ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Tuesday, June 2, 2009
இராயா என்ற இலக்கில்லாத விட்டில் பூச்சி
மிகவும் துக்கமாயிருக்கின்றது. இறந்து போன அத்தனை தமிழரும் இன்னுமொரு முறை இறந்து போயினர். முட்கம்பியிடை முகம் மறைத்தோர் முகம் பொத்தி அழுதனர். ஏதாவது ஒரு வெளிச்சக் கீற்றைத் தேடியோர் கைவிளக்கையும் தொலைத்தனர்.
இன்று புலத்தின் அற்பத் தமிழரிடை நடக்கும் கூத்துகள் சொல்லி மாளாது. ஈழத்தமிழனின் அத்தனை துயரத்திற்கும் புலிப்பாசிசத்தை ஈடு வைத்தோர் அதை ஆழக்குழி தோண்டிப் புதைத்தனர். இன்று பிழைக்க வழியில்லாத மண்ணுண்ணிப் பாம்புகளைப் போல் கால்களுக்கிடையில் குறுகுறுக்கின்றனர்.
இத்தனை துயரத்திலும் ஒரு தெளிவு கொண்டு கைகோர்ப்பர் என்ற சிறு துளிர்ப்பையும் கருக்கி ஒழித்தனர். புலிப்பாசிசத்திற்கு மறு பெயர் சூட்டி புலத்துப் புலிப் பினாமிகளாகி சாசுவதம் கண்டனர்.
தமிழனாய் நினைத்த நீங்கள் மனுசராயும் இல்லை என்று மறுபடி நிரூபித்தீர். உங்களுக்கு வேண்டுவது தான் என்ன? ஒரு பதவி...ஒரு அதிகாரம்.. அதைச் சுமக்கும் ஒரு கழுதை.
அதற்கேன் இத்தனை பசப்புகளிலும் தோய்த்த வார்த்தைகள்.
சரி ஒரு தமிழ்ப்பெண் ..சரி நீங்கள் சொல்வதைப் போல புலிப்பெண் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் எம்பியாய் வந்து விட்டால் என்ன? உலகம் உடைந்து சிதறி விடப்போகின்றதா? இல்லை உங்கள் உழைப்பாளர்கள் தான் உபத்திரவக்குழியுள் புதைந்து இல்லாது போகப்போகின்றனரா?
இவற்றிலிருந்தெல்லாம் தெரிவது என்னவென்றால் ..மக்கள் எக்கேடு கெட்டாலும் நம் மனப்புண்ணைச் சொரிந்து சொரிந்து சுகம் காணுவதே எமக்கு வேண்டியது.. எம் தமிழ் மக்களை இந்தியன் காலில் போட்டு மிதிக்கலாம் ..கவலையில்லை , சிங்களவன் சின்னாபின்னமாக்கலாம் ..துக்கமில்லை... ஆனால் ஒரு தமிழன் தப்பித் தவறியும் பிரதிநிதித்துவப் படுத்த வர முடியாது.
எத்தனையோ.. காண்டாமிருகங்கள் இடறிக்கொண்டு ஓடலாம் கழுதைகள் உதைத்துக் கொண்டு ஓடலாம்... ஒரு சுண்டெலி மட்டும் தமிழ்ப்பெயரைச் சொல்லிக் கொண்டு ஓட முடியாது...அப்படியோடினால் ..அது இந்த மூஞ்சூறிற்குப் பிடிக்காது. சுண்டெலி கொண்டுபோற சொட்டுத் தேங்காயில் தான் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் உயிரும் தேங்கி நிற்கின்றது. போங்கடா நீங்களும் உங்கள் தோழமையும்.
ஒரு பாண்டிச்சேரி தமிழன் கேட்கின்றானே..அவன் உங்கள் உழைப்பாளர்களின் பருப்புகளைக் களவெடுக்கவில்லையா? பல் வேறு மொழி பேசுபவன் எல்லாம் போட்டியிடுகின்றானே..அவர்கள் எல்லாம் தொழிலாளத் தொங்கட்டானா போட்டுக்கொண்டு போட்டியிடுகின்றான்.
அவர்களைப் பற்றி ஏதாவது சொல்லப் போனால் கழுவாத பின்பக்கத்தை உங்கள் மூஞ்சியில் தேய்த்து விடுவான். சொல்லவே மாட்டீர்கள். ஏன்? அவ்வளவு தான் உங்கள் வீரம். ஈழத்தமிழன் ஒருவன் முன்னால் வந்து விட்டால் போதும் உங்கள் நச்சுக் கொடுக்குடன் குட்டிக்கதைகள் பேசி கும்மாளம் குத்திக் கொண்டு வந்து விடுவீர்கள்.
தமிழன் ஒருவன் வென்றால், தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பான் ..இதிலென்ன முட்டாள்த் தனம் இருக்கின்றது. ஒரு பஸ் ஸ்ராண்டிலேயே பலரும் நிற்க ஒரு தமிழனைக்கண்டால் பக்கத்தில் போய் நிற்கின்ற பொதுப் புத்தி. தமிழனாய் எனக்கிருக்கின்ற பிரச்சினை தவிப்பு ஏக்கம் அவனுக்கும் இருக்கப் போக அவன் ஏன் குரல் கொடுக்க மாட்டான். ஏதாவது என் இனத்திற்குச் செய்ய முடியாதா ? என்ற ஏக்கம் உனக்கு மட்டுந்தான் சொந்தமா? ஏன் மற்றவருக்கு இருக்கக் கூடாதா?
//புலிகள் தமிழ் மக்களை நம்பியது என்றும் கிடையாது. ஏகாதிபத்திய அரச தலைவர்களையும்;, அவர்களின் ஏஜண்டுகளையும் நம்பியவர்கள். அவர்களிடம் வேண்டுகோள் என்று புலத்து போராட்டத்தையே, ஏகாதிபத்திய நலனுடன் என்றும் இணைத்தவர்கள்.
இதனால் இந்த ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான மக்கள், புலத்து புலிகள் நடத்தி போராட்டங்களில் கலந்துகொள்ள முன்வரவேயில்லை. //
ஆமாம் ..அவர்கள் சிங்கள மக்களை நம்பி சிங்கள மக்களுக்காகப் போராடினார்கள்.. அதனால் சிங்கள இராணுவம் அவர்களைக் கொன்று போட்டது... லாஜிக் இல்லாத நகைச்சுவைகள் கருத்தாக்கம் ஆகாது.
//ஏகாதிபத்திய அரச தலைவர்களையும்;, அவர்களின் ஏஜண்டுகளையும் நம்பியவர்கள். அவர்களிடம் வேண்டுகோள் என்று புலத்து போராட்டத்தையே, ஏகாதிபத்திய நலனுடன் என்றும் இணைத்தவர்கள்.//
அதனால் தான் எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் ஓடோடி வந்து புலிகளையும் அதன் தலைவரையும் பாதுகாத்து அழைத்து வந்து செயின் நதிக்கரையில் இராயாகரன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருத்தியிருக்கின்றார்கள்.
முட்டாள்தனமாகப் பேசுவதில் நீங்கள் பெருமைப்படலாம். ஆனால் எங்களுக்கு வருத்தமாயிருக்கின்றது. இனத்திற்கு எதிரானவனாய் ஒளிவுமறைவின்றி காட்டிக் கொடுப்பவனை விட மக்கள் மக்கள் என்று தந்திரம் செய்யும் உங்களைப் போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
//ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்,// இவ்வளவு சிதம்பல்கள் செய்யும் இவர் குடியிருப்பதும் ஒரு ஏகாதிபத்திய பிரான்ஸில் தான்.
அதெப்படி ..நீங்கள் சொல்வது ஒன்றையும் நீங்களே நம்புவதில்லையா? இந்த ஏகாதிபத்தியா நாட்டில் இருந்து கொண்டுதானே வாய்க் கொழுப்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றீர்க்கள். இதுவே ஒரு ரஷ்யாவோ சீனாவாகவோ இருந்திருந்தால் அம்மாவுக்குக் கூட ஒரு கடிதம் ஒழுங்காக எழுதிப் போய்ச்சேர்ந்திருக்காது.
//சும்மா தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டு, தமிழ்மக்களை ஏமாற்றி இதைச் செய்யத்தான் தமிழ் அடையாள தேர்தல் கூத்து உதவுகின்றது. தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை எதுவும் கிடைக்கப் போவதில்லை, தீமைகள் தான் கிடைக்கும். புலிப் போராட்டம் போல்தான், இதுவும் தமிழ் மக்களுக்கு எதிரானது. இவர்கள் மேலும் மேலும் ஒரு இனத்தின் அழிவுக்கு வித்திடுவதைத் தவிர, இவர்கள் எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக பெற்றுத் தரப்போவதில்லை.//
இப்படிச் சொல்லும் இவர் தூக்கிப் போடும் துரும்பெல்லாம் இந்த துருப்பிடித்த எழுத்துத்தான்..
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அப்ப அடுத்த கட்டுரை உங்களைப் பற்றி இல்லைனா, இங்க வந்து பின்னூட்டற எங்களைப் பற்றியா???
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ
நினைச்சாலே கலவரமா இருக்கு....
'புலிபாசிசம்' இல்லாவிட்டால் இவர் எவ்வாறு பிரான்ச் வந்து அகதி கோரிக்கை கேட்ட்கமுடியும்?? என்ன பழைய பிரெஞ்சு சனாதிபதி இவரை போன்போடா அழைத்தார்?? அரசன் ஆண்டாலென்ன ஆண்டி ஆண்டாலென்ன கூத்தாடி பிழைப்பவன் எப்போதும் கூத்தாடிக்கொண்டே இருப்பான்.... அடுத்த தேர்தலில் அவற்றை கூட்டத்தோட சேர்ந்து எங்கையாவது 'இராசாவை' நிக்க சொல்லுங்க...எந்தா நாயாவது ஒட்டு போடுதா பாப்பம்..
வாருங்கள் பதி!
இது உங்களைப்பர்றியோ என்னைப் பற்றியோ அல்ல.. தமிழன் எழுந்து நிற்பதைத் தடுக்கின்ற சில எரிச்சல்களைப் பற்றி... தமிழ்த் தேசியம் தோற்றுப் போவதை விரும்பாத எத்தனையோ பேரின் ஆதங்கம் இது..
மாற்றுக் கருத்துகள் , ஜனாயாகத்திற்கு அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் கிடையாது. ஆனால் அவை ஏமாற்றுக் கருத்துகளாகவோ அல்லது தம்மை தனித்து அடையாளம் காட்ட உதிர்பனவாகவோ இருக்க கூடாது. ஆனால் தமிழ் அரங்குகாரரை விட சத்திய கடுதாசிக்காரர் அதிக சுத்து மாத்துக்காரர்
(ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்? http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post.html
போராடத்துக்கு தென்னாபிரிக்க மைதனங்களை வாடகைக்கு பிடிக்கப் போறாராம். பாசிசம், பூர்ஷ்வா, பொலிச், கம்யூனிசம், சோசலிசம்,. புட்டு, வடை , இட்டலி, நீத்துப் பெட்டி, பனக்கட்டி ..... இன்னமும் நிறைய இருக்கு இரயாகரனிடம் படிக்க.
இந்த நாதாரி புலியால் தனது உயிருக்கு ஆபத்து ஆபத்து என்றது இபோது ஏன் இலங்கை திரும்ப மறுக்கிறது.
நண்பர் இட்டாலி வடை,
//இது உங்களைப்பர்றியோ என்னைப் பற்றியோ அல்ல.. தமிழன் எழுந்து நிற்பதைத் தடுக்கின்ற சில எரிச்சல்களைப் பற்றி... தமிழ்த் தேசியம் தோற்றுப் போவதை விரும்பாத எத்தனையோ பேரின் ஆதங்கம் இது..//
நீங்கள் நான் முதலில் போட்ட பின்னூட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை.. அல்லது நான் விளக்கமாக சொல்லவில்லை என எண்ணுகின்றேன்...
//அப்ப அடுத்த கட்டுரை உங்களைப் பற்றி இல்லைனா, இங்க வந்து பின்னூட்டற எங்களைப் பற்றியா???//
என குறிப்பிட்டது இந்த பதிவுப் பக்கத்தில் அல்ல.. தமிழரங்கத்தில் !!!!!
;)
மற்றபடி உங்களுடைய இந்த பதிவினை நான் ஒப்புக்கொள்ள போவதில்லை.. ஏனெனில் இது போன்ற பல "பாசிச எதிர்ப்புகளை" சந்தித்து தமிழ் மக்களின் நலனுக்காய் "இணைய புரட்சி" செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் !!!!
இந்த பதிவினால் அவர்கள் போக்கில் ஏதேனும் மாற்றம் நிகழும் என எதிர்பார்த்தால் அது அதிக பட்சம் ஒரு கட்டுரையாக வேண்டுமானல் இருக்கும்...
Post a Comment