ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 4, 2009


உலகின் அதிகார மையங்களின் கைப்பாவையாக இலங்கை இனவாத அரசு ‐1 றிச்சார்ட் டிக்சன் ரெலிகிறாவ்


ஆசியாவைத் தாக்கி அயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்ட போது நாங்கள் எல்லோரும் அழுதோம்.

சுனாமி ஆசியாவைத் தாக்கிய போது முப்பதாயிரம் பேர் உடனடியாக மாண்டனர். கடலால் அடித்துச் செல்லப்பட்ட அந்தக்கணத்திலேயே அவர்கள் தங்கள் தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டனர். அவர்களுடைய இறுதி அத்தியாயம் மிகச் சுருக்கமானது.

பிரதானமான தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி அலைவரிசைகள் வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணித்தியாலங்களும் சுனாமியின் கோரத்தைக் காட்டிக் கொண்டே இருந்தன. நாங்கள் உதவிப் பொருட்களைப் பொதி பண்ணி அருகிலுள்ள தேவாலயத்திற்கு அல்லது பாடசாலைக்கு எடுத்துச் சென்றோம். உலகின் பல நாடுகள் பில்லியன் கணக்கான உதிவியைச் செய்தன.

ஆனாலும் இன்னமும் தமிழ் மக்கள் கண்ணீருடன் இரண்டாம் தரப் பிரஜைகளாகத் தான் இருக்கின்றனர்.

இப்போது இலங்கையின் படுகொலைக்களத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டிருந்த போது உலகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தது.

இன்னொரு பேரழிவு அண்மையில் இலங்கைத் தமிழர்களைத் தாக்கியது. அது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட போராக இருந்தது. மனித குல வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துரோகத்தனமிக்க போராக இது இருந்தது. இதில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

கண்ணீர்த்துளி போன்ற இந்தத் தேசத்தில், சுனாமி ஏற்படுத்தய அழிவை விட அதிகமான பேரழிவை இந்த யுத்தம் ஏற்படுத்தியது.

மாதக்கணக்காக உணவும் மருந்தும் இன்றி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீனாவின் எப்.7 விமானங்களிலிருந்தும், ரஸ்யாவின் மிக் விமானங்களிலிருந்தும் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களில் போடப்பட்ட குண்டுகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கனரக ஆட்லறிகளும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் இந்த நிர்க்கதியான மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. பலர் வலிமிகுந்த மரணத்தை எதிர்கொண்டார்கள். காயமடைந்த பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவ்வைத்தியசாலைகள் குண்டுவீச்சுக்கிலக்கானதில் கொல்லப்பட்டனர். நோயாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே உணவும் மருந்தும் மறுக்கப்பட்டன. பயங்கரங்;களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த பயங்கரங்களுக்கெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சாட்சியமானாhர்கள்.

உலகின் சில அதிகார சக்திகளின் பின்னணியுடன் மனிதரால் உருவாக்கப்பட்ட இந்த சுனாமிக்கு மேற்கின் செய்தி அலைவரிசைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஊடக மற்றும் விளையாட்டுப் பிரதிநிதிகள் ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து வறுமையை ஒழிப்பது பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார்கள். ஆனால் இந்த அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சுண்டு விரலைத் தானும் அவர்கள் அசைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதில் ஐநாவின் ஊழல் மிகுந்த தலைவர்கள் தமது கடமையில் தவறி இருந்தார்கள். அவர்கள் தவறானவர்களால் வழி நடத்தப்பட்டார்கள். அவ்வறான தாளத்திற்கு அவர்கள் ஆடினார்கள். ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியமிருந்தும் அவர்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொள்ளும் இந்த மர்ம விளையாட்டின் ஒரு பகுதியினரானார்கள். இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கான சக்தி பலரிடம் இருந்தும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை.

பல நாடுகளின் தலைவர்களும் ராஜதந்திரிகளும் இந்தப் போரின் போது எவ்வாறு செயற்பட்டார்கள் என்று பார்த்தால் அது குறித்து பலத்த சந்தேகம் எழும். அவர்களில் பலர் இந்த உலகத்தில் இல்லாதவர்கள் போன்று செயற்பட்டும் எழுதியும் இருப்பார்கள்.

ஐநா செயலாளர் நாயகம் உட்படப் பல தலைவர்கள் தங்களது வாய்களை மூடிக்கொண்டிருந்தார்கள். எப்போதாவது மட்டும் ஓரிரு வார்த்தைகளை உதிர்த்தார்கள்.

ஐநாவின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் உட்பட ஐநாவின் பல பிரதிநிதிகளும் போர் நிறுத்தம் குறித்துப் பேச இலங்கைக்குப் பலமுறை சென்றிருந்தாலும், அவர்களுக்கான பல தனிப்பட்ட நலன்கள்; அவர்களிடம் இருந்ததன் காரணத்தால் அதில் அவர்கள் தோல்வியடைந்தார்கள்.

அவர்கள் தாம் வகிக்க வேண்டிய பாத்திரத்தை வகிக்காதது மட்டுமல்ல மனிதத்திற்கெதிராக நடாத்தப்பட்ட மாபெரும் குற்றங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பவர்களாகவும் ஆகியிருந்தார்கள்.

இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்த சில இந்தியத் தலைவர்கள் இலங்கையின் போருக்கு பின்னணி பாடியதோடு, போரின் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தி இலங்கை அதிகார பீடங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்களேயன்றி போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவோ, போரை நிறுத்தவோ, பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தோ பேசமுற்படவில்லை. அவர்கள் எப்போதும் போராளித் தலைவரின் அழிவு பற்றியும், அவருடைய மரணம் பற்றி உறுதிப்படுத்தப்படக் கூடிய ஒரு சிறிய ஆவணம் பற்றியும் மட்டுமே பேசினார்கள்.

இந்தப் போர், இந்தப் பிராந்தியத்தில் தனது இராணுவ தந்திரோபாயமும் என்பதையோ, இலங்கைக் கடலில் காணப்பட்ட எண்ணெய்ப்படுக்கைகளுக்குள் தான் நுழைவதற்கான வழி இது தான் என்பதையோ மூடி மறைத்து ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே இது இருந்தது.

இலங்கைக்கு விஜயம் செய்தவர்களில் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதில் உண்மையாகவே செயற்படுபவரக டேவிட் மிலிபான்டே விளங்கினார். பொது மக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் இலங்கை பாவிப்பதால் ஏற்படும் இழப்புகளை அவர் எதிர்த்து நின்றார். டேவிட் மிலிபான்டைப் போன்று இலங்கையின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை யார் எதிர்த்து நிற்கிறாரோ அவர் இலங்கையால் வெள்ளைப் புலி என்றோ மஞ்சள் புலி என்றோ அல்லது மண்ணிறப் புலி என்றோ அவர்களின் தோல் நிறத்தைக் கொண்டு அழைக்கப்பட்டார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் முடிவடைந்து விட்டது. ஆனால் கொலைகள் நிறுத்தப்படவில்லை.

கிளர்ச்சித் தலைவரையும் கொன்று அவருடைய குழுவினரையும் பெருமளவுக்கு அழித்துவிட்டதாக இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கூற்றுப்படி பயங்கரவாதம் அங்கு பூண்டோடு துடைத்தெறியப்பட்டு விட்டது.

ஆனால் அங்குள்ள கள நிலைமைகள் வேறு மாதிரியாகச் சொல்கின்றன. பேர் முடிந்து விட்டது. ஆனால் படுகொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தமிழர்களை விட்டுவிடவில்லை. ஒவ்வொரு தமிழ் ஆணும் பெண்ணும் குழந்தையும் கூட சந்தேகக்கண் கொண்டே பார்க்கப்படுகிறார்கள். அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் சந்தேகத்திற்குள்ளாகும் எவரையும் கைது செய்யவும் கொலை செய்யவும் இலங்கைப் படையினருக்கு அதிகாரம் இருக்கிறது.

இலங்கையில் தமிழராக வாழ்தல் என்பது கருநாகங்கள் கொண்ட மிக ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலாகக் கட்டப்பட்டுள்ள ஒரு மெல்லிய கயிற்றில் நடப்பதைப் போன்றது தான்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லப்பட்ட போரும் மனிதாபிமான நடவடிக்கையும் இப்போது முடிவடைந்து விட்டன. ஆனால் படுகொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. யாராவது ஒருவர் கேட்கக்கூடும் அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட போரின் நோக்கம் நியாயமானது தானே என்று. இல்லை. ஆக ஒரேயொரு கிளர்ச்சித் தலைவரை வெறுமனே வெட்டிச் சாய்ப்பதற்காக ஆகாயத்திலிருந்து குண்டுகளை வீசியும் ஐம்பதாயிரம் மக்களைக் கொன்றும் முப்பதாயிரம் மக்களை அங்கவீனர்களாக்கியும் சிங்கப்பூரைப் போன்ற பரப்பளவுள்ள இரண்டு மடங்கு பிரதேசத்தை அழித்து துவம்சம் செய்துமுள்ளதைப் போன்ற ஒரு அரசாங்கள் இந்த உலகில் வேறில்லை.

தமிழர்களைக் கொல்லுதல் என்பது 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினருடைய கோரிக்கைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.

தமிழர்கள் மீதான படுகொலையை குறித்து உலகம் எவ்வாறு பதில் சொல்கிறது?

47 நாடுகள் இணைந்து ஒன்றாக இலங்கைப்பிரச்சினை மீது வாக்களித்துள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற கோணத்திலிருந்தே அவை அவ்வாறு வாக்களித்துள்ளன. அவ்வாறு வாக்களித்ததனூடாக அவை இலங்கை அரசாங்கத்தின் புலிகள் மீதான வெற்றியைப் பாராட்டியுள்ளதோடு இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணையையும் புறந்தள்ளியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் தனது நன்மதிப்பை தற்போது இழந்து போயுள்ளது. அந்த அங்கம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதைத் தொலைத்துவிட்டு அதற்கான இருப்பிற்கான அர்த்தத்தையே இழந்து நிற்கிறது.

இலங்கைக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான நாடுகளின் செய்தி மிகத் தெளிவானது. தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தோளோடு தோள் கொடுத்து உதவி செய்வோம். ஏனென்றால் எங்களது பகுதிகளிலுள்ள மறைவிடங்களிலும் இவ்வாறான எலும்புக்கூடுகள் உள்ளன. ஆகவே அப்பாவிப் பெண்களையும் சிறுவர்களையும் அவர்கள் குண்டு போட்டுக் கொல்ல நாங்கள் அனுமதிப்போம். அவர்கள் பட்டினியால் மரணமடைய நாங்கள் அனுமதிப்போம். காயமடைந்தவர்களுக்கு மரு;துகளைத் தடை செய்வதை நாம் அனுமதிப்போம். ஏன் எல்லாத் தமிழர்களையும் கொன்று பெரும் குழிகளில் போட்டு மூடினாலும் அதனையும் அனுமதிப்போம். இவ்வாறான ஒரு பயங்கரமான தீவுக்கு நாங்கள் இன்னமும் எங்கள் ஆதரவைத் தெரிவிப்போம் ஏனென்றால் இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்கு எங்களுடைய சொந்த நலன்களும் மறைக்கப்பட்ட பல உள்நோக்கங்களும் உண்டு.

இது தான் உலகில் உள்ள நாடுகளின் நிலை இன்று. இந்த நாடுகள் நீண்டகாலமாகவே மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களது பேராசையைப் பூர்த்தி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார்கள்.

அவசரகால நிலைமைகளின் போது பெரும்பான்மையானவர்கள் உயிர்களைக் காப்பாற்றுவதில் அக்கறையற்று தமது சொந்த நலன்களில் அக்கறை செலுத்தும் அழிவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் போது வாக்களிப்பு என்பது சிறந்தவொரு வழிமுறையாக இருக்குமா என்று நான் பல தடவைகளில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் தருணத்தில் வாக்களிப்பை நடாத்தி, பின்னர் வாக்களிப்பில் பெரும்பான்மையானவர்கள் அங்கு போய் அதற்குள் இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் ஈடுபாடு காட்டாத காரணத்தால் அதனைக் கைவிடுவது என்பது நியாயமானதாக ஆகிவிடாது.

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து பயணிகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் வாக்கெடுப்பு நடாத்துவதில்லை. மக்களைப் பாதுகாப்பதா இல்லையா என்பது அங்கு பிரச்சினையாக இருக்காது. சில வேளைகளில் எப்படிப் பாதுகாப்பது என்பதில் வேறுபாடுகள் வரலாம்.

இலங்கையில் உள்ள நாசி காலத்து சித்திரவதை முகாம்களை ஒத்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்படும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பது குறித்து மனித உரிமை ஆணையகம் இப்போதாவது விவாதிக்க வேண்டும். இல்லையேல் இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெருத்த அவமானம் மட்டுமல்ல ஒரு நாடு தனது நாட்டிலுள்ள சிறுபான்மையினரை முற்றாகவே துடைத்தழிப்பற்கு வழங்கும் ஒரு ஆமோதிப்பாகவும் அமைந்து விடும் அபாயமுள்ளது.

இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்பவர்கள் என www.globaltamilnews.net பெயரிட்டு மீள்பிரசுரம் செய்யவும்:

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil