ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Friday, June 5, 2009
இராயாகரனும் இட்டாலி வடையும்
இணைப்பு : 2 (இட்டாலி வடை பதிவாளரும் பின்னோட்டமும்.)
1.'சரி ஒரு தமிழ்ப்பெண் ..சரி நீங்கள் சொல்வதைப் போல புலிப்பெண் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் எம்பியாய் வந்து விட்டால் என்ன? உலகம் உடைந்து சிதறி விடப்போகின்றதா? இல்லை உங்கள் உழைப்பாளர்கள் தான் உபத்திரவக்குழியுள் புதைந்து இல்லாது போகப்போகின்றனரா?"
தமிழினத்தை ஏமாற்றி பிழைப்பது தகுமோ! எத்தனை ஆயிரம் உயிர்களை, இப்படிச் சொல்லி தின்;றவர்கள் தான் நீங்கள். இன்னுமா!
2.'மற்றபடி உங்களுடைய இந்த பதிவினை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.. ஏனெனில் இது போன்ற பல "பாசிச எதிர்ப்புகளை" சந்தித்து தமிழ் மக்களின் நலனுக்காய் "இணைய புரட்சி" செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்!!!! இப்படிச் சொல்லும் இவர் தூக்கிப் போடும் துரும்பெல்லாம் இந்த துருப்பிடித்த எழுத்துத்தான்."
அதுக்கென்ன! இணையத்தில் புடுங்கும் உங்களுக்கு ஏன் கோபம் வருகுது. தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய நீங்கள், கொன்ற நீங்கள், அதை ஆதரித்த நீங்கள், மக்களுக்கு காட்டியது மக்களின் இரத்தத்தைத்தானே ஒழிய, மக்களுக்கு விடிவையல்ல. இதைத்தவிர வேறு எதையும், தமிழ் மக்களுக்கு வழி காட்டியது கிடையாது.
3.'முட்டாள்தனமாகப் பேசுவதில் நீங்கள் பெருமைப்படலாம். ஆனால் எங்களுக்கு வருத்தமாயிருக்கின்றது. இனத்திற்கு எதிரானவனாய் ஒளிவுமறைவின்றி காட்டிக் கொடுப்பவனை விட மக்கள் மக்கள் என்று தந்திரம் செய்யும் உங்களைப் போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்."
எது, எப்படி முட்டாள்தனம்? புலியை ஆதரிப்பது தான் அறிவுத்தனமோ! பகுத்தறிவற்ற தர்க்கம், பொய் ஏமாற்று மோசடி மூலம், ஒளிவுமறைவாக மக்களை ஏமாற்றுவது தான் அரசியலோ!? நாங்கள் வெளிப்படையாக பேசுகின்றோம். அதை நேர்மையாக முகம் கொடுங்கள். அதைவிட்டு விட்டு, சும்மா இணையத்தில் அலட்டாமல், மக்களுக்கு நேர்மையாக இருக்க முனையுங்கள். 30 வருடமாக புலித்தேசியத்தின் பெயரில், மக்களின் தேசியத்தை மறுத்து மக்களை கொன்று குவித்தது போதும்.
பி.இரயாகரன்
04.06.2009
நேர்மையான வெளிப்படையான ஒரு விவாதத்திற்கு இராயாகரன் வந்திருக்கின்றார் என்பதே சந்தோஷம் தான் . முதலில் நான் புலியோ புலி ஆதரவாளனோ இல்லை என்பதைப் பகிரங்கப்படுத்துகின்றேன். உங்கள் மீது இருக்கும் கேள்விகள் போன்று புலிகள் மீதும் எனக்குக் கேள்விகள் இருக்கின்றது.
அதைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தியிருக்கின்றேன். ஓடத்துரத்திய பழைய இயக்கத்தினர் ,அறிவுஜீவிகள்,கல்விமான்களையெல்லாம் இணைப்பதற்கான புலிகளின் வேலைத்திட்டத்தைப் பகிரங்கப்படுத்துமாறு கேட்டிருக்கின்றேன்.
இதற்குள் நீங்களும் அடங்குவீர்கள் என்பது எனது நம்பிக்கை. இது ஒரு முன்னுதாரணமாக வரவேண்டுமென்பது நம் விருப்பம்.
இனி உங்கள் விளக்கங்களில் சில சந்தேகங்கள். எனக்கும் என்னைப்போலுள்ள மக்களுக்கும் தெளிவைக் கொண்டு வர இவை உதவலாம்.
எது, எப்படி முட்டாள்தனம்? புலியை ஆதரிப்பது தான் அறிவுத்தனமோ! பகுத்தறிவற்ற தர்க்கம், பொய் ஏமாற்று மோசடி மூலம், ஒளிவுமறைவாக மக்களை ஏமாற்றுவது தான் அரசியலோ!? நாங்கள் வெளிப்படையாக பேசுகின்றோம். அதை நேர்மையாக முகம் கொடுங்கள்.
புலியை எதிர்ப்பதற்காகவே அரசியல் பேசுவதும் பின்னடைவான விளைவுகளை உருவாக்கும்.
தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஒரு பொது உடன்பாட்டைக்காண வேண்டிய நேரம் இது. அது தான் நம் எல்லோருக்கும் நல்லது. இனவிடுதலை ,மொழி விடுதலை, வர்க்க விடுதலை படிமுறை மாற்றங்களுக்கூடாக வென்றெடுக்கப்படவேண்டும் என்பது எமது நம்பிக்கை.
எதற்கும் விட்டுக்கொடுக்காத கடும்போக்கு புலிகளைப்போலவே பலத்த பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலமையைத் தோற்றுவிக்கலாம்.
தமிழினத்தை ஏமாற்றி பிழைப்பது தகுமோ! எத்தனை ஆயிரம் உயிர்களை, இப்படிச் சொல்லி தின்;றவர்கள் தான் நீங்கள். இன்னுமா!
சிங்களவர்களும் மற்றவர்களும் ஏறி மிதிப்பதை விட இது பரவாயில்லை என்றே தோன்றுகின்றது. இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றது.
1) பிரச்சினை எங்கள் கைகளுக்குள்ளேயே இருக்கும். கையாளச் சுலபம்.
2) எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதன் மூலம் சாதிக்கப்பல விடயங்கள் இலகுவாகும்.
அதுக்கென்ன! இணையத்தில் புடுங்கும் உங்களுக்கு ஏன் கோபம் வருகுது. தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய நீங்கள், கொன்ற நீங்கள், அதை ஆதரித்த நீங்கள், மக்களுக்கு காட்டியது மக்களின் இரத்தத்தைத்தானே ஒழிய, மக்களுக்கு விடிவையல்ல. இதைத்தவிர வேறு எதையும், தமிழ் மக்களுக்கு வழி காட்டியது கிடையாது.
சுயபரிசோதனை தானே வேண்டுமேயொழிய குற்றம் சாட்டும் "தப்பித்தல்"புத்தியல்ல என்பது என் அபிப்பிராயம்.
மேலும் விரிவாகப் பேசலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதில். என் ஆதங்கமெல்லாம் வெறுமனே புலி எதிர்ப்பு அரசியலை தூக்கிப் பிடிக்காமல் , ரயாகரன் பொது வேலைத் திட்டத்தில் இணையவேண்டும்
http://kandumkaanaan.blogspot.com/2009/06/blog-post_05.html
Post a Comment