ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 1, 2009


பிச்சைப்பாத்திரத்துடன் நரகாசுரனிடம் வரம் கேட்டு


முட்டாள் அரசியல்வாதிகளினால் அலைக்கழிக்கப்படும் நாடு குட்டையில் ஊறிக்கிடக்க வேண்டியது தான்.

//தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்கள் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியை நேற்று முன்நாள் சனிக்கிழமை சந்ததித்து கலந்துரையாடியுள்ளனர்.

கூட்டமைப்பின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். //

இவர்களைத் தான் சொல்லுகின்றேன். இத்தனை துயரங்களுக்கும் காரணமாயிருந்தது இந்தியா. அதை கடிதம் எழுதி ஊக்குவித்தது கருப்புக் கண்ணாடி கழட்டா கருணாநிதி.


//இச்சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக முதல்வருக்கு கூறியதாக சம்பந்தன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.//

கருணாநிதி காடாறு மாதம் போன விக்கிரமாதித்தனாக இப்போது தான் காட்டில் இருந்து வந்திருக்கின்றார். கருணாநிதிக்குத் தெரியாமலே செத்துப் போன மக்களைப் பற்றியும் சிங்கள இராணுவத்தின் கொடூரங்கள் பற்றியும் சம்பந்தன் விலாவரியாக விளக்கியிருக்கின்றார்.

கருணாநிதியும் அதைக் கேட்டு அபயக்கரம் காட்டி ஒற்றைக்காலில் நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றார். செத்த சனங்களைப் பற்றி யாருக்கு கவலை. எல்லாம் கிடைக்கப் போகின்ற எலும்புத் துண்டில் பெரிய பாகம் கிடைக்க வேண்டுமென்ற ஆசைதான்.

புலிகள் இல்லாத இடத்தில் ஆயுதங்களுடன் வரப்போகின்ற அரசு ஆதரவு கொண்ட டக்ளஸு சித்தார்த்தன் இன்னும் எஞ்சியிருக்கின்ற குஞ்சுக் குழுக்களையெல்லாம் மீறி ஏதாவது மிஞ்சிக் கிடக்குமா? என்ற ஆதங்கத்தில் தூக்கும் காவடி ஆட்டம்தான் இது.

புலிப்பாசிசம் என்று கதறியவர்கள் எல்லாம் அதே பாசிசம் பேசப் போகின்றார்கள். இன்னும் எஞ்சியிருக்கின்ற நச்சுப் புகைகளை மிஞ்சியிருக்கும் தமிழர்களையும் கொல்லப் பாவிக்கப் போகின்றார்கள். அதற்குள் பதவி சுகம் கண்டு விட இந்தப் பராரிகள் ஊர்வலம் கிளம்பிவிட்டார்கள். அடுத்து ஒரு தேர்தல் வந்தால் இவர்களால் ஒரு வாக்கையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்த அல்லது இவர்களையே நியமித்த புலிகளும் இப்போது இல்லை.

ஆயுதங்களின் ஆணவத்தால் அத்தனையையும் அள்ளிக் கொள்ளப் போகின்றார்கள் "மாஜி"ப்போராளிகள். அதனால் தான் அஹிம்சைதேவனின் ஆதரவு தேடி இந்தியாவின் கால் பிடிக்கின்றார்கள் வெட்கம் கெட்டவர்கள். இத்தனை கொலைக்கும் காரணமான நரகாசுரனிடம் வரம் கேட்டுப் போகும் இனத் துரோகிகள்.

எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. உங்களிலெல்லாம் மேன்மையான தலைமை ஈழத் தமிழருக்குக் கிடைக்கும்.அந்தத் தலைமை பிச்சைப்பாத்திரத்துடன் வராது.அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரத்துடன் வரும். அது வரை இந்தக் கூத்துக்களைப் பார்க்க வேண்டியது எமது தலையெழுத்தென்றால் என்ன செய்ய முடியும்?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil