ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 20, 2009


அரை மொட்டைகளும் அரை வேக்காட்டு அரசும்குழந்தை மன்னிக்கட்டும்


புலிகளின் தோல்வியின் பின்னால் தமிழ் மக்களின் வீழ்ச்சியும் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகின்றது. ஆளாளுக்கு விடும் அறிக்கைகளும் அரை வேக்காட்டுத்தனமான அறிவிப்புகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றது.

அடிமைத்தமிழினத்தின் கழுத்தைச் சுற்றிய இரும்புச்சங்கிலியைப் பிடித்து ஆளாளுக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப்பிறகும் சில எடுபிடிகள் நாட்டாமை விளையாட்டை விட்டுவிடுவதாக இல்லை. சில படித்த புலிகளையும் கூட்டிக் கொண்டு புல்லுத் தின்ன வெளிக்கிட்டிருக்கின்றன.பத்மநாதனின் தேசம் கடந்த இடுப்பெழும்பாத அரசில் படித்த பக்கிரிப் புலிகள் பேராசை கொண்ட ஆசிரியர்களாக (பேராசிரியர்கள்) இணைந்திருக்கின்றார்கள்.

இன்னும் பாசிசப் புலிகள் என்ற பெயரைக்கூட மாற்றிக்கொள்ளும் மனபலமில்லாத இவர்களா ..கோழி கூவ முன்னர் அறுவடையைக் கொண்டு வந்து சேர்க்கப்போகின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு உருத்திரகுமாரன் விளக்கம்

இதே உருத்திரகுமார் தான் முன்னரும் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகர். அப்போது கிழிக்க முடியாத எதையோ கிழித்தெறிய இப்போது படித்த காய்ந்த நாலைந்து பேராசிரியப் புலிகளை இழுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கின்றார். இதுவரை புலிகளால் திரட்டப்பட்ட மக்களின் பணம் பற்றி யாரும் வாய்திறந்து பேசவில்லை. புலிகளின் தலைமை விட்ட பிழைகளை தொடர்ந்தும் செய்ய முற்படும் இவர்களுடன் மக்கள் தொடர்ந்து செல்ல மக்கள் முட்டாள்களா ..என்ன?

முன்னைநாள் போராளிகள், தலைவர்கள் ,அறிவு ஜீவிகள், மக்கள் யாரையும் எப்போதும் அழைத்துப் பேசும் எண்ணம் இல்லாத அராஜகப் போக்கில் பத்மநாதன் மற்றும் அவர் கூட்டத்தின் குஜ்மால் விளையாட்டுகள் அரங்கேறுகின்றன.அவரால் அமைக்கப்பட்ட அதிரடிக் குழுவின் செயல் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.


பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா)

பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

பார்த்துப்புரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டவர்களே... உங்கள் கறுப்புக் கண்ணாடி கழட்டா கருணாநிதி ஏன் ஒரு பேராசிரியராக பட்டம் பெற்றவராக இல்லை.பள்ளிக்கூடமாவது போனாரா...இல்லையா? உங்கள் செயலலிதா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் படித்தும் (இதில் "டி" ஆ "டு" ஆ போடவேண்டும்) ஏன் பட்டம் எதையும் பெற்றிருக்கவில்லை.

உரத்தொழில் அமைச்சர் அழகிரி எந்தக் கல்லூரியில் பேராசிரியர் அல்லது சட்ட அறிஞர்...ஏன் உங்கள் கண்மணி ..கனிமொழி...டாக்டர் ? என்ஜினியர்... ? அற்லீஸ்ட் கட்டட மேஸ்திரியாகத் தன்னும் படித்து தொழில் புரிந்தவரா?


ஏன் உங்கள் நிழல்... விழல் ..பிரதமர்...சோனியாஜீ... ESL (english as a second language) படித்ததைத் தவிர ஏதாவது புலிப்படிப்பு படித்தவர்களா? மகன் ராகுல் போலி m.phil
புகழ் இளைய தலை முறை, வதேராவின் வாரிசைச் சுமக்கப்போகும் போலி "மனுஷி" பிரியங்கா எல்லோரும் இவர்களுடன் ஈடு கட்ட முடியுமா?

எத்தனை பெரிய மேதாவிகள் எல்லாம் ஏறு பட்டியும் தளநாரும் கொண்டு "தொழிலுக்கு" வெளிக்கிட்டிருக்கின்றார்கள். இவர்கள் யாரென்றே தமிழ் மக்களுக்குத் தெரியாது. எந்த மூலையில் புல்லுச் செதுக்கி கருவாடாக்கி வித்துக் கொண்டிருந்தார்களோ தெரியாது.

எல்லோரும் சீசரைக் கொன்று போட்ட புரூட்டஸ்ஸுகளே.. இப்போது மேய்ப்பன் பிளஸ் காப்பவன் வேஷம்...

இவ்வளவு காலம் பரந்து நிழல் பரப்பிய ஆலமரம் பட்டுக் கருகிப் போய் விடும் வரை துருப்பிடித்திருந்த....வெற்று மூளைகள் A-40 அடித்து துருவகற்றி இராட்ஜிஜம் அமைக்க கிளம்பியிருக்கின்றன.

வாழ்க தமிழனின் அடிமை மோகம்...ஒப்புக்குச் சப்பாணியாய் வயிறு வளர்ப்பதற்காக வாழும் இவர்கள்.. தொடர்ந்தும் விடும் தவறு ஒற்றுமையை நாடாத தான் தோன்றித் தனம்.

அதன் தற்போதைய தற்காலிகத் தலைவர் பத்மநாதன்... அவர் எந்தப்பள்ளிக்கூடத்தின் பேராசிரியர்...?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil