
ஈழத்தில் போராட்டம் முடிந்து விட்டது ..இனியென்ன ... எல்லா அகதிக் கபோதிகளும் போய் விடவேண்டும்.. தன்னிகரில்லா தமிழினத் தலைவர்... கொள்கைக்குன்று...முடிவெடுத்து விட்டார்..தொப்பூழ்க் கொடியில் சுரக்கப் பாலில்லை.. போய் விட வேண்டும்.
எதைச்செய்தால் சோனியா அம்மாவின் குஞ்சரத்தில் நீர் சுரக்கும் என்பது எம் அண்ணன்.. எம் அப்பன் ..கருப்புக்கண்ணாடி கழட்டா கழகத் தலைவன் அவனுக்கு அத்துப்படி..பொதிகை மலையில் பிறந்த தமிழுக்கே மே/பா ஆக இருந்தவன் அவனுக்குத் தெரியாதா?
83 ஆம் ஆண்டிலிருந்து 35 வருடங்களாக தாய் மண்ணே வணக்கம் என்று உங்கள் காலடியில் விழுந்து கிடந்த உங்கள் சோதரரை மூட்டை கட்டி பயங்கரவாதிகள் என்ற பெயரில் இலங்கை அனுப்ப எங்கண்ணன் பராசக்தி பங்காளன் 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்தவன் வாய்க்கரிசி கொடுத்து அனுப்புகின்றான்.
இப்போது எங்கள் இனிய பதிவர்கள் கலைஞரின் வலக்கரம் இடக்கரம் ..அபியப்பா லக்கி எல்லோரும் காத்து வாங்கப் போய் விடுவார்கள். மெரீனாவில் இருந்து இவர்கள் வருவதற்கிடையில் அவர்களைக் கலைஞர் மன்னார் வளை குடாவைத் தாண்டி நாடு கடத்தி விடுவார்,
அங்கேயே 3 இலட்சம் மக்கள் இப்போதோ பின்னையோன்னு இழுத்துக்கிட்டு இருக்கு...
இவர்கள் வந்து ஒரு "இப்போது வருந்துகின்றோம்" பதிவு போடுவார்கள். ஏய்யா ..உண்மையிலேயே உங்களுக்கு இவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா?
http://publication.samachar.com/topstorytopmast.php?sify_url=http://news.google.co.in/news/url?sa=T&ct=in/8-0&fd=R&url=http://www.tamilseythi.com/tamilnaadu/nedumaran-2009-06-05.html&cid=1245263635&ei=bZwpSovyMomE6QPwur3CBQ&usg=AFQjCNGZOIUTbCrti4MQkEOdlYrO-6PnRw
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment