ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 7, 2009


இந்தியாவின் நரித்தனத்துடன் எமது வெற்றி - கோத்தபாயவெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் சிங்களம் தமிழருக்கு எதிரான போரின் இந்திய நரித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அதை சிறிலங்காவின் சர்வவல்லமை மிக்க பாதுகாப்புச்செயலாளராக இருந்து இத்தனை அராஜகங்களுக்கும் முதன்மைக்காரணனாக இருந்த கோத்தபாயவே தன் வாயால் சொல்லியிருக்கின்றான்.

"எங்களுடைய சீன பாகிஸ்தானிய உறவுகளால் இயல்பாக இந்தியாவிற்கு வரக்கூடிய சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் தவிர்க்குமுகமாக இந்தியாவின் வற்புறுத்துதலின் பேரில் அதிகாரிகள் மட்டத்தில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கும் ஒரு செயற்படுத்தும் குழுவை அமைத்தோம். இந்தியாவின் சார்பில் வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் பாதுகாப்பு செயலாளர் வியஜ் சிங் ஆகியோரும் இலங்கை சார்பில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும்நான். நாம் நெருங்கிய தொடர்புகளை யுத்தகாலம் முழுவதும் பேணி வந்தோம்.
மலையாளக் குள்ள நரிகள்

யுத்தத்தின் முன்னேற்றம் பற்றிய முழு விபரங்களையும் முதல் நாளிலிருந்தே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். தமிழ் நாட்டில் இருந்து எழுந்த அழுத்தத்தினால் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல விடயங்களை விட்டுக்கொடுப்புடன் நாம் செய்தோம்.

யுத்தகாலம் முழுவதும் இந்தியாவுடன் மேலான நட்பினைப் பேணிவந்தோம். எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டாலும் எந்த நிலமையிலும் அது எங்களைக் காக்கும் என்று அறிந்து வைத்திருந்தோம். அதே போல இந்தியா பல சந்தர்ப்பங்களில் முன்னின்று எங்களைக் காத்தது.

அதிகளவு மக்கள் சேதத்தைத் தவிர்க்க கனரக ஆயுதங்களைப் பாவிப்பது இல்லை என்ற முடிவை அவர்கள் பாராட்டினார்கள். அதை அவர்கள் தங்கள் தேர்தல் நலன்களுக்கும் பாவித்துக் கொண்டார்கள்.

கடைசி நிலைகளில் எமது படைத்தரப்பு பல வெற்றிகளைக்குவிக்கத் தொடங்கினர். அந்த வெற்றியின் பலன்களை வேறு படைகள் எங்களிடம் இருந்து திருடுவதை அனுமதிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் நான் கடுமையாயிருந்தேன். அதனாலேயே நான் அவர்களுடன் கடுமையுடன் நடந்துகொண்டேன். புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தத்தையும் நான் ஒதுக்கித் தள்ளினேன்.

நான் யாருக்காகவும் எதற்காகவும் என் முடிவை மாற்றுவதில்லை என்பதில் திடமாக இருந்தேன். ஜனாதிபதியின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. என்ன செய்ய வேண்டுமென்பதில் நாம் திடமாக இருந்தோம்." என்று கோத்தபாய அண்மையில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கின்றான்.

இந்த வாக்கு மூலத்தின் மூலம் ஈழத்தமிழருக்காக இந்தியா எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு துரும்பைத் தன்னிலும் நகர்த்தவில்லை என்பதும் மேற்கு நாடுகளில் இருந்து எழுந்த அழுத்தங்களில்லிருந்தும் சிங்களச் சிறிலங்காவைப் பாதுகாத்து ஊக்குவித்ததும் இந்தியாவே என்பது அப்பட்டமாகியிருக்கின்றது.

கடைசி நிலைகளில் புலித்தலைமையின் சரணடைவை ஊக்குவித்து நம்ப வைத்துக் கழுத்தறுத்ததில் இருக்கும் இந்தியாவின் பங்கு பற்றியும் இங்கு சந்தேகம் எழுகின்றது. ஐக்கிய நாடுகள் முதல் மேற்கு நாடுகள் வரை எழுப்பிய மக்களின் அதீத இழப்புகள் பற்றிய அச்சங்களையும் புறம்தள்ளி பாரிய மனிதப்படுகொலை நடந்தேறுவதற்கு உறுதுணையாக இருந்த இந்தியாதான் அகிம்சை தேசமாம். வெட்கக்கேடு...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil