ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 25, 2009


மூன்று டைனசோர்கள்


"மூன்று தெய்வங்கள்" என்று ஒரு ஈமெயில் வந்திருந்தது. "இனியொரு"வில் ஜமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரை. "மூன்று தெய்வங்கள்" என்பதே அடிப்படையில் வலுவிழந்து போகின்றது. தெய்வங்கள் தங்களுக்கிடையில் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. அசுரர்களையே மிகுந்த ஆக்ரோஷத்துடன் வதம் செய்யப் போகும். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தவிர. அனைத்து வேளையிலும் அசுரரை அழித்து பூபாரம் குறைக்கவோ, கவர்ந்து செல்லப்பட்ட மனைவியரை மீட்கவோ, கொடுத்த சாபத்தை அல்லது வரத்தை பூர்த்தி செய்ய ஏதோவொரு காரணத்துடன் பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் சமயங்களில் பாதாளலோகத்திற்கும் பயணப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஆனால் இவர்கள் சரியான டைனசோர்கள். தம் பெருத்த உடல்களைத் தூக்கிக் கொண்டு புழுதி பரவ கர்ணகடூரமாக பேரொலி எழுப்பிக்கொண்டு ஓடி ஏறி மிதித்துத் துவைத்துப் போட்டுக்கொண்டிருப்பவர்கள். மாற்றுக்கருத்தை மதிக்கவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாது வெறி பிடித்து அலைபவர்கள். சர்வசாதரணமாக "பிம்ப்" "வேசிமகன்" என்று சக மனிதனையே தூஷணை செய்பவர்கள்.

இதில் எஸ்.ரா விற்கு இரண்டாவது இடம் தான் எப்போதும்.எல்லோருக்கும் நல்ல மனிதர் வேடம் போடுவதால் இருக்கலாம்.

மற்ற இருவரும் சரியான காட்டு டைனசோர்களே. ஜெமோ தன்னை விட வித்துவக்குஞ்சு இல்லையென்ற மதர்ப்பில் எதுவும் தெரியாமலே அலைந்து கொண்டிருக்கின்றவர். சாரு தனக்குத் தெரியாததையும் தெரிந்தது போல சொற்களையும் வார்த்தைகளையும் போட்டு "நானில்" உச்சத்தில் நிற்பவர்.

தன் வித்துவத்தைக்காட்டுவதில் தவறேதும் இல்லை. ஆனால் மற்றவருக்குத் தெரியவில்லை என்று கூறியே மேல் நிலையாளனாகக் காட்டுவது தான் இவர்கள் இலக்கியத்தில் அழுக்கைப் பூசிக்கொள்கின்றது. மற்றும்படி கோழி கூட்டுக்குள்ளே லபோ லபோ என்று அடித்தாலென்ன? குரங்கு உச்சாணிக்கொப்பில் தான் தொங்குவேன் என்று அடம்பிடித்தால்தான் என்ன? அவர்கள் வாழ்வு..தேர்வு..

இனியொரு தொடர்பு : http://inioru.com/?p=3382

2 comments:

ஜெகநாதன் said...

இதே மனநிலையில் தான் யமுனாவின் கருத்துக்கும் பின்னூட்டமிருந்தேன். உங்கள் கருத்து தோழமையாய் இருக்கிறது.

இட்டாலி வடை said...

வாருங்கள் ஜெகநாதன்!
இவர்கள் ஏன் சண்டை போடுகின்றார்கள் என்றாவது விளங்கிக்கொண்டிருக்கின்றார்களா? என்றுதான் புரியவில்லை...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil