ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, June 5, 2009


ஈழத்தமிழர் இரத்தம் குடிக்கும் இந்தியா


இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் நாள் தொடங்கி எதிர்வரும் 19 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா தொடர்பாக கடந்த 25, 26 ஆம் நாட்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை இந்திய தூதுவர் கோபிநாதன் ஆச்சம்குலங்காரே எதிர்த்ததுடன் அவர் அங்கு தனது கருத்தையும் முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தை நவநீதம்பிள்ளை வரவேற்றிருக்கிறாரே தவிர அன்றைய நாள் சிறிலங்காவுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் வரவேற்கவில்லை. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு சபைக்கு உகந்தது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற அமர்வில் செக் குடியரசு, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளும் இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை என்று இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றிவிடும் முயற்சிகளிலேயே இந்த கூட்டத்தொடரில் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளே சிறிலங்கா தொடர்பான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த தொடங்கியுள்ள நிலையில் இந்தியா தொடர்ந்தும் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் வரவேற்று உரையாற்றியிருந்தன.

7 comments:

பாலா... said...

வெட்கத்தில் கூசிப்போகிறது. இப்படியாவது வல்லரசாக வேண்டுமா? மனிதம் கொன்றபின் யாரை ஆள?

இட்டாலி வடை said...

வாருங்கள் பாலா!

கேட்க வேண்டும் ..மக்கள் தான் கேட்க வேண்டும்..

ஒரு சில ஒநாய் குள்ளநரி ஆட்சியாளர்களின் தந்திரங்களைப் பகிரங்கப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்...

பதி said...

இது தொடர்பான Telegraph UK வின் செய்தி

http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/06/01/sri_lankan_puppets_in_the_hands_of_emerging_superpowers

இதனுடைய தமிழாக்கம் இன்றைய புதினத்தில் வந்துள்ளது.

http://www.puthinam.com/full.php?2becB7qia0ac4EvVV30ecdCZcr30cc3o6NoO34d34YTn7c4a33BVWb14d4efUD6gbd0e00hYjFde

இட்டாலி வடை said...

தகவலுக்கு நன்றி பதி!

நீங்களே எடுத்துப் போட்டிருக்கலாம்...

உலகின் எந்த மூலையிலிருந்து இவ்வாறான ஈழத்தமிழ ஆதரவுக் குரல்கள் ஒலித்தால் அதை எடுத்துப் போடுங்கள்.. பலரின் கை அடித்தால் தான் ஓசை வரும்...

எல்லா நண்பர்களும் இதனை ஒரு கடமையாகச் செய்யுங்கள்..

பதி said...

ஐ.நா வின் மூத்த அதிகாரிகளின் குறிப்பாக இந்தியாவின் விஜய் நம்பியார்
பித்தலாட்டங்களை பிரான்சின் லே மாந்த் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது

http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.html

அதனை தமிழில் படிக்க
http://pathipakkam.blogspot.com/2009/06/blog-post_05.html

இட்டாலி வடை said...

பதி! உங்கள் பதிவிற்கு இணைப்புக்கொடுக்கும் வசதியைச் செய்து விடுங்கள்.. இணைப்புக்கொடுக்க வசதியாயிருக்கும்.. அப்படியே அது எப்படியென்றும் சொல்லிவிடுங்கள்..

நாங்களும் வசதி செய்து விடுகின்றோம்..

பதி said...

//பதி! உங்கள் பதிவிற்கு இணைப்புக்கொடுக்கும் வசதியைச் செய்து விடுங்கள்.. இணைப்புக்கொடுக்க வசதியாயிருக்கும்.. அப்படியே அது எப்படியென்றும் சொல்லிவிடுங்கள்..//

இது என்னவென்றே புரியவில்லை....

நான் பதிவுலகத்திற்கு புதிது. நண்பர்களிடம் இது பற்றி கேட்கின்றேன்...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil