ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, June 3, 2009


மீண்டும் இந்தியப் படுகுழியில் ? பத்மநாதனுக்கு ஒரு பகிரங்க கடிதம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள செய்தியிலேயே இந்த நயவஞ்சகம் வெளிப்பட்டுள்ளது. இது, இத்தனை இழப்புகளின் பின்னரும் தமிழ்த்தலைமைகளிடம் ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு ஏற்படாது இருப்பது விசனத்திற்குரியது.

இத்தனை ஈழத்தமிழ் மக்களையும் கொன்று போட்டதில் முழுப்பொறுப்பேற்க வேண்டிய இந்திய காட்டுமிராண்டி அரசிடம் தயவு வேண்டி நிற்கும் இவர்களை மக்கள் இனங்காணவேண்டும். இத்தனை பின்னடைவிற்கும் காரணமான புலிகளின் பழைய தவறைத் தொடர்ந்து செய்வது சரியான வழிகாட்டலாய் இருக்க முடியாது.

கொல்லப்பட்ட இத்தனை உயிர்களுக்கும் சிறு வருத்தத்தையேனும் இதுவரை தெரிவிக்காத இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கூனிக்குறுகி நிற்கும் கீழ்த்தர அரசியலை விட்டு இவர்கள் வெளிவரவேண்டும். ஐ.நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளின் மூலம் திறந்த அரசியல் நடவடிக்கையை எடுப்பதே இவர் கூறியதைப்போல,- தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?

மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.
-வெற்றிபெறவேண்டுமானால் அனைத்துத் தரப்பின் கருத்துக்களை செவிமடுக்கும் முயற்சிகளில் ஈடு படவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் வேலைகள் இனி ஆகாது.

இது வரை இவர்கள் ஆற்றிய மூடு மந்திர வேலைகளாலேயே தமிழ் மக்களுக்கு இத்தகைய ஒரு பின்னடைவு ஏற்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?

அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் - பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.


கேட்டுக் கொள்வதுடன் மட்டுமல்லாது நீங்கள் ஒதுங்கி வழிவிடுவதும் கூட புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடம் காத்திரமான தலைமையை உருவாக்க வழி விடும்.


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?

அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.


இதில் இந்தியாவைக் கவனமாகத் தவிர்த்ததன் மூலம் உங்கள் கபடத் தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். நடந்ததை நேர்மையாக ஒத்துக்கொள்ளும் திறன் இல்லாத உங்களை நம்பி ஈழத்தமிழினம் இன்னுமொரு கொலைக்களத்திற்குத் தயாராகவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதில் இந்தியாவின் மெத்தனமும் பங்களிப்புமே முக்கியமானது. அதைப் பகிரங்கமாகவே சொல்லும் திடம் உடையவரே தமிழ் மக்களை வழி நடாத்த அருகதை உடையவர்கள். புகலிடத்தில் வாழுகின்ற இரண்டாம் தலைமுறையிடம் அதற்கான பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள்.

எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் - இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

என்று கதை விடவேண்டாம். உங்களால் அதைத்தான் செய்யமுடியும். மண்வெட்டியும் கடகமும் கொண்டு விவசாயம் செய்யத்தான் உங்களுக்குத் தெரியும். இப்போது எத்தனையோ நவீன வசதிகள் இருக்கின்றன.

விவசாயமும் சிறப்பாக இருக்கும் சாகுபடியும் அமோகமாகக் கிடைக்கும். அவதிப்படும் எம் ஈழ உறவுகளுக்கு உதவ துடித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ உண்மையிலேயே ஜனநாயகத்தைக்கொண்டியங்கும் நாடுகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது இந்தியாவிடம் மயங்கிக் கிடப்பதன் காரணம் பலராலும் உங்கள் மீது திணிக்கப்படும் குற்றச்சாட்டை நீங்களே உறுதிப்படுத்துவது போன்று இருக்கின்றது.


உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.


http://www.puthinam.com/full.php?2b34OOo4b33q6DXe4d45Vo6ca0bc4AO24d3SSmA3e0dU0MtZce03f1eW0cc2mcYAde

3 comments:

Anonymous said...

why dont u see this is also a raw game. he was with ltte for 30 years. 3 days b4 another article showed that he is worried about pottu amman. i feel it is a plan by raw to seperate the union of tamil leaders. lets not comment now. wait for some time. eppavum ltte indiavai neeraradiyaaka pakaiika villai. so better. they dont wont to adn it is not good too. taminnadu makkal ahtaravu mulumayaka irukkumanal ok. karunahtiniye ippadi oru pachai thurookam siatha pin.

ttpian said...

how many tamil lives?
why begging before racist India?
finish singala land:let them also stand in streets!

இட்டாலி வடை said...

வாருங்கள் ttpian !

இந்திய ஓநாய் சோனியா அரசிடம் கெஞ்சவில்லை... இந்திய குறிப்பாக தமிழக மக்களிடம் தான் கேட்கின்றோம்.

எத்தனை படித்த மேதாவிகள் மனிதவுரிமை காவலர்கள் என்று கதைவிடுபவர்கள்..நீதிக்கும் நியாயத்துக்குமாய் ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் அவர்களைத்தான் கேட்கின்றோம்.

உண்மையான மனிதர்களின் இரக்கத்தையும் ஆதரவையும் அடையாளங் கண்டிருக்கின்றோம்.

இந்தியாவிற்கு நாம் எதிரிகளாக இருக்கலாம்.ஆனால் நமக்கு எதிரிகள் தமிழகம் தவிர்ந்த இந்தியா என்று இன்னும் நம்பிக்கை இருக்கின்றது..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil