ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


"தினமணி"யும் வாந்தியா எடுத்திருக்கின்றது?

ஐயா, பூ பாத்திரத்தில இருக்குங்கையா...! இது அவங்க கையி..


இது தினமணியில் எங்கள் கருப்பு கண்ணாடி கழட்டா(ப் புகழ்) கலைஞர் கருணாநிதி போட்டோவுடன் வந்த கமெண்ட்...

50 இலும் ஆசைவரும்னு சிவாஜி சார் அப்போ பாட்டுப்பாடியபோது ஆசைவந்து என்னா செய்யுரது அதான் தோஞ்சுபோயிருக்குமேன்னு நினைச்சுக்கிடுவேன்..

இப்போ 80 இலும் இப்படியொரு கமெண்ட் பார்க்கும் போது....

"சுய இன்பம் செய்வது தவறா?ன்னு "ஒரு பதிவர் பதிவு போட்டிருக்கார்... பெண்கள் கையைத் தடவுவதும் வயது போனவர்கள் செய்யும் ஒரு "சுய இன்பம்"தான் ..அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

காந்தி படம் போட்டால் இப்படியா "தினமணி" கமெண்ட் எழுதும்..கலைஞரின் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டதாலோ.. என்னவோ...

கலைஞரைப் பற்றியெல்லாம் பதிவர்கள் "வாந்தி" எடுத்திருக்கின்றார்கள் என்று லக்கி ரொம்பவே கோபப்படுவார்... லக்கி..! கலைஞர் பதிவர்களை மட்டுமா வாந்தியெடுக்க வைக்கின்றார்...இதைப்போல எத்தனையோ...

இதோ "தினமணி"யும் வாந்தியா எடுத்திருக்கின்றது?

கண்பார்வை தெரியவில்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அந்த கருப்பு கண்ணாடி எழவை கழட்டிப் போடுவது தானே..?

இன்னும் இந்த வயதில் கருப்பு கண்ணாடி போடும் முதல் மனுஷன் நம்ம முதல்வர் தான்.. ஆ..ஊ..என்றால் வழக்குப் போடும் கண்மணிகள் ...சத்தம் ஒன்றையும் காணோம்.

பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கலைஞர் தான் பொறுப்பு என்று வை கோ பேசியவுடன் கூழச் சேரியோ கூடாஞ்சேரியோ எங்கோ ஒரு சேரியில் இருந்து கண்மணியொன்று வெளிக்கிட்டு போலீஸில் முறைப்பாடு செய்ய வை கோவின் மீதுள்ள வழக்கெண்ணிக்கை ஒன்றால் கூடி விட்டது.

ஏய்யா... இந்தியா ஜனநாயக நாடு தானே..பேச்சுச்சுதந்திரம் எல்லாம் இருக்கின்றது தானே...அப்புறம் என்ன ...பேசியே பதில் சொல்ல வேண்டியது தானே...

அமெரிக்காவில் பிரசிடெண்டையே கேள்வி கேட்டுத் தொலைத்து விடுவார்கள்.. மோனிகா லெவிங்ஸி விவகாரத்தில் பில் கிளிண்டனை படுக்கையறைக்கே மறுபடியும் கூட்டிச்சென்றது போல கேள்வி கேட்டுத் துளைத்து விட்டார்கள்....

இங்கு என்னடாவென்றால் போலீஸ் துறை முதல்வரின் பொறுப்பில் இருப்பதால் தாக்கியவர்களைக் கண்டு பிடிக்காத கையாலாகாத் தனத்திற்கு முதல்வர் பொறுப்பேற்கணும் என்பது தப்பா?

அடிப்படை தார்மீகம் மனிதாபிமானம் எல்லாம் தாண்டிப்போய் விட்டீர்களா?

சேது சமுத்திரத்தைத் தோண்ட வாரீகளாம்... அதுவும் நல்லது தான் ..இப்படிப்பட்டவர்கள் போய்க் குதிக்க இடம் ஒன்று வேண்டுமே..

என்னவோ "தினமணி" மீதும் வழக்கு ஒன்று வந்திட்டால் சரிதான்...

கழகக் கண்மணிகள் முதலில் சரோஜாதேவி முரசொலி போன்றவற்றைப் படிப்பதை விட்டு வெளியில் வரவேண்டும்.

6 comments:

கலையரசன் said...

பூ பாத்திரத்தில இருக்குங்கையா...! இது அவங்க கா.....யி!

அப்படின்னு கூட அந்த பெல்டு கோஸ்டிங்க மட்டமா எழுதும்,
ஆனா அத நம்பிகிட்டு நம்ம பதிவிட கூடாது!
அவருக்கு 80 வயசு, அட்லீஸ்ட் அவர் வயசுக்கு மரியாதை குடுக்கனும்!
அவனுங்கதான் அறிவில்லாம பன்னா.. நம்மளுமா?

ரங்குடு said...

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கலைஞரும் பெரியார் வழிச் சென்று பகுத்தறிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்.

யார் கண்டது?

80 வயதில் நாடாள முடியும் போது பெண்டாள முடியாதா என்ன?

வயத்தெரிச்சல் படாதீங்கப்பா.

உங்களுக்கெல்லாம் வாழ்த்த வயதில்லை. வணங்குங்கள்.

Anonymous said...

very bad comment.....
atleast give respect to his age...

canadaramji said...

கழகக் கண்மணிகள் முதலில் சரோஜாதேவி முரசொலி போன்றவற்றைப் படிப்பதை விட்டு வெளியில் வரவேண்டும்...

“நச்”

வந்து விட்டால் மட்டும் அறிவுச்சுடர் ஆகி விடுவார்களா..??

அதே கூழக்கும்பிடுதான்..

அது சரி said...

என்னங்க இது...அவர் கை பாத்திரத்தில இருக்க மாதிரி தானே இருக்கு...அந்த பெண்ணோட கையை தொட்ற மாதிரி தெரியலையே...

தவிர, 85 வயசுல கருப்பு கண்ணாடி போட்டா என்ன? உண்மையில், அந்த வயசுல தான் கண்ணுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம்...திடீர் வெளிச்சத்தையெல்லாம் பாக்குறது ரொம்ப சிரமம்..

மற்றபடி, அந்த வைகோ வழக்கு சம்பந்தமா நீங்க எழுதியிருக்கது ரொம்ப நியாயமான கேள்வி.

இட்டாலி வடை said...

வாங்க அது சரி!
இதை நீங்க தினமணியிடம் தான் கேட்கணும்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil