ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 25, 2009


ஈமெயிலில் வந்தது..அவதூறா? ஆவணமா?




நான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தமிழ்நாட்டில் எவன் நம்புவான்? - கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .
முதலில் செய்தியை படியுங்கள் :-

சென்னையில் நடந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ’’காங்கிரசுக்கு தமிழகத்திலே எவ்வளவு பெரிய வீழ்ச்சியை உருவாக்குவதற்கு இலங்கை பிரச்சினை எதிர்கட்சிகளுக்கு பயன்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை வைத்து தமிழர்களுடைய உணர்வு, உணர்ச்சி, போராட்டம்- தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற காரியங்கள்- இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு துணை போகிறது என்கின்ற ஒரு கற்பனையையும், அந்த காங்கிரஸ் அரசோடு தி.மு.க. சேரலாமா என்ற கேள்வியையும் எழுப்பி நம்முடைய பலத்தை குறைக்க எண்ணினார்கள்.

காங்கிரசை பொறுத்தவரையில் அது மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்கள் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள ராணுவத்திற்கு உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொய்களை இங்கே உள்ள மக்கள் நம்புகின்ற அளவிற்கு சொன்னார்கள்.

அதை சிலர் நம்பவும் செய்தார்கள். நாம் உண்மையிலே இலங்கை தமிழர்களுக்காக எங்கிருக்கின்ற தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்றவர்கள், பணியாற்றுகின்றவர்கள் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தார்கள்- கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- தமிழ்நாட்டில் எவன் நம்புவான்?

பேராசிரியர் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- அவருடைய பதவியை தூக்கி எறிந்ததை- இலங்கை தமிழர்களுக்காக நானும், அவரும் சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்ததை மறந்து விடுவார்களா? எனவே மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொன்ன பொய்யை யாரும் நம்பத்தயாராக இல்லை.


நமது கேள்விகள் /விளக்கம் இங்கே :

*
பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள் .
*
நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள் .
*
ஊரோடு எல்லாரையும் மழயில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும்
" அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
*
ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள் .
*
மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள் .
*
பாத்து முறைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது .
*
இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
*
கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு . போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள் .
*
ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய் .
*
அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய் .
*
முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை .
*
ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்ததிக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .

வழுதி , புதினம் -மறுபக்கம்

வழுதி , புதினம் -மறுபக்கம்

உண்மையான பெயர்: பரந்தாமன்

தற்போதைய வசிப்பிடம்: அமெரிக்கா

எதிரிகள்: தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், அதியமான்

முழுநேரப்பணி: மேற்கண்டவர்களை தூற்றுவது

காரணம்: தனது காம இச்சைகைளையும், பணத் தில்லுமுல்லுகளையும்கண்டு பிடித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியமை.

புதினம் இணையத்தளத்தில் வழுதி என்பவர் 'முன்னாலே சென்றோரின்..." என்ற தலைப்பில் ஒரு கருத்தாய்வு கட்டுரை என்ற தலைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பல ஆண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கு ஆதரவு நிலை போல காட்டி வந்த புதினம் இணையத் தளத்தின் புலிச்சாயமும் இந்த கட்டுரையையுடன் வெளித்துப்போனது.

வழுதி என்பவர் யார்?

இவர் இவ்வாறான கட்டுரை எழுதவேண்டிய காரணம் என்ன?
என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த கட்டுரை.

வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வநோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மேசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார். இவருக்கான தண்டனை பற்றி தலைமைப்பீடம் யோசித்து வந்தபோது.

தலைவர் குறுக்கிட்டு இவர் நீண்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தாலன் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சாந்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்


புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்:

ஜெப்றி உதுமான் லெப்பை
தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம்
பரபரப்பு ரிசி

ஜெப்றி உதுமான் லெப்பை என்பவர் ஒரு கருணாவுடன் தொடர்புடைய கிழக்குமாகாண இஸ்லாமியத் தமிழர்.கொம்பியுற்றரர் பள்ளி வைத்திருக்கும் இவர் பரம புலிஎதிர்ப்பாளர்.

தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எனற வானொலியில் செய்தி படிக்கும் புலி எதிர்பாளர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் இருந்தபோது மதுபோதையில் பெண்களுடன் தீய நடத்தையில் ஈடுபட்ட காரணத்தால் புலிகளால் தண்டிக்கப்பட்டவர்.

CTBC வானொலி இளைய பாரதியின் துரொகத்தனம்

பரபரப்பு பத்திரிகை பதிப்பாளர் ரிசி இவர் கனடியத்தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் பணியாற்றும்போது கரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இவர் புலி ஆதரவு போல் வேடம்போடும் புலி எதிர்பாளர். கனடியத் தமிழ் மக்களிடம் விசாரித்தால் இவர் பற்றி புரியும்.

எயார் கனடா நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றுடன் பணியாற்றிவருபவர்.

தன்னை புலிகள் வன்னிக்கு அழைத்தாகவும் தான் அங்கு சென்று அவர்களுக்கு புலனாய்வு குறித்து பாடம் எடுத்ததாகவும் கூறிவருகிறார்.

ஆனால் கனடாவில் இவருடைய பத்திரிகையில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரைகளால்.... பல கடைகளில் இப் பத்திரிகை தற்போது விற்பனையில் இல்லை என அறியமுடிகிறது.

கரன் நடத்திவரும் மற்றய இணையத்தளமான 'தமிழ்நாதம்" என்ற இணையத்தளத்தை பார்த்தால் புரியும் பரபரப்பு பத்திரிகை ரிசிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு.

கூலிக்கு மாரடிக்கும் பரபரப்பு ரிஷியும், ரிஷிக்கு மாரடிக்கும் தமிழ்நாதமும்

தமிழ்நாதத்தின் சுத்துமாத்து

கரன் இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.

கரன் ஆரம்பித்து நடத்தி வந்த புதினம் இணையத்தளம் விடுதலைப் புலிகளின் இணையத்தளம் போன்று மக்களுக்கு தோற்றுவததால் அந்த இணையத்தளத்தை

தமக்கு தருமாறு விடுதலைப் புலிகள் கேட்டனர் ஆனால் கரன், இதுதான் தனது வாழ்வு ஆதராம் தான் பிழைப்பும் இல்லாமல் இதனை நம்பியே பிழைப்பு நடத்துவதாகவும் புலிகளுக்கு தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையால் இவருக்கு செய்திகொடுப்பதை புலிகள் குறைத்துக் கொண்டு. ஜேர்மனியிலும் கனடாவிலும் இருந்து இயங்கும் இரு இணையத்தளங்களை அமைந்து திறம்பட தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இவைதான் முற்றிலும் வழுதிய தலைவர் பிரபாரகன் அவர்களை தூற்றியமைக்கும் புதினம் இணையத்தளம் அதனை வெளியிடுவதற்குமான காரணங்கள்.

ஆய்வு:
செல்வக்குமரன் சிற்றப்பலம் (கனடா)

ஐ.நா.வை நம்பவேண்டாம்!

ஐ.நா. தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று நம்பியவர்களும், குறைந்தது, மகிந்தா இழைத்த போர்க்குற்றங்களுக்குத் தண்டனையாவது பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தவர்களும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், ஐ.நா.வின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் பேரதிர்ச்சி எதுவும் இல்லை.

ஐ.நா தொடங்கப்பட்டது 1945ம் ஆண்டில். அதற்கு முன்னால் சர்வதேச நாடுகளின் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் இருந்தார். முதல் உலகப்போர் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட தலைவர் இவர். இவரிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. மனிதர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படவேண்டும். குறிப்பாக, பெண்களின் உரிமை, வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமை, போர்வீரர்களின் உரிமை. நாடுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஆயுதங்கள் தயாரித்துக்கொள்வதை தடுக்கவேண்டும். நீயா நானா என்று நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எங்கே என்ன பிரச்னை வெடித்தாலும் முதல் ஆளாக போய் பார்த்து பேசி, அமைதி வழியில் சுமூகமான தீர்வு காணவேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், மானுட குலத்தின் மேன்மையை கட்டிக்காக்கவேண்டும்.

கட்டவும் இல்லை காக்கவும் இல்லை லீக். எஞ்சியிருந்த கால் வாசி மீசையைத் தடவியபடி ஹிட்லர் ஐரோப்பாவை கபளீகரம் செய்து தன் பாக்கெட்டில் செருகிக்கொண்டபோது, லீக் செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு சுதாரித்துக்கொண்டு, இது முறையல்ல, உலக அமைதியை நீங்கள் கெடுப்பது போல் தெரிகிறது, போரை கைவிடுங்கள் என்று சட்டப்புத்தகத்தில் இருந்து சில ஆர்டிகிளை இடம்சுட்டிப்பொருள் விளக்கியது. சர்தான் போப்பா என்று லீகை ஒதுக்கித்தள்ளிவிட்டு மூர்க்கத்துடன் முன்னேறினார் ஹிட்லர். லீக் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தபோதே இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவரின் பணியும் முடிவுக்கு வந்தது. இனி லீக் தேவையில்லை என்று ஐரோப்பிய பெரும்தலைகள் ஒன்றுசேர்ந்து லீகை கருணைக்கொலை செய்தன. ஹிட்லரைப் போன்ற அடாவடிகளோடு அன்பொழுக பேசிக்கொண்டிருக்கக்கூடாது காதைத் திருகி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, லீகைவிட சக்திவாய்ந்த ஒரு தலைமை தேவை. இந்த எண்ணத்துடன் அக்டோபர் 25, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின் அணியைச் சேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் யூனியன், சீனக் குடியரசு ஆகிய நாடுகள். யாரைச் சேர்க்கலாம், என்னென்ன விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் என்னென்ன போன்ற விஷயங்களை விவாதித்து ஐ.நாவுக்கு ஒரு வடிவம் கொடுத்தார்கள்.

கடமைகள் வரையறுக்கப்பட்டன. இன்னொரு யுத்தத்தை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. ஆகவே, இனியொரு போர் கூடவேகூடாது. உலக நாடுகளுக்கு இடையே, வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை பூக்கவேண்டும். ஒரு சர்வாதிகார நாடு தன் மக்களை ஒடுக்குவதை, அழிப்பதை அனுமதிக்கக்கூடாது. ஏழைமையில் இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு புணரமைப்பு.

ஐக்கிய நாடுகள் என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட். தொடக்கத்தில் ஐம்பது நாடுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இன்று 192 நாடுகள். மொத்தம் ஐந்து பிரிவுகளை ஐ.நா. உள்ளடக்கியுள்ளது. விஷயங்களை விவாதித்து முடிவெடுக்க ஜெனரல் அஸெம்பிளி. உலக அமைதி பேண பாதுகாப்பு கவுன்சில். இதில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். எந்த தீர்மானத்தையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் இவர்களுக்கு உண்டு. மூன்றாவதாக, பொருளாதார, சமூக நல கவுன்சில். நான்காவது, செயலகம் (செகரடேரியேட்). ஐ.நா.வுக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களை, அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கும் பிரிவு. ஐந்தாவதாக, சர்வதேச நீதிமன்றம். நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளை சட்ட ஆலோசனைகள் மூலமாகத் தீர்த்து வைக்கும் பிரிவு.

இவைபோக, ஐ.நா.வின் அதிகாரபூர்வ அமைப்புகள் பல உள்ளன. ஒரு நாட்டில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று செயல்படும். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம். பிறகு, உலகச் சுகாதார மையம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியகம் (யுனிசெஃப்), காலனி ஆதிக்கத்தை விடுவிக்கும் கமிட்டி. அமைதியை விரும்பும் நாடுகளுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை. சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பாதுகாப்பு கவுன்சில் ஆராய்ந்து பரிந்துரைக்கும். புது செட்டப்பில் பக்காவான ஒரு பஞ்சாயத்து தலைவர் தயார்.

ஒரு நல்ல நாளில் வேலையை ஆரம்பித்தது ஐ.நா. சில வாரங்கள்தான் கழிந்திருக்கும். லிட்டில் பாய், ஃபேட் மேன் என்னும் இரு அணுகுண்டுகளைத் தயாரித்து ஜப்பான் மீது வீசியது அமெரிக்கா. ஐயோ என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஐ.நா.வும் அலறியது. மேலதிகம் எதுவும் செய்யவில்லை. முடியவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர். ஐந்து வல்லரசுகள் கொண்ட கூட்டணி அது என்றாலும் பிற உறுப்பினர்களைவிட அமெரிக்கா பொருளாதார ரீதியில் முன்னணியில் இருந்தது. ஆகவே, தவிர்க்கமுடியாதபடி, ஐ.நா,வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா மாறிப்போனது. வாய்மூடி அமைதியாக இருப்பதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழி இருக்கவில்லை.

ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஐ.நா.வின் தோல்வியும் ஆரம்பமாகிவிட்டது. வால்பிடித்ததுபோல் மற்ற நாடுகள் அணுகுண்டு பரிசோதனைகளில் ஒன்றன்பின்ஒன்றாக இறங்கியபோது, ஐ.நா. மேற்கொண்ட அதிகபட்ச நடவடிக்கை அறிக்கைக் கண்டனங்களை அச்சடித்து அனுப்பியதுதான். 1947 தொடங்கி சோவியத் யூனியனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மத்தியில் பல கட்டங்களாகப் பனிப்போர் மூண்டபோது, ஐ.நா.வால் இடைமறித்து தடுக்கமுடியவில்லை. எதற்கும் லாயக்கற்ற ஓர் அமைப்பு இது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்ஸன் வெளிப்படையாக ஐ.நா.வை குறைகூறினார்.

அமைப்பு ரீதியாகவும் ஐ.நா. பலகீனமடைய ஆரம்பித்தது. பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுசேர்ந்து பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஐ.நா.வின் அரசியல் சாசனம். அப்படித்தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு ஒருநாள் இந்த விதிமுறையை ஐவர் குழு உடைத்தது. எதற்கு வீண் விவாதம், வெள்ளைப்பூண்டு? பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள். நாங்களே கூடிப்பேசி முடிவெடுக்கிறோம். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஐவரில் மூவர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தலைவர் ரெடி.

பனிப்போரின் முடிவில் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபோது, எஞ்சியிருந்த ஒரே பெரும் வல்லரசான அமெரிக்காவின் பின்னால் பதுங்கிகொண்டது ஐ.நா. உலக விஷயங்களை தன்னிச்சையாக ஆராய்ந்து, விவாதித்து, தீர்வு காணும் வழக்கம் ஒழிந்துபோனது. விவாதங்கள் என்னும் பெயரில் பாதுகாப்பு கவுன்சிலில் குத்துச்சண்டைகளே அதிகம் நடைபெற்றன. நீ, நான் என்று நாடுகள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆயுத பலத்தைக் கூட்டிக்கொண்டன.

1994ல் ருவாண்டாவில் மூண்ட இனமோதலில் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1998 தொடங்கி 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 50 லட்சம் மக்களை பலிவாங்கியது. சூடான், டாஃபர் இனப்படுகொலை பல ஆயிரக்கணக்கான மக்களை சீரழித்தது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தொடர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திகொண்டிருக்கிறது. காஸா முனை விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மார்ச் 2003ல் சர்வதேச தீவிரவாதத்துக்கு எஜதிரான போரின் ஒரு பாகமாக ஜார்ஜ் புஷ் ஆப்கனிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமித்தார். சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். இராக் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா. என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கிறது? எண்ணற்ற விவாதங்களை நிகழ்த்தினார்கள். டன் கணக்கில் தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள். குண்டு விழ விழ கண்டனங்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பெரும் செலவில் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக்கிரமித்த நாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. இரு தரப்பினரையும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்கள். தேநீர் அருந்தினார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ். இனி இதுபோல் செய்யாதீர்கள். சீரழிந்த மக்களுக்கு ஏதாவது பார்த்துப் போட்டு செய்துகொடுங்கள். வரட்டுமா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே உணவுப் பொட்டலங்கள். காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள். நிலைமை முற்றினால், அமைதி காக்கும் படைகள். இவ்வளவுதான் செய்யமுடிந்திருக்கிறது. இவ்வளவுதான் செய்யமுடியும். ஐ.நா.வால் எந்தவொரு போரையும், எந்தவொரு இனப்படுகொலையையும், எந்தவொரு ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பதுதான் நிஜம்.

நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்ஷே மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்? ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எனவே, வழக்கம்போல், ஐ.நா. அமைதி காக்கிறது.

(ஆனந்த விகடனில் வெளிவந்த மருதன் கட்டுரை)

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil