ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 4, 2009


ஈழத் தமிழ் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்


நான் உங்களைப் போலவே தமிழனாய்ப் பிறந்ததனால் துயரங்களை மட்டுமே சுமந்தவன். உற்றார் உறவினர்களை இழந்து அடித்து விரட்டப்பட்டு அகதியாய் அலைந்தவன். பல்வேறு இன்னல்களுக்கிடையே வாழ்க்கைக்குப் பாரமாய் இருந்தவன். இந்தப் போரிலும் என் இறுதி எச்சங்களையும் தொலைத்தவன் ..அழுவதற்குக் கண்ணீரில்லாது வரண்டு போனவன். என் மக்களுக்காக இதயத்தில் குருதி வடிப்பவன்.

நீங்கள் உண்மையிலேயே தமிழ் மக்களின் பால் அக்கறை கொண்டவர்களாயின் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டவர்களாயின் தயவு செய்து இந்தியாவிடம் போகாதீர்கள்.. இந்தியாவை நம்பியிருக்காதீர்கள்.. எங்கள் அத்தனை துயரங்களுக்கும் காரணம் இந்தியாவே..அதன் பிழையான அணுகு முறையும் வெறுப்புமே எங்களைக் கொன்று போட்டிருக்கின்றது. குருதி ஆறுகளையும் பிணமேடுகளையும் உற்பத்தி செய்தது இந்தியாவே..
அத்தனை உயிர்களையும் எரித்து சாம்பல் காடாக்கியது இந்தியாவே..

இந்தியாவை இனி எப்போதும் நம்பாதீர்கள். இந்தியாவை நம்பவில்லையென்பதால் இதற்கு மேற்பட்ட ஒரு துயரத்தை இந்தியாவால் எங்களுக்குத் தர முடியாது.. இன்னும் தண்டிக்க விரும்பினால் தண்டித்து விட்டுப்போகட்டும்.. இறப்பதற்கு சில உயிர்களைத் தவிர எங்களிடம் எதுவுமேயில்லை.எல்லாம் அழிந்து போய் விட்டது. ஆன்மாவேயில்லாத எலும்புக்கூடுகளாகத் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அப்போது என்ன தான் செய்வது? சர்வதேசத்திடம் போங்கள். நாமும் இந்தப் பூமியில் மனிதர்களாய்ப் பிறந்ததனால் வாழ்வதற்கு ஏதாவது உங்கள் சர்வதேச நியாயங்களில் சட்டங்களில் இடம் இருக்கின்றதா என்று இரந்து கேளுங்கள்.. ஏதாவது வழியிருக்கின்றதா என்று அழுது கேளுங்கள்..தமிழர் என்ற இனமாகப் பிறந்தது பாவமா என்று பார்க்கச் சொல்லுங்கள்..

வழியிருந்தால் வந்து சொல்லுங்கள்.. இல்லையென்றால் பரவாயில்லை ..எங்காவது போய் விடுங்கள்.. இன்னும் சில மாதங்களில் எங்கள் கேள்விகள் வெளியில் வராது. உங்களுக்கில்லாத மிகப் பெரும் இரக்கத்துடன் ராஜபக்ஷே எங்களை அமைதியாகத் தூங்கப் பண்ணுவான்.. அப்போது யாரும் எங்களுக்காக அழவே தேவையில்லாது போய் விடும். போதும் எம் துயரங்கள்.

தயவு செய்து எங்களுக்காக இந்தியாவிடம் மட்டும் கையேந்தாதீர்கள். இந்தியாவின் இரத்தத்தில் தோய்ந்த தண்ணீரைக் குடித்து உயிர் வாழ்வதையே நாங்கள் வெறுக்கின்றோம்.. இந்தியா என்பதே எம் அருகில் இல்லாத தொலைதூரத்திற்கு அப்பால் பட்ட தேசமாகிப் போகட்டும். இந்தியாவில் இருந்து எங்கள் மீது வந்து விழுந்த அத்தனையையும் துடைத்தெறியவே ஆசைப்படுகின்றோம். இனம், மதம், மொழி ,பண்பாடு அத்தனையையும் இறுதிப் பீரங்கிக் குண்டையும் சேர்த்து. எம்மீது விழுந்த எம் குழந்தைகளின் தசைச் சிதிலங்களையும் எம்பெண்களின் குருதிக் கூறுகளையும் ஓட முடியாத எம் முதியவரின் ஐயோ என்ற ஓலங்களையும் அள்ளிக் கொண்டு போகின்றோம். ஆபிரிக்காவைத் தாண்டி அமெரிக்காவைத் தாண்டி எங்கோ ஒரு மூலையில் வாழ் முடியுமென்றால். இந்தியா என்ற நரகத்தின் தீயல் மணம் நெருங்காத தூரத்திற்குப் போகின்றோம்.

தயவு செய்து இந்தியாவிடம் யாரும் எங்களுக்காக இரக்காதீர்கள். தயவு செய்து..அது புலிகளின் பத்மநாதன் ஆகட்டும் சம்பந்தன் அன் கோவாகட்டும் கருணாவாகட்டும் ஆனந்தசங்கரி ஆகட்டும்... இறந்து போனவர்களின் மீது சத்தியமாக... தயவு செய்து ..அப்படியொரு வாழ்க்கை எங்களுக்கு இனித் தேவையில்லை.. இறந்தவர்களுடன் கூட நாங்களும் இறந்து போகின்றோம்.. தயவு செய்து அதை மட்டும் செய்து எங்கள் மக்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.. தயவு செய்து...

3 comments:

Anonymous said...

/ஈழத் தமிழ் தலைவர்களுக்கு/

யாருங்க அவுங்க? எங்கேருக்காங்க?

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி!

யாருமே இல்லையா..?

Anonymous said...

நிஜமாகவே வெட்கமாய் இருக்கிறது... நான்கு மலையாளத் தே... மவன்களிடம் மாட்டிக்கொண்ட
இந்தியாவின் பிரஜை என நினைக்கும்போது...

பிரபா

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil