ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, June 8, 2009
காட்டு மனிதர்களின் நாட்டு தர்பார்
இவர்கள் தான் "கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு" காப்பவர்கள். உடன் பருப்புகள்... 21 ஆம் நூற்றாண்டின் காட்டுமிராண்டிகள் நாங்கள் தான் என்று டில்லி போய்ப் பறைசாற்றுபவர்கள்.
திமுக - அதிமுக கடும் மோதல்
திமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்று அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியதை அடுத்து மாநிலங்களவையில் திங்கள்கிழமை திமுக - அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசினார். அப்போது அவர் திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.
திமுகவில் ஊழல் கறை படித்த 2 பேரை அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் மன்மோகன் சிங் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. அதுபோன்ற ஊழல் கறை படித்தவர்களை அவர் அமைச்சரவையில் தற்போது சேர்ந்துள்ளார். தமிழகத்திலிருந்து அமைச்சர்களாகி உள்ள சிலரால் உங்கள் அரசுக்கு நற்பெயர் கிடைக்காது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மைத்ரேயன் கூறினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங் அவையில் இருந்து, இந்த விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.
கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் இங்கு நடந்துள்ளது. ஆம் கடவுள் சென்னையில் உள்ளார் என்று கூறினார். முதல்வர் கருணாநிதி மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் உள்ள 9 அமைச்சர்களும் நவரத்தினங்கள். ஆனால் இவை போலியாக ஒளிர்பவை என்று கூறினார்.
இதற்கு திமுக உறுப்பினர் டி. சிவாவும் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜெயந்தி நடராஜன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
மைத்ரேயன் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கும் பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் பலன்கள் அனைத்தும் கோபாலபுரத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.
அவர் இவ்வாறு கூறியவுடன் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிவா இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதுபோன்ற கீழ்தரமான தரக்குறைவான விமர்சனங்களை அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் கோரினர்.
மைத்ரேயன் கூறியவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அதிமுக உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அமளி நிலவியது. பின்னர் அவைத் தலைவர் தலையிட்டு சமாதானம் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment