ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


ரப்பர் ஸ்டாம்பு


இரண்டு முறை தேர்தலில் போட்டியிடாமலேயே பிரதமராக முடியுமென்றால் அது உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்த் தான் முடியும். வெறும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க கிடைக்கும் அதி உயர்ந்த சலுகை. ஒரு எம் பியாக இருக்கவே மக்கள் விருப்பம் கோரும் ஒரு இடத்தில் எல்லாம் வல்ல பிரதமராக எந்த அங்கீகாரமும் தேவையில்லை.

அரசியல் யாப்பை எழுதியவர்களைக் கல்லறையிலிருந்து எழுப்பி வந்து கேட்கப் பட வேண்டிய கேள்வி. அத்தனை தூரம் ஜனநாயகத்திற்கு கல்லறை தோண்டி வைத்திருக்கின்றார்கள்.

இதே ரோபோ சிங்கிற்கு கூச்சல் என்றால் அலேர்ஜி. 15 ஆவது மக்களவையில் கூச்சல் அமளி வேண்டாம் என்று கேட்டிருக்கின்றார். எதிர்க்கட்சிகளைப் பேச விடாது கூச்சல் போடும் கோமாளிகள் இதே காங்கிரஸார் என்பதை மறந்து விட்டார். 14 ஆவது மக்களவையில் ஈழப்பிரச்சினையைக் கொண்டு வர முற்பட்ட பா.ம.க மற்றும் ம.தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர்களைப் பேசவே விடாது மத்தளம் போட்டவர்கள் இவர்களே.

அதே போல இடது சாரிகள் ஆதரவை விலத்திக் கொண்டபோது பணம்கொடுத்து எம் பிக்களை வாங்க முற்பட்ட வேடிக்கையை பணக்கட்டுக்களை சபையில் போட்டுக்காட்டி விமர்சனம் செய்த எதிர்க்கட்சிகளின் வாயை அமளியால் மூடியவர்களும் இவர்களே.

இந்திரா என்ற ஆலமரம் விழுந்த அதிர்ச்சியால் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்கு காரணமான பொறுப்பான டைலரை வழக்கில் இருந்து விடுவித்த குற்றத்திற்காக பொற்கோவிலில் செருப்புத் துடைக்கும் வேலையொன்றும் ரோபோ சிங்கிற்கு காத்திருக்கின்றது. ஒப்பரேஷன் புளு ஸ்டாரிற்கு இந்திரா காந்தி காலத்தில் கையெழுத்திட்ட அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கும் அந்தத் தண்டனையில் இருந்து தப்பவில்லை.

"ஒரு இந்தியனாக இருந்து அந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டேன்... ஒரு சீக்கியனாக இப்போது செருப்புத் துடைக்கின்றேன்" என்று ஜெயில் சிங் சொன்ன வார்த்தைகள் உலகப் பிரசித்தம்.

பிந்த்ரன் வாலேயையும் சீக்கியப் போராளிச் சிங்கங்களையும் துடைத்தெறிந்த வரலாறு அது. இந்தியனாக இருக்கவிரும்பும் சீக்கியனுக்கு செருப்புத் துடைத்தலே தரப்படும் வேலையாயிருக்கும் என்பது அப்போதே தீர்மானமாகச் சொல்லப்பட்டது.

அதே போல இந்தியனாக இருக்க விரும்பும் தமிழனுக்கும் மலம் அல்ளல் போன்ற வேலைகளே ஒதுக்கப் பட்டிருக்கும். அதற்கெதிராய்ப் போராடிய பெரியார் போன்றவர்களை மறந்து கருணாநிதி போன்ற சுயநல அரசியல்வாதிகளின் பின் செல்லல் தமிழனுக்கும் மலம் அள்ளல் போன்ற வேலைகளைப் பாதுகாப்பாய் ஒதுக்கி வைத்திருக்கும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil