ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 6, 2009


யுத்தம் புரிந்த இந்தியாவுடன் சமரசம் தேவையா?இலங்கைத் தமிழர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை தமது விடயத்தில் அதன் கபடத்தனமான செயற்போக்குக் குறித்து தீராத கோபத்துடனும் உள்ளத்தில் கனலும் எரிச்சலுடனும், ஆறாத வேதனையுடனும்இருக்கின்றார்கள் என் பதை இப்பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். புலிகளை அழிக்கும் போரை "இந்தியாவின் யுத்தத்தையே நான் முன்னெடுத்தேன் என்பதை இந்தியா நன்கறியும்" என்று இலங்கை ஜனாதிபதியே நேரடியாக வெளிப்படையாக சில தினங்களுக்கு முன்னர் வர்ணித்து உண்மை யைப் போட்டுடைத்திருந்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழர்கள் வலுவற்ற அநாதைகளாக இன்று ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பக்கத்தில் பேரம் பேசும் வலுவான ஆயுத பலத்தைக் கொண்டிருந்த புலிகள் முறியடிக்கப்பட்டு விட்டார்கள். யுத்த களத்தில் இருந்து வெறுங்கையுடன் இலங்கை மீண்ட இராவணேஸ்வரன் மாதிரி, தமிழர்கள் இன்று வெறுங் கையு டன், பெரும்பான்மை இனத்தவரின் அரசுத் தலைமை " பிச்சையாக"தூக்கி எறியக்கூடிய தீர்வை இருகைகளினால் யாசித்துப் பெறும் வக்கற்ற நிலையில் நிற்கின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு ஆட்சியாளர்களின் ஆளும் தரப்பின் கைகள் ஓங்குவதற்குக் காரணமாக பிரதான காரணமாக இருந்தது இந்தியாதான் என்பதே இலங்கைத் தமிழர்களின் எண்ணம்; கருத்து; நிலைப்பாடு. இதன் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இந்திய விரோத கருத்து நிலைப்பாடு மிகத் தீவிரம் பெற்று விஸ்வரூபம் எடுத் திருப் பதையும் ஏற்கனவே இப்பத்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.


இலங்கையில் பிரிவினைவாத யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக இலங்கை அரசுஅறிவித்துள்ள சூழ்நிலையில் பிர பல இராணுவ விமர்சகரும், இலங்கையில் எண்பதுகளின் கடைசியில் செயற்பட்ட இந்திய அமைதிப்படையின் புலனாய் வுப் பொறுப்பதிகாரியாகப் பணி புரிந்தவரும், ஓய்வு பெற்ற இராணுவக் கேணலுமான ஆர்.ஹரிகரன் தமது கட்டுரை ஒன் றில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஒன்று இலங்கைச் சமுதாயம் முன்னர் எப்போதும் இல்லாதவாறு "சிங்களவர்", "தமிழர்"என்று மிக மோசமாகப் பிளவுபட்டு நிற்கின்றது என்பதே அடிப்படை உண்மை யாகும். தமிழர்களின் கருத்து நிலைப்பாட்டில் இத்தகைய சிங்களவர் தமிழர் என்ற பிளவு நிலை சுமார் ஐம்பது வருடகாலமாக யதார்த்தமாக நீடித்து, வாழ்வின் உண்மையாகியிருக்கின்றது. இந்த அவநம்பிக்கையையும், தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தமிழரின் அச்சஉணர்வையும் ஒரேநாளில் மந்திரத்தின் மூலம் நீக்கிவிட முடியாது. நாடா ளுமன்றத்தில் ஆற்றப்படும் உரைகளோ, சர்வதேசமன்றங் களின் மேடைகளில் வழங்கப்படும் உறுதி மொழிகளோ தமிழரை ஆற்றுப்படுத்தி விடா. சொற்களில் வழங்கப் படும் உறுதிமொழிகள் செயல்களில் யதர்த்தமானால் மட்டுமேதமிழர்களுக்கு நம்பிக்கையும், பிடிப்பும், நல்லிணக்கத்துக்கான சமரசப் போக்கும் ஏற்படும்.
அடுத்தது சட்டத்துக்கு மேலதிகமான அதிகார மையமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் னணியில், இப்பிரச்சினையில் வெளிநாட்டு சக்திகளின் ஈடுபாடும், பங்களிப்பும் அளவுக்கு மீறி அதிகரித்துள்ளன. சர்வதேசவலைப்பின்னலின் பின்புலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது போல "உள்நாட்டுக்குள் உருவாக்கப்பட்ட தீர்வு"என்பதிலும் பார்க்க "சர்வதேசபங்களிப்புடனான தீர்வு"என்பதே சாத்தியமானதாகும்."
இந்தச் சாரப்பட கேணல் ஹரிகரன் குறிப்பிட்டிருக் கும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.
அதுவும் இந்தியாவின் புதிய மத்திய அரசுபதவியேற் றுள்ள சூழ்நிலையில், அந்த அரசின் கொள்கை விளக்கப் பிரகடனத்தை இந்திய நாடாளுமன்றில் வெளியிட்டு உரை யாற்றிய இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுடில்லி அரசின் நிலைப்பாடு குறித்து வெளியிட்டிருக்கும் கருத்தை இந்தப் பின்னணி யில் பொருத்திப் பார்ப்பது பொருத்தமானது.
"தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் யாவும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள சிறு பான்மைத் தமிழ் மக்ளின் சம உரிமைகளை உறுதி செய் யும் முகமாக, நிலையான அரசியல் தீர்வைக் காணும் நோக் கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதற்கு உதவ இந்தியா தயார் "என்ற சாரப்பட புதிய இந்திய அரசின் கொள்கை அறிவிப்பில் கூறப்பட்டிருக்கின்றது.
இவ்விடயத்தில் இந்திய அரசுத் தலைமை ஒரு முக்கிய அம்சத்தைக் கவனிக்கவேண்டும். கேணல் ஹரிகரன் சுட் டிக்காட்டுவது போல பயனுள்ள தீர்வுத் திட்டம் வேண்டு மானால் உறுதிமொழிகள் சொல்லில் மட்டும் அல்லாமல் செயலிலும் நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே, "நிலை யான அரசியல் தீர்வுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படு மானால் அதற்கு உதவ இந்தியா தயார்"என்ற ரீதியிலான வாய்ப்பந்தல் அறிவிப்புகள் இங்கு பயன் தரப்போவதில்லை. "நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான தீர்க்கமான முயற்சிகள் தவறாது, விரைந்து, கட்டாயம் முன் னெடுக் கப்பட வேண்டும். அதற்கு இந்தியா உதவுவதற்குத் தயாரா கக் காத்திருக்கின்றது"என்ற சாரப்படத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும், உறுதியாகவும், தீர்க்கமாகவும் இந்தியா அறிவித்து நடவடிக்கைகளை எடுக்க முன் வரவேண்டும்.


இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "உதயன்" தினசரியின் ஆசிரிய தலையங்கம். இன்று ஈழத்தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பு யுத்தத்தை நடாத்தி முடித்தது இந்தியாவே என்பதை சிங்களச் சிறிலங்காவின் ஜனாதிபதியே வெளிப்படுத்தி நன்றியும் கூறியிருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க அதே இந்தியாவிடம் இன்னும் இரந்து நிற்கும் அவலமான மனநிலையில் ஈழத்தமிழினம் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இங்கு இருக்கின்றது. எம்மினத்தை எதிரியாக வரித்துக் கொண்ட இந்தியா என்னவிதமான நல்வாழ்க்கையை எங்களுக்குத் தரக்கூடும். அவ்வாறாக இரந்து உண்ணல் உண்மையிலேயே சுதந்திரத்திற்கும் கெளரவத்திற்குமாக போராடி நின்ற ஒரு இனத்திற்கு ஏற்றது தானா? இத்தனை இலட்சக்கணக்கான உயிரிழப்புகளும் இவ்வாறு ஒரு பிச்சை எடுப்பதற்காகவா எம்மால் இழக்கப்பட்டது. அவ்வாறு ஒரு இழி வாழ்க்கை வேண்டுவதாயின் அதைச் சிங்களவன் காலில் விழுந்தே செய்திருக்கலாமே..? இத்தனை உயிர்களாவது மிஞ்சியிருக்குமே..?

உலகப்பந்து இப்போது மிகவும் சுருங்கியிருக்கின்றது. இந்தியாவை விட அதிகளவில் எம்மோடு நெருங்கி வரக்கூடிய வல்லரசுகள் எங்கள் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமிக்ஞைகளை விடுக்கின்றனர். நாம் ஏன் அவர்களின் நேசக் கரத்தை இறுக்கிப் பிடிக்கக் கூடாது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கை விவகாரம் இந்தியாவின் கைகளை மீறிச்சென்று விட்டது என்பதை கண்களைத் "திறந்து" நாம் பார்க்க வேண்டும்.

ஈழத்தமிழ் அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் அரசியலாளர்களும் இதை இன்னுமொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்காக மிகவும் இரங்கிய நிலையில் பிரித்தானியா போராடிக் கொண்டிருக்கின்றது. அதன் வெளிநாட்டமைச்சர் மில்லி பாண்ட்டிற்கு நாம் உண்மையிலேயே நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஐ.நாடுகள் சபையில் சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கெதிராக தீர்மானம் கொண்டுவர முயலும் பிரித்தானியா எங்கே? அதை எதிர்த்து சிறிலங்காவைக் காப்பாற்ற முயலும் இந்தியா எங்கே? இதே இந்தியாவிடம் இரந்து கொண்டிருப்பது முட்டாள் தனமாக தெரியவில்ல..?

4 comments:

Anonymous said...

சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கெதிராக தீர்மானம் கொண்டுவர முயலும் பிரித்தானியா எங்கே//

பிரிட்டன் இலங்கைக்கு ஆயுதம் விற்றது வெளியாகி இப்போதுதானே சந்தி சிரித்தது!!!

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி !
உலகத்தில் ஆயுதம் விற்காத நாடு எது சொல்லுங்கள்... இந்தியா விற்கவில்லையா?

இன்னும் இன்னும் கொடுமைக்குப் பகிரங்கமாகவே துணை போகும் இந்தியா...போற்றத்தக்க நாடுதான்...

யாரோ - ? said...

உண்மையிலேயே இந்தியாதான் நமது முதல் எதிரி இதை எப்போதுதான் நம்மவர் அறிவாறோ தெரியாது. சம்பந்தன் போன்ற அரசியல்வாதிகள் காமெடி கருணாநிதியின் காலில் விழுவது ரொம்ப ரொம்ப வேஸ்ட்

இட்டாலி வடை said...

வாருங்கள் யாரோ!
அறிந்து உணர்ந்து உள்வாங்கத் தொடங்கி விட்டார்கள்..இனியெல்லாம் சுபமே..நமக்கு..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil