ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 4, 2009


இந்தியா என்ற வேடதாரி


இன்று ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியது இந்தியாவே. இத்துயரமான போரை முன்னின்று நடத்திக்கொடுத்தது இந்தியாவே. தேவையான ஆயுதங்கள் ஆலோசனைகள் என்று அத்தனையையும் அள்ளிக்கொடுத்து மனித அவலங்களைத் தவிர்க்கவேண்டி மேற்கு நாடுகள் கொடுத்த குரலையும் பின் தள்ளி மனிதப் பிணக்குவியலைக் குவித்து 21 ஆம் நூற்றாண்டின் அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றி காந்தியின் அஹிம்சைக் கொடியை ஏற்றி வைத்தது.

30 வருடங்களாக வெற்றி கொள்ள முடியாது தவித்த சிங்கள இராணுவம் 3 மாதத்தில் கொலை வெறித்தாண்டவம் ஆட முடிந்ததென்றால் இந்தியாவின் அரவணைப்பால்தான். இறுதிக்கட்ட புலிகளின் சரணடைவையும் மக்களின் துர்மரணங்களையும் தவிர்க்கும் முயற்சிகள் இந்திய மத்திய அமைச்சர் ஒருவரின் வார்த்தைகளின் நம்பிக்கையில் நடைபெற இருந்தது. வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களை வேட்டையாடியதும் 20 ஆயிரத்திற்கும் மேலான மக்களைக் காவு வாங்கியதுமான நிகழ்வு இந்திய வஞ்சகத்துடன் நடந்தேறியது.

இந்தியா நினைத்திருந்தால் அந்த பாவப்பட்ட மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். எதிரிகளாகப்பார்க்கப்பட்ட அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற இந்தியாவின் எந்த மனுநீதியும் மனு தர்மங்களும் வேதங்களும் உபநிஷ்த்துகளும் ஓடி வரவில்லை. ஒரு பெண்ணின் மனதில் இருந்த வஞ்சம் பழிவாங்கும் உணர்வு இவையே வெற்றி பெற்றன.

வேதங்களையும் ஆகமங்களையும் கட்டிக்காத்த பூமியில் உலகத்திற்கே அஹிம்சையைப் போதித்த பூமியில் இருந்து ஒரு குரலாவது அந்த அப்பாவி ஜனங்களுக்காக ஒலிக்கவில்லை,இந்தக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவேயில்லை. மானுட நாகரீகத்தின் வெட்கம் இது. 21 ஆம் நூற்றாண்டின் அப்பட்டமான படு கொலை இது. மேற்கு நாடுகள் எடுத்த நடவடிக்கைகளையும் விடுத்த எச்சரிக்கைகளையும் மீறி சிறிலங்கா இவ்வாறு செயற்பட யார் காரணம் என்று நான் கேட்கின்றேன்.

படித்தவர்களே, பண்பாளர்களே, இரக்கவான்களே பதில் கூறுங்கள். இந்தியாவின் இராஜதந்திரிகளே மேதைகளே பதில் கூறுங்கள். உங்கள் யாராலும் ஒரு இனத்தின் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லையா? ஆயுதம் இழந்த இராவணனையே இன்று போய் நாளை வா என்று அனுப்பி வைத்த கதை சொன்னவர்களே ..சரணடைய வந்தவர்களை கொலை செய்ய எப்படி அனுமதித்தீர்கள்? காயம் பட்டு ரண களத்துடன் அவதிப்பட்ட அத்தனை ஆயிரம் பேருக்கும் என்னவாயிற்று?

எந்த முகாமிற்கும் அவர்கள் வந்து சேரவில்லையே இது வரையும்.சர்வதேச பத்திரிகையாளர்களும் தொண்டு நிறுவனங்களும் இதுவரை அங்கு போக முடியாதிருக்கின்றதே..உங்கள் மனங்கள் உறுத்தவில்லையா? ஐ நாடுகள் பாதுகாப்புச் சபையில் எடுத்து வரப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை இந்தியா எதிர்த்து சிறிலங்காவைக் காக்க வேண்டியதன் தேவை என்ன? நீங்கள் யாரும் மானுடத்திற்காகப் பேச மாட்டீர்களா?

நீங்கள் எல்லோரும் மெத்தப்படித்தவர்கள்.. கண்ணியவான்கள்..வெட்கமாயில்லை உங்களுக்கு..? ஜெர்மனியில் யூதர் செத்தால் குரல் கொடுக்கும் பாலஸ்தீனத்தில் பயங்கரமென்றால் குரல் கொடுக்கும் நீங்கள் உங்கள் பக்கத்தில் ஒரு ஊழித்தாண்டவம் ஆடப்பட்டிருக்கின்றதே..ஏன் என்றே கேட்க மாட்டீர்களா? அரசு இயந்திரம் எதைச் செய்தாலும் அடங்கிக்கிடக்கும் அடிமைகளா நீங்கள்..?

நோபல் பரிசு ..புக்கர் பரிசு எல்லாம் கிடைக்கும் மகா மேதைகள் நீங்கள்...இரசாயனம் முதல் விஞ்ஞானம் வரை எல்லாவித்தைகளையும் கற்றவர்கள் நீங்கள்.. கேவலம் மனிதாபிமானம் இல்லாத மரக்கட்டைகள்.

யாராவது குரல் கொடுத்தீர்களா? ஏன் என்று கேட்டீர்களா? ஒரு பத்திரிகை,ஒரு வானொலி,ஒரு டிவி.. ஒரு தொண்டர் அமைப்பு,ஒரு அரசியல் கட்சி ,ஒரு பாராளுமன்ற பிரதிநிதி... நீங்கள் எல்லாம் சேர்ந்தது தானே புண்ணிய பாரதம்..

இலங்கைக்குள்ளிருந்து ஒரு குரல் அழுகின்றது.

சிறிலங்காவின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா

நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது.

நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும்.

இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் வாழும் செட்டிக்குளம் முகாம்களுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியாது. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.

நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும்.

கூடாரத்தின் மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்துவிடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக்கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.

இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.

இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.


அங்கு என்ன நடந்தது என்று தெரிந்தாவது வைத்திருக்கின்றீர்களா? இதோ...

இலங்கையில் இடம்பெற்ற போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது


இதையாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் பிரிட்டனின் தினசரி கேள்வி கேட்கின்றது..கூப்பிடு தொலைவில் இருந்து ஒரு குரலும் ஏன் என்று கேட்கவில்லை..ஏன் நீங்கள் எல்லாம் மனிதத்தைக் கடந்து தேவர் ஆகிவிட்டீர்களோ...

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'த ரைம்ஸ்' நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது.

இதுபற்றிய உண்மைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவரின் சிறப்புத் தூதுவராக செயற்பட்ட இந்திய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோருக்கு தெரியும் என்றபோதிலும் அவர்கள் திட்டமிட்டே மூடி மறைத்ததாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சாட்டியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் இத்தகைய போக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விளக்கமளிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், நடுநிலையாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.முகாமில் தந்க வந்தவர்களும் காணாமல் போகப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.. அதாவது உங்களுக்குத் தெரியுமா..? புத்தி ஜீவிகளே..அதி உன்னத மனிதர்களே ..நீங்கள் யாராய் இருக்கட்டும் ..ஒரு சக மனிதன் இறந்து கொண்டிருக்கின்றான்..உங்களை உறுத்தவேயில்லையா?

தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் 20 ஆயிரம் தமிழர்களை சிங்களப் படையினர் கொன்று குவித்தனர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய்விட்டனர்

இந்தியா தான் எல்லாம் சிறிலங்காவிற்கு.ஆயுதம் கொடுப்பது..ஆலோசனை சொல்வது..அப்பாவிகளை அழித்தொழிக்கும் வழிகள் சொல்வது...ஐ.நாடுகளில் பாதுகாத்துக் கொண்டு வருவது...எத்தனை முழு ஆதரவு.. சிங்களம் வைத்திருக்கும் நிலையான தீர்வு...தமிழினத்தை ஒன்றும் விடாது அழிது ஒழிப்பது... கொடுங்கள் ..கொடுத்துக்கொண்டே இருங்கள்...


இலங்கை இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் அறிவித்துள்ளார்.

போரைக் கொண்டு வருவீர்கள்..நரமாமிச வேட்டையாடுவீர்கள் பின்னர் நிதியுதவி ..யாருக்கு வேண்டும் ..உங்கள் நிதி..முதலில் மனிதரை மனிதராக வாழ விடுங்கள்...

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வழங்க தேவையான நிதியுதவியையும் இந்தியா அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த மிலேச்சத்தனத்தையும் அநியாயத்தையும் எதிர்த்து ஒரு குரல் ஒரேயொரு குரல் கேட்காதா? ஏன் ஐயா..நீங்களெல்லாம் மனிதர்களே இல்லையா? குடும்பம் பிள்ளைகள் என்று தானே வாழ்கின்றீர்கள்..? எத்தனை பேரைக் கொன்று போட்டார்கள்..

இத்தனை அவலத்தைப் பார்த்தும் எப்படி உங்கள் பிள்ளைகளைக் கொஞ்ச முடிக்கின்றது..உங்களால் அழவே முடியவில்லையா? இன்னும் அழுது கொண்டிருக்கின்றது ஒரு இனம்... அந்த அழுகை உங்கள் அருகிலேயே.. யாராவது ஏதாவது செய்யுங்களேன்...

2 comments:

Anonymous said...

தேசத்துரோகியே..என் இந்தியா நலமாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா..

முட்டாளே.. இங்கு ஏன் ஓல் ஓல் எண்டு வறட்டு சத்தம் இட்டு ஊளை இடுகிறாய். போ போய். முல்லிவைக்காளில் போராடு. முண்டமே..

இட்டாலி வடை said...

இந்திய நாய் ஒன்றின் ஊளைச்சத்தம் இது..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil