்சுதே. அதை அவர்கள் எப்படிக் கொடுப்பார்கள்.

தந்தை செல்வாவிடம் பெரியார் கூறியதைப்போல் ஒரு அடிமை இன்னுமொரு அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும். உண்மை தானே. அதற்குப் பிறகும் எதை எதிர்பார்ப்பது.அரசியல் ஜிகினாக்களையெல்லாம் விலத்திப் பார்த்தால் நாங்களும் அடிமை அவர்களும் அடிமை. அப்புறம் என்ன எதிர்பார்ப்பு வேண்டிக்கிடக்கின்றது.

போராட்டத்தை நாங்கள் தான் தொடரவேண்டும். எம்மக்கள் தான் தொடரவேண்டும். சுதந்திரம் வேண்டியவர்கள் தானே சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும்.

சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களே. பகத் சிங், நேருஜி, ஏன் வீரபாண்டிய கட்டபொம்மனும் தான். அதைப்போலவே பிரபாகரனும் எப்போதும் ஒரு மாவீரன் தான். சுந்திரப்போராட்ட வீரன் தான். அது தமிழர் வாழ்வில் நிரந்திரமாக்கப்பட்டது. அதை எண்ணியாவது வாழ்த்தாவிட்டாலும் தூற்றாதிருங்கள்.

13 comments:

பாரதி.சு said...

வணக்கம் இட்டாலி வடை,
உண்மை தான். எந்தன் உணர்வுகளையும் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். பிரபாகரன் ஆயிரம் தவறிழைத்திருந்தாலும் இன்று இருக்கும் நடப்பு அரசியல் வாதி??(வியாதிகளினை) விட எவ்வளவோ மேல் தான்.

ரங்குடு said...

நண்பர் இ.வடை:
தமிழர்களைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னமேயே கரிகாலன் காவிரியில் வெள்ளத்தைத் தடுக்க இலங்கையிலிருந்து தமிழர்களை அடிமையாகக் கொண்டு வந்தான் என்பது வரலாற்றுச் செய்தி.

தமிழர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள 3 மணி நேர உண்ணாவிரதமும் இருப்பார்கள், தமிழ் ஈழம் தான் தீர்வு என அறிக்கையும் விடுவார்கள்.

தமிழக மக்களோ இவர்களில் யார் அதிகமாக நடிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து மகிழ்வார்கள்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தேடிக் கொள்ள வேண்டும். தங்கள் பாதையை தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் விரைவில் வசந்தம் மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வெத்து வேட்டு said...

ஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்
க.பு. அம்மா: தம்பி என்னோட மகன் எங்கே?
பிரபா: அவன் என்னை காப்பாத்த ஆமிகாரங்களுக்குள்ளே பூந்துட்டான்
க.பு. அம்மா:அப்போ தமிழீழம் கிடைக்குமா?
பிரபா: ஜோக் அடிக்காதீங்க ... பத்மநாதன் சொன்னது தெரியாதா? நாங்க ஆயுதத்தை கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி
க.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...
பிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...


i never believed in Kalaingar.. but Kalaingar and people voted for DMK alliance saved Tamil Nadu from these stupid "Tamil" madness...
this Nedumaran, Seeman Parathirajah are idiotics and could have destroyed Tamil Nadu just like the tamils in Srilanka...
look now ltte leaders escaped with their family..only innocent people got killed and suffered...
i am happy that Praba is alive..he will be living example of a COWARD
who destroyed the people who trusted him..
he abondoned them... let them die like stray dogs in Vanni

தூ ..

ttpian said...

those who understand the core of the issue will be with prabha-who never speaks-relies in ACTION!
i will remember u always!

கந்தர்மடத்திலிருந்து கவின் said...

“ வெத்து வேட்டு” ங்கிறது இதத்தான்.
புரிஞ்சுக்குங்க மக்கா.......என்னா ஒரு அபிமானம்,அன்பு ”மக்கள்” மேல....???? எத்தின பேர்டா கிளம்பிற்றீங்க ”வெத்து வேட்டு” அடிக்க.

periinnop said...

vethu vettu nee ellam oru tamila na (manusana) da.en thalaivar ra parthu ipdi pesuna un nakka aruka padum da

Anonymous said...

உண்மை.
பணத்திற்கு விலைபோகாத தலைவன்.
ஈழமக்களுக்கு தெரியும் அவரை பற்றி.
தலைவரை எவனாலும் பிடிக்க முடியாது.
// leaders escaped //
அப்படி தப்பி இருந்தால் ஈழதமிழன் சந்தோசமே அடைவான்.

Anonymous said...

பிரபாகரன் ஆயிரம் தவறிழைத்திருந்தாலும் இன்று இருக்கும் நடப்பு அரசியல் வாதி??(வியாதிகளினை) விட எவ்வளவோ மேல் தான்.###
ஒரு போராளி ஆயிரம் தவறிளைத்திருந்தாலும் என்ற வாக்கியம் அவனை நெருங்க கூடாது

Anonymous said...

டேய் வெத்து வேட்டு,
நல்லா பெயர் வைதுகொண்டுளாய். இதில் காறி வேறு துப்புகிறாய்! பிரபாகரன் மகனின் உயிர் இல்லாத உடலின் படத்தை தொலைக்காட்சில் காண்பித்தார்கள் பார்த்தாயா? ஜோக் எழுதுகிறானாம். முழு விவரமும் வரும் வரை முடிகொண்டிறு. பெயருக்கேத்த மாதிரி சும்மா துள்ளாதே.இதில் நடுவுல இங்கலீசு வேற. கருணாநிதியை இவர் நம்பமட்டராம். போடா. அவரே இல்லியான்றால் இன்னும் கேவலமான வெத்து --------- ஆக இருந்திருப்பாய். நாங்க காறி துப்பினால் காணமால் போய் விடுவாய். மனுசன்னா இருக்க பழகிக்கோ.

Anonymous said...

ada pongada neengalum inga pattasu pattya kelapputhu setthavan epadi thirumba varuvan eluthuna thirumba vara mathiri iruntha ........

Anonymous said...

நல்ல பதிவு

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Anonymous said...

காந்தி வாழ்ந்த காலத்தில் எத்தனை கோடிபேர்கள் வாழ்ந்திருப்பார்கள்.

காந்தியால் சுதந்திரம் கைகூடியது என்பதற்காக கட்டபொம்மனையும் பகத் சிங்கையும் மறந்தா போய்விட்டோம். இதில் யார் பிரபாகரன் என்பதைக் காலம் தான் கை காட்டும்.


Setha Paambai adikkum Suurargalai vittu Thallungal.

Puli alinthaalum Puli Puli thaan.Poonai Aagaathu.

sae kuvaravai vida sirantha veerar Thalaivar Prabakaran ena Ulagam Paesum.

Unmayai maraikka ninaikkum ettaparkalai ellam yaesum.

கோடிகோடியாக கொள்ளை அடித்து வாழும் தலைவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்kum intha Ulagil, தன் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு தலைவன் பிரபாகரன் ena Ungalai Pola ennam konda Pala kodi Thamilargalil naanum oruvan.

( Nile Raja )

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil