இது கடந்த வருடம் கலைஞரின் பிறந்த தினத்தில் இடம் பெற்ற கவியரங்கில் சிலர் இயம்பியது. இந்த ஒரு வருடத்தில் மாறியிருக்கும் மனநிலையில் இப்படியும் பாடவும் கூடும்.
எனது கற்பனையில்,
கவிக்கோ.அப்துல்ரஹ்மான்
"என் கவிதை உனக்கு கல்லெறியும்:
ஏனெனில் நீ எமக்கு மாச்சரியம்.
முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா...
எத்தனை காலம்தான்
உன் மக்களையே சுமக்கிறாய்.
ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் -
அது மேலே பார்த்து மு.கருணாநிதி என்றது
எத்தனை காலம் தான் முடக்கு குட்டையில்
ஊறிக்கிடப்பது.
இரட்டை இலை விரித்து
நாட்டையே ஆண்டவர்களின்
எச்சில் இலை பொறுக்கி
குப்பைத் தொட்டியிலும்
எதுவும் விடாது
நக்கித் துடைக்கின்றாய் நீ.
சூரியன் ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.
சில நடு கற்களும்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது...
தமிழா விழித்துக் கொள்...
நெம்பு கோல் கொண்டு புரட்டிப் போடு
அசையாத சுமை கற்களை
வெட்டித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்....
கவிஞர் .கருணாநிதி. இவர் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழத் துறை விரிவுரையாளர்.
"என்னை ஏன் முதலில் அழைத்தீர்கள்
கருணாநிதி என்றால்
முதலில் வருவார் என்பதலா?
முடியும் (ஆயுள்) வரை அசையார் என்பதாலா?
குடியரசு இதழில்
எழுதிய உன் கைகள்
முடிய்ரசுத் தலைவராய்
தனக்குத் தானே
முடி சூடிக் கொள்கின்றது.
இந்தியாவுக்குள்
தமிழகம் இல்லை.
இப்பொழுது
தமிழகத்துக்குள்தான் இந்தியா
இந்தியாவின் கொள்ளைக்காரர்கள்
தமிழகத்திலிருந்து தானே
போகின்றார்கள்"
அடுத்து மு.மேத்தா வந்தார்.
"தமிழ் நாட்டின் வரலாறும் ..
தலைவா உன் வரலாறும்
தனித்தனி இல்லை
கூவம் போல
நாறிக் கிடக்கின்றது"
கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது.
"நேரில் சந்திக்கத்தான்
நினைத்திருந்தேன் கந்தையே..
ஆனால் உனைச் சுத்திய உறவுப் படையுடன்
சதிராட்டம் ஆட முடியாது ..
அதனால்... என் கவிதைத் தூது.
தமிழக மக்களின் சோத்துக் கலயமும்
உன்னைப் பெற்றதால்தான்
வெற்றுக் கலயமாகியது.
உனக்கு
கடவுள் நம்பிக்கை இல்லை.
ஆனால் நீதான் அப்பா
எங்கள் வஞ்சித்த சாத்தான்.
எப்போதும்
உன் அருகிருக்கும்
வள்ளிக்கு ஒரு வணக்கம்.
தெய்வானைக்கும் ஒரு வணக்கம்...
சாத்தானால் தான் கடவுளின்
மனைவிகளையும் கவர முடியும்"
என்றபோது ஆரவாரத்தின் உச்சம் அதிகமானது.
எம்பி.சீட், எம் எல் ஏ.சீட்,
வாரியத் தலைவர் பதவி என்று
எதுவும் வேண்டாம் அப்பா..
ஓரமாய் சிறு இடம்
அது போதும் எனக்கு ....”
என்ற போது இலக்கியத் தோழிகள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்।சல்மா ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை செய்து கொண்டனர்।
ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, June 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment