ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 13, 2009


"குமுத"த்தின் போக்கிரித்தனம்


"இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது'' இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.

"வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள்" என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்கமுடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் - சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.

பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை.தன்னாட்டு (இந்தியா)ஆதரவுடன் குரூரமாக நடந்தேறிய தமிழர் படுகொலையை "பன்னாட்டு" என்ற முகமூடியைப்போட்டு இந்தியாவைக் காப்பாற்ற வெளிக்கிட்ட குமுதத்தின் நயவஞ்சகத்தைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் படுகொலையில் இந்திய ஆயுதங்களும் இராணுவமும் இந்தியஅரசும் அதன் நரித்தந்திரங்களும் எவ்வகையில் செயல்பட்டிருக்கின்றது என்பதை உலகமே அறிந்து கொண்டிருக்கின்றது. ராஜபக்ஷே சகோதரர்கள் மீது கொண்டு வரப்படும் பகிரங்க விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். அதில் இந்தியாவின்"கை" எத்தனை தூரம் இப்படுகொலைகளை முன் நின்று நடாத்தியது என்பதை அறிந்து கொள்ளலாம். இதனை வெளி வராது தடுக்கவே என்ன விலையை என்றாலும் கொடுத்து சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் உலக நாடுகளே சிறிலங்காவின் மனிதப்படுகொலைகளைப் பகிரங்கமாகக் கண்டிக்கும்போது இந்தியாவிற்கு ஏன் இந்த அக்கறை என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

இந்தியாவின் பங்களிப்பில் காங்கிரஷின் சோனியா முதற்கொண்டு "பசி" தம்பரம், சிவசங்கர மேனன், நாராயணன் வகையறாக்களின் நேரடிப் பங்களிப்பு பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும். அது இந்தியா இதுவரை உலக அரங்கில் உருவாக்கி வைத்திருக்கும் நற்பெயரை மண்ணோடு மண்ணாக்கி வைத்திருக்கும். இந்தியாவின் குணாம்சத்திற்குப் பொருந்திவராத போக்கிரித் தலைவர்களைக் கொண்டிருக்கும் இக்காலகட்டம் இந்தியாவிற்கு மிகவும் துரதிர்ஷ்டமானதே.

காங்கிரஷின் துர் நடத்தைகள் அனைத்திற்கும் தலையை ஆட்டி தன் பணப்பையை மட்டும் தமிழர்களின் இரத்தம் நனைந்த பணத்தினால் நிறைத்துக்கொண்ட கருப்புக்கண்ணாடி கழட்டாத கருணாநிதியையும் அதன் ஆட்சியையும் காப்பாற்ற நினைக்கும் "குமுதம்" பத்திரிகாதர்மத்தைக் குழி தோண்டிப்புதைத்துள்ளது.

முடிந்தால் நேரடியாகவே கேட்டுப்பார்க்கலாமே.." கருணாநிதியே ...இத்தனை இலட்சம் ஈழத்தமிழர்களும் கொலைசெய்யப்படும் போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ..? "என்று.

9 comments:

இட்டாலி வடை said...

மைக் மாமா
to me

show details 11:46 AM (24 minutes ago)


Reply

Follow up message
மைக் மாமா has left a new comment on your post ""குமுத"த்தின் போக்கிரித்தனம்":

டேய் தட்டு கழுவ டாய்லட் கழுவ வேலை ரெடியா இருக்குலே சீக்கிரம் போய் அந்த வேலை எல்லாம் பாருலே.


- ஒரு காட்டு மிராண்டியின் காமண்ட்... நாங்கள் தட்டித்தான் கழுவுகின்றோம்... உங்களைப் போல மர்றவன் பின்பக்கம் கழுவவில்லியே... ஆண்மயற்ற அலியாடா நீ...

மணிப்பக்கம் said...

இட்லியும் வடையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த மாதிரி சூடான இட்லி வடை என்றால் மிகவும் விருப்பம், அடிக்கடி இங்கு இளைப்பாரலாம் என்றிருக்கிறேன் ! ;)

இட்டாலி வடை said...

ஆண்மையற்ற அலி மைக் மாமா!

எனக்கு தட்டு கழுவுவதுடன் இந்த வேலையும் இருக்கின்றது..

உனக்கு பிறரின் பின்பக்கம் கழுவுவதுடன் ...வேறு என்ன வேலை இருக்கின்றது... பிறந்ததனால் தின்று ..கழிந்து போவதைத் தவிர...


உங்களில் யார் எங்களுக்கு உணவு தருவீர்கள்? தண்ணீர் தருவீர்கள்? ஆசை வார்த்தை பேசுவீர்கள்? இப்படிப் பார்வையால் கேட்பது மூன்று லட்சம் மக்கள்!

‘அன்புள்ள, அப்பா, தங்கை அறிவது. இங்கு யாவரும் நலமே. உங்கள் சுகம் எப்படி? அம்மாவை வவுனியா வைத்தியசாலைக்குப் போய்ப் பார்த்தீர்களா? இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கு? சாப்பாடு லைனில் நின்று வாங்க வேண்டும். சிலவேளை முடிந்துவிடும். முடிந்தால் கிடைக்காது. திருப்பித் தர மாட்டார்கள். பிள்ளைக்கு மா பெட்டி இல்லை.

குழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை. விளக்கு எடுக்க எந்த எண்ணெயும் இல்லை. ஏன்டா வந்தோம் என்றிருக்கு. அங்கு செல்லடி என்றாலும் சமைச்சுச் சாப்பிட்டம். இங்கு சாப்பாடு இல்லாமல் சாகப் போறோம்…” என்று துயரம் கலந்த வார்த்தைகளால் தொடர்கிறது அந்த இளைஞனின் கடிதம். இது ஒருவனின் கடிதம் அல்ல. ஓர் இனத்தின் கடிதம்.

துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி மூவரும் சகோதரிகள். ”எங்கள் அப்பா பெயர் யோகேஸ்வரன். அம்மா பெயர் சாந்தி. அவர்களைக் காணவில்லை. நாங்கள் தங்கியிருந்த பங்கரில் குண்டு விழுந்ததும், எல்லாரையும் மாதிரி நாங்களும் ஓடினோம். என் அம்மா, அப்பாவுக்குக் காயம். அவங்களை யாரோ தூக்கிக்கொண்டு போனார்கள். அப்புறம் வரவே இல்லை. அவர்கள் எங்காவது மருத்துவமனையில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்கவும் விட மறுக்கிறார்கள். நீங்களாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கதறுகிறார்கள் மூன்று பேரும்.

ரட்சணம் ராசையா கதை இன்னும் சோகமானது. ”தலைக்கு மேலே குண்டு விழுந்து ஓடி வந்தோம். என் கையில் இருந்த இரண்டு வயது குழந்தைக்குக் காயம் ஆனது. ராணுவ வீரர் ஒருவர் அதை வாங்கிக்கொண்டு என்னைத் துரத்திவிட்டார். என் குழந்தை என்னவானதோ? மருத்துவமனையில் போய்ப் பார்க்க அனுமதி கேட்கிறேன்.

தரவில்லை” என்கிறார் ராசையா. சொந்தங்களைப் பார்க்க யாராவது தைரியமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வந்தால், அவர்களை மட்டும் வேலிக்கு வெளியே நின்று பார்க்க அனுமதிக்கிறது ராணுவம். மற்றபடி, தொண்டு நிறுவனங்களைக்கூடத் துண்டித்துவிட்டார்கள். இது உலகக் கொடுமை.
உச்சந்தலையில் குண்டு விழும்போதும், நெஞ்சுக்கு நேராக அலுமினிய ரவை பாயும்போதும் செஞ்சிலுவைச் சங்கத்துத் தொண்டர்கள் மட்டும் மறுக்கப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

எல்லாப் போர்களிலும் இந்த நியாயம் மட்டும் நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பாசிஸ்ட், நாசிஸ்ட்டுகள்கூட இதற்குத் தடை போட்டதில்லை. ஆனால், சிங்களிஸ்ட் அதனினும் கொடூரமானது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மொத்தத்தையும் நாட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டது.

RamKumar said...

சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் ஆதரவு சிறீலங்கா அரசிற்கு இருந்தது பிறகு எப்படி தன்னாடு என்று மட்டும் எப்படி போட முடியும் பன்னாடு என்றுதான் போடமுடியும‌

இட்டாலி வடை said...

வாருங்கள் ராம் குமார்!

முதலில் "உன்னாடு" செய்த மனிதப்படு கொலைகள் பற்றியாவது ஏதாவது புரிந்து வைத்திருக்கின்றீர்களா?

"உன்னைப் போல அயலவனை நேசி" அதற்கு உன்னைப் பற்றியாவது முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

பேனாவை எடுக்க முதல் ... உன் இடம் எதுவென்று அறிந்திருக்க வேண்டும்... இந்த மனிதப் படுகொலைகளுக்கு இந்தியா தான் முதலும் முடிவுமான பொறுப்பாளிகள்... இல்லையென்றால் நிரூபியுங்கள்....

தமிழன் said...

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?
சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”


http://maanamumarivum.blogspot.com/

இட்டாலி வடை said...

வாருங்கள் தமிழன் !
பதிவிற்குத்தான் கருத்தொழிய கண்ட கருமாந்திரங்களையும் பதிவேற்ற அல்ல...

Anonymous said...

//விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.//

அமிர்தலிங்கத்தின் மனைவியிடம் சோறு வாங்கித் தின்றுவிட்டு கழுவிய கை காய்வதற்குள் அமிர்தலிங்கத்தை கொன்ற படுபாவிகளுக்கு நல்ல சாவா வரும்? இப்படி செத்த அப்பாவி தமிழர்கள் எத்தனை எத்தனை?

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil