ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, June 3, 2009


இந்தியா போட்ட இரட்டைவேடம் ..சோனியா கருணாநிதி இரண்டு கருப்பாடுகள்


முதல்வர் கருணாநிதி தம் தவறை உணரவேண்டும். ஈழத்தமிழினத்திற்கு செய்த துரோகத்தை நேர்மையுடன் ஒத்துக் கொள்ள வேண்டும். 86 வயது காணும் இந்த நேரத்தில் அவரிடம் உண்மையில் ஏதேனும் நல்லொழுக்கங்கள் எஞ்சி இருந்தால் அவர் இதனைச் செய்ய வேண்டும். இவரும் சோனியாவும் விட்ட தவறுகளை முன்னாள் மத்திய அமைச்சரவைக் கூடுதல் செயலாளர் பி.ராமன் மேலோட்டமாகப் பதிவு செய்திருக்கின்றார்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவரை உலகத் தமிழினம் ஓயப்போவதில்லை. முன்னாள் மத்திய அமைச்சரவைக் கூடுதல் செயலாளர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்ரிரியூட் போர் ரொப்பிகல் ஸ்ரடீஸ் நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.


"இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும் உணர்வுடனும் நினைத்துப்பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. காரணம் நமக்காக அவர் துடித்தார், நமக்காக பரிவு காட்டினார், நம்மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார். நாம் இரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

ஆனால், இன்று ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் மத்திய அரசின் மீது குறிப்பாக காங்கிரஸ் மீதும் சோனியா காந்தியின் மீதும் மிகப்பெரும் வருத்தத்தில்,கோபத்தில் உள்ளனர்.

அதற்குக்காரணம், விடுதலைப்புலிகளுக்கு உதவியாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்ல. பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் இந்தியா அதைக்கண்டும் காணாமல் விட்டுவிட்டதே, கைவிட்டு விட்டதே என்ற வேதனையில்தான்.

ஈழத்தமிழர்களின் இந்தக்கோபம் இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல என்ற கருத்து பரவிக்கிடக்கிறது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் ஆழவேரூன்றிவிட்ட இந்த எண்ணத்தை துடைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போட்டது என்பதில் ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி, உலக நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சமுதாயத்தினர் மத்தியிலும் சரி யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக இவர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழர்களை அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்காக கோபத்துடனும் உள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை இந்தியத் தரப்பிலிருந்து கடுமையாக யாரும் கண்டிக்காததும் அதைத் தடுக்க முயலாததும் உலகத்தமிழ் சமுதாயத்தினரை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது.

தமிழர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கெல்லாம் இந்தியாவின் முழு ஆதரவும் இருக்கிறது என்ற எண்ணத்தை ஆணித்தரமாக அவ்வப்போது கோதாபய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் நிரூபிக்க முயன்றபோது அதைத் தடுக்கவோ மறுக்கவோ இந்தியா முயலவில்லை என்பதும் இந்தியா மீதான உலகத்தமிழர்களின் வருத்தத்திற்கு இன்னொரு காரணம்.

இந்திய அரசும், காங்கிரஸும் இலங்கை இனப்பிரச்சினையில் நடந்துகொண்ட விதத்தால் தான் இன்று ஈழத்தமிழர்கள் சோனியா காந்தி மீது கோபமாக இருக்க முக்கிய காரணம்.

இந்தக் கோபம்தான் இப்போது விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் ரூபத்தில் கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளின் கருத்தாக இணையத்தளத்தில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகள்,செய்திகள்,ஆய்வுசெய்திகள் மூலம் உலா வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக சோனியா காந்தியை தமிழர் விரோத சக்தியாகச் சித்திரித்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேபோல், முதல்வர் கருணாநிதியையும் தமிழர் விரோத சக்தியாக மாற்றி வருகின்றனர்.

சோனியா காந்தியும்,கருணாநிதியும் தமிழர்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்காமல் அழியவிட்டுவிட்டதாக கடும் கோபத்துடன் உள்ளது ஈழத்தமிழ் சமுதாயம்.

அதேபோல், விடுதலைப்புலிகளும் கூட லெபனான் மீது இஸ்ரேல் 2006 ஆம் ஆண்டு கடும் தாக்குதல் நடத்தியபோது உலக சமுதாயம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அடக்கியது போல இப்போதும் உலக சமுதாயம் இலங்கையைக் கட்டுப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அது பொய்த்துப் போய்விட்டது. பக்கத்தில் இருக்கும் இந்தியாவே அமைதியாக இருந்ததால் உலக சமுதாயமும் ஒப்புக்கு சில கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டு அமைதியாகிவிட்டது.

அதேசமயம், விடுதலைப்புலிகள் இயக்கம் அப்பாவி மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்துவதாக வெளியான செய்திகளால் பிரபாகரன் மீதும் புலிகள் இயக்கம் மீதும் எதிர்மறையான கருத்துகள் பரவக் காரணமாகிவிட்டது.

தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸைத் தவிர வேறு எந்த உலக அமைப்பும் விடுதலைப்புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தர முன்வரவில்லை.

இந்தியா இப்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான நாடாக மட்டுமல்லாமல் தமிழ் விரோத நாடாகவும் உலகத்தமிழர்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது, இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல. -

4 comments:

Anonymous said...

இந்தியாக்கு எதிரான கருத்து சொல்லும் ..... உங்களை போன்றவர்கள் என்றும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் ..... போக்கு உங்களுக்கு நிச்சயம் நல்லதல்ல.

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி!
இந்தியா என்ன கருத்துகளுக்கு அப்பாற்பட்டதா?

இந்தியா ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை மறந்து விட முடியுமா?

யார் தீவிரவாதிகள்? போராட்டவாதிகள் தீவிரவாதிகள் என்று காட்டுவது எப்படிச் சரியாகும்? அதைத் தீர்மானிப்பது மக்கள்...அரசு இயந்திரங்கள் அல்ல...

இந்தியா எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது..இந்தியா மீது ப்ப்ரியம் கொண்டிருக்கும் நீங்களும் அதை ஆதரிக்கின்றீர்கள்..

நசுக்கப்பட்டவர்கள் ..பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்தியாவை எதிர்ப்பதன் மூலம் தான் தமிழீழம் கிடைக்குமென்றால் அதையும் செய்வோம்...

ரங்குடு said...

கருத்து சொல்லும் அனானிகள் இலங்கையில் நடக்கும் அரசியலையோ, சிறு பான்மையினருக்கு இழைக்கப்படும் அராஜகத்தையோ பற்றிய வரலாறு அறியாதவர்கள்.

நேரு - இலங்கையில் நடப்பது அவர்கள் உள் நாட்டு விவகாரம் என்றார்.

சாஸ்திரி - இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதிலும் ஈழத் தமிழர் நலன்கள் கை கழுவப்பட்டன.

ராஜீவ் - அமைதிப் படை என்ற பெயரில் இலங்கை அரசுக்கு பெரும் உதவி செய்து ஈழத் தமிழர் நலன்களை மேலும் பலியாக்கி, தானும் பலியானார்.

இன்று - ராஜிவ் காந்தியின் மரணம் தான் பெரிதாகப் படுகிறதே தவிர, அவரது செயல் பாடுகள் யாருக்கும் புரிய வில்லை. நேரு உள் நாட்டு விவகாரம் என்று சொல்லிய விஷயத்தில் இப்போது நாம் மூக்கை நுழைப்பது ஏன்?

இலங்கையும் பாகிஸ்தானும் நெருங்கிய உறவுடன் உள்ளன. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என்று இந்திய அரசாங்கம் கருதுவதால், இலங்கையை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உள்ளது.

இதில், காவு கொடுக்கப் பட்டவர்கள் ஈழத் தமிழர்கள்.

இந்த இனப் படுகொலையை எதிர்த்துப் போராடியவர்கள் தீவிரவாதிகளா?

Anonymous said...

அட முட்டாள் அனானி, ஒரு தேசத்தையே கொன்று போட்டிருக்கின்றார்கள் , அந்த இந்தியாவைப் பற்றியா நீ பேசுகின்றாய்.
வெட்கமாயில்லை தூ

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil