ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 25, 2009


மூன்று டைனசோர்கள்


"மூன்று தெய்வங்கள்" என்று ஒரு ஈமெயில் வந்திருந்தது. "இனியொரு"வில் ஜமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரை. "மூன்று தெய்வங்கள்" என்பதே அடிப்படையில் வலுவிழந்து போகின்றது. தெய்வங்கள் தங்களுக்கிடையில் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. அசுரர்களையே மிகுந்த ஆக்ரோஷத்துடன் வதம் செய்யப் போகும். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தவிர. அனைத்து வேளையிலும் அசுரரை அழித்து பூபாரம் குறைக்கவோ, கவர்ந்து செல்லப்பட்ட மனைவியரை மீட்கவோ, கொடுத்த சாபத்தை அல்லது வரத்தை பூர்த்தி செய்ய ஏதோவொரு காரணத்துடன் பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் சமயங்களில் பாதாளலோகத்திற்கும் பயணப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஆனால் இவர்கள் சரியான டைனசோர்கள். தம் பெருத்த உடல்களைத் தூக்கிக் கொண்டு புழுதி பரவ கர்ணகடூரமாக பேரொலி எழுப்பிக்கொண்டு ஓடி ஏறி மிதித்துத் துவைத்துப் போட்டுக்கொண்டிருப்பவர்கள். மாற்றுக்கருத்தை மதிக்கவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாது வெறி பிடித்து அலைபவர்கள். சர்வசாதரணமாக "பிம்ப்" "வேசிமகன்" என்று சக மனிதனையே தூஷணை செய்பவர்கள்.

இதில் எஸ்.ரா விற்கு இரண்டாவது இடம் தான் எப்போதும்.எல்லோருக்கும் நல்ல மனிதர் வேடம் போடுவதால் இருக்கலாம்.

மற்ற இருவரும் சரியான காட்டு டைனசோர்களே. ஜெமோ தன்னை விட வித்துவக்குஞ்சு இல்லையென்ற மதர்ப்பில் எதுவும் தெரியாமலே அலைந்து கொண்டிருக்கின்றவர். சாரு தனக்குத் தெரியாததையும் தெரிந்தது போல சொற்களையும் வார்த்தைகளையும் போட்டு "நானில்" உச்சத்தில் நிற்பவர்.

தன் வித்துவத்தைக்காட்டுவதில் தவறேதும் இல்லை. ஆனால் மற்றவருக்குத் தெரியவில்லை என்று கூறியே மேல் நிலையாளனாகக் காட்டுவது தான் இவர்கள் இலக்கியத்தில் அழுக்கைப் பூசிக்கொள்கின்றது. மற்றும்படி கோழி கூட்டுக்குள்ளே லபோ லபோ என்று அடித்தாலென்ன? குரங்கு உச்சாணிக்கொப்பில் தான் தொங்குவேன் என்று அடம்பிடித்தால்தான் என்ன? அவர்கள் வாழ்வு..தேர்வு..

இனியொரு தொடர்பு : http://inioru.com/?p=3382

ஈமெயிலில் வந்தது..அவதூறா? ஆவணமா?
நான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தமிழ்நாட்டில் எவன் நம்புவான்? - கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .
முதலில் செய்தியை படியுங்கள் :-

சென்னையில் நடந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ’’காங்கிரசுக்கு தமிழகத்திலே எவ்வளவு பெரிய வீழ்ச்சியை உருவாக்குவதற்கு இலங்கை பிரச்சினை எதிர்கட்சிகளுக்கு பயன்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை வைத்து தமிழர்களுடைய உணர்வு, உணர்ச்சி, போராட்டம்- தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற காரியங்கள்- இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு துணை போகிறது என்கின்ற ஒரு கற்பனையையும், அந்த காங்கிரஸ் அரசோடு தி.மு.க. சேரலாமா என்ற கேள்வியையும் எழுப்பி நம்முடைய பலத்தை குறைக்க எண்ணினார்கள்.

காங்கிரசை பொறுத்தவரையில் அது மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்கள் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள ராணுவத்திற்கு உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொய்களை இங்கே உள்ள மக்கள் நம்புகின்ற அளவிற்கு சொன்னார்கள்.

அதை சிலர் நம்பவும் செய்தார்கள். நாம் உண்மையிலே இலங்கை தமிழர்களுக்காக எங்கிருக்கின்ற தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்றவர்கள், பணியாற்றுகின்றவர்கள் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தார்கள்- கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- தமிழ்நாட்டில் எவன் நம்புவான்?

பேராசிரியர் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- அவருடைய பதவியை தூக்கி எறிந்ததை- இலங்கை தமிழர்களுக்காக நானும், அவரும் சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்ததை மறந்து விடுவார்களா? எனவே மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொன்ன பொய்யை யாரும் நம்பத்தயாராக இல்லை.


நமது கேள்விகள் /விளக்கம் இங்கே :

*
பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள் .
*
நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள் .
*
ஊரோடு எல்லாரையும் மழயில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும்
" அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
*
ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள் .
*
மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள் .
*
பாத்து முறைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது .
*
இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
*
கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு . போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள் .
*
ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய் .
*
அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய் .
*
முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை .
*
ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்ததிக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .

வழுதி , புதினம் -மறுபக்கம்

வழுதி , புதினம் -மறுபக்கம்

உண்மையான பெயர்: பரந்தாமன்

தற்போதைய வசிப்பிடம்: அமெரிக்கா

எதிரிகள்: தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், அதியமான்

முழுநேரப்பணி: மேற்கண்டவர்களை தூற்றுவது

காரணம்: தனது காம இச்சைகைளையும், பணத் தில்லுமுல்லுகளையும்கண்டு பிடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியமை.

புதினம் இணையத்தளத்தில் வழுதி என்பவர் 'முன்னாலே சென்றோரின்..." என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வு கட்டுரை என்ற தலைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கு ஆதரவு நிலை போல காட்டி வந்த புதினம் இணையத் தளத்தின் புலிச்சாயமும் இந்த கட்டுரையையுடன் வெளித்துப்போனது.

வழுதி என்பவர் யார்?

இவர் இவ்வாறான கட்டுரை எழுதவேண்டிய காரணம் என்ன?
என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த கட்டுரை.

வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார். இவருக்கான தண்டனை பற்றி தலைமைப்பீடம் யோசித்து வந்தபோது.

தலைவர் குறுக்கிட்டு இவர் நீண்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சாந்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்


புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்:

ஜெப்றி உதுமான் லெப்பை
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம்
பரபரப்பு ரிசி

ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர்.

தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்.

CTBC வானொலி இளைய பாரதியின் துரொகத்தனம்

பரபரப்பு பத்திரிகை பதிப்பாளர் ரிசி இவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் பணியாற்றும்போது கரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இவர் புலி ஆதரவு போல் வேடம்போடும் புலி எதிர்பாளர். கனடியத் தமிழ் மக்களிடம் விசாரித்தால் இவர் பற்றி புரியும்.

எயார் கனடா நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் பணியாற்றிவருபவர்.

தன்னை புலிகள் வன்னிக்கு அழைத்தாகவும் தான் அங்கு சென்று அவர்களுக்கு புலனாய்வு குறித்து பாடம் எடுத்ததாகவும் கூறிவருகிறார்.

ஆனால் கனடாவில் இவருடைய பத்திரிகையில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரைகளால்.... பல கடைகளில் இப் பத்திரிகை தற்போது விற்பனையில் இல்லை என அறியமுடிகிறது.

கரன் நடத்திவரும் மற்றய இணையத்தளமான 'தமிழ்நாதம்" என்ற இணையத்தளத்தை பார்த்தால் புரியும் பரபரப்பு பத்திரிகை ரிசிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

கூலிக்கு மாரடிக்கும் பரபரப்பு ரிஷியும், ரிஷிக்கு மாரடிக்கும் தமிழ்நாதமும்

தமிழ்நாதத்தின் சுத்துமாத்து

கரன் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

கரன் ஆரம்பித்து நடத்தி வந்த புதினம் இணையத்தளம் விடுதலைப் புலிகளின் இணையத்தளம் போன்று மக்களுக்கு தோற்றுவததால் அந்த இணையத்தளத்தை

தமக்கு தருமாறு விடுதலைப் புலிகள் கேட்டனர் ஆனால் கரன், இதுதான் தனது வாழ்வு ஆதராம் தான் பிழைப்பும் இல்லாமல் இதனை நம்பியே பிழைப்பு நடத்துவதாகவும் புலிகளுக்கு தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையால் இவருக்கு செய்திகொடுப்பதை புலிகள் குறைத்துக் கொண்டு. ஜேர்மனியிலும் கனடாவிலும் இருந்து இயங்கும் இரு இணையத்தளங்களை அமைந்து திறம்பட தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இவைதான் முற்றிலும் வழுதிய தலைவர் பிரபாரகன் அவர்களை தூற்றியமைக்கும் புதினம் இணையத்தளம் அதனை வெளியிடுவதற்குமான காரணங்கள்.

ஆய்வு:
செல்வக்குமரன் சிற்றப்பலம் (கனடா)

ஐ.நா.வை நம்பவேண்டாம்!

ஐ.நா. தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று நம்பியவர்களும், குறைந்தது, மகிந்தா இழைத்த போர்க்குற்றங்களுக்குத் தண்டனையாவது பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தவர்களும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், ஐ.நா.வின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் பேரதிர்ச்சி எதுவும் இல்லை.

ஐ.நா தொடங்கப்பட்டது 1945ம் ஆண்டில். அதற்கு முன்னால் சர்வதேச நாடுகளின் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் இருந்தார். முதல் உலகப்போர் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட தலைவர் இவர். இவரிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. மனிதர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படவேண்டும். குறிப்பாக, பெண்களின் உரிமை, வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமை, போர்வீரர்களின் உரிமை. நாடுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஆயுதங்கள் தயாரித்துக்கொள்வதை தடுக்கவேண்டும். நீயா நானா என்று நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எங்கே என்ன பிரச்னை வெடித்தாலும் முதல் ஆளாக போய் பார்த்து பேசி, அமைதி வழியில் சுமூகமான தீர்வு காணவேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், மானுட குலத்தின் மேன்மையை கட்டிக்காக்கவேண்டும்.

கட்டவும் இல்லை காக்கவும் இல்லை லீக். எஞ்சியிருந்த கால் வாசி மீசையைத் தடவியபடி ஹிட்லர் ஐரோப்பாவை கபளீகரம் செய்து தன் பாக்கெட்டில் செருகிக்கொண்டபோது, லீக் செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு சுதாரித்துக்கொண்டு, இது முறையல்ல, உலக அமைதியை நீங்கள் கெடுப்பது போல் தெரிகிறது, போரை கைவிடுங்கள் என்று சட்டப்புத்தகத்தில் இருந்து சில ஆர்டிகிளை இடம்சுட்டிப்பொருள் விளக்கியது. சர்தான் போப்பா என்று லீகை ஒதுக்கித்தள்ளிவிட்டு மூர்க்கத்துடன் முன்னேறினார் ஹிட்லர். லீக் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தபோதே இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவரின் பணியும் முடிவுக்கு வந்தது. இனி லீக் தேவையில்லை என்று ஐரோப்பிய பெரும்தலைகள் ஒன்றுசேர்ந்து லீகை கருணைக்கொலை செய்தன. ஹிட்லரைப் போன்ற அடாவடிகளோடு அன்பொழுக பேசிக்கொண்டிருக்கக்கூடாது காதைத் திருகி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, லீகைவிட சக்திவாய்ந்த ஒரு தலைமை தேவை. இந்த எண்ணத்துடன் அக்டோபர் 25, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின் அணியைச் சேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் யூனியன், சீனக் குடியரசு ஆகிய நாடுகள். யாரைச் சேர்க்கலாம், என்னென்ன விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் என்னென்ன போன்ற விஷயங்களை விவாதித்து ஐ.நாவுக்கு ஒரு வடிவம் கொடுத்தார்கள்.

கடமைகள் வரையறுக்கப்பட்டன. இன்னொரு யுத்தத்தை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. ஆகவே, இனியொரு போர் கூடவேகூடாது. உலக நாடுகளுக்கு இடையே, வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை பூக்கவேண்டும். ஒரு சர்வாதிகார நாடு தன் மக்களை ஒடுக்குவதை, அழிப்பதை அனுமதிக்கக்கூடாது. ஏழைமையில் இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு புணரமைப்பு.

ஐக்கிய நாடுகள் என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட். தொடக்கத்தில் ஐம்பது நாடுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இன்று 192 நாடுகள். மொத்தம் ஐந்து பிரிவுகளை ஐ.நா. உள்ளடக்கியுள்ளது. விஷயங்களை விவாதித்து முடிவெடுக்க ஜெனரல் அஸெம்பிளி. உலக அமைதி பேண பாதுகாப்பு கவுன்சில். இதில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். எந்த தீர்மானத்தையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் இவர்களுக்கு உண்டு. மூன்றாவதாக, பொருளாதார, சமூக நல கவுன்சில். நான்காவது, செயலகம் (செகரடேரியேட்). ஐ.நா.வுக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களை, அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கும் பிரிவு. ஐந்தாவதாக, சர்வதேச நீதிமன்றம். நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளை சட்ட ஆலோசனைகள் மூலமாகத் தீர்த்து வைக்கும் பிரிவு.

இவைபோக, ஐ.நா.வின் அதிகாரபூர்வ அமைப்புகள் பல உள்ளன. ஒரு நாட்டில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று செயல்படும். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம். பிறகு, உலகச் சுகாதார மையம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியகம் (யுனிசெஃப்), காலனி ஆதிக்கத்தை விடுவிக்கும் கமிட்டி. அமைதியை விரும்பும் நாடுகளுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை. சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பாதுகாப்பு கவுன்சில் ஆராய்ந்து பரிந்துரைக்கும். புது செட்டப்பில் பக்காவான ஒரு பஞ்சாயத்து தலைவர் தயார்.

ஒரு நல்ல நாளில் வேலையை ஆரம்பித்தது ஐ.நா. சில வாரங்கள்தான் கழிந்திருக்கும். லிட்டில் பாய், ஃபேட் மேன் என்னும் இரு அணுகுண்டுகளைத் தயாரித்து ஜப்பான் மீது வீசியது அமெரிக்கா. ஐயோ என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஐ.நா.வும் அலறியது. மேலதிகம் எதுவும் செய்யவில்லை. முடியவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர். ஐந்து வல்லரசுகள் கொண்ட கூட்டணி அது என்றாலும் பிற உறுப்பினர்களைவிட அமெரிக்கா பொருளாதார ரீதியில் முன்னணியில் இருந்தது. ஆகவே, தவிர்க்கமுடியாதபடி, ஐ.நா,வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா மாறிப்போனது. வாய்மூடி அமைதியாக இருப்பதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழி இருக்கவில்லை.

ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஐ.நா.வின் தோல்வியும் ஆரம்பமாகிவிட்டது. வால்பிடித்ததுபோல் மற்ற நாடுகள் அணுகுண்டு பரிசோதனைகளில் ஒன்றன்பின்ஒன்றாக இறங்கியபோது, ஐ.நா. மேற்கொண்ட அதிகபட்ச நடவடிக்கை அறிக்கைக் கண்டனங்களை அச்சடித்து அனுப்பியதுதான். 1947 தொடங்கி சோவியத் யூனியனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மத்தியில் பல கட்டங்களாகப் பனிப்போர் மூண்டபோது, ஐ.நா.வால் இடைமறித்து தடுக்கமுடியவில்லை. எதற்கும் லாயக்கற்ற ஓர் அமைப்பு இது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்ஸன் வெளிப்படையாக ஐ.நா.வை குறைகூறினார்.

அமைப்பு ரீதியாகவும் ஐ.நா. பலகீனமடைய ஆரம்பித்தது. பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுசேர்ந்து பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஐ.நா.வின் அரசியல் சாசனம். அப்படித்தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு ஒருநாள் இந்த விதிமுறையை ஐவர் குழு உடைத்தது. எதற்கு வீண் விவாதம், வெள்ளைப்பூண்டு? பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள். நாங்களே கூடிப்பேசி முடிவெடுக்கிறோம். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஐவரில் மூவர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தலைவர் ரெடி.

பனிப்போரின் முடிவில் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபோது, எஞ்சியிருந்த ஒரே பெரும் வல்லரசான அமெரிக்காவின் பின்னால் பதுங்கிகொண்டது ஐ.நா. உலக விஷயங்களை தன்னிச்சையாக ஆராய்ந்து, விவாதித்து, தீர்வு காணும் வழக்கம் ஒழிந்துபோனது. விவாதங்கள் என்னும் பெயரில் பாதுகாப்பு கவுன்சிலில் குத்துச்சண்டைகளே அதிகம் நடைபெற்றன. நீ, நான் என்று நாடுகள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆயுத பலத்தைக் கூட்டிக்கொண்டன.

1994ல் ருவாண்டாவில் மூண்ட இனமோதலில் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1998 தொடங்கி 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 50 லட்சம் மக்களை பலிவாங்கியது. சூடான், டாஃபர் இனப்படுகொலை பல ஆயிரக்கணக்கான மக்களை சீரழித்தது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தொடர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திகொண்டிருக்கிறது. காஸா முனை விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மார்ச் 2003ல் சர்வதேச தீவிரவாதத்துக்கு எஜதிரான போரின் ஒரு பாகமாக ஜார்ஜ் புஷ் ஆப்கனிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமித்தார். சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். இராக் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா. என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கிறது? எண்ணற்ற விவாதங்களை நிகழ்த்தினார்கள். டன் கணக்கில் தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள். குண்டு விழ விழ கண்டனங்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பெரும் செலவில் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக்கிரமித்த நாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. இரு தரப்பினரையும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்கள். தேநீர் அருந்தினார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ். இனி இதுபோல் செய்யாதீர்கள். சீரழிந்த மக்களுக்கு ஏதாவது பார்த்துப் போட்டு செய்துகொடுங்கள். வரட்டுமா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே உணவுப் பொட்டலங்கள். காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள். நிலைமை முற்றினால், அமைதி காக்கும் படைகள். இவ்வளவுதான் செய்யமுடிந்திருக்கிறது. இவ்வளவுதான் செய்யமுடியும். ஐ.நா.வால் எந்தவொரு போரையும், எந்தவொரு இனப்படுகொலையையும், எந்தவொரு ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பதுதான் நிஜம்.

நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்ஷே மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்? ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எனவே, வழக்கம்போல், ஐ.நா. அமைதி காக்கிறது.

(ஆனந்த விகடனில் வெளிவந்த மருதன் கட்டுரை)

எல்லைகள் கடந்த தமிழீழ அரசும் உடைபடாத பொய்களும்


நான்காம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த நிலையில் எல்லைகள் கடந்த ஈழ அரசு நிறுவுவது பற்றி புலிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர். சொந்த மண்ணில் நடத்தமுடியாத போராட்டத்தை வேற்று மண்ணில் இருந்து நடாத்தும் திட்டமே இது. ஆனாலும் சொந்த மண்ணிலிருந்து நடாத்தும் போராட்டத்தை விட இது சிக்கலானது. இவ்வகையான அரசு ஒன்றைத் தன் மண்ணில் அமைப்பதற்கு சுதந்திரமான நாடு ஒன்றின் ஆதரவு வேண்டும்.

பாதிக்கப்படும் இனத்தின் ஆதரவாளர்களாகவோ அல்லது பாதிப்பை வழங்கும் நாட்டின் எதிராளியாகவோ கூட இந்த அனுமதி வழங்கும் நாடு இருக்கலாம். தொடர்ந்த அனுமதியழிக்கும் நட்பு நாடாகவும் இருக்கலாம். தமிழினம் சார்பாக நாடுகடந்த அரசினை அமைக்க முயற்சிகள் எடுப்பவர்கள் புலிகள்.

சொந்த மண்ணில் வலிமையாக இருந்து போராட்டம் நடாத்தி சர்வதேசத்தின் எந்தவொரு நாட்டின் வெளிப்படையான ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியாது வெளிப்படையான பகமையைச் சம்பாதித்து தமது போராட்டத்தில் இருந்து தோற்கடிக்கப்பட்டவர்கள் இவர்கள்.சர்வதேச சமூகத்தின் எந்தவொரு அனுதாபத்தையும் கடந்த 25 வருடங்களாகப் பெறமுடியாது தோற்கடிக்கப்பட்டவர்கள்.

இன்று அவர்களின் பெயரிலேயே எடுக்கப்படும் முயற்சி ஒரு வீண் வேலை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் ... ஆகவே அவர்களின் மீதான தடை அகற்றப்படவேண்டும் என்ற கோஷம் அண்மைக்காலமாக வலுப்பெற்றுக் காணப்பட்டிருந்தது. இது ஒரு வகை இராஜதந்திர உத்தியாகக் கூட சில புலி ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இது ஒரு இராஜதந்திரம் என்றால் உங்கள் இராஜதந்திரம் ஒரு போதும் எடுபடப்போவதில்லை. புலிகள் மீதான தடையை, புலிகளிடம் ஜனநாயக ரீதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும் வரை தடைவிதித்திருக்கும் எந்தவொரு நாடும் எடுக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதைப்போலவே தடையை நீக்கினாலும் உங்கள் நடவடிக்கைகளில் போதியளவு ஜனநாயகக் கூறுகள் வெளிப்படாதவிடத்து மீண்டும் தடையைப்போடுவதில் எந்தத் தாமதமும் அந்நாடுகளுக்கு இருக்கப்போவதில்லை. ஆகவே தடையை எடுப்பதோ போடுவதோ இங்கு உடனடி தேவையில்லை.தேவை, உட்கட்டுமானத்தில் ஜனநாயக நீரோட்டம்.

உங்கள் உட்கட்டுமானத்திலும் ஜனநாயகப்பங்களிப்பிலும் மாற்றங்கள் ஏற்படாதவிடத்து உங்களைத் தலையெடுக்க விடாதபடிக்கு மிகக் கவனமாகவே இந்நாடுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கும். அந்தத் தேவை அவற்றிற்கு என்றும் இருந்து கொண்டிருக்கும். ஒபாமாவின் ஆட்சி மாற்றமும் கிளாரி கிளிண்டனின் தமிழ் மக்கள் சார்பு பேச்சுக்களும் உங்கள் மனங்களில் சில சபலங்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவர்களின் நெகிழ்வுப் போக்கு தமிழ் மக்கள் சார்பானதேயொழிய புலிகள் சார்பானது அல்ல. இரண்டுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. சர்வதேசத்தின் தமிழ் மக்கள் மீதான இரக்கத்தை அரசியலாக்கி உரிமைகளை வென்றெடுக்க புலிகள் இப்போது பொருத்தமானவர்கள் அல்ல என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகும். அதனையே அண்மைய அமெரிக்காவின் புலிகள் மீதான 5 வருட தொடர்ச்சியான தடை நீடிப்பும் எல்லைகள் கடந்த தமிழீழ அரசை அமைக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்ற எரிச்சல் மிகுந்த பதிலும் வெளிப்படுத்துகின்றது.

புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் ..ஆகவே தடையை நீக்குங்கள் என்ற வாதம் எவ்வளவு பொய்மையானது என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றார்கள். அழிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு தடை நீக்கம் ஏன் ? என்பதை இந்த இராஜதந்திரவாதிகள் சொல்ல வேண்டும்.

அமெரிக்கா செய்ததையே பிரித்தானியா மற்று ஐரோப்பிய நாடுகளும் தொடர்ச்சியாகச் செய்யும். நாடுகடந்த அரசை புலிகள் அமைக்க இந்த நாடுகள் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியே ஒரு பெயர் தெரியாத நாடு அனுமதி வழங்கினாலும் புலிகளின் சார்பிலான தமிழீழ அரசின் பிரதிநிதிகளை இந்த நாடுகள் என்றும் ஏர்றுக்கொள்ளப்போவதில்லை.

சர்வதேச சமூகம் மதிக்கும் அமைப்புக்களிலும் நாடுகளிலும் எல்லைகள் கடந்த அரசின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்காமல் தமிழ் மக்களுக்கான எந்த உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது.கடந்த 25 வருடங்களில் பெற்றுக்கொள்ள முடியாத ஆதரவை இனிப்புலிகளால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சர்வதேச நம்பிக்கை துளிக்கூட கிடையாத படிக்கு சர்வதேசத்தின் மனநிலை இருந்து கொண்டிருக்கின்றது.

நிலமை இப்படியிருக்க போகாத ஊருக்கு வழிதேடி இன்னும் தமிழ் மக்களின் போராட்டக் காலத்தை வீணடிப்பதில் என்ன நன்மை கிடைத்து விடப்போகின்றது. தமிழீழப் போராட்டத்தில் புலிகளின் காலம் கடந்து விட்டது என்பதைத்தான் நகரும் உலகப்போக்கு விளக்கி நிற்கின்றது.

புலிகளின் பாசறையில் தொடர்பல்லாத நீதிக்கும் ஜனநாயகத்திற்குமான ஒரு அமைப்பையே சர்வதேசம் இன்று தமிழ் மக்களிடம் இருந்து எதிர்பார்த்து நிற்கின்றது.இந்த சின்ன உண்மையைப் புலிகள் விளங்கிக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

இன்று அடைபட்ட முகாமிலும் அகதிகளாக வெளியிலும் அலையும் அனைத்துத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத் தான் இருக்கின்றது.

Wednesday, June 24, 2009


தமிழ் பேசும் புல்லுக்கும் பூண்டுக்கும்


உலகில் இன்றைய நாளில் பார்க்கப்படுகின்ற மிகப் பயங்கரமான மனிதப் பேரவலமாக இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரத்தினை கூறலாம். அவ்வளவுக்கு மோசமான நிலைமையை இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களின் இந்த நிலைமையை உலகின் சகல ஊடகங்களும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன.

ஆகவே, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் பாரிய மனிதப் பேரவலத்தினை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மக்களுக்கு தேவையான உதவிகள் அடங்கிய கப்பல்கள் அங்கு இலங்கைக்கு சென்று அரச சார்பற்ற அமைப்புக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் நேரடியாக சென்றடைவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அவுஸ்திரேலிய அரசு நல்க வேண்டும்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அங்கு செல்லும் அனைத்துலக தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அந்த மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு உதவிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினை அவுஸ்திரேலிய அரசு கோரவேண்டும்.

அங்கு மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் நடைபெறுகின்றனவா என்பதனை சுதந்திரமாக விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் சிறிலங்கா அரசை அவுஸ்திரேலிய அரசு கோர வேண்டும் என்றார் விக்டோரிய மாநில அமைச்சரும் விக்டோரிய மாநில திட்டமிடல் துறையின் செயலருமான ஜெனி மிக்கக்கோஸ்.

கருணாநிதியெண்டா வடவனுக்கு பெரிய மயிரா ..?


தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை விடுத்தும் இந்தியா பாராமுகம்

சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காகவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் நிவாரண நிதி திரட்டி, 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரித்தனர்.

இவற்றை பிரான்சில் இருந்து 'கப்டன் அலி' என்ற 'வணங்கா மண்' கப்பல் மூலம் கடந்த 7 ஆம் நாள் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

நிவாரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, 'வணங்கா மண்' எங்கு செல்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.

தற்போது சென்னை அருகே 5 கடல் மைல் தூரத்தில் அனைத்துலக கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.

இக்கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வரவேண்டுமானால், இந்திய மத்திய அரசின் முறையான அனுமதி பெறவேண்டும். அதற்கான அனுமதி கிடைக்காததால் துறைமுகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கப்பலில், 15 பணியாளர்களும் கப்பலில் இருந்த உணவுப் பொருட்களைக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டுள்ளனர்.

மனித நேய அடிப்படையில், மத்திய அரசு தலையிட்டு நிவாரணக் கப்பல் சிறிலங்கா செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதுடில்லி சென்று எம்.எஸ்.கிருஷ்ணா உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தினார்.

நிவாரணக் கப்பல் சிறிலங்காவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழையவில்லை.

இது தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

நிவாரணக் கப்பல் இன்னும் அனைத்துலக கடற்பரப்பின் எல்லையில் தான் நிற்கிறது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.

சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை. சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் கப்பலில் உள்ள சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்குரிய முகவர் கப்பலில் இடம் கேட்டு வேண்டுகோள் கடிதம் கூட தரவில்லை. குடிநீரின்றி தவிக்கும் நிலை இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் நாள் குடிநீர் வழங்கினோம். இது மனிதாபிமான அடிப்படையிலான உதவிதான்.

தேவைப்பட்டால் மருத்துவம் உள்ளிட்ட அவசியமான உதவிகளை செய்ய துறைமுகம் தயாராகவே உள்ளது என்றார்.

சென்னைக்கு அருகே 5 மைல் தூரத்துக்கு நிவாரணக்கப்பல் வந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. ஏற்கனவே 7 ஆம் நாள் புறப்பட்ட இக்கப்பல் 15 நாட்களாக சுற்றிக்கொண்டுள்ளது. கப்பலில் குறித்த காலத்துக்குத்தான் உணவுப் பொருட்கள் இருக்கும்.

நாட்கள் ஆக, ஆக கப்பலில் உள்ள பணியாளர்கள் பசிக்கு உணவு கிடைக்காமல் திண்டாடும் அபாயம் உள்ளது.

இந்திய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமலர்' தெரிவித்துள்ளது.

ஆதாரம்: 'தினக்குரல்'

Tuesday, June 23, 2009


பொன் மாலை பொழுது: அம்மா எனும் ஒரு சொல்!

பொன் மாலை பொழுது: அம்மா எனும் ஒரு சொல்!

கடிதம் எழுதும் சித்து விளையாட்டு...


கடிதம் எழுதுவது ஒரு சித்து விளையாட்டுத் தான்.. இரண்டு மனங்களை ஒன்றிக் கலக்கப்பண்ணுவது ஒரு பேருவகையான விளையாட்டே...

"அதிகாலை சுபவேளை
ஒரு ஓலை வந்தது..
காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது.."

அப்படியொரு சுகத்தைக் கொடுக்கக் கூடியது கடிதம்..

கண்மணி..அன்போடு காதலன்
நானெழுதும் கடிதமே...

அப்படி அன்பைப் பண்போடு எழுதும் கடிதங்களும் மனங்களைக் குளிர வைப்பது உண்டு.

காதலோடு அன்பையும் அந்நியோன்யத்தைக்கூட கடிதங்களில் எழுதிக்கொள்ளலாம். அன்னம் விடு தூது ..புறா விடு தூது.. என்று புதிய புதிய வழிகளைக்கண்டு பிடித்து ஒருவர் மேலுள்ள அக்கறையை வெளிப்படுத்தி விடுகின்றோம்.

அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திய கடிதத்தை அரசியலும் வெளிப்படுத்தப்பயன் படுத்தலாம் என்று நிறுவியவர் கலைஞர். கறுப்புக்கண்ணாடி மூடிய இருண்ட இதயத்தில் கொப்பளித்த அரசியல் ஆசைகளையும் சுயநல தீ நோக்கங்களையும் தமிழின் சுவை என்ற தேன் தடவிக் கொடுத்தவர் கலைஞர். தமிழின் தேன் சுவைக்கும் அப்பாலிருந்த நச்சுச்சுவை அறியாது அவரைச்சுற்றிச்சுற்றிக் காகங்கள் போல் பறந்தலைந்தன ஒரு கூட்டம் கழகக் கண்மணிகள். காலப்போக்கில் கலைஞரின் கபடத்தனம் நெருக்கமாகி உடன் பிறப்புகளாயின.

இதற்குப் போட்டியாய் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது தான் இரத்தத்தின் இரத்தங்கள். எம்.ஜி.ஆர் போயாச்சு இரத்தத்தின் இரத்தங்களும் உறைந்தாயிற்று.

ஆனால் இன்றும் ஏன் கரைகின்றோம் என்றே தெரியாதபடிக்கு கரைந்து கொண்டுதான் இருக்கின்றன உடன் பிறப்புகளின் கூட்டம். கலைஞரின் தேன் தமிழால் கவரப்பட்டவர்களின் கரைதலுக்கு அந்தக் காரணமாவது இருந்தது. இன்று கரைபவர்களுக்கு பிச்சுத்தின்னும் வடையில் சிதறிப்பறக்கும் பொறையாவது கிடைக்காதா என்ற ஏக்கம் தான் ஒரே காரணமாய் இருக்கும். கலர் டீ.வி.க்கு அலையாத உடன் பிறப்புகள் உண்டா என்று கேட்டுப் பாருங்கள்.

தேய்ந்து போன பாதையும் வாரறுந்த செருப்பும் கதறிக்கதறி கதை சொல்லும். இப்போது ரேசன் சிபாரிசும் சேர்ந்து நிற்கின்றது. வாடி நிற்கின்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பற்றி சட்டமன்றத்திலேயே ஞாபகப்படுத்துகின்றார்கள். கொள்ளைக் கூட்டத்தில் சேர சட்டமன்றத்திலேயே காங்கிரஸ் விண்ணப்பிக்கின்றது. கொள்கைக் கூட்டம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். கொள்கைகளை மறந்து போவதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றார் கலைஞர்.

கடிதம் எழுதி கூட்டம் சேர்த்த கலைஞர் அக்கூட்டத்தை ஏமாற்றவும் எழுதுவதும் கடிதம் தான்.
ஈழத்தமிழரை ஏமாற்றியதும் கடிதம் வாயிலாகத்தான். நடக்கும் ..ஆனா இது நடக்காது போன்ற காமெடியன் வேலைகளுக்கு கலைஞரின் ஆயுதம் கடிதம் சக முதுகுவலி வியாதி.

நடந்தே தீர வேண்டுமென்றால் பிளைட் பிடித்து டில்லி போய்விடுவார்.. உதாரணம் அமைச்சுப்பதவிகள் இலாகாக்கள் பெற டில்லி போய் தள்ளுவண்டி ஊர்வலத்தால் டில்லித் தெருக்களை நிரப்பியது. தள்ளுவண்டியில் டில்லித் தெருக்களில் கருணாநிதியைப் பார்த்த சோகத்தை ஞானியும் எழுதியிருக்கின்றார்.

இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிப்பொருட்களை ஏற்றிவந்த "வணங்காமண்" தரை தொட முடியாதபடி நடுக்கடலில் அலையாடிக்கொண்டிருக்கின்றது. மீண்டும் கடிதம் எழுதக் கலைஞர் கையில் காகிதத்துடன்.

நடக்கும் ஆனால் நடக்காது... காமடியின் ஆரம்பக் காட்சி வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிற்கு கடிதத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. நாடகம் முடிவதற்குள் பசித்தவர்களின் பசியும் போய் பிராணனும் போய் விடும்.

தமிழக மக்கள் எல்லாம் காதைப் பொத்திக்கொண்டு வாழ்கின்றார்கள். சாப்பிடுவதற்குக் கூட வாயைத் திறக்கக் கூடாது என்று என்ன விரதமோ?

கலாமின் சலாம்....என்னவொரு வில்லத்தனம்


விசுக்கோத்து விவேக்குடன் சேர்ந்து வில்லத்தனம் பண்ணக் கிளம்பியிருக்கின்றார் முன்னைநாள் ஜனாதிபதி. அறிவுஜீவித்தன குல்லா மட்டும் போதாது அரசியல் பண்ண என்பதை எண்ணி ஐந்தே வருடங்களில் அறிந்து கொண்டவர். அல்லது அறிய வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்.

இப்போது பாடசாலைகளுக்குப் போய் பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் ஆசைகளை வளரவிட்டு பின்னால் அவர்களின் எல்லா அவஸ்தைகளுக்கும் முழுக்காரணமாகப் போகின்றவர். வேறு எப்படிச் சொல்வது?

மாணவர்கள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தால் நிச்சயம் குறிக்கோளை அடைய முடியும்

மாணவர்களால் அது முடியாததல்ல. படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளை இலட்சியத்தை வைத்துக் கொண்டு தான் படிக்கின்றார்கள். ஆனாலும் என்ன நடக்கின்றது. படித்து எவ்வளவு தான் நல்ல மார்க்குகள் பெற்றாலும் பணபலமில்லாதவர்களின் படிப்பு பாதியிலேயே கருகிப் போகின்றது. இதனால் என்ன நடக்கின்றது..ஒரு மாணவனின் 10,15 வருடங்கள் அடைய முடியாத குறிக்கோளுக்காக அழிந்து போகின்றது. இந்த அடிப்படை விடயத்தைக்கூட புரிந்து கொள்ளாத ..மாற்ற முயலாத ... இதை இன்னும் ஊக்குவிக்கும் இவரா சிந்தனாவாதி?

கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாத இந்தியாவை, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய இந்தியாவை, லஞ்சமும், ஊழலும் இல்லாத இந்தியாவை, வெளிப்படையான அரசு நிர்வாகம் நடக்கக்கூடிய இந்தியாவை

கனவு ..கனவு..வெறுங்கனவு மட்டுமே... நனவுலகில் வாழப்பயப்படும் கோழை மனது. ஜனாதிபதியாக இருந்தபோது எதை இவரால் சாதிக்க முடிந்தது? ஏன் அவ்வாறு முடியவில்லை என்றாவது சிந்தித்தாரா?

எங்கள் விசுக்கோத்து விவேக் கலாமைப் பற்றி ஏதோ அச்சுப்பிச்சுவென்று உளறி வைத்து விட்டது. அதைக்குழந்தைகள் பிடித்து விட்டது. அதனால் விவேக்கிற்குக் கிடைத்தது "பத்மசிறீ" பட்டம்.

எந்தக் குழந்தையைக் கேட்டாலும் "அப்துல் கலாம் ஆக வேண்டும்" என்று தான் சொல்லுகின்றது. ஆகி... பாடசாலைகள் தோறும் கவைக்குதவாத கனவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

இலஞ்சம் இல்லாத இந்தியா? அரசியல்வாதிகளின் இரண்டு கைகளையும் வெட்டி விடவேண்டும் ."பை" இல்லாத சட்டை போட உத்தரவிடவேண்டும். இவரால் செய்ய முடியுமா?

நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை எதிர்த்து எப்போதாவது குரல் கொடுத்திருக்கின்றாரா? அறிவுஜீவித்தனம் மட்டும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளப்போதாது. மனிதாபிமானமும் கலந்து வேண்டும்.

அஹிம்சை இருந்த இடத்தில் அணுகுண்டினைத் திணித்தவரிடம் ..எதை எதிர்பார்க்க முடியும்.

தீவிரவாதம் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்கிறேன்

உள்நாட்டில் தீவிரவாதம் இல்லாத இந்தியா..வெளிநாடுகளில் தீவிரவாதம் செய்யும் அடாவடி இந்தியா..இது எப்படியிருக்கின்றது.

அற்புதமான கனவு... "கத்தியெடுத்தவனுக்கு ..கத்தியால்தான் சாவு.." எப்போது இந்தச் சின்ன மூளைக்குள் வல்லரசுக் கனவு வந்ததோ அப்போதே தீவிரவாதம் தாக்குவதற்கு "கதவைத்"திறந்து விட்டாயிற்று.

அந்த இந்தியாவின் கனவு தான் இன்று 50 ஆயிரம் ஈழத்தமிழரை மேட் இன் இண்டியா குண்டுகளால் கொன்று போட்டபோது இந்த அறிவுஜீவியின் மனதில் ஒரு சொட்டு இரக்க நீர் கூட சுரக்கவில்லை.

Monday, June 22, 2009


ஒரு அறியாத சுவர்ப்பல்லியின் " கிச்சுக்..கீச்சு"


கவிஞர் தாமரையின் அண்மைய கவிதை "கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!" பல மட்டங்களில் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. சாம்பாலாய் எரித்துக் குவிந்த மண்ணிலிருந்து எழும் கோபம் இத்தனை காட்டமில்லையென்றால் தான் ஆச்சரியம் கூடு கட்டும். வாழ்க்கையின் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு சாம்பல் மேடாக நுரை தள்ளிப்போயிருக்கும் ஒரு இனத்தின் தொலைதூரத்தில் இருந்து பதறித் தவிக்கும் கோபத்தில் இத்தனை மட்டுமல்ல இதற்கும் மேலான காங்கைகள் இருக்க வேண்டும். மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையே குழி தோண்டிப்புதைத்தவர்களை விலங்குகளாய் விழுந்து பிராண்டுவதில் என்ன தவறிருக்கமுடியும். மிருகங்களுடன் மிருகங்களின் பாசையில் பேசுவது, அப்படியாவது அவர்களுக்கு விளங்காதா என்ற ஆதங்கத்தால்தானே ஒழிய விலங்குப்பாசை எம் பாசை என்பதால் அல்ல.

மனிதர்களாய் இருந்ததால் தானே விலங்குகளால் எங்களைக் குதறிப்போட முடிந்திருக்கின்றது, குரல் வளையை கடித்து குருதியைக் குடிக்க முடிந்திருக்கின்றது. மனிதத்தைத் தொலைக்காததால்த் தானே இன்னும் விண்ணப்பங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கசாப்புக்கடையின் சுவற்றில் அப்பியிருக்கும் அப்பாவி முருகு என்ற பல்லி நச்சு நச்சு என்று கீச்சிட்டிருக்கின்றது. நானிருக்கும் வீட்டைப்பற்றி சொல்லப்போவதா? என்று அறுந்த வாலைப்பிடித்து ஆட்டி ஆட்டிப்பார்க்கின்றது.

கசாப்புக்கடையில் குடியிருப்பதும் இரத்தம் தெறித்த வடுக்களிடையே திளைத்து நழுவித் திரிவதும் குற்றமில்லையாம்.. கழுத்தறுக்கும் உயிர் குடிக்கும் கீழ்மைத்தொழில் செய்யும் இடமென்று சொல்வது சுட்டிக்காட்டுவது பிழையாம்.

சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு போர் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரித்தானிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தியா இன்னும் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் சாம்பலை எடுத்துப் பூசி ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதன் கோர முகத்தில் சீழ் வடிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இனி கங்கையிலும் காவிரியிலும் உழைப்பாளர்களின் வியர்வை மட்டுமன்றி ஈழத்தவனின் கண்ணீரும் குருதியும் கலந்து சுவை கூட்டும்.

அப்படி சாபம்விட்டது எங்கள் தியாகத்தாய் மதிவதனியாக இருந்தால் கண்கள் கலங்க நெற்றி தரையில் பட கவிழ்ந்தே கிடந்திருப்போம். தனக்கு தெரிந்ததை, தனது தொழிலை மட்டும் கொண்டு, எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் ஆதரவை தெரிவித்துவிட்டு, இன்று தாமரை சாபமிடுவது சிறுபிள்ளைத் தன்மாகவே உள்ளது.


இது தான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். செய்வதையும் செய்து விட்டு கொன்றவனுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு கொல்லப்பட்டவனுக்காகவும் அழும் ஓநாய்க் கண்ணீர்.

அப்பாவி வேடத்தில் இருக்கும் பாசிசவாதி. கோபம் இருந்தால் நெஞ்சுரம் இருந்தால்...அட நான் மட்டுமா கொலைகாரன் என்னோடு இன்னும் நான்கு பேர் இருக்கின்றார்களே..அவர்கள் பேரையும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.. அப்படியென்று புலம்பினால் நீங்கள் செய்த குற்றம், பிழை, கோழைத்தனம், அராஜகம், அத்துமீறல், அடாத்து எல்லாம் இல்லையென்று போய் விடுமா?

இரசாயனக் குண்டை உன் வீட்டில் போட்டு உன் குழந்தைகள் வெந்து கருகிப் போவதைப் பார்த்தால் தான் உனக்கு மனிதாபிமானம் என்ற ஊற்றுப்பிறக்குமென்றால் அது உனக்கு வேண்டாம்.

கோபம் இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தும் நெஞ்சுரம் இருந்திருந்தால் கவிஞர் தாமரை, ஈழக்கொடுமைக்கான காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் இருக்கும் இனப்புல்லுருவிகளில் ஆரம்பித்து பல ஆசிய ஐரோப்பிய நாடுகளைத் தொட்டு வெளிவந்திருக்கும்.


ஆனால், தாமரை சொல்லிச் சபித்திருப்பதோ என் நாட்டின் பேரைச் சொல்லி! அட காருண்ய தேசம் ..அகிம்சாநாடு..அன்பு விளையும் பூமி.. எப்படிச் சபிக்கலாம்... உன் நாடு அப்படியொரு நாடாக இருந்தால் யார் சபிக்கப்போகின்றார்கள்... நாங்கள் என்ன வேலையற்ற வெட்டிப்பயல்களா?

ஒரேயொரு கேள்வி கேட்கின்றேன்... பதில் தெரிந்து..சொல்லிவிட்டு வா? மீண்டும் பேசுவோம்.

இந்தியாவிற்கு ஈழத்து மண்ணில் என்ன வேலை?

தனிப்பகையோ, ராசதந்திரமோ குற்றம் புரிந்தது நான்கு பெரும் தலைகள் மட்டுமே..புண்ணாக்கு ..நான்கு தலைகளும் உன் நாட்டின் பேரைச் சொல்லித்தான் எல்லாம் செய்கின்றார்கள். உன் நாடு என்று ஒன்று இல்லையென்றால் இவர்கள் எல்லாம்..எங்கள் காலில் மிதிபட்ட கழிவுகள். அவர்களுடைய அதிகாரம் என்ற பல் கழட்டப்பட்ட ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் எங்களிடம் பாடம் கற்றுக்கொள்வார்கள்..


இத்தனை பேசுகின்ற நீ ..இதுவரை..ஏதாவது ஒரு கேள்வி உன்நாட்டைப் பார்த்து உன் மனிதரைப் பார்த்து கேட்டாயா?

ஏன் இப்படி கொலைவெறியாடினாய்? ஒரு இனத்தைக் கொன்று போட்டாய்..? அவர்கள் கனவைக் கலைத்துப் போட்டாய் என்று...

இராஜீவால் ஒரு தனுவைத் தான் உற்பத்தியாக்க முடிந்தது. இப்போது ஓர் இனத்தையே "தனு"வாக உனக்கெதிராக உற்பத்தியாக்கியிருக்கின்றாயே...

உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,
என்பதே இந்த அப்பாவியின் ஆசை.
முத்தாய்ப்பாக பயமுறுத்தியிருக்கின்றது முட்டாள் பல்லி. இது தான் காருண்ய தேசத்தின் கடைசி சீக்கு....


குறிப்பு: மனிதத்தோடு இன்னும் பயணிப்பதால் கவிஞர் தாமரைக்கு எங்கள் ஆதரவை அள்ளிச் சொரிகின்றோம்.

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! - கவிஞர் தாமரை


ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
…………………………………………………………………………….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

ஆக்கம் : கவிஞர் தாமரை

Sunday, June 21, 2009


புலிகளின் தோல்வியும் மறைந்திருக்கும் உண்மைகளும்


இன்று நடந்தேறியிருக்கும் புலிகளின் தோல்வியைத் தமிழ் மக்களின் தோல்வியாகப்பார்ப்பது மிகத் தவறானதாகும்.ஒரு பின்னடைவாக வேண்டுமென்றால் எண்ணிக்கொள்ளலாம். போக வேண்டிய பாதையை திருத்திக் கொள்ளும் சந்திப்பாகக் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம். இலங்கை பிரிட்டிஷாரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் உள்ளும் புறமும் இருந்து கிளம்பிய அடக்கு முறைகளுக்கும் அராஜகங்களுக்கும் எதிராக நடாத்திய போராட்டத்தின் ஒரு உயர்ந்த படி நிலையில் வந்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் போராட்டமானது அரசியல் இராணுவ படிநிலைகளுக்கூடாக பல கட்டங்களாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. சில நிலைகள் மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் சில நிலைகள் மக்கள் விரோதப்போக்குடனும் கடந்து வந்திருக்கின்றன.மக்கள் ஆதரவு விரோதம் என்பது நூறு சதவிகித மக்களின் நலன் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றது.ஆனால் தமிழ் மக்களின் போராட்டமானது நூறு சதவிகித ஆதரவையோ விரோதத்தையோ எப்போதும் பெற்றுக்கொள்ளாத ஒரு இரண்டுங்கெட்டான் போக்கிலேயே நகர்ந்திருக்கின்றது.

அதற்குப் பலகாரணங்களை முன்னிறுத்தினாலும் இயல்பாகவே தமிழ் மக்களுக்கிடையில் இருந்து கொண்டிருக்கும் பொருளாதார சாதீய பிரதேசவாத மத வேறுபாடுகளை முன்மைக்காரணிகளாக குறித்துக் கொள்ளலாம். இப்போக்கினை மேலும் சாத்தியமாக்கியதற்கு போராட்டச் சக்திகளிடையே காணப்படாத அரசியல் சித்தாந்தத் தெளிவின்மையை வெளிப்படையான காரணமாகக் கூறிக்கொள்ளலாம். ஆனாலும் மறைக்கப்பட்ட காரணங்களாக போராட்டத்தை முன்னின்று நடாத்திய சக்திகள் வரித்துக் கொண்ட ஆயுதங்களின் பலத்தை மட்டும் முழுமையாக சார்ந்து நின்றமை, சாதீய அடிப்படையில் பிரிந்து நின்றமை,பிரதேச பூகோள ரீதியான உயர்வு தாழ்வினை சித்தரித்து நின்றமை ஆகியவற்றைக் கூறிக்கொள்ளலாம்.

இவையெல்லாவற்றிற்கும் மேலான ஜீரணித்துக் கொள்ளவே கடுமையான விடயம் மக்களுக்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டமை. கருத்துக் கூறவோ விமர்சிக்கவோ முற்பட்டவர்களை துரோகியாக்கி போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போக்கு கடுமையாகவே மக்களைப் போராட்டத்துடன் ஒட்டவிடாது ஓரங்கட்டியது. புலிகளின் எழுச்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உறுதுணையாக இருந்ததோ பின்னர் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்கும் போக்கினால் மக்களை விட்டு விலகிச்சென்றதும் அவர்களின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

மக்களால் மக்களுக்காக நடாத்தப்படாத போராட்டங்கள் எப்போதும் வெற்றியடைந்ததில்லை. மக்களை இணைத்துச் செல்லாத போராட்டங்களும் குழுநிலைப் போராட்டமாக பிரிக்கப்பட்டு தோற்கடிக்கப்படும். இன்று புலிகளின் போராட்டம் சர்வதேச சமூகத்தால் அவ்வாறே பிரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் போராட்டம் என்று எத்தனை தூரம் வலிந்து எங்களால் கற்பிக்கப்பட்டாலும் அதன் உட்கூறுகள் ஒரு குழு நிலைப் போராட்டமாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தது. மக்களை மனப்பூர்வமாக ஒன்றிணைக்கத்தவறிய ஒரு நிலையில் பயம் காரணமாக இணைத்து வைத்திருந்ததையும் எதிர்ப்புரட்சிச் சக்திகள் கணித்து வைத்திருந்தன.அதன் காரணமாகவே புலிகளின் போராட்டம் இலகுவாக முறியடிக்கப்பட்டது.

இது ஒரு ஜனநாயகப்போராட்டமாக சர்வதேச சமூகத்தாலும் உலகெங்கும் பரந்து வாழும் ஜனநாயகச் சக்திகளாலும் பார்க்கப்படாது போனமையே இவ்வாறான எளிதான வீழ்ச்சிக்கு அடிகோலியது. 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்டபோதும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு நாடோ ஒரு ஜனநாயக அமைப்போ முன் வந்து ஆதரவான கருத்தெதனையும் கூறியிருக்கவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். இது ஜீரணிக்கக் கஸ்டமான விடயமாக இருந்தாலும் மறுக்க முடியாத உண்மையாகும். யாருமே எம்மை ஆதரிக்க முன்வரவில்லையென்றால் நாம் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தானே உண்மை. ஒட்டுமொத்த உலகமும் நமக்கெதிராக சதி செய்வதாக சொல்லிக்கொள்வதோ எண்ணிக் கொள்வதோ நம் அறியாமையே தவிர வேறல்ல. இன்னும் ஜனநாயக விழுமியங்களைக் காக்கும் ஆரோக்கியமான உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இல்லாவிட்டால் எந்தவித சட்ட , மனத் தடையுமில்லாது இலங்கை கறுப்பர்கள் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியுமா? அதன் மூலம் அந்நாடுகளில் வாழும் மக்களின் அனுதாபத்தையும் அரசுகளின் கவனத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமா?

இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத் தோல்வி தமிழ் மக்களின் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் நாம் போராட்டத்தின் திசையை முன்னகர்த்த நிறையவே சிந்திக்க வேண்டியிருக்கின்றது.பல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுடன் உட்கட்டுமானத்தில் மிகுந்த அளவில் ஜனநாயகச் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.கருத்துச் சுதந்திரத்தை மேன்மைப்படுத்தும் வகையில் அரசியல் சித்தாந்த தெளிவை மக்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தின் நேர்மையையும் தேவையையும் சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லும் வகையில் கல்விமான்கள் ,மாணவர்கள்,அறிவு ஜீவிகள் சித்தாந்த வாதிகள் சமூக அக்கறையாளர்கள்,தாய்மார்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.

இது ஒரு மக்கள் போராட்டம் என்ற நம்பிக்கையை அனைத்துத் தரப்பு மக்களின் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும்.மக்களை விட மேலாக ஆயுதங்களை நம்பும் கலாச்சாரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.பல்குழல் பீரங்கிகளும் சுடுகலன்களும் ஏற்படுத்தாத நற்பன்களை ஓங்கி ஒலிக்கும் மக்களின் குரல் உருவாக்கித் தரும்.படையணிகளின் அணிவகுப்பு ஏற்படுத்த முடியாத மாற்றங்களை மக்கள் பேரணி ஏற்படுத்தித் தரும்.முள்ளி வாய்க்காலில் அன்று புலிகளின் படையணிகள் இல்லாதிருந்திருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாவது ஒரு ஜனநாயகத்தின் குரல் அந்த மக்களைக் காக்க ஓங்கி எழுந்திருக்கும்.

இன்று பர்மாவில் வீட்டுக்காவலில் இருக்கும் யூகிசாங் வெறுங்கைகளாலேயே பர்மிய இராணுவ அரசிற்கெதிராக மகத்தான போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார். அவர் ஒருவருடம் காட்டும் உலகின் நல்லெண்ணத்தின் சிறு துளியையாவது அன்று புலிகளால் வென்றெடுக்க முடியாது போனதேன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனுபவங்கள் கற்றுத் தருகின்றன. அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொள்வது முன்னேற்றத்தை நோக்கி எம்மைக் கொண்டு செல்லும்.

இது இவ்வாறு இருக்க புலிகளின் எஞ்சிய சில சொற்ப நாட்டாமையாளர்களால் முன்னெடுக்கப்படும் "தேசம் கடந்த தமிழரசு" என்ற இயக்கம் மீண்டும் தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்து போகும் விதத்திலேயே அமைந்திருக்கின்றது. தங்கள் தவறுகளில் இருந்து திருந்திக் கொள்ளும், குறைந்த பட்சம் அந்த தவறுகளுக்காவது மனம் வருந்தும் போக்கு அவர்களிடம் காணப்படவில்லை. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இணைத்துச் செல்லும் ஜனநாயக வழியைத் தன்னும் அவர்கள் தெரிவு செய்யவில்லை. இப்போக்கு இன்னும் பல சங்கடங்களையும் பின்னடைவுகளையுமே தமிழ் மக்களுக்கு உருவாக்கித் தருமேயொழிய சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுத்தரப்போவதில்லை.

மீண்டும் புலி முகம் பற்றிய தவறான எண்ணக்கருத்தையே சர்வதேச நாடுகளிடையே வலிந்து திணிக்கும்.சிங்களச் சிறிலங்காவின் அராஜகப் போக்கினை வலிந்து காக்கும் தர்மசங்கட நிலைக்கு உலக நாடுகளை மீண்டும் கொண்டு செல்லும்.

இன்னும் இன்னும் ஒரு சிலரின் தவறுகளால் துன்பப்பட தமிழ் மக்கள் தயாராகவில்லை. மக்களின் பால் அக்கறை கொண்ட அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணையும் நேரம் இது. வர்க்க முரண்பாடுகளைக் களைவதற்கு முன்னால் குறைந்த பட்சம் பிரதேச சாதீய ஏற்றத் தாழ்வுகளைக் களையும், சட்டரீதியாகப் பாதுகாப்பைக் கொடுக்கும், மனித உரிமைகள் மூலம் சாசனரீதியான நம்பிக்கையைக் கொடுக்கும் மேலைத் தேய அமைப்பியல் சார்ந்த குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் மூலமாவது ஒன்று சேரலாம். வர்க்க ரீதியான மாற்றத்தை நீண்டகால செயற்திட்டமாக கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்தலாம்.

மக்களின் எண்ணங்களை செயல்வடிவம் கொடுக்க முயலும் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய முற்படுவதே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியான பாதையில் முன்னகர்த்தும். செய்வார்களா?

சிறிலங்காவின் தாலிபானிஸம்


மதத்தை முன் அடையாளமாக வைத்தே இஸ்லாமியர்கள் மேற்குலக அமெரிக்க நாடுகளுடன் மோதுகின்றனர். இப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அடிப்படை வாத இஸ்லாமியர்கள். அமெரிக்க மேற்குலக நாடுகளை எதிர்க்கும் அடையாளமாக தாலிபானிஸம் உருவெடுத்திருக்கின்றது.

இஸ்லாமின் பெயரால் இவ்வகையான போராட்டம் ஒன்றில் நாடு மொழி இன சமூக அமைப்புக்களைக் கடந்து ஒன்று சேருவதில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களிடம் மனத்தடை ஏதுமில்லை. பாலஸ்தீனத்தில் வெடிக்கும் குண்டொன்றிற்கு ஆப்கானிஸ்தானிலிருந்தோ இந்தோனேஷியாவிலிருந்தோ ஆபிரிக்காவின் மாலியிருந்தோ கேட்கும் கண்டன எதிர்ப்புக் குரல் சக நாடு என்பதற்கும் மேலாக சக இஸ்லாமியன் என்ற ரீதியிலேயே ஒலிக்கின்றது. இதுவே அல் கைடா போன்ற தீவிரவாத இயக்கங்களின் செயற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் வரவேற்கவும் வளர்த்துக் கொள்ளவும் தூண்டு கோலாக இருந்தது.

இதே கடுமையான போக்கினை சிறிலங்காவும் இப்போது கையிலெடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் அதனால் உண்டாகும் மனிதாபிமான அனைத்துலக நீதி விசாரணைகளில் இருந்து ஒழிந்து கொள்ளவும் அனைத்துலக பெளத்த நாடுகளின் ஆதரவினை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது.

மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும்.

பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் சிறிலங்காவின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும்
என்று சிங்கள சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ஸே அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் இத்தகைய போக்கானது சர்வதேச நீதி மனிதாபிமான செயற்பாடுகளைப் புறக்கணித்து நாகரீக உலகில் இருந்து ஒதுக்கமான காட்டுமிராண்டிப் பாதையை அது தேர்ந்தெடுக்கின்றது என்பதைத் தான் வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைத்துக்கொள்ளவும் சர்வதேச சமூகத்தால் வலிந்துரைக்கப்படும் முகாம்களில் வாடும் தமிழ்மக்களுக்கான மனிதாபிமான பணிகளில் இருந்து வழுவிக்கொள்ளவும் மத அடிப்படை வாதத்தைக் கையில் எடுக்க முயற்சிக்கின்றது.

பெளத்தம் ஒரே மதம் என்ற தீவிரப்போக்கு இத்தீவில் வாழும் மற்றைய இனங்களுக்கான சமூக நீதியை மறுத்து விடுகின்றது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தை மதிக்காத அரச பயங்கரவாத நாடாக தன்னை வெளிப்படுத்துகின்றது.

சிறிலங்காவின் இத்தகைய "பெளத்த நாடுகள்" என்ற அறை கூவலை ஏற்றுக்கொள்ளக் கூடிய நாடுகள் எவையெனப்பார்த்தால் ஜப்பான்,தென் கொரியா,சீனா,வியற்நாம்...இவற்றுடன் இந்தியாவும் இணைந்து கொள்ளலாம்.

இந்தியா தான் பெளத்தநாடு இல்லையே என்று வாதிடுபவர்களுக்கு இந்தியா எப்போதும் நியாயமான காரணத்தோடுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா ..என்ன? அப்படியே தேவைப்பட்டாலும் பெளத்தம் தோன்றிய நாடு என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக்கொள்ளும்.

இந்தியாவிற்கு இருக்கக் கூடிய வெளிப்படையான காரணமான "தமிழர் அழிப்பு" என்பது தான் உலகறிந்த இரகசியமாயிற்றே.

இந்தியா... வருந்தும் நாள் வரும்

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்தில் இலங்கைத் தமிழர்களின் துயரையும், அவர்களுக்கு அந்நிலை ஏற்படக் காரணமான நிகழ்வுகள் குறித்தும், அதில் இந்தியாவிற்கு இருந்த பங்கு குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களும் வருத்தத்துடனும் கோபத்துடனும் எடுத்துரைத்துள்ளனர்.

மாநிலங்களவையில் நடந்த இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, “அங்கிருந்து (இலங்கை) வரும் செய்திகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன, அப்பாவித் தமிழர்கள் பெரும் அளவிற்கு கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நடந்து வருவது இனப் படுகொலையே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இதனை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது” என்று பேசியுள்ளார்.


இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சாடினார் திமுக உறுப்பினர் இளங்கோவன்.

“1940இல் ஜெர்மனியில் ஹிட்லரால் இலட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டபோது அந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இப்போது இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மிக நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் இருந்த நாம் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று தங்களையும் (திமுக) உள்ளடக்கிய மத்திய அரசு வேடிக்கை பார்த்ததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார் இளங்கோவன்.

மறுமலர்ச்சி திமுக உறுப்பினர் கணேசமூர்த்தி பேசுகையில், “இந்திய அரசாங்கம் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழர்களை படுகொலை செய்து உள்ளது. இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்கின்ற தங்களது இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கின்றது என்று சிறிலங்க அரசாங்கம் தெரிவித்ததை இந்திய அரசு மறுக்கவில்லை” என்று கூறியவர், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து இந்தியா வாக்களித்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று கூறியுள்ளார்.

எதற்கும் பதிலளிக்காத பிரதமரின் பதில்!

15வது மக்களவையின் முதல் கூட்டம் இது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து இந்திய அரசின் நிலைப்பாட்டை (அது எத்தனை முரண்பாடுகளைக் கொண்டது என்பது வேறு விடயம்) விளக்கினார்.

அந்தப் பிரச்சனையின் மீது பல உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு எந்தப் பதிலும் தராமல், “தமிழர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவர்களும் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ துணிச்சலான நடவடிக்கைகளை சிறிலங்க அரசு மேற்கொள்ளும் என்றுதான் எதிர்பார்ப்பதாக”க் கூறி பிரதமர் மன்மோகன் சிங் முடித்துள்ளார்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்’ எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியோ, பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடைசி சில நாட்களில் நடந்த தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றியோ, அப்படி படுகொலை நடந்தபோது இந்தியா வேடிக்கை பார்த்தது என்று தனது கூட்டணிக் கட்சியின் உறுப்பினர் கூறியது பற்றியோ, அங்கே நடப்பது இனப் படுகொலைதான் என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள் இருவர் குற்றம் சாற்றியது குறித்தோ, ஏன் சிறிலங்க அரசிற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களித்து என்பதற்கோ எந்த விளக்கத்தையும் அளிக்காமல், சிறிலங்க அரசிற்கு ஒரு வேண்டுகோளை மட்டுமே விடுத்துவிட்டு, பிறகு தமிழர்களின் மறுவாழ்விற்காக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று மட்டும் கூறி முடித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

முக்கியமான பிரச்சனைகளில் விவாதம் நடந்து முடிந்த பிறகு, விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் தனது தரப்பு நியாயத்தை மட்டுமே கூறி முடித்துவிடுவது பொருளாதார நிபுணரான இந்தியாவின் பிரதமருக்கு புதியதல்ல. அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பிரச்சனையிலேயே பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் - அவையின் நடைமுறை விதிகளில் வழங்கப்பட்ட ‘சுதந்திர’த்தை பயன்படுத்தி - தவிர்த்தவர்தானே மன்மோகன் சிங். அப்படியெல்லாம் ஜனநாயக நெறிகளை ‘மதித்து’ நடந்து கொண்ட பின்னரும் மீண்டும் வெற்றி பெற்று பிரதமரான பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? எனவே பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

Saturday, June 20, 2009


அரை மொட்டைகளும் அரை வேக்காட்டு அரசும்குழந்தை மன்னிக்கட்டும்


புலிகளின் தோல்வியின் பின்னால் தமிழ் மக்களின் வீழ்ச்சியும் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகின்றது. ஆளாளுக்கு விடும் அறிக்கைகளும் அரை வேக்காட்டுத்தனமான அறிவிப்புகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றது.

அடிமைத்தமிழினத்தின் கழுத்தைச் சுற்றிய இரும்புச்சங்கிலியைப் பிடித்து ஆளாளுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப்பிறகும் சில எடுபிடிகள் நாட்டாமை விளையாட்டை விட்டுவிடுவதாக இல்லை. சில படித்த புலிகளையும் கூட்டிக் கொண்டு புல்லுத் தின்ன வெளிக்கிட்டிருக்கின்றன.பத்மநாதனின் தேசம் கடந்த இடுப்பெழும்பாத அரசில் படித்த பக்கிரிப் புலிகள் பேராசை கொண்ட ஆசிரியர்களாக (பேராசிரியர்கள்) இணைந்திருக்கின்றார்கள்.

இன்னும் பாசிசப் புலிகள் என்ற பெயரைக்கூட மாற்றிக்கொள்ளும் மனபலமில்லாத இவர்களா ..கோழி கூவ முன்னர் அறுவடையைக் கொண்டு வந்து சேர்க்கப்போகின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு உருத்திரகுமாரன் விளக்கம்

இதே உருத்திரகுமார் தான் முன்னரும் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகர். அப்போது கிழிக்க முடியாத எதையோ கிழித்தெறிய இப்போது படித்த காய்ந்த நாலைந்து பேராசிரியப் புலிகளை இழுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கின்றார். இதுவரை புலிகளால் திரட்டப்பட்ட மக்களின் பணம் பற்றி யாரும் வாய்திறந்து பேசவில்லை. புலிகளின் தலைமை விட்ட பிழைகளை தொடர்ந்தும் செய்ய முற்படும் இவர்களுடன் மக்கள் தொடர்ந்து செல்ல மக்கள் முட்டாள்களா ..என்ன?

முன்னைநாள் போராளிகள், தலைவர்கள் ,அறிவு ஜீவிகள், மக்கள் யாரையும் எப்போதும் அழைத்துப் பேசும் எண்ணம் இல்லாத அராஜகப் போக்கில் பத்மநாதன் மற்றும் அவர் கூட்டத்தின் குஜ்மால் விளையாட்டுகள் அரங்கேறுகின்றன.அவரால் அமைக்கப்பட்ட அதிரடிக் குழுவின் செயல் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.


பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா)

பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

பார்த்துப்புரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டவர்களே... உங்கள் கறுப்புக் கண்ணாடி கழட்டா கருணாநிதி ஏன் ஒரு பேராசிரியராக பட்டம் பெற்றவராக இல்லை.பள்ளிக்கூடமாவது போனாரா...இல்லையா? உங்கள் செயலலிதா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் படித்தும் (இதில் "டி" ஆ "டு" ஆ போடவேண்டும்) ஏன் பட்டம் எதையும் பெற்றிருக்கவில்லை.

உரத்தொழில் அமைச்சர் அழகிரி எந்தக் கல்லூரியில் பேராசிரியர் அல்லது சட்ட அறிஞர்...ஏன் உங்கள் கண்மணி ..கனிமொழி...டாக்டர் ? என்ஜினியர்... ? அற்லீஸ்ட் கட்டட மேஸ்திரியாகத் தன்னும் படித்து தொழில் புரிந்தவரா?


ஏன் உங்கள் நிழல்... விழல் ..பிரதமர்...சோனியாஜீ... ESL (english as a second language) படித்ததைத் தவிர ஏதாவது புலிப்படிப்பு படித்தவர்களா? மகன் ராகுல் போலி m.phil
புகழ் இளைய தலை முறை, வதேராவின் வாரிசைச் சுமக்கப்போகும் போலி "மனுஷி" பிரியங்கா எல்லோரும் இவர்களுடன் ஈடு கட்ட முடியுமா?

எத்தனை பெரிய மேதாவிகள் எல்லாம் ஏறு பட்டியும் தளநாரும் கொண்டு "தொழிலுக்கு" வெளிக்கிட்டிருக்கின்றார்கள். இவர்கள் யாரென்றே தமிழ் மக்களுக்குத் தெரியாது. எந்த மூலையில் புல்லுச் செதுக்கி கருவாடாக்கி வித்துக் கொண்டிருந்தார்களோ தெரியாது.

எல்லோரும் சீசரைக் கொன்று போட்ட புரூட்டஸ்ஸுகளே.. இப்போது மேய்ப்பன் பிளஸ் காப்பவன் வேஷம்...

இவ்வளவு காலம் பரந்து நிழல் பரப்பிய ஆலமரம் பட்டுக் கருகிப் போய் விடும் வரை துருப்பிடித்திருந்த....வெற்று மூளைகள் A-40 அடித்து துருவகற்றி இராட்ஜிஜம் அமைக்க கிளம்பியிருக்கின்றன.

வாழ்க தமிழனின் அடிமை மோகம்...ஒப்புக்குச் சப்பாணியாய் வயிறு வளர்ப்பதற்காக வாழும் இவர்கள்.. தொடர்ந்தும் விடும் தவறு ஒற்றுமையை நாடாத தான் தோன்றித் தனம்.

அதன் தற்போதைய தற்காலிகத் தலைவர் பத்மநாதன்... அவர் எந்தப்பள்ளிக்கூடத்தின் பேராசிரியர்...?

பால்குடிப்பிள்ளையா இந்த கனி மொழி.


கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு....


இலங்கைத்தமிழர்களின் பாடுகளுக்கும் உத்தரிப்பிற்கும் அவர் தந்தையின் குள்ளநரித்தனமும் கயமையுமே காரணம் என்பதை அறியாத பால்குடிப்பிள்ளையா இந்த கனி மொழி.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு ஒற்றை நூற்றாண்டுக்கு 14 வருடம் குறைவாக வாழ்ந்து ... வாழ்வதற்காக பாவங்களின் சுமைகளைக்கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவின் பாவக்கதிர்களை அறுவடை செய்ய வேண்டுமென்பதையும் அறியாத அப்பாவியா இந்தக் கனி மொழி..

போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை.

போர் எங்கே ஓய்ந்தது?...ஓரினம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ..குற்றுயிராகக் கிடக்கின்றதேயொழிய ஓய்ந்து போகவில்லை.. குதறியெறியப்பட்டிருக்கின்றதே ஓழிய அழிந்து போகவில்லை...

கஷ்டங்களிற்கு விடிவு வரும்...அப்போது பலருக்கு அது ...படிப்பினையாகவிருக்கும்...உலகத்தில் வரலாறு திருத்தி திருப்பி எழுதப்படுகின்றது எப்போதும்...

Saturday, June 13, 2009


இவர்கள் மரித்துப்போகட்டும்


என் எல்லா வலிகளையும் உங்களுடன்
பகிர்ந்து கொள்கின்றேன்
எல்லா ஆக்கினைகளும் உங்களால்தான்
எனக்காக கூடியிருந்தது
என்னைத் துவைத்துப் போட்டவர்களின்
பிள்ளைகளின் ஓலம் எப்போதும் கேட்காதிருக்கட்டும்
அவர்கள் மனைவியரின் இரங்கலுக்கு
எந்தக்காதுகளும் செவிசாய்க்காதிருக்கட்டும்
எல்லா இம்சைகளுக்கும் அப்பால் இவர்கள்
மரித்துப்போகட்டும் அப்போதாவது
மனிதர்களின் வலியைப் புரிந்து கொள்ளும்
ஒரு தேவ பாசை இவர்களுக்கு கிடைக்கட்டும்..

அலியாய்ப் பிறந்து தொலைத்த என் மைக் மாமாவிற்கு


(நாய்க்கெல்லாம் பதிவு போட வேண்டிய நிலையில் நாங்கள்..எச்சம் போட்டிருக்கின்றாய் நிறையவே... நிலவுப்பாட்டின் பதிவில்)நீ எப்போதாவது உன் பிறப்பைப் பற்றி பெருமைப்பட்டிருக்கின்றாயா? உன்னைப் பெத்துப் போட்ட உன் அம்மாவுக்கு.. உன்னுடன் படுத்து எழும்பிய உன் மனைவிக்கு.. உன்னால் பிறந்து தொலைத்த உன் பிள்ளைகளுக்கு .. எப்போவாவது நீ உண்மையாய் இருந்திருக்கின்றாயா..?

இத்தனை மனித அவலங்களின் வலியைப் பற்றி நான் பேசிக்கொண்டிருக்க ..நீ இடையில் புகுந்து... நீ என்னடா யோக்கரா...? அல்லது பொறுக்கியா?

இத்தனை அரசியல் பேசிக்கொண்டிருக்கும் என் ஐ பி . இந்த கொம்புயூட்டர் ..விலாசம் என் முகவரி எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பது தெரியாமலா நான் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இத்தனை அரசியல் வாதிகளுடனும் "உண்மை" மொழியால் பேசிக்கொண்டிருக்கும் என்னிடத்தில் வந்து எச்சமிடும் உன்னை அறிந்து கொள்வது முடியாதென்றா நீ நினைக்கின்றாய்... அப்படி எண்ணியிருந்தால் உன் மனதைப்போலவே நீயும் கற்காலத்தில் இருந்து முன்னேறியிருக்கவில்லை என்று தெரிந்து கொள்...

இத்தனை இலட்சம் தமிழ் உயிர்களும் போன பின் தன் உயிர் என்று நினைக்கும் எவனும் மயிருக்கு சமமானம்...அப்படியொரு கொதி நிலையில் தான் தமிழினம் இருந்து கொண்டிருக்கின்றது என்பது கூடவா உனக்குப் புரியவில்லை...

உன் தலையை கூடவே உன் "அதை"யும் வெட்டி எடுக்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கின்றது.. ஓ.. அலிக்குத் தானே "அது" இருக்காதே...

ஈழத்தமிழனின் குருதி காய்ந்து தொலைக்கின்றதோ இல்லையோ...அவன் பட்ட வேதனை என்றும் ஆறாது... அதற்கு இந்தியா இன்றல்ல என்றோ ஒரு நாள் பதில் கூறியே ஆக வேண்டும்.. அது வரை..யுகங்கள் போனாலும்...

சிறிலங்கா எடுக்கும் பிச்சையும் இந்தியா கொடுக்கும் போனஸும்


அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் தொகை தாமதமாகினாலும் சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு உதவிகள் கேட்டு பிச்சை எடுக்கப்போவதில்லை என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாம் கொடையாளி நாடுகளிடமோ அல்லது நிதி முகவர்களிடமோ பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லப்போவதில்லை. அனைத்துலக நாணய நிதியம் 1.9 பில்லியன் டொலர் கடன் வழங்குவதை தாமதப்படுத்தினாலும் நாம் பிச்சை கேட்கப்போவதில்லை.


தமிழர்களைக் கொன்று கூண்டோடு கைலாயம் அனுப்பி வைக்க சிறிலங்கா கொடுத்த "விலை"
இன்று அதனை நடு ரோட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. பிச்சைப்பாத்திரம் ஏந்தும் போதும் கொலை வெறி கொண்டு தமிழரின் இரத்தம் குடித்த அது எத்தகைய ஒரு பயங்கரவாத நாடு. "காட்டுமிராண்டிக"ளால் ஆளப்படும் அந்த நாட்டையும் அதன் தலைவர்களையும் காப்பாற்றத் தான் இந்தியாவின் "படுக்கை அறை" முண்டு கொடுத்து இந்தியாவின் கஜானாவையும் நற்பெயரையும் காலியாக்கி நிற்கின்றது. "ஆண்மையே" அற்ற சில அரசியல் முண்டாசுகள் "படுக்கையறை"யுடன் சேர்ந்து பல்லிளித்து நிற்கின்றன.

நாம் எமது சொந்தக் கால்களில் நிற்போம்;


காலே இல்லாத கபோதி ..சொந்தக்காலில் நிற்பார்களாம்...


எமது சந்தை முதலீடுகள் (தமிழர்களின் எலும்பையும் தசையையும் தான் விற்க வேண்டும்) மூலம் நாம் நிதியை பெற்றுக்கொள்வோம். எனினும் கடனை நாம் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இருந்தபோதும் மத்திய வங்கி லிபியாவிடம் 500 மில்லியன் டொலர்களையும், வேறு ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நாட்டிடம் மேலும் 500 மில்லியன் டொலர்களையும் பெற உத்தேசித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத நாடு இந்தியாவா? சீனாவா?

சீனாவென்றால் இந்தியாவின் போனஸ் சிறிலங்காவிற்கு நிச்சயம் உண்டு. "படுக்கையறை"யும் பல்லிளிப்பவர்களும் கொடுக்காமலா விடப்போகின்றார்கள்..?

மக்களின் வரிப்பணம் கண்ட "நாய்"களின் மனவக்கிரங்களால் நாசமாக்கப்படுகின்றது..ஏன்யா..கேட்கவே மாட்டீர்களா?

"குமுத"த்தின் போக்கிரித்தனம்


"இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது'' இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.

"வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள்" என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்கமுடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் - சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.

பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை.தன்னாட்டு (இந்தியா)ஆதரவுடன் குரூரமாக நடந்தேறிய தமிழர் படுகொலையை "பன்னாட்டு" என்ற முகமூடியைப்போட்டு இந்தியாவைக் காப்பாற்ற வெளிக்கிட்ட குமுதத்தின் நயவஞ்சகத்தைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் படுகொலையில் இந்திய ஆயுதங்களும் இராணுவமும் இந்தியஅரசும் அதன் நரித்தந்திரங்களும் எவ்வகையில் செயல்பட்டிருக்கின்றது என்பதை உலகமே அறிந்து கொண்டிருக்கின்றது. ராஜபக்ஷே சகோதரர்கள் மீது கொண்டு வரப்படும் பகிரங்க விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். அதில் இந்தியாவின்"கை" எத்தனை தூரம் இப்படுகொலைகளை முன் நின்று நடாத்தியது என்பதை அறிந்து கொள்ளலாம். இதனை வெளி வராது தடுக்கவே என்ன விலையை என்றாலும் கொடுத்து சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் உலக நாடுகளே சிறிலங்காவின் மனிதப்படுகொலைகளைப் பகிரங்கமாகக் கண்டிக்கும்போது இந்தியாவிற்கு ஏன் இந்த அக்கறை என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

இந்தியாவின் பங்களிப்பில் காங்கிரஷின் சோனியா முதற்கொண்டு "பசி" தம்பரம், சிவசங்கர மேனன், நாராயணன் வகையறாக்களின் நேரடிப் பங்களிப்பு பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். அது இந்தியா இதுவரை உலக அரங்கில் உருவாக்கி வைத்திருக்கும் நற்பெயரை மண்ணோடு மண்ணாக்கி வைத்திருக்கும். இந்தியாவின் குணாம்சத்திற்குப் பொருந்திவராத போக்கிரித் தலைவர்களைக் கொண்டிருக்கும் இக்காலகட்டம் இந்தியாவிற்கு மிகவும் துரதிர்ஷ்டமானதே.

காங்கிரஷின் துர் நடத்தைகள் அனைத்திற்கும் தலையை ஆட்டி தன் பணப்பையை மட்டும் தமிழர்களின் இரத்தம் நனைந்த பணத்தினால் நிறைத்துக்கொண்ட கருப்புக்கண்ணாடி கழட்டாத கருணாநிதியையும் அதன் ஆட்சியையும் காப்பாற்ற நினைக்கும் "குமுதம்" பத்திரிகாதர்மத்தைக் குழி தோண்டிப்புதைத்துள்ளது.

முடிந்தால் நேரடியாகவே கேட்டுப்பார்க்கலாமே.." கருணாநிதியே ...இத்தனை இலட்சம் ஈழத்தமிழர்களும் கொலைசெய்யப்படும் போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ..? "என்று.

Thursday, June 11, 2009


மண்டை சொரியும் பேனாக்கள்


வன்னிப்போர் ஒரு விடயத்தை ..எதைச் சொல்லாவிட்டாலும் ..இந்த விடயத்தை மட்டும் அழுத்திச் சொல்லிவிட்டுப்போயிருக்கின்றது. நாயிலும் கேவலமான தமிழனை யார் வேண்டுமானாலும் எதுவும் செய்து விட்டுப்போகலாம். யாரும் கேள்வி கேட்கப் போவதுமில்லை.. அந்தத் தமிழனில் இருந்தே விபச்சாரிக்குப் பிறந்தவன் வீணாகப் போனவன் இப்படி யாராவது ஒருவன் முன்வந்து ..அது சரியான காரியம் என்று வக்காலத்து வாங்கவும் தான் செய்வான்...என்பதைத் தான் சொல்லி விட்டுப் போயிருக்கின்றது.

புலி புலிப்பாசிசம் என்று புளித்துப்போன விடயங்களிலேயே தொங்கிக் கொண்டு நிற்கும் கேவலம் கெட்டவர்கள் எங்களை விட யாரும் இங்கில்லை. இத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை விட சில ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டதைக் கேட்டு மகிழும் இவர்கள் முத்திப் பொன மனவியாதியுடையவர்களே. ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்க முயலும் சிங்களப் பாசிச வாதிகளையும் இந்திய முடக்குவாத அரசியலாளர்களையும் சரியானவர்களாக்க இம் மனவியாதிக்காரர்கள் துணை போவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் இனவிடுதலைக்கான போராட்டம் .அதில் எந்த ஒரு விட்டுக்கொடுப்பிற்கோ அனுசரித்துப் போதலுக்கோ இடம் இல்லை. அநாதி காலத்திலிருந்தே சுதந்திரமாக வாழ்ந்த ஒரு இனம் தன் இறைமையை மீட்டெடுக்க நடத்தும் போராட்டம் இது.

இதை யார் முன்னெடுக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. யாருக்காக முன்னெடுக்கின்றார்கள் என்பது தான் முக்கியம். அதிலும் நமக்கு... தமிழ் மக்களுக்கு இதை விட வேறு ஒரு விடயம் இந்த உலகிலேயே இல்லை.

இன்று சிங்கள பயங்கரவாதிகளும் இந்திய அரவேக்காட்டு வல்லரசு வாதிகளும் விட்ட மாபெரும் தவறுகளுக்கும் மன்னிக்க முடியாத மனித அழிப்புக்கும் முன்னால் புலிகள் தவறே செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். மலைக்கும் மடுவுக்குமுள்ள இடைவெளி அங்கு இருக்கின்றது. வர்க்கப்போராட்டம் மாக்ஸிஸம் பேசுபவர்கள் உங்கள் வீட்டு எச்சில் தட்டுகளை கழுவிக்கொண்டிருங்கள். நாளை தமிழ் மக்களே இல்லாது போகும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் இரத்தத்தால் பேரினவாதிகளுக்கும் வல்லரசு வாதிகளுக்கும் தாக சாந்தி செய்து வைக்க அப்போது அது உதவக் கூடும்.

இத்தனை மக்களின் சாம்பால் மேடுகளையும் கலைத்து எங்கோ எப்போதோ ஆகுமோ ஆகாதோ என்று அறியாத ஒன்றிற்காக இங்கே நேரத்தை வீண்விரயம் செய்யும் வீணாய்ப் போனவர்கள் இவர்கள்.

பயங்கரவாதிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு இனத்தையே பயங்கரவாதிகளாக்க முனையும் துட்டத்தனம் எதைப் பற்றியும் எழுதத் துப்பில்லாத அவர்களின் பேனாவால் எழுதுவதை விட்டு எதையாவது சொரிந்து கொள்ளட்டும்.

சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் பயங்கரவாதிகள் எனக்காட்டும் பிம்பமும் அதை வடிவமைத்துக் கொடுக்கும் இந்திய ஒட்டுண்ணித் தனத்தைப் பற்றியும் எழுத முடியாத தமிழர்களின் பேனாக்கள் மண்டை சொரிந்து காய்ந்து போகட்டும்.அது தான் ஏன் இறக்கிறோம் என்றே தெரியாது இறந்து போன எம் உறவுகளுக்கு ஒரு ஆறுதாலாய் இருக்கும்.

முட்டாள் சிவசங்கரனுக்கு யோக்கியதை இல்லை

ஈழத் தமிழர் இரத்தம் குடித்த சொறி நாய்
ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கொச்சைப்படுத்தும் முட்டாள் சிவசங்கர் மேனன் முதலில் ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளட்டும். அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும் ஒரு இனம் தன் இருப்பிற்கும் சுதந்திரத்துக்குமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பயங்கரவாதம் என்று முந்தீர்மானம் போடும் இந்த முட்டாள் தான் இந்தியாவின் வெளியுறவுச் செயலர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தில் வழி மொழியப்படும் ஒரு இனத்திற்கான வரவிலக்கணங்களையும் அவற்றிற்கான உரிமைகளையும் படித்துத் தெளிவது இத்தகைய முட்டாள்களின் அறிவு தெளிவுபெற உதவி செய்யக்கூடும்.

இப்படிப்பட்ட முட்டாள்களின் வெற்றுச்சவடால்களால் ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தைக் குழி தோண்டிப்புதைக்க முடியாது. ஆயுத பலத்தை மட்டும் நம்பிக்கிடக்கும் அரச பயங்கரவாதிகளான இவர்களின் சித்தாந்தம் வரலாற்றில் எப்போதும் தோற்றுப்போயிருப்பதையே காலம் உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறான அரவேக்காடுகளின் செய்கைக்களுக்கு முண்டு கொடுத்திருக்கும் இந்தியா அதற்கான விலையை கொடுத்தே தீரும்.

இந்தியாவிற்கெதிரான களநிலமைகளை வளர்த்துக்கொள்வது இப்படிப்பட்ட முட்டாள்கள் எடுக்கும் அரைவேக்காட்டுத்தனமான முடிவுகளே. இந்து சமுத்திரப் பிராந்தியமென்பதும் இந்திய வல்லரசுக்கனவு என்பதும் ஆயுத பலம் என்பதும் கூட பின்னாளில் வந்ததுவே. ஆனால் இலங்கையில் சுதந்திரமான தமிழ் இனம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்தே வாழுகின்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்வது பல சிக்கல்களுக்குத் தீர்வைத் தரும்.

இல்லாவிட்டால் இன்றைய இவர்களின் கொக்கரிப்பு ஒரு நாள் அழுகையின் ஓலமாக மாறிப்போவது விதியின் தீர்ப்பு என்றால் யாரால் என்ன செய்ய முடியும். இனி ஒட்டுப்போட்டாலும் ஈழத்தமிழினம் இந்தியாவுடன் நெருங்கி வராது என்பதற்கான விதையை விதைத்தவர்கள் இந்தியரே. அது ஒரு நாள் விருட்சமாகி வளர்ந்து வியாபிக்கும். அப்போது இந்த முட்டாள் சிவசங்கரனையும் அடித்து ஆணி இறுக்க ஒரு கிளை உத்தரவாதம் கொடுக்கும்.பிரபாகரன் அழிந்து விட்டால் ஒரு இனத்தின் போராட்டம் அழிந்து விடும் என்று கணக்குப் போடும் இவர்களை கேலி செய்யவே என்னிடம் வார்த்தைகள் இல்லை.தமிழின விடுதலைப்போராட்டம் தனியொரு பிரபாகரனுடையது அல்ல ஒரு இனம் முழுமைக்குமானது என்று யாராவது இந்த வெளாங்காவெட்டியிடம் சொல்லுங்களேன்..

இந்தியாவின் யுத்தத்தையேதான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரே? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன், "பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன" என்று பதிலளித்தார்.

முட்டாளே எங்கள் மக்களும் அப்போதும் இப்போதும் உங்களால் தான் கொல்லப்பட்டார்கள். உங்கள் ஒரு உயிருக்கு இத்தனை மக்கள் என்றால் இத்தனை இலட்சம் மக்களின் உயிருக்கு ...கணக்கை நீயே போட்டுக்கொள்.

மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கொச்சப்படுத்தும் உன் அரச பயங்கரவாதம் சந்தி சிரிக்கும் போது இதே மக்கள் தங்கள் தீர்ப்பை அப்போது உனக்குத் தருவார்கள். அது வரை கொதிக்கும் முமுறலோடு மக்கள் காத்திருக்கின்றார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதே...

Monday, June 8, 2009


சிங்களச் சிறிலங்கா வீடியோ இணைப்புபுதிய மேய்ப்பர் சீனா


இந்து சமுத்திரப்பிராந்திய நலன் சார் அரசியலில் இலங்கைக்கு எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே இந்தியா விடுதலைப் போராளிகளை வளர்த்து விட்டதும் பின்னர் அவர்களை அழித்து விட்டதும்.

விடுதலைப்போராளிகளை வளர்த்து விட்டபோது இந்தியாவின் கைகளில் இலங்கை வகையாக மாட்டிக்கொண்டிருந்தது. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இராஜீவ்-ஜே.ஆர் இடையே சைச்சாத்திடப்பட்ட இந்திய அமைதி ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப்போராளிகளுடன் ஏற்பட்ட மோதலினால் இந்தியா சிறிது காலம் இலங்கை மீதான பிடியைத் தளர்த்திக் கொண்டது. இன்னொரு வகையில் சொல்லுவதானால் இந்தியாவின் தமிழ்மக்களுடனான பிழையான அணுகுமுறையின் காரணமாக யார் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாத போக்கினுள் மாட்டிக்கொண்டது.

எப்போதும் இந்தியாவைச் சந்தேகத்துடனும் எதிர்ப்புடனும் எதிர்கொள்ளும் சிங்களம் இச்சந்தர்ப்பத்தில் சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. இந்தியாவை கைப்பிள்ளையாகப் பாவிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இப்போக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தமது சட்டாம்பிள்ளையாக இந்தியாவை சீனாவிற்கு எதிராக வளர்த்து விட திட்டம் போட்டு வைத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியாவின் அசமந்தத்தனத்தில் வெறுப்பேற்பட்டிருக்கின்றது.

அதனால் தன் மற்றைய அடிபொடிகளின் மூலம் இலங்கையை நெருக்கடிக்குள் உள்ளாக்குவதற்கு அமெரிக்கா இப்போது முயற்சி செய்கின்றது. முதலில் பிரிட்டனின் நாளிதழான டெலிகிராவ் ஈழத்தமிழர் படுகொலை மற்றும் போர்க்குற்றம் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தது. தொடர்ந்து கொரியன் ரைம்ஸ் இதையே திருப்பிச் சொல்ல இப்போது ஜப்பானிய இலங்கைக்கான பிரதிநிதி ஜசூஸி ஆகாஸி இலங்கைக்குச் செல்லும் இத்தருணத்தில் ஜப்பான் ரைம்ஸ் மீண்டும் படுகொலை போர்க்குற்றம் சர்வதேச நீதிமன்றம் எனப் பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ளது.

இவர்கள் அனைவரும் தமிழருக்கான நீதி என்று மேலோட்டமாகக் கூறிக்கொண்டாலும் இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் மீதான அவர்களின் அபிலாஷைகள் அவற்றுள் அடக்கம் என்பது எல்லோரும் அறிந்ததே. நாளிதழ்கள் மூலம் இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை பின்னர் இராஜதந்திர ரீதியாகப் பரவலாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத்தடை சர்வதேச நீதி மன்ற விசாரணை என்று விரிந்து செல்லும். அவ்வாறு விரிந்து செல்வதும் மூடி வைக்கப்படுவதும் இலங்கை எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதைப் பொறுத்தே அவை முடிவெடுக்கும்.

மேற்கு சார்பாக இலங்கையின் போக்கு மாறினாலும் தொடர்ந்தும் இவற்றில் சில பல செயற்பாடுகளை முன்னெடுக்கவே மேற்கு நாடுகள் முயலும். மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க்குறற விசாரணைகள் நடைபெற சந்தர்ப்பங்கள் உண்டு. உடனடியாகச் சாத்தியமாகாவிட்டாலும் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தின் பின்னரான காலத்தில் அவ்வாறு நிகழ சாத்தியமுண்டு.யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மிகைல்லோவிச் சிலியின் சர்வாதிகாரி ஆகஸ்டோ பினாசெட் கம்பூச்சியாவின் கேமர்ரூஜ் பொல்பாட் போன்றோர் சர்வதேச நீதிமன்றத்தில் நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தொடர்ந்து வரும் இலங்கையின் ஆட்சியாளர்களை மேற்குலகின் விசுவாசிகளாக வைத்திருப்பதன் ஒரு தந்திரம் அங்கு அடங்கியிருக்கின்றது. இதையெல்லாம் அறியாதவர்களல்ல ராஜபக்ஷேயின் முன்னால் பதவியிலிருந்த ஆட்சியாளர்கள். இவை எவற்றையும் யோசியாது அகலக் கால் வைத்த ராஜபக்ஷே சகோதரர்கள் சீனாவுடன் தொடர்ந்தும் நெருங்கியிருக்கவே விரும்புவர்.

அதன் முதற்படியாக உதிரிகளாக இருக்கும் சிறு கட்சிகளை அரச கட்சியுடன் இணைத்து அறுதிப்பெரும்பான்மையாக்கும் காரியங்களில் ராஜபக்க்ஷே அண்ட் கோ தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். கிழக்கில் மட்டுமல்லாது வடக்கிலும் இவ்வாறு உள்ளெடுக்கப்படும் தமிழ்க் கட்சிகள் மூலம் அரசின் அறுதிப்பெரும்பான்மை நிறுவும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். கருணா எனப்படும் முரளீதரன் மூலம் தமிழ்த் தேசிய முன்னணியையும் இணைக்கும் நோக்கில் பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டுள்ளனர். இவ்வாறு உதிரிக்கட்சிகளை இணைத்து உள்வாங்குவதன் மூலம் பெறப்படும் பெரும்பான்மையைக் கொண்டு அரசியல் அமைப்பில்மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயல்கின்றது. நிரந்தர ஜனாதிபதி திட்டமும் அதில் ஒன்று.

இவையெல்லாம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும் பயங்காரணமாக சர்வதேச நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்பிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளே. இந்த நிலையைத் தனக்குச்சாதகமாக்கிக் கொள்ளும் சீனா "இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடோ (இந்தியா) அல்லது சர்வதேசமோ தலையிடக் கூடாதென எச்சரித்திருக்கின்றது. அத்தோடு மனிதாபிமான உதவியினை மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வழங்கலாமென நிபந்தனைகளையும் விதித்திருக்கின்றது.

அதே நேரத்தில் போர்க்குற்றம் மீதான விவகாரங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மறுபடியும் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. இதில் அமெரிக்காவும் இணைந்து கொள்ளலாம். யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த இறுதி மூன்று நாட்களில், அங்கு என்ன நடந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியுமென அமெரிக்கா தெரிவித்த கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ராஜபக்ஷே அண்ட் கோ தங்களைக் காத்துக்கொள்ள வேண்டி சீனாவின் பக்கமே நகர்ந்து செல்லும்.

இச்செயற்பாடுகள் எல்லாம் பிராந்திய நலனை முன்னிட்டே வடிவமைக்கப்படுகின்ற போதிலும் கிடைக்கக் கூடிய சாத்தியங்களை ஈழத்தமிழர் நலன் சார்ந்தாக உருவாக்கிக் கொள்வதே அடுத்து ஈழத்தமிழர் சார்பாக பொறுப்பேற்கின்ற தலைமையின் கடமையாக இருக்கப்போகின்றது.

காட்டு மனிதர்களின் நாட்டு தர்பார்


இவர்கள் தான் "கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு" காப்பவர்கள். உடன் பருப்புகள்... 21 ஆம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிகள் நாங்கள் தான் என்று டில்லி போய்ப் பறைசாற்றுபவர்கள்.

திமுக - அதிமுக கடும் மோதல்


திமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்று அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியதை அடுத்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை திமுக - அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசினார். அப்போது அவர் திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் ஊழல் கறை படித்த 2 பேரை அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் மன்மோகன் சிங் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. அதுபோன்ற ஊழல் கறை படித்தவர்களை அவர் அமைச்சரவையில் தற்போது சேர்ந்துள்ளார். தமிழகத்திலிருந்து அமைச்சர்களாகி உள்ள சிலரால் உங்கள் அரசுக்கு நற்பெயர் கிடைக்காது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மைத்ரேயன் கூறினார்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் அவையில் இருந்து, இந்த விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.

கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் இங்கு நடந்துள்ளது. ஆம் கடவுள் சென்னையில் உள்ளார் என்று கூறினார். முதல்வர் கருணாநிதி மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் உள்ள 9 அமைச்சர்களும் நவரத்தினங்கள். ஆனால் இவை போலியாக ஒளிர்பவை என்று கூறினார்.

இதற்கு திமுக உறுப்பினர் டி. சிவாவும் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜெயந்தி நடராஜன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

மைத்ரேயன் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கும் பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பலன்கள் அனைத்தும் கோபாலபுரத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியவுடன் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிவா இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதுபோன்ற கீழ்தரமான தரக்குறைவான விமர்சனங்களை அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் கோரினர்.

மைத்ரேயன் கூறியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அதிமுக உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அமளி நிலவியது. பின்னர் அவைத் தலைவர் தலையிட்டு சமாதானம் செய்தார்.

புலியில்லாத இடத்தில் புழுக்களும்..


புலியில்லாத இடத்தில் புழுக்களும் காலைக்கடிக்கத்தொடங்கிவிட்டது. பசி தம்பரம், கண்ணா(டி)நிதியைச் சந்தித்து குற்றுயிரும் கொலையுயிருமாக தப்பிப்பிழைத்திருக்கும் ஈழத்தமிழனுக்கு வாய்க்கர்ரிசி எப்படிப்போடலாம் என்று ஆலோசித்துச் செல்ல இந்த காமடியைப் பார்த்து அடக்கமாட்டாத சிரிப்புடன் இந்த பபூன்களின் விளையாட்டைத் தூண்டிவிட ராஜபக்ஷே சிறப்புத் தூதுவரை கோபாலபுரத்திற்கு அனுப்பியிருக்கின்றார்.

அப்படி அனுப்பப்பட்டவர் வேறுயாருமல்ல. அரசியல் கோமாளி , எந்தக்கட்சி வெற்றி பெற்றாலும் நிரந்தர அமைச்சராக அறியப்பட்ட விலாங்குமீன் செளமியமூர்த்தி தொண்டைமானின் பேராண்டி மலையகம் முழுவதும் வைப்பாட்டிகளை வைத்திருக்கும் காமன் ஆறுமுகன் தொண்டைமான். கூட வந்தது ஹிந்து ராமிற்கும் மற்றவர்களுக்கும் பெண்களைக் கூட்டிக்கொடுத்தும் தண்ணீரில் குளிக்க வைத்தும் புலிகளுக்கும் ஈழத்துத் தமிழர்களுக்கும் எதிராக விஷம் கக்கி எழுத வைத்து ஆறாத சேவை செய்யும் மாமா ஹம்ஸா.

இந்த மாமனும் காமனும் கண்ணா(டி)நிதியோடு என்ன பேசியிருப்பார்கள்? காமத்துப்பாலை கசக்கிப்பிழிந்து பொழிப்பு எழுதியிருப்பார்கள். அவர் தான் முத்தமிழ் வித்தகராச்சே. கடைசியில் ராஜபக்ஷேயின் கோமாளிக்கூத்து நடந்தேற ஆசியும் சம்மதமும் கொடுத்தாயிற்று.

அழைப்பு இது தான்...." இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்பு வர வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு "

அட உங்களுக்கு எங்களுக்கெல்லாம் தெரிந்ததாயிற்றே என்று அங்கலாய்க்காதீர்கள்.. கலைஞர் என்ன உங்களை எங்களை மாதிரி ..லூசா? இதில் ஏதாவது அரசியல் "சாணக்கியம்" பொடி வைத்து ஒட்டியிருக்கும்.. அதை பிரித்து மேய்ந்து வெளிச்சம் போட்டுக்காட்ட கழகக் கண்மணிகள் இப்போது கோதாவில் இறங்கப்போகின்றார்கள்...பார்த்துக் கொண்டிருங்கள்.

இதற்கு முதல் பசி தம்பரம், கண்ணா(டி)நிதி சந்திப்பில் என்ன கூறியிருந்தார் என்று நினைவிருக்கின்றதா? இல்லாவிட்டால் உங்கள் நினைவூட்டலுக்கு,

"இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது "

அட... இதன் தொடர்ச்சிதான் அது என்று படுக்கின்றதா? சொல்லிவைத்து பட்டியல் போட்டு நடப்பதாக எண்ணம் தோன்றுகின்றதா? அப்படியெல்லாம் தோன்றினால் மூடிக்கிட்டு நடப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் இராஜதந்திரம்,சாணக்கியம்...உங்களுக்குத் தெரிவதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.. சாணி போட்டு மூடி வரட்டிக்குக் காயவிடுகள் உங்கள் அறிவுக்கூர்மையை..

கண்ணா(டி)நிதி போனால் கனிமொழி போகக்கூடாதா? போகலாம்... அவர் தானே வீட்டின் கன்னுக்குட்டி..

அப்பாவோடு காமனும் மாமனும் கதைத்தது ஒரு மணிநேரம்... கன்னுக்குட்டியோடு அரை மணிநேரம்..இதிலிருந்தே கன்னுக்குட்டியின் செல்வாக்குப் புரிகின்றதா?

இவர் போய் என்ன செய்யப்போகின்றார்... சந்தேகம்.. வந்ததே எனக்கும் உங்களைப்போல...ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய படி அவர் அங்கு என்ன செய்யலாம் என்று நான் கண்டு பிடித்தது...

சிங்களத்திகளுக்கு சேலை வியாபாரம் செய்யலாம்.. (சேலை கட்டும் சிங்களத்திகள் இன்னும் இருக்கின்றார்களா?)

பொட்டு..மூச்..அவர்கள் மங்கலமாய் எப்போதும் இருப்பதில்லை...

மலையாளிகள் கட்டும் "முண்டா" துண்டு கனஜோராய் வியாபாரம் நடக்கும் (மேனனும் நாராயணனும் இந்த ஒரு விடயத்தில் தான் வேற்றுமையில் ஒற்றுமை கண்டதாகக் கேள்வி ..இலங்கையில் உல்லாசமாக இருந்தபோது)

அப்புறம்... கனிமொழிக்கான உங்கள் "மேலா"ன ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள்...

Sunday, June 7, 2009


இரண்டு மார்பிலும் பச்சை குத்தியிருந்தது


சிறுகதை என்பது என்ன? அனுபவமா? புனைவா? அனுபவம் பாடம் கற்றுக் கொடுக்குமென்றால் புனைவு எதைக் கற்றுக்கொடுக்கும். நம்ப முடியாத நடக்க முடியாத கதைகளைப் புனைவுகளாக படைப்பது ஒரு வித அத்து மீறல் அல்லவா ? அ. முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" என்ற தொகுப்பில் வந்த "ஐந்தாவது கதிரை" என்ற சிறு கதையைப் படித்த போது அப்படித்தான் தோன்றியது.

திருமணம் என்பது புனிதமானது என்பது எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். குறைந்த பட்ச அளவிலேனும் புரிந்துணர்வு கொண்டதாகக் கூடவா இல்லாது போய்விடும். அப்படியே இல்லாது போய்விடின் பிரிந்து விடுதல் இலகுவானது அல்லவா? சேர்ந்திருந்து அனுதினமும் துய்க்கும் வலியை விட மேலானது அல்லவா பிரிந்து போதல்?

எல்லாம் ஒரு கதிரை வாங்குவது தொடர்பான பிரச்சினையால் வந்தது. உப்புச்சப்பில்லாத விடயம்தான்...என்று கூறிக்கொண்டே கதையின் பெண்பாத்திரமான பத்மாவதி ஒரு சூழ்ச்சிக்காரி ,துணிச்சல்காரி என்று பல சந்தர்ப்பத்தில் சோடிக்கப்படுகின்ற பாங்குடன் விவரிக்கப்படுகின்றது ஒரு சில உதாரணங்களுடன்.

14 வயதில் மகளிருக்கக் கூடிய தம்பதிகள் இன்னும் மேலதிகமாக ஒன்றிரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கக் கூடிய தம்பதிகள் இல்லறத்தில் ஆழ்ந்து அனுபவித்து துய்க்கின்ற விருப்புடையவர்கள் ..இவர்களுக்கிடையில் ஒருவரை மீளாத ஆழ்ந்த வலியில் ஆழ்த்துகின்ற குரூரம் கொப்பளிக்க முடியுமா?

பெண்விடுதலை பற்றிப் பேசுகின்றவர்களுக்கு சில வேளை இது உவப்பான விடயமாகக் கூட இருக்கலாம். ஆனால் அங்கு ஆணாதிக்கக் கொடுமைகளும் நிகழ்வதான போக்கு காணப்படாத இடத்தில் இலங்கையில் இருந்து வந்து மணம் செய்திருக்கும் ஒரு தமிழ்ப்பெண் இவ்விதமான ஒரு முடிவை எடுக்க முடியுமா? முடியுமா என்பதற்கும் முன்னால் தேவையா? என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

உழைக்கும் பெண்ணுக்கும் உழைக்கும் ஆணுக்கும் உரிய சிறு உரசல்கள் விட்டுக்கொடுப்பின்மை போன்ற சாதாரணச் சம்பவங்களே இடம் பெறும் குடும்பத்தில் இவ்வகையான முடிவை ஒரு தமிழ்ப் பெண்..தமிழ்ப்பெண்ணிற்குரிய சில சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் நம் சமூகம் முழுதாக இழந்து விடவில்லை என்ற கணிப்பினாலேயே ..தமிழ்ப்பெண் என்பதை இங்கு அழுத்திப் பதிவு செய்திருக்கின்றேன்.

ஒரு தமிழ் ஆணை அவமதிக்கும் செயலாக இதனைத் தேர்வு செய்கின்றாள் என்பது கதாசிரியரின் அனுபவமா? அல்லது பெண்கள் பற்றிய பார்வையின் வக்கிரமா? என்று புரியமுடியாத அந்தரத்தில் என்னைத் தொங்கவிட்டிருக்கின்றது.

எப்போதுமே விட்டுக்கொடுக்கின்ற கணவன் இப்போது மட்டும் விட்டுகொடுக்கவில்லை என்பதற்காக..எத்தனை ஆயிரம் தடவை கேட்டுக்கொண்டாலும்.. அவள் அப்படிச்செய்ததற்கான ஏதாவது காரணம் கிடைக்கின்றதா என்று கதை முழுக்க அலசிப்பார்த்தாலும் ..நான் கேள்விப்பட்ட வாசித்த கதைகளைச் செய்திகளைத் தோண்டிப் பார்த்தாலும் ..என்னால் இன்னும் தான் கூடவில்லை.

அதிக பட்ச கோபம் கொலை செய்ய வைக்கும் அல்லது தற்கொலை செய்யவைக்கும். அதற்கும் குறைந்த பட்ச கோபம் வீட்டை விட்டுப்போகச் செய்யும். இது எப்படி இன்னும் வாழ்க்கையை சேர்ந்தே கழிக்க இருக்கும் நினைக்கும் ஒரு பெண்ணால்...

"ஆவேசம் வந்து வலிந்து இழுத்தார். அது பிரிந்தது. தளும்பல் குறைவில்லாத மார்புகள்.
ஆனால் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. அவளுடைய இரண்டு மார்பிலும் பச்சை குத்தியிருந்தது. அந்த சைனாக்காரனின் டிராகன்கள் வாயை ஆவென்று விரித்துக் கொண்டு உறுமின. ஒரு பென்சில் கூட இடையில் புக முடியாத நெருக்கமான மார்புகள்.தன்னுடைய சொந்தப்பாவனைக்காக படைக்கப்பட்டவை என்று நினைத்திருந்தவை.யாரோ ஊர் பேர் தெரியாத நடைபாதை சைத்த்ரீகன் வரைந்தஓவியங்களின் கனம் தாங்காமல் ஆடின.

இருண்ட வனத்திலே பதுங்கியிருந்த மிருகம் ஒன்று தாக்கியது போல உணர்ந்தார். மெல்ல பலமிழந்து சரிந்தார். அவர்தான் இப்ப ஐந்தாவது கதிரை."

அந்தப் பெண் இப்படிச் செய்திருப்பாளா? இப்படிச் செய்ததன் மூலம் அவளின் வெற்றியென்ன?
இதை சொல்லியதன் மூலம் கதாசிரியரின் நோக்கம் என்ன?

ஆண்களை எதிர்ப்பதற்கான புதிய வழி முறைகளைச் சொல்லிக்கொடுப்பது தானா நோக்கம் ?
தன் மனைவியுடன் கூட முனையும் ஆண்களின் கைகள் நடுக்கத்துடன் தான் ஆடை நீக்கும். இதைபோன்ற ஆச்சரியங்கள் இருந்து விட்டால் என்ற படபடப்புடன்.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil