ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 4, 2009


போர்க்குற்றங்கள் விசாரணை



சிறிலங்கா போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதை தாம் ஆதரிக்கத் தயாராக உள்ளோம் என ஐ.நா. மனித உரிமைகள் உயர் அதிகாரி, நவி பிள்ளை, இன்று வியாழக்கிழமை, தெரிவித்துள்ளார்.

விசாரணை தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்ட, கடந்த கிழமை இடம்பெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டம் தொடர்பாகக் கூறும்போது, “இடம்பெற்ற குற்றங்களையும், பிழைகளையும் கணிப்பிடாமல், மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்குள் இறங்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நிரந்தரமான சமாதானத்தைப் பெறுவதற்கு நீதிக்கும் மற்றும் மீள்கட்டமைப்புக்கும் முதல் தேவை பொறுப்புடமை என நான் நம்புகிறேன்” என நவி பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களின் கொலைகளுக்கும், அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கும்; சிறிலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளும் பொறுப்பு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த கிழமை மனித உரிமைகள் மன்றம் எடுத்த முடிவுக்கு மாறாக நவி பிள்ளையின் இவ் அறிவித்தலானது சிறிலங்காவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

நவி பிள்ளை கோரியமாதிரியே, அண்மையில், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட மனித உரிமைகள் குழுக்களும் போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

முகாமுக்குள் முடக்கவைக்கப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான மக்களை சுதந்தரிமாக நடமாட விடுமாறும், ஐ.நா. உயர் அதிகாரி அவசர அழைப்பு விடுத்துள்ளார். மனிதாபிமான உதவிகளுக்கு இடமளிப்பதும், மக்களைச் சுதந்திரமாக நடமாற விடுவதுமே தற்போது மிகவும் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு சர்வதேச சக்திகள் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் மற்றைய நாடுகளின் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு தெரிவித்துள்ளார்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil