ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 20, 2009


பால்குடிப்பிள்ளையா இந்த கனி மொழி.


கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு....


இலங்கைத்தமிழர்களின் பாடுகளுக்கும் உத்தரிப்பிற்கும் அவர் தந்தையின் குள்ளநரித்தனமும் கயமையுமே காரணம் என்பதை அறியாத பால்குடிப்பிள்ளையா இந்த கனி மொழி.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு ஒற்றை நூற்றாண்டுக்கு 14 வருடம் குறைவாக வாழ்ந்து ... வாழ்வதற்காக பாவங்களின் சுமைகளைக்கட்டிக்கொண்டிருக்கும் அப்பாவின் பாவக்கதிர்களை அறுவடை செய்ய வேண்டுமென்பதையும் அறியாத அப்பாவியா இந்தக் கனி மொழி..

போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை.

போர் எங்கே ஓய்ந்தது?...ஓரினம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ..குற்றுயிராகக் கிடக்கின்றதேயொழிய ஓய்ந்து போகவில்லை.. குதறியெறியப்பட்டிருக்கின்றதே ஓழிய அழிந்து போகவில்லை...

கஷ்டங்களிற்கு விடிவு வரும்...அப்போது பலருக்கு அது ...படிப்பினையாகவிருக்கும்...உலகத்தில் வரலாறு திருத்தி திருப்பி எழுதப்படுகின்றது எப்போதும்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil