ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, June 7, 2009


சோத்து மூட்டைகள்


என்னா ஒரு தெனாவெட்டு... "பசி" தம்பரத்திற்கு. சிங்களவன் இந்த செவிட்டில் அறைந்தவிதமாகச் சொல்லியும் உறைக்காத ஒரு மந்தத் தனத்துடன் அறிக்கை விட்டிருக்கின்றார்.

"இலங்கைப் பிரச்னையில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதியுடன் விவாதித்தேன்.
அதாவது, இலங்கையில் இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவிகளைச் செய்வது, எந்த வகையில் மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது ஆகியவை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் யோசனை கேட்டேன்."

க.க.க.க.கருணாநிதிக்கு என்ன தெரியும் யோசனை சொல்ல..? கடைசி மனிதரின் உணர்வாவது தெரியவேண்டும். அதுவும் இல்லாத மரத்துப்போன சடலமாகத் தானே நடந்து கொண்டிருக்கின்றார்.

அடடா ..அடடா.. உப்புப்போட்டு சாப்பிடுவதை இவர்கள் விட்டு விட்டார்கள் போல இருக்கின்றது. இல்லாவிட்டால் எம்.எஸ் .கிருஷ்ணா வாங்கிக்கட்டியதை அறியவில்லை போலும்.

"கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் ."

என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிற்கு கோத்தபாய ராஜபக்ஸ பொறுப்பில் இருக்கும் பாதுகாப்புத்துறை உத்தியோகபூர்வ இணையத்தில் டோஸ் விட்டபிறகும் இப்படியொரு அறிக்கை விடுவது தமிழ அரசியல்வாதிகள் எல்லோரும் காமடியன்கள் என்று சரத் பொன்சேகா கூறியதை மெய்ப்பிக்க முயற்சி செய்வாரா?

உடனடியாக...: இலங்கைத் தமிழர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும். அவரவர் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். வீடு இழந்த மக்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.


பாதுகாப்பு இல்லாது காடுகளிலும் கடற்கரையிலும் ஓட ஓடத்துரத்தி நாய்களைப்போல சுட்டது நீங்கள் தானே. உங்களுடைய விருப்பத்தையே தாங்கள் நிறைவேற்றியதாக கோத்தபாய பகிரங்கமாக அறிவித்து விட்டானே. வீடிழந்த மக்களுக்கு வீடு கொடுப்பதற்கு முன்னர் உயிரிழந்த மக்களுக்கு என்னசெய்யப்போகின்றீர்கள்?

.. அதற்கான பணிகளில் இலங்கை அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

"இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்."

அதுதான் சொல்லிட்டாங்களே ..இதற்குப்பின்னர் எந்த மூஞ்சையுடன் போய் சிங்களவனிடம் இதைப்பற்றிப் பேசப்போகின்றார்களோ?

இந்திய அரசைப் பொருத்தவரை இதற்காக அதிக அளவில் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது. அந்தத் தொகை முறையாகச் செலவழிக்கப்பட வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்க வேண்டிய அதிகாரப் பங்கீடுகள் குறித்தும் இலங்கை அரசு முடிவு எடுக்க வேண்டும்.

வேண்டாம் ..உங்கள் சகவாசமே வேண்டாம்..உங்கள் பிச்சைக்காசை எதிர்பார்த்து சொரணையுள்ள தமிழன் இருக்கவில்லை..

வேறு வேலையில்லையென்றால் ஏதாவது கோவில் குளத்துக்குச் சென்று இராமாயண கதாகாலேட்சபம் கேட்பது செய்த பாவத்தையாவது தொலைக்க இரண்டு பேருக்கும் வழி வகுக்கும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil