ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, December 3, 2012


மீண்டும் நான் சுவாசிக்கின்றேன்

நிறையக் காலம் உங்களையெல்லாம் மறந்து போயிருந்தேன். உலகம் உருண்டை என்பது உண்மையானதால் மீண்டும் சந்திக்க முடிந்திருக்கின்றது. இனி உணர்ச்சி வசப்பட்ட அரசியல் கிடையாது. அதனால் எந்த நன்மையும் கிடையாது என்பதை மே 2009 நிரூபித்திருக்கின்றது. எல்லாம் முடிந்து விட்டதான நினைப்புத்தான் இத்தனை காலம் எழுந்திருக்க விடாது கவிழ்த்துப் போட்டிருந்தது.

நானும் சாதாரண மனுஷன் தான் என்பதை காலம் நன்கு உறைக்க உணர்த்தியிருக்கின்றது. வாழ்க்கை என்பது அரசியல் மட்டுந்தானா என்ன? சல்லடை போட்டுத்தேட சுவாரசிக்க சுவாசிக்க ஆயிரம் விடயங்கள் இருக்கின்றது. அதைப் பகிர்ந்து கொள்ள விழைவதே என் உயிர்பபு என்பேன். அதுவே பிரபஞ்ச இயக்கமும் கூட..

ஆக பிரபஞ்ச இயக்கம் உள்ளவரை என் சுவாசமும் இருக்கும்.இன்னும் இனிமையான விடயங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வோம்.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil