
புலிப்புரட்டுவாதம் தோற்ற பின் என்ன செய்வது என்று கையைப்பிசைந்து கொண்டிருக்கும் புலிப் பினாமிகள் வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களைத் தோண்டியெடுக்கத் தொடங்கி விட்டார்கள் . வரலாற்றின் திருப்பு முனை திடுக்கிட வைத்தமுனை இணை எதையெல்லாம் தோண்டியெடுக்க முடியுமோ அதையெல்லாம் தோண்டியெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
30 வருடமாக மறந்து போயிருந்த சிவகுமாரன் அவ்வாறு தோண்டியெடுக்கப்பட்ட முத்து இப்போது.
உண்மை வரலாறு எப்போதுமே அழியாது அது காலம் தாழ்த்தியாவது வெளிவரும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாவாகிய தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளினை ஈழத் தமிழர்கள் இன்று வெள்ளிக்கிழமை நினைவுகூருகின்றனர்.
1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 24 ஆவது வயதில் சயனைட் அருந்தி களப்பலியான பொன்.சிவகுமாரன் ஈழப்போராட்டதின் புதிய வரலாற்றை தொடக்கி வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தில் 26.08.50 ஆண்டில் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்த சிவகுமாரன் இளவயதிலேயே பொதுவுடமைக் கருத்துக்கொண்ட சமூகச் செயற்பாட்டாளனாக விளங்கினார்.
1970 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் பொன்.சிவகுமாரன் விளங்கினார்.
1974 ஆம் ஆண்டு ஐனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்க முயற்சித்திருந்த வேளையில் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்ய முயற்சிக்கையில் சயனைட் அருந்தி களப்பலியானார் பொன்.சிவகுமாரன்
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment