ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 21, 2009


சிறிலங்காவின் தாலிபானிஸம்


மதத்தை முன் அடையாளமாக வைத்தே இஸ்லாமியர்கள் மேற்குலக அமெரிக்க நாடுகளுடன் மோதுகின்றனர். இப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அடிப்படை வாத இஸ்லாமியர்கள். அமெரிக்க மேற்குலக நாடுகளை எதிர்க்கும் அடையாளமாக தாலிபானிஸம் உருவெடுத்திருக்கின்றது.

இஸ்லாமின் பெயரால் இவ்வகையான போராட்டம் ஒன்றில் நாடு மொழி இன சமூக அமைப்புக்களைக் கடந்து ஒன்று சேருவதில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களிடம் மனத்தடை ஏதுமில்லை. பாலஸ்தீனத்தில் வெடிக்கும் குண்டொன்றிற்கு ஆப்கானிஸ்தானிலிருந்தோ இந்தோனேஷியாவிலிருந்தோ ஆபிரிக்காவின் மாலியிருந்தோ கேட்கும் கண்டன எதிர்ப்புக் குரல் சக நாடு என்பதற்கும் மேலாக சக இஸ்லாமியன் என்ற ரீதியிலேயே ஒலிக்கின்றது. இதுவே அல் கைடா போன்ற தீவிரவாத இயக்கங்களின் செயற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் வரவேற்கவும் வளர்த்துக் கொள்ளவும் தூண்டு கோலாக இருந்தது.

இதே கடுமையான போக்கினை சிறிலங்காவும் இப்போது கையிலெடுத்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் அதனால் உண்டாகும் மனிதாபிமான அனைத்துலக நீதி விசாரணைகளில் இருந்து ஒழிந்து கொள்ளவும் அனைத்துலக பெளத்த நாடுகளின் ஆதரவினை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது.

மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும்.

பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் சிறிலங்காவின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும்
என்று சிங்கள சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ஸே அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் இத்தகைய போக்கானது சர்வதேச நீதி மனிதாபிமான செயற்பாடுகளைப் புறக்கணித்து நாகரீக உலகில் இருந்து ஒதுக்கமான காட்டுமிராண்டிப் பாதையை அது தேர்ந்தெடுக்கின்றது என்பதைத் தான் வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைத்துக்கொள்ளவும் சர்வதேச சமூகத்தால் வலிந்துரைக்கப்படும் முகாம்களில் வாடும் தமிழ்மக்களுக்கான மனிதாபிமான பணிகளில் இருந்து வழுவிக்கொள்ளவும் மத அடிப்படை வாதத்தைக் கையில் எடுக்க முயற்சிக்கின்றது.

பெளத்தம் ஒரே மதம் என்ற தீவிரப்போக்கு இத்தீவில் வாழும் மற்றைய இனங்களுக்கான சமூக நீதியை மறுத்து விடுகின்றது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தை மதிக்காத அரச பயங்கரவாத நாடாக தன்னை வெளிப்படுத்துகின்றது.

சிறிலங்காவின் இத்தகைய "பெளத்த நாடுகள்" என்ற அறை கூவலை ஏற்றுக்கொள்ளக் கூடிய நாடுகள் எவையெனப்பார்த்தால் ஜப்பான்,தென் கொரியா,சீனா,வியற்நாம்...இவற்றுடன் இந்தியாவும் இணைந்து கொள்ளலாம்.

இந்தியா தான் பெளத்தநாடு இல்லையே என்று வாதிடுபவர்களுக்கு இந்தியா எப்போதும் நியாயமான காரணத்தோடுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா ..என்ன? அப்படியே தேவைப்பட்டாலும் பெளத்தம் தோன்றிய நாடு என்று ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக்கொள்ளும்.

இந்தியாவிற்கு இருக்கக் கூடிய வெளிப்படையான காரணமான "தமிழர் அழிப்பு" என்பது தான் உலகறிந்த இரகசியமாயிற்றே.

1 comment:

கண்டும் காணான் said...

உலகத்தையே அழித்து விடுவார்கள் இந்த கிராதகர்கள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil