ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, June 2, 2009


ஈழப்போர் பற்றி இரண்டு குரல்கள்

ஈழப்போர் எப்படிப்போனது எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பது பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் போய்ச் சேர வேண்டிய இடம் பற்றி தமிழர்கள் எமக்கு எந்தச்சந்தேகமும் இல்லை.

அஹிம்சை,ஆயுதப்போராட்டம் என்றெல்லாம் எது சிறந்தது எப்படி இருந்திருக்க வேண்டும் என்றும் பல யோசனைகள் கூறப்பட்டன. இவற்றுக்கிடையில் இரண்டு குரல்கள் அதனைத் "தாங்கி" நிற்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

வெளிவந்த உயிர்மைக்கும் நன்றி.


"காந்தியைப் போலவே கடைசிவரை தோல்வியைத் தாங்காதவர், தோல்வியை ஒப்புக் கொள்ளாதவர் பிரபாகரன்.

இருவரும் ஒன்றே!

பிரிட்டிஷ் ராணுவத்தை எடை பார்த்தார். நம் ஆட்களைத் திரும்பிப் பார்த்தார். சரி. ஆயுதம் சரிப்படாது என்று காந்தி முடிவு செய்தார்.

சிங்கள ராணுவத்தை எடை போட்டார். எங்களண்ட ஆட்களைத் திரும்பிப் பார்த்தார். அடிடா என்றார் பிரபாகரன்.

இரண்டு போர்களிலுமே ஆட்கள் செத்தார்கள் என்பதை நாம் மறைக்க வேண்டியதில்லை. அகிம்சை போராட்டத்தில் காந்தி சாகவில்லையே தவிர யாரும் சாகவில்லை என்று சொல்ல முடியாது.

சாவு எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று சொல்வது காந்தி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. ஒரே ஒரு எறும்பு செத்தாலும் காந்தியின் போராட்டம் தோல்விதானே?

பிரபாகரன் போராட்டம் அப்படி அல்ல. எவ்வளவு பேர் செத்தாலும் கடைசியில் இலக்கை அடைந்தால் சரிதான் என்று முதலிலேயே செய்த முடிவு.

காந்தியையும் பிரபாகரனையும் எதிர்ப்பவர்கள் உண்டு। அதற்குக் காரணம் அவர்கள் இருவருமே ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். போட்டித்தரப்புகளை இல்லாமல் செய்தார்கள். விடுதலைப் போராட்டத்துக்கு அது முக்கியம் என்று காந்தி கருதினார். " -இந்திரஜித் ,சிங்கப்பூர்


"வன்னியில் போர் முடிந்துவிட்டது. ஆனால் இனிமேல்தான் ஈழப்போர் உலக அரங்கில் தொடங்குகிறது. மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இப்பொழுது போர்க்கோலம் பூண்டிருப்பது நம்பிக்கை தரும் செய்தி. இனி இது இலங்கைத் தமிழர்களை மட்டும் சார்ந்த விவகாரம் இல்லை. உலகத் தமிழினத்தைச் சார்ந்த விவகாரம்.

ஆனால், இது வன்முறையைத் தூண்டும் கொரில்லாப் போராக மட்டும் இருந்தால், சர்வ தேச அரங்கில், நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் நேர்மையான மற்றைய இன மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது சிரமமான காரியம். இலங்கையில் இனித் தமிழின மக்கள் சிங்களர்களுடன் சரிநிகர் சமானமாக வாழ இயலாது என்பதைப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழின அறிவுஜீவிகளும், அவர்களுடன் தோள் நின்று மற்றைய நாட்டுத் தமிழர்களும் உலக நீதி மன்றங்களில் சித்தாந்தப் போர் நிகழ்த்தியாக வேண்டும். அயல் நாட்டுப் பத்திரிகைகளில், உலகச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற அறிஞர்களால் இப்பிரச்சினை பற்றி எழுதப்படும் நடுநிலை பிறழாத அறிவுசார் கட்டுரைகள் வருவதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். பிரபாகரன் மீது சுமத்தப் படும் வன்முறைக் குற்றங்களுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான அளவுக்கு, ஹிட்லர் யூதப் பிரச்சினைக்குக் கண்டது போல், தமிழ்ப்பிரச்சினைக்கு ‘இறுதித் தீர்வு' காண, இனப் படுகொலை செய்திருக்கிறார் ராஜபக்ச. இந்தப் படுகொலைக்குத் துணை போயிருக்கிறது, மகாத்மா காந்தி பிறந்த பாரதத்திருநாடு! இச்செய்திகள் உலக அரங்கில் சரியான முறையில் அம்பலமாக வேண்டும்.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, இந்திய அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையை அவைகளுடைய சுய நலத்துக்காகத்தாம் இது வரைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனவே தவிர, அவைகளுக்கு ஈழத்தமிழர் பற்றிய உண்மையான அக்கறை எதுவும் கிடையாது என்பதை உணர வேண்டும். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தப் போலி நாடகம் வெவ்வேறு வடிவமைப்பில் அரங்கேறி வருகின்றது.

ஈழத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கு வெவ்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் ஏற்பட்டிருக்கும் தொடர்புகளின் காரணமாக, அளப்பரும் ஆற்றல்கள்

கைக்கூடியிருக்கும்। அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இதுதான்।" - இந்திராபார்த்தசாரதி,இந்தியா

1 comment:

ttpian said...

வீரமனியும் கருனாவும் பால் காவடி,பன்னீர் காவடி எடுத்து,சொனிஆ சன்னிதானத்தில் அன்கபிரதட்சனம் செய்யலாம்!

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil