ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, November 30, 2009


எதிரியை அழிப்பதென்பது வெறுக்கக் கற்றுக்கொள்ளல்


எதிரிகளில்லாத மனித வாழ்க்கை என்பது எப்போதுமே சாத்தியமானதல்ல. எதிரியாதல் என்பதற்கு தன் வசதிகளை மேம்படுத்தல் என்ற சுய இச்சை வழிகோலுகின்றது. பார்ப்பனம் என்பது மேலாதிக்கம் என்பதையும் விட புத்தியினால் சுகித்திருப்பது என்பதன் மாற்று வடிவமே. சமுதாயத்தின் முழுப்பாரங்களையும் சுமப்பதில் இருந்து தப்பித்துக் கொள்வது என்ற வகையில் இதனை ஓரளவு அடையாளங்கண்டு கொள்ளலாம்.

முதலாளித்துவம் எப்போதும் வெற்றியின் பக்கத்தில் இருப்பது இத்தகைய எல்லா மனிதருக்கும் இருக்கக்கூடிய மேலாதிக்கம் அல்லது மேல் நிலை என்ற ஒரு ஆழ்மன இச்சையினாலேயே. இந்த இச்சை சார்ந்தே உலகின் எல்லாவகை செயற்பாடுகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. இத்தகைய ஆழ்மனத்தின் இச்சையினால் உருவாவதே மேலாண்மை. அதை இந்திய சாதியக் கூறுகள் தொடக்கம் சோவியத்தின் சமத்துவக் கோட்பாடுகள் வரை வகை பிரித்து விவரிக்கலாம்.

ஆகக்குறைந்த தொடக்கப் புள்ளியாக குடும்பம் என்ற இரு மனிதப்பிறவிகளுக்கான ஒப்பந்தத்தில் இருந்தே இதனை ஆரம்பிக்கலாம். ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே குடும்பத்தலைவன் உழைப்பது என்பதும் குடும்பத்தலைவி வீட்டைப்பார்ப்பது என்பதுவும் உருவானதும். துயரம் நிறைந்த சுமையாகிலும் ஆண்களால் அது விரும்பி ஏற்கப்பட்டிருப்பதன் காரணம் அக்குடும்பம் மீதான ஆதிக்கம் தரும் சுகமே. மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் வரக் கூடிய நிபந்தனையற்ற ஆளுமையே அந்தச் சுகம்.

கீழை நாடுகளில் இவ்வகையான ஆணாதிக்கம் கட்டுக்குலையாது போற்றப்படும் நிலையில் மேற்கு நாடுகளின் அதீத நுகர்ச்சிப்பண்புகளால் வேண்டியிருந்த அதிக உழைப்பு ,வருமானம் போன்ற விடயங்களால் பெண்களையும் ஈடுபடுத்த வேண்டிய இக்கட்டிற்கு மேலைத் தேய ஆண்களை உந்தித் தள்ளிவிட்டிருந்தது.

பொறுளாதாரரீதியாக உருவான இச்சுதந்திரம் கொடுத்த சிந்தனையின் விளைவாக உருவான அடங்கிப்போதலை மறுதலிக்கும் பண்பு மேற்கத்தைய நாடுகளில் உருவாக்கிய விடயம் தான் அனைத்து பவித்திர மாயைகளையும் உடைத்தெறிந்த "அக்கிரிமெண்ட்" குடும்பங்கள். கிழக்கில் இருந்து மேற்கிற்கு இடம் பெயர்ந்த நம்மவர்களும் அத்தாக்கத்தில் இருந்து தப்பவில்லையென்பதும் வாராது வந்த திடீர் சுதந்திரத்தில் அடிபட்டு தொலைந்து போன குடும்பங்களும் அதிகம் என்பதும் புறம்பான சரித்திரம்.

இத்தகைய மேலாதிக்கம் சார்ந்ததாகவே உலகின் அத்தனை கிரியைகளும் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலாண்மையின் சான்றாகவே மனித வாழ்க்கையின் தொடக்கப்புள்ளிகளாக இனக் குழுமங்களின் தலைவன் அதனிலும் மேலான மன்னன் போன்ற கட்டமைப்புகள் உலகில் தோன்றின. ஆதி மனிதனின் ஆளுமை என்பது தனி மனிதரின் வீரதீரப் பராக்கிரமத்தாலேயே தீர்மானிக்கப்பட்டன.

காலப்போக்கில் மனித மனங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சி புதிது புதிதான உத்திகளுக்கூடாக மேலாண்மையைக் கட்டவிழ்ப்பது தொடர்பாக சுயபரிசோதனையை மேற்கொண்டது. அதன் விளைவாகவே தனிமனித பராக்கிரமங்களை ஒதுக்கித் தள்ளி இனங்களின் அல்லது நாடுகளின் அல்லது நாடுகளின் கூட்டுகளின் என்று மேலாதிக்கம் வரையறுக்கப்பட்டது. அதனை நிலைநாட்ட பல சங்கங்கள் , நாடுகளின் சபைகள்,கூட்டணிகள் என்று பல வார்த்தைப் பிரயோகங்களுடன் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அதாவது மனித மனத்தின் தீவிர சிந்தனைப் போக்கில் மேலாதிக்கம் கொள்ளுவதற்கான கட்டமைப்புகளைப் போலவே மேலாதிக்கத்தை எதிர்க்கும் சிந்தனைகளும் உருவாகின. அதாவது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த, விரும்பாத தனி மனிதர்கள் கூட்டாக அல்லது சித்தாந்த வாரியாக ஒன்று திரண்டு மேலாதிக்கத்தை எதிர்த்தனர். அதனாலேயே மேலாதிக்கத்தை தம் கரங்களில் எடுத்துக் கொண்டனர்.

இதனை முதலாளித்துவம் அல்லது தனி மனித அதிகாரமான மன்னர் ஆட்சிக்கு எதிரான சோசலிச மார்க்ஸிய மாற்று அதிகாரமாக விளங்கிக் கோள்ளலாம். எவ்வகையான மாற்றமாக இருந்தாலும் மேலாண்மை என்பது ஒரே விதமான குணாதிசயத்தைக் கொண்டிருத்தலாலேயே உலக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்று வரை தீர்ந்து போகாது வீரியத்துடன் இருக்கின்றன.

மேலாதிக்கம் பற்றிய இச்சிறுவிளக்கம் நமக்குக் கற்றுக் கொடுப்பது யாதெனில் மேலாதிக்கம் கொள்ள விழையும் யாவரும் எதிரிகளைக் கொண்டிருப்பார்கள் என்பதுவும் அவர்களை வெறுக்கவும் அறிந்திருக்கின்றார்கள் என்பதையுமே.

இனி தமிழ் ஈழப் போராட்டத்தில் சிங்கள பேரினவாதம் முதல் இந்தியத் தலையீடு அமெரிக்க அதிகார விளையாட்டு என பல கூறுகளை நாம் விளங்கிக் கொள்ளலாம். இது வரை செத்தொழிந்த கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நம் இன்னுயிர்களைப் பற்றிய ஆதங்கத்தில் எழுந்த ஏன்? ஏன்? என்ற விடை கிடைக்காத அனைத்துக் கேள்விகளுக்குமான விடை இங்கே பதுங்கியிருக்கின்றது.

இதை விளங்கிக் கொள்ள முற்பட்ட முதற்கணத்திலேயெ நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்து கொல்ளலாம். ஆம் வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறுக்கக் கற்றுக் கொள்வதனாலேயே எதிரியை அழிக்க முடியும். வெறுக்கும் தேவை இல்லாதவிடத்து சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான அடிப்படையை நாம் இழந்து விடுகின்றோம்.

வசதியற்ற வாழ்வை நாம் வெறுக்கும் போது வசதியான வாழ்க்கையை அடைவதற்கான சிந்தனையையும் செயலையும் நாம் அடைக்கின்றோம். அதே போலவே சுதந்திரமற்ற வாழ்க்கைய நாம் வெறுக்கும் போது சுதந்திரத்திற்கான சிந்தனையையும் செயல் முறையையும் நாம் அடைகின்றோம். வெறும் எண்ணம் என்பது காற்றில் வாள் சுழற்றுவதைப் போல. அதையும் மீறி எம் சுதந்திரத்திற்கான எதிரிகளை அடையாளம் காணும் போது வாள் சுழற்றுவது இலகுவாகின்றது. தமிழீழ மக்களின் எதிரிகளாக இப்போது எம்முன்னால் நிற்பது பாசிசச் சிறீலங்காவும் பாடாவதி இந்தியாவுமே.

வாள் சுழற்றக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே.

"Without something to hate, We should lose the very spring of thought and action"

எதிர்ப்பது சிங்களச் சிறீலங்காவோ இந்தியாவோ அல்லது அமெரிக்காவாகவோ....


ஒரு மிகவும் அரிதான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். பலவித ஜாலம் நிறைந்த நம்பிக்கைகளைக் காட்டிக்கொண்டிருந்த வர்ண பலூன் திடீரென்று உடைந்து போன சோகத்தை ஜீரணிக்க முடியாத வயிற்று வலியில் துவண்டு போயிருக்கின்றோம்.

வால்நட்சத்திரம் தோன்றி மூவேந்தர் தொடர பிறக்கப்போகும் நித்தியத்துவ தேவனை விட இருந்த தேவனே ஏதேனும் ஒரு பொழுதில் உதிக்கும் கணத்திற்காகக் காத்திருந்தோர் இங்கு அதிகம். மாவீரர் தினத்தில் மாலையின் கருக்கலைப் போலவே நம்பிக்கையைக் கருக்கலில் தொலைத்து அடங்கிப்போயிருக்கின்றனர் அவர்கள்.

அதையே போன்ற அல்லது அதையும் விடப் பெரிதான வர்ணங்கள் அடைத்த ஜாலங்கள் காட்டும் பலூனை எதிர்பார்த்திருந்தோரும் இங்கு அதிகம். நாடுகள் கடந்த அரசு என்ற ஆரவாரமும் கேபி என்ற புலியின் முகவர் கைதுடன் அடங்கிப் போனது. நோர்வே தேர்தல், தமிழ் மக்கள் அவை என்ற ஆரவாரங்கள் சில்லிட்டுப் போய் அடங்கியிருக்கின்றன. அடுத்து என்ன செய்வது? என்ற கேள்வியில் முடங்கிப் போய் விட்டன.

ஈழத்தில் தேங்கியிருந்த அரசியல் கட்சிகளோ எப்போதும் போல சிறு மீன் பிடிக்கும் பிரயத்தனத்துடன் கூட்டல் கழித்தல் கணக்குகளுடன் பாரம்பரிய அரசியல் வட்டத்துடன் ஒன்றிப்போக முண்டியடிக்கின்றன. இராணுவப் பேயெழுச்சிக்குப் பயந்து பரதேசங்களில் கரந்தொழித்த அத்தனை கட்சி அரசியல் முகவர்களும் மெல்ல மெல்ல நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தல் என்ற குடையின் நிழலில் போட்டியாளர்களுக்கு "வேண்டியிருக்கும் ஆதரவு " என்ற அவசர ஒக்சிசன் நிழலில் மூச்சு விடும் சலுகையினால் துணிந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வரக்கூடும் என எதிர்பார்க்கும் பாராளுமன்றத் தேர்தலில் மீன் கொத்தக் காத்திருக்கும் தேவையும் அவர்களுக்கு இருக்கின்றது.

இதுவரை ஒற்றைக்கம்பின் சுழற்சியில் வண்டிக்குதிரைகளை மிரள வைத்துக் கொண்டிருந்த தேவதேவனின் இழப்பினைத் தொடர்ந்து லாகானைக் கைப்பற்றும் முயற்சியில் உணர்வு பேதமின்றி அனைவரும் ஒரே பாதையில். முன்னாள் ஆதரவாளர்கள் இன்னாள் எதிர்ப்பாளர்கள் இன்னாள் ஆதரவாளர்கள் முன்னாள் எதிர்ப்பாளர்கள் என்று ஏகப்பிரதி நிதிகளாகும் ஒரே பார்வையோடு.

எது எப்படியிருந்தபோதும் கடைசி வரை போராடிய அல்லது அவதியின் நெருப்பில் எரிந்து துவண்டுபோன மக்களின் கதறல்களுக்கு காது கொடுக்க முடியாத, விருப்பமில்லாத அசட்டையுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். களத்தின் தலைமை மாற்றத்தைத் தாங்களே வலிந்து சுமப்பதாகப் பாவனை செய்யும் புலம்பெயர் கூட்டத்தின் அலறலே பெரிதான கூச்சலாக வீரியம் கூட்டி நிற்கின்றது.

புலி ஆதரவு புலியெதிர்ப்பு என்ற இரண்டு கன்னைகளிலும் ஒருவரை ஒருவர் ஏறிமிதிப்பதுடன் பிரதிநிதித்துவச் சான்று பெறுவதற்கான முயற்சிகள் களைகட்டியிருக்கின்றன. புலியெதிர்பு என்பது அரசு ஆதரவு தான் என்று ஒற்றைச் சுழியத்தில் கிடந்து சுழன்றவர்கள் எவ்வாறு மக்களுக்குள் ஊடுருவுவது என்ற சிந்தனைகளில் சலுகைகள் என்ற எலும்புத் துண்டுகளை வீசியெறிகின்றார்கள். அவர்களையும் விட அரசியலில் மேலானவர்கள் என்று தங்களை வரித்துக்கொண்டவர்களோ மார்க்ஸையும் எங்கல்ஸையும் துணைக்கழைத்துக் கொண்டு துண்டுப்பிரசுரங்களுடன் வீதியில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவர்களைப் போலவே தலித்தியம், தேசியம் என்ற பதாதைகளுடன் பலரும் வீதியில் இறங்கியிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் சிங்கள அரசின் அல்லது இந்திய அரசின் அல்லது அதையும் விடக் கூடுதலாக அமெரிக்க அரசதிகாரத்தின் துணையுடனேயே தங்கள் நியாதாதிக்கத்தை நிலை நிறுத்தத் துணிகின்றார்கள்.

இதில் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் என்பதும் இறையாண்மை என்பதுவும் இவர்கள் சார்ந்திருக்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருக்கும் இவ்வெளி அரசுகளிற்கு எதிரானது என்பதையும் போராட்டம் இவர்களை எதிர்த்தே வெல்லப்பட வேண்டும் என்பதையும் மறந்து போனதும் தான்.

அவ்வாறான எழுச்சியும் வழிகாட்டலும் தோன்றும் வரை இவ்வகையான நீர்க்குமுழிகளின் எழுச்சியும் உடைதலும் தவிர்க்க முடியாதவையே. ஆனாலும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர வேட்கைக்கான மறுதலிப்பை அரசியல் அதிகாரங்கள் கொண்டிருக்கும் வரை போராட்டத்தை நிறுத்தி விட முடியாது. இப்பிராந்தியத்தில் ஈழத்தமிழ் மக்களின் இருப்பை அங்கீகரிக்காது ஒரு சமாதானம் எப்போதும் வந்து விடப்போவதில்லை. அதை எதிர்ப்பது சிங்களச் சிறீலங்காவோ இந்தியாவோ அல்லது அமெரிக்காவாகவோ இருந்தாலும் அது தான் நியதி.

Sunday, November 29, 2009


எரிந்த விகாரை - புலிகள் - சில புல்லுருவிகள்


சூடு சொரணையற்ற தமிழன் என்பது சரியானது தானாவென்று என் தோலைப் பல முறை கிள்ளிப் பார்த்தாயிற்று. சில வேளைகளில் அப்படித் தான் தோன்றுகின்றது. அப்படி மரத்துப் போயிருக்கின்றது. சரியோ பிழையோ தமிழ்த் தலைமைகளின் வழி காட்டலில் இறந்து போன மாவீரர்களை கொலைகாரர்கள் என்று ஒரு லூசுப்பயல் சொல்லிப்போயிருக்கின்றான். தமிழர்களைக் காக்க வந்த அந்த லூசுப்பயலைக் காக்கவும் இப்படியான தமிழ் இளைஞர்கள் தான் தேவைப்படுகின்றது. இப்படியான லூசுப்பயலுக்காக உயிரை விடும் இவர்களை இவன் மாவீரர்கள் என்று அழைப்பானா? இல்லை கொலை காரர்கள் என்று அழைப்பானா?

சிங்களவனை முந்தி தமிழர்களைத் திட்டி நல்ல பெயர்வாங்கத் துடிக்கும் கேணைத் தனம் இது. சிங்களவனே கொச்சைப்படுத்தத் துணியாத ஈகையைக் கொச்சைப் படுத்தும் தமிழனின் வேசித்தனம். தமிழ் முலையில் இருந்து பால் குடித்த அந்த வாய் அழுகிப் போகட்டும். இது தான் இன்று நொந்து போயிருக்கும் தமிழ் மக்களின் சாபமாக இருக்கக் கூடும். மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் துடிதுடித்துக் கிடக்க முட்டாள் சிங்களவனின் விகாரை தீப்பற்றி எரிந்ததென்று ஓலம் இடுகின்றது புளட் என்ற ஒட்டுக்குழுக்களின் மாமாக் கூட்டம்.

தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தி கோவில்களை இடித்து விகாரைகளைக் கட்டிக்கொண்டு வெறியாட்டம் போடும் சிங்கள வெறிநாய்களைப் பற்றி ஒரு சொல் எழுத முடியாது சிங்களவன் செருப்புத் துடைக்கும் இந்தக் கூட்டம் கனடா மக்கள் தமிழனை வேடனாகப் பார்ப்பான் என்று துடிக்கின்றது.

சிங்களஆக்கிரமிப்பிற்குப் பயந்து கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கேட்டவனை கையிலும் காலிலும் விலங்கு போட்டு இழுத்துச் செல்கையில் ஐஸ் கொக்கியும் அமெரிக்கன் புட்பாலும் பார்த்துப் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கும் மனிதாபிமானமில்லாத மக்களைப் பற்றி இந்தப் பதர்களுக்கு ஏன் இந்தக் கவலை.

முள்ளிவாய்க்காலில் மண்மூடிப்போன மக்களின் துயரங்களை எடுத்துக் கூற தெருவிலும் இருளிலும் கூடி நின்ற எங்கள் மக்களுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, தன் சுகம் என்பது பற்றியே பேசிக் கலைந்த இந்த மக்கள் எதை கொடுத்துக் கிழித்து விட்டார்கள்.

முட்டாள் புல்லர்களே, இங்கு வாழும் எந்த மக்களுக்கும் யாரைப் பற்றியும் கவலையில்லை. தன் சுகம் தன் குடும்பம் என்பதைத் தவிர வேறு தேவையும் இல்லாத சொரணையற்ற கூட்டத்தின் அபிப்பிராயம் கேட்டா நீ துடிக்கின்றாய்.

தூள் விற்பதற்காகவே துன்மார்க்க வழியில் பணம் சம்பாதிப்பதற்காக ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு செத்துப்போகும் யாரைப்பற்றியும் கவலைப் படாதவர்களா? ஒரு விகாரை எரிந்ததற்காக கவலைப் படப் போகின்றார்கள். தமிழர் போராட்டம் பற்றி இங்கு கதைத்த பெரும்பான்மையின வானொலிகளோ தொலைக்காட்சிகளோ தமிழரின் உரிமை பற்றியோ துயரம் பற்றியோ கதைக்க வில்லை என்பதையும் தன் நாட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சினை பற்றியே கதைத்தார்கள் என்பதையும் மறந்து போனீர்களா?

அவர்களின் இல்லாத கருணையை இரப்பதாகப் பாவனை செய்யும் நீங்கள் தான் சிங்களவன் தந்த காசிற்கு சிறப்பான சேவை செய்யும் கருங்காலிகள். நாலு மொட்டையர்கள் சேர்ந்து ஒரு காகித அறிக்கை விட்டு விட்டால் அனைத்தும் மாறிவிடும் என்றா எண்ணுகின்றீர்கள்.

ஏன் சிங்களவனே கொளுத்தி விட்டு தமிழர் மீது பழியைப் போட்டிருக்கக் கூடாது? நடக்கவிருக்கும் பொது நலவாய மகாநாடு இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை காரணமாக நடத்த விடக் கூடாது என்று பிரிட்டனுடன் சேர்ந்து கனடாவும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. அதை மாற்றும் பொருட்டு தமிழர்களின் மீது கோபம் ஏற்படுத்தும் பொருட்டு ஏன் சிங்களவன் திட்டமிட்டு செய்திருக்கக் கூடாது. அதையே அவனுக்காக எலும்புத் துண்டு சூப்பும் நீங்கள் ஏன் செய்திருக்கக் கூடாது. அதைச் செய்து விட்டு புலிகளை இழுத்து, அதன் மூலம் முழுத்தமிழ்ச் சமூகத்தையும் கொச்சைப்படுத்த நீங்கள் முயன்றிருக்கின்றீர்கள் என்று ஏன் நாங்கள் உங்களைக் குற்றஞ்சாட்டக்கூடாது?

பொலிசாரே விசாரணையில் இறங்கியிருக்க,விசாரணை இடை நடுவினில் நின்றிருக்க, உங்களால் மட்டும் எப்படி யார் செய்தார்கள் என்ற முடிந்த முடிவிற்கு வர முடிந்தது? புலிகளே சுருட்டிய பணத்தைப் பங்கு போடும் இழுபறியில் இருந்து கொண்டிருக்க இந்தத் தேவையில்லாத வேலையில் அவர்கள் ஈடுபடுவார்களா? பணத்தைபங்கு போடும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தை தூய்மைப்படுத்தும் முகமாகவே இது வரை புலிகளின் ஊது குழலாக நடித்துக் கொண்டிருந்த TVI,CMR,CTR தொலைக்காட்சி வானொலிகள் இந்த ஆண்டு மாவீரர்கள் பற்றி எந்த நிகழ்ச்சிகளும் இல்லாது செய்தியாகக் கூட எதைனையுமே அறிவிக்காது மெளனம் காத்ததே.. அதை புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லாத முட்டாள்களா நீங்கள்.

ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கும் நீங்கள் கனடா போன்ற வெளிநாடுகளில் புனிதபிம்பம் காட்டினால் மட்டும் மக்கள் நம்பி விடுவார்களா? என்ன?

குறிப்பு: முட்டாள்களின் கூடாரமும் மூடர்களின் முகவரியும்

http://inioru.com/?p=8053

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் முட்டாள்களும்


இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களை வகை தொகையின்றி கொன்று போட்டு மண்மூடிக்குவித்து விட்ட மண்மேட்டில் நாட்டி விட்ட வெற்றிக்கொடியின் அறுவடைக்கு சிங்களப் பாசிசம் போட்டி போடும் நாள் தான் இந்த ஜனாதிபதி தேர்தல் நாளாக இருக்கின்றது.

சிங்களத்தை மீட்டெடுத்த துட்டகாமினிப்பட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் அடிபிடியாக இது இன்று சிங்கள மக்களால் இனங்காணப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் உள்நாட்டுப்போரில் வடக்கிலிருந்து பிரிந்து போக எத்தனித்த தெற்கை எதிர்த்துப் போரிட்ட தளபதிக்கு வெற்றியின் அறுவடை சொந்தமா ? அல்லது அந்த படை நடவடிக்கையை நெறிப்படுத்திய ஆபிரகாம் லிங்கனுக்கு அறுவடை சொந்தமா ? என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்வி இது.

அமெரிக்காவில் அறுவடையை அள்ளிக்கொண்டதென்னவோ ஆபிரகாம் லிங்கன் தான். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதி சிறந்த இடத்தை ஆபிரகாம் லிங்கனுக்கே கொடுத்துப் போற்றுகின்றார்கள் அமெரிக்க மக்கள் இன்றுவரை.

ஆனால் இலங்கையில் சிங்களவர்களால் கொண்டாடப்படும் துட்ட கைமுனு ஒரு படைத்தளபதி + மன்னன். இந்த இடத்தில் தான் இந்த முரண்பாடு தீவிரம் அடைவதுடன் சரத் பொன்சேகா வகையறாக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததும் அதுவே. புலிகளுடனான வெற்றி எதிரிகளான தமிழர்களை வெற்றி கொண்ட பெரு விழாவாக சிங்களப் பாமரர்களால் வெடி கொழுத்திக் கொண்டாடப் பட சரத் பொன்சேகாவின் புகழின் வெளிச்சம் பேதுருதாலகால மலையையும் தாண்டி வளர்ந்து கொண்டே செல்கின்றது.

பலமுறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போன கையாலாகாத எதிர்க்கட்சித் தலைவனாக ரணில் விக்கிரமசிங்க இன்னும் யூ.என்.பி தலைவராக தொங்கிக்கொண்டிருக்க அதிர்ஷ்டக் காற்று சரத் பொன்சேகாவை தள்ளிக்கொண்டு உச்சத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றது. சிங்கள இனவாதக்கட்சியான மற்றொரு எதிர்க்கட்சி ஜே.வி.பி சரத் பொன்சேகாவின் பெயரை மந்திர உச்சாடனம் செய்ய சரத் பொன்சேகாவின் பெயர் பாமர ஜனங்களின் வாக்கு வங்கிகளைக் குறிவைக்கும் பூமராங் ஆக மாறிப்போய் விட்டது.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத தவிப்பில் மகிந்த கூட்டணி முழங்கால் வரை தேய்ந்து கூனிக்குறுகி நிற்கின்றது.

"மருங்கடவெல யக்கடயா" போன்ற கெளபாய் படங்களைப் பார்த்து வீரம் பற்றி அறிந்து கொண்ட சிங்கம் பெற்ற வீரப்புத்திரர்களின் சிலுப்பிக்கொண்டிருக்கும் மனங்களைப் படிய வைத்து வாக்குப் பெறுவதிலுள்ள சிக்கல்களை அறிந்து கொண்ட மகிந்த கூட்டணி சிராய்ப்புக் காயங்களுடன் (பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் தோல்வி, சீனாவின் அருணாச்சலப் பிரதேசம் பற்றிய சினப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு, பங்களாதேஸின் எல்லைச் சண்டை) வல்லரசுக் கனவுடன் நொண்டிக்கொண்டிருக்கும் இந்தியாவின் துணையை நம்பி ஒருபக்கமும், இலட்சியத்திற்காக மட்டுமே போராடி இறந்த (தலைமை தப்புக்கள் செய்திருந்தாலும்) மாவீரர்களை கொலையாளிகள் என்று வர்ணித்த எலும்புத் துண்டுகளை நக்கிச் சுவைப்பதே இலட்சியமாகக் கொண்டியங்கும் டக்ளஸ், ஆனந்த சங்கரி, பாதிப்புலி பாதிப்பூனையாகிப் பதுங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையான், கருணா போன்ற அரைவேக்காடுகளையும் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் வாக்கு வங்கியைக் குறி பார்த்து அடிக்கத் துணிந்திருக்கின்றது.

இதனிடையில் தமிழ்த் தேசிய முன்னணி, உதிரிகளான மனோ கணேசன் போன்றவர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவுகள் செய்யப்படவில்லை, தமிழர்களுக்காக அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளைப் பார்த்து முடிவு செய்வோம் ..என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகளை விட்டுக்கொண்டிருப்பது இவர்களின் அரசியலை நன்கு அறிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களால் விளங்கிக் கொள்ள முடியாததல்ல.

இது ஒரு வகை கேடு கெட்ட அரசியல் பேரம். 30 ஆயிரத்திற்குமதிகமான மக்களைத் துடி துடிக்கக் கொன்று போட்டவர்களிடம் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை முட்கம்பி வேலிக்குள் அவர்களின் அடிப்படை உரிமையையும் மீறி அடைத்து வைத்திருக்கும் அராஜக வாதிகளிடம் எந்த வகையில் தமிழ் மக்களுக்கு நன்மை விளைவிக்கும் கொள்கைகளை எதிர்பார்க்க முடியும்.

இந்த நிலையில் சிங்களப் பாசிசத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தோலுரித்து விமர்சனம் செய்யவேண்டிய பொறுப்புள்ளவர்கள் சலுகைகளுக்காகச் சதிராட்டம் போடும் அவலம் இது. தமிழ் மக்கள் சிந்திய குருதி அனைத்தும் சிங்கள்ம் வீசும் சிலபல எலும்புத் துண்டுகளைச் சுவைக்கவே என்ற இவர்களின் மூளையின் குறுகுறுப்பை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி இவர்களை குப்பைக் கூடையில் அள்ளிப்போட வேண்டும்.

இன்றைய தமிழ் தேசிய முன்னணியும் அதே அதே அரதப்பழசான கூட்டணியின் நழுவல் போக்கிலான அரசியலையே இத்தனை இழப்புகளின் பின்னால் நொந்து கிடக்கும் தமிழ் மக்களிடம் எடுத்து வருகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தன் தன் சுய இலாபங்களை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் இத்தகையவர்களை ஒதுக்கித் தள்ளுவதே இத்தகைய அரசியல் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதே தமிழ் மக்களின் ஆத்மார்த்தமான கோபத்தை வெளிக்காட்டுவதற்கும் சர்வதேசத்தின் கள்ள மெளனத்தைக் கலைக்கவும் உதவி செய்யக்கூடும்.

Saturday, November 28, 2009


பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் - இந்தியா


"கெட்டிக்காரனின் புளுகு எட்டு நாளைக்கு" என்பது நம்மூரில் வழங்கும் சொல்லடை. கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிறைவு பெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் கணக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரும் சிங்கள அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. கூடவே பிரபாகரனின் உடலம் என்றும் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடையாத தமிழ் பேசும் மக்களே இருந்திருக்கவில்லை. தம் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவரை அடையாளங்கண்டிருந்த ஈழத்தமிழ் மக்களின் நிலையோ துயரத்தின் உச்சமாக இருந்தது.

கடைசி நம்பிக்கையையும் தொலைத்து விட்ட தமிழ் மக்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்து சிங்களம் இந்தியாவின் ஆசியுடன் அராஜகம் செய்தது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டிய சிங்களமும் ஆசியும் ஆலோசனையும் கொடுத்து அதனை ஆட்டுவித்துக் கொண்டிருந்த இந்தியாவும், இந்தியாவுடன் நட்புக்கரத்தை மறைவாகப் பற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மேற்குலகும் அமெரிக்காவும் புலிகளுக்கெதிரான தடையை நீக்கப்போவதில்லையென்ற போதே முதலாவது பொறி தட்டியது.

இல்லாத புலிகளுக்கெதிரான தடையை இவை ஏன் நீடிக்கின்றன என்ற நியாயமான கேள்வி எழுந்தது. இந்தியாவின் உள்நோக்கங்களான இலங்கையின் வளங்களைச் சுரண்டல் குறைந்த விலைக் கூலித் தொழிலாளர்களைப் பெறுதல் என்ற அடிப்படை நோக்கங்களை விரைந்து பெற்றுக்கொள்ள முடியாததும், முட்கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடந்த மக்களைச் சர்வதேசத்தின் அழுத்தத்தை மீறி கண்ணி வெடி அகற்றப்படாமை என்ற போலிக்காரணம் காட்டியும் வெளியில் விட தயக்கம் காட்டியபோதும் இரண்டாவது பொறி தட்டியது.

சிங்களத்தின் இராணுவ , அரசியல் ஆட்சியாளர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலையால் பதட்டப்பட்ட இந்தியாவின் செயல்களும் சர்வதேச சமூகத்தின் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நீர்த்துப் போக இந்தியா எடுக்கும் இராஜதந்திர நகர்வுகளும் தொடர்ந்த சந்தேகத்தை உறுதி செய்து கொண்டேயிருந்தது.

உண்மையிலேயே புலிகளின் தலைவர் கொல்லப்பட்டிருந்தால் சிங்கள ஆட்சியைவிட அதிகம் மகிழ்ச்சிப்பட்டிருக்கக் கூடியது இந்தியாவேதான். இடைஞ்சல்கள் அற்ற இலங்கையின் முழுமையான சரணாகதியை வேண்டி நிற்பது இந்தியாவே. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் முழுமையான பகையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இலங்கையின் முழுமையான சரணாகதி ஓரளவு ஆறுதலை அளிக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.

ஆனாலும் புலிகளின் தலைவரின் "தப்பித்தல்" அல்லது "தப்பித்திருக்கக் கூடும்" என்ற சந்தேகம் இப்போது இருந்த நிம்மதியையும் தொலைத்த சங்கடத்தில் இந்தியாவை ஆழ்த்தியுள்ளது. புலிகளின் தலைவரை கோட்டை விட்ட சிங்கள இராணுவத்தால் உறுதியான தகவலைக் கொடுக்க முடியவில்லை. அப்படியான உறுதியான தகவலை பெறமுடியாத இக்கட்டில் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒரு "மரண அத்தாட்சிப் பத்திரத்தை" தயார்ப்படுத்த முடியாது சிங்களம் விழியைப் பிதுக்குகின்றது.

அதனாலேயே 1991 இல் படுகொலை செய்யப்பட்ட இராஜீவின் ஆவியை நிம்மதியாக உறங்க வைக்க இந்திய ஆட்சியாளர்களால் முடியவில்லை. அண்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட தனி வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் காடுகளைச் சல்லடை போட்டு பிப்ரவரிக்குள் கண்டு பிடித்து விட முடியும் என்று சிங்கள இராணுவத்தாலும் அதன் ஆட்சியாளர்களாலும் அண்மையில் "அதிமுக்கிய" விஜயம் மேற்கொண்ட பிரணாப்பிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நம்பி எடுக்கப்பட்ட முடிவாகும் இது.

அதே நேரம் பதுங்கியிருந்த புலி "மாவீரர்" நாளில் பாயலாம், அப்படிப் பாய்ந்தால் ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம் என்ற நப்பாசையும் இந்திய, சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இருந்தது. அப்படியான ஒரு தேவை குறித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவத்தின் அசைவுகளை முன்கூட்டியே மோப்பம் பிடித்திருந்த சரத் பொன்சேகா தனக்கு எதிராகவே இந்திய இராணுவத்தின் உதவி கேட்கப்பட்டிருந்தது என்று படங்காட்டியபோது, அனைத்தும் பிசுபிசுத்துப் போய் விட்டது.

புலியைப் பிடிக்க வைத்திருந்த இராணுவம் எலியைப் பிடிக்கவா என்று இந்தியாவும் மகிந்தவும் தலையில் அடித்துக் கொண்டதும் இரகசியமாக நடந்தேறியது. தப்பிச் சென்ற புலிகளின் ஊடுருவல் தமிழகப் பகுதிகளில் இருக்கக் கூடும் என்ற ஊகமே ப.சிதம்பரத்தை தெற்குப் பகுதிகளால் தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவக் கூடும் என்று பேச வைத்தது. பாகிஸ்தான் முஸ்லீம் தீவிர வாதிகளின் ஊடுருவல் நிகழ பனி விழும் காஸ்மீர் மலைபிரதேசங்களும் பாதுகாப்பற்ற நீண்ட குஜராத்தி கடற்பிரதேசங்களுமே சிறந்தது என்பதை பயங்கரவாதிகள் உட்பட அனைவரும் அறிவர்.

புலிகளின் தலைவரைப் பிடிக்க முடியாது போனதனாலேயே கோபாலபுரத்தைச் சுற்றி ஒரு ஈ காக்காய் கூட பறக்க முடியாதபடி பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அண்மையில் தவறிப்போய் அங்கு நுழைந்த ஒரு காரும் அதில் இருந்தவர்களும் பட்ட பாடு அவர்களின் துரதிர்ஷ்டத்தை நினைவு படுத்தியதுடன் கருணாநிதியின் உயிராசையையும் புலப்படுத்தி நிற்கின்றது. தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்த மாமன்னனால் இப்போது தனியறையில் பஞ்சணை மெத்தையில் கூட படுத்து நிம்மதியாகத் தூங்க முடியாதிருக்கின்றது.

மே மாதத்தில் இறந்து போன பிரபாகரனுக்கு நவம்பர் மாதத்தில் கூட இறப்புச் சான்றிதழ் கொடுக்க முடியாத சிறிலங்கா அரசையும் இறப்புச் சான்றிதழைப் பெற்று இராஜீவின் ஆவியை நிம்மதியாகத் தூங்க விட்டு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்காது வழக்கை முடிக்க வக்கற்ற இந்திய அரசையும் என்னவென்பது.

இவர்கள் தான் இந்து சமுத்திரத்தில் வல்லரசாகும் வீண்கனவுகளுடன்.. அணு ஆயுதம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Thursday, November 26, 2009


"நானும் தமிழன் தானே' காக்கை வன்னியன் கருணாநிதியின் கடிதம்


"முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும்.(இதைத் தானே தமிழுலகம் உங்களை[கருணாநிதியை] பார்த்து கூறுகின்றது.. புரியாதது போன்ற பாசாங்கு ஏனோ)

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். (யாருக்குப் பொருத்தமில்லாவிட்டாலும் இது உங்களுக்கு மிகப் பொருத்தமாக அமையுமே கருணாநிதி)

மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும்.

""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். (உங்கள் [கருணாநிதியின்] செயல்களைப் பார்த்து தமிழர் எங்கள் நெஞ்சும் தான்)

இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.(மக்களே குறித்துக் கொள்ளுங்கள்)

உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்!

அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும்.

மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும்.

காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று காக்கை வன்னியன் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுச்சி நாள்
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை வரலாறாகவே அறிந்திருந்தோம். அந்த வரலாற்றுக்கே சாட்சியமாக எங்களை இருக்க வைத்தான் ஒரு மனிதன். அவர் தான் பிரபாகரன். புலிகளின் தவறுகளோடு என்னால் ஒன்றிப்போக முடியாவிட்டாலும் அவர்களின் வீரத்தோடு என்னால் இணைந்து போக முடியும். எலிகளாகவே வாழ்ப்பழக்கப்பட்ட நம் மக்களைப் புலிகளாக நிமிர்த்தியவர் அவர்.

துயரங்களே வாழ்வாக வாழும் உரிமையே பிச்சையாகக் கையேந்தி நின்றவர்களை வாழ்க்கையின் உச்சங்களை எட்டச் செய்த மகாவீரர் அவர். வாலை குழைத்து சலுகைகளுக்காகக் கையேந்தி நிற்கும் முதுகெலும்பற்ற கோழைகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த உன்னத வீரன் அவர்.

அகிம்சைகளும் அஞ்சாமையும் ஒரு சொட்டு இரத்தத்தில் அல்லது ஒரு துண்டு எலும்பில் வாலை மடக்கி உட்கார்ந்ததைப் பார்த்து " தமிழா உனக்கு எதிர்காலமே இல்லையா? "என்று கூனிக்குறுகி இருந்த ஒரு இனத்தை உலகமே நின்று திரும்பிப் பார்க்க வைத்தது அவர் தான்.

குட்டக் குட்டக் குனிவதல்ல வாழ்க்கை என்பதை இளைய தலை முறைக்கல்லாது எல்லாத் தலை முறைக்கும் எடுத்துக் காட்டியதும் செயற்படுத்திக் காட்டியதும் அவரேதான். எத்தனை இஸங்களைக் கற்றிருந்தாலும் எத்தனை அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் எத்தனை அறிவுச் சுடர்களைக் கொழுத்தி வைத்திருந்தாலும் எந்தக் கல்வி மானாலும் எந்த அறிஞராலும் எந்த அரசியலாளராலும் சொல்லிக் கொடுக்க முடியாத ஒன்றைச் சொல்லிக் கொடுத்தவர் அவர்.

அது தான் சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்பது. சில நூற்றாண்டுகளாக நீண்டிருந்த அடிமை வாழ்க்கையில் மறந்து போயிருந்த தமிழனின் வீரம். அதற்காக அந்த வீர மறவனுக்கு அவரின் பிறந்த நாளில் "சல்யூட்"

Wednesday, November 25, 2009


சூடு பிடிக்கும் நவம்பரும் தேவையான சிந்தனையும்


அனல் பறக்கும் அரசியல் மாதமாக நவம்பர் எப்போதும் இருக்கின்றது. துயரத்தின் அடுக்குகளைத் துடைக்கமுடியாத இயலாமையில் ஈழத்தமிழினம் துவண்டு விடும் மாதம் இது. இன்றளவும் இதுவே உண்மையாகவும் இருந்தது. ஆனால் இறுதிப் போரும் இழந்துவிட்ட இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளும் இந்த மக்களையும் எண்ணிப்பார்க்க வேண்டிய தேவையை உணர வைத்துள்ளது. இந்த மாவீரர்களின் இழப்புக்களைப் போலவே இந்த மக்களின் இழப்புகளும் பெறுமதியானவை.

தமிழராய் இருந்ததனாலும் தமிழராய் வாழ விரும்பியதாலுமே இவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றது. இதே போல தமிழர்களாய் இருந்ததாலேயே உயிர் பறிக்கப்பட்டவர்களும் நினைவு கூரப்படுவது அவசியம். புலிகளின் அரசியல் தோற்றுப்போன இவ்வேளையில் புலி அரசியலால் கட்டாயமாக்கப்பட்ட சில தளைகளில் இருந்தும் வெளிவருவது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் போராட்டத்தில் இழக்கப்பட்ட உயிர்களின் நினைவுகளும் போற்றுதலும் முழுத் தமிழனத்திற்குச் சொந்தமானது. அதை இனியும் தோற்றுப்போன ஒரு அரசியல் கொள்கைக்காகவோ அல்லது அதனுடன் தொட்ட குறை விட்ட குறையாகத் தொற்றிக்கொண்டிருக்கும் ஒரு சிலரின் பணப்பைகளை நிரப்புவதற்காகவோ பயன்பட அனுமதிக்கக் கூடாது.

விட்டதைப் பிடித்து விட முயற்சிக்கும் ஒரு சிலரினதும் எட்ட முடியாது இருந்ததை எட்டிப்பிடித்து விட முயற்சிக்கும் ஒரு சிலருக்கும் இடையில் நடக்கும் சிண்டு முடிப்புகளிற்குள் தமிழ் மக்களின் இருப்புக்கான உரிமையைக் காவு கொடுக்க முடியாது.

ஈழத்தமிழினத்தின் இருப்பிற்காகக் குரல் கொடுக்கும் ஒரு சிலரின் கோரிக்கையாக எழுந்திருக்கும் புலிகளால் திரட்டப்பட்ட மக்களின் சொத்தைப் பொதுச் சொத்தாக வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நேர் செய்ய புலிகளின் அனுதாபிகளுக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதே போல மாற்றுக்கருத்தாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்களும் செத்த பாம்பை மீண்டும் மீண்டும் அடிப்பதைப் போல புலிகளின் கடந்த காலத் தவறுகளை விமர்சிப்பதால் எந்த நன்மையும் தமிழினத்திற்கு உருவாகப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்களப் பாசிசத்தின் இன அழிப்பிற்கு ஏதுவாக முட்கம்பி வேலிகளுக்குள்ளும் போராளிகள் என்ற போர்வையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாகும் இளைஞர் யுவதிகள் பற்றியும் பொதுச் சிந்தனையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணம் இது.

இறந்தவர்களை நினைவிருத்திக் கொள்ளும் வேளையில் இருப்பவர்களைக் காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியதும் எங்களின் கடமையும் அவசியமுமாகும்.

தமிழினத்தைப் பிரித்துப் போடும் பேரினவாதத்தின் நோக்கங்களை ஈடு செய்யும் வகையில் நாடு கடந்த அரசு, மகாசபை போன்ற பிரிவினைகளை தோற்றுவிப்பதும் புலம் பெயர்ந்த மக்கள் நாடு வாரியாகப் பிரிந்து நின்று செயற்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

பதவி சுகம் தேடும் அரசியல் வாதிகளையும் பேரினவாதத்திற்கு எடுபிடி வேலைகள் செய்யும் கூலிகளையும் அவர்களின் தந்திர அரசியலையும் குப்பைக் கூடையில் தூக்கிப் போட வேண்டியதும் இன்றைய தேவையாகின்றது. புலி புலியல்லாத அரசியலைப் புறம் தள்ளி ஈழத் தமிழர்களுக்கான அரசியலை முன்னிறுத்துவதும் அதற்கான வழிவகைகளைத் தெரிவு செய்வதும் இன்றைய இக்கட்டுகளைக் கடக்க உதவி செய்யும்.

Friday, November 20, 2009


தன் தலையில் மண் அள்ளிப் போடுவது- முட்டாள் கருணாநிதி


பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்கு துன்பம் நேர்ந்தது என்று கூறுகிற கருணாநிதிக்கு மனச்சாட்சியே கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், கரிகாலன், ராஜராஜன் ஆகியோர் பெற்ற புகழை பிரபாகரன் பெற்றுள்ளார். உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் இதயங்களில் அவர் வீற்றிருக்கிறார்.

கருணாநிதியால் அவரைக் கொச்சைப்படுத்த முடியாது. உண்மையை தமிழர்கள் அறிவார்கள். முப்படைகளை அமைத்து, தமிழ் ஈழ அரசாங்கத்தை உலகம் ஏற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியவர் பிரபாகரன். போர்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகரற்ற தலைவர் அவர்.

2009 ஈழப்போரில் மத்திய அரசின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டது. அதைக் கண்டு உள்மனதில் மகிழ்ச்சி அடைந்தவர்தான் கருணாநிதி.

2004-க்குப் பிறகு 5 ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு தேவையான ஆயுதங்கள், ரேடார்கள் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு கொடுத்தது. விடுதலைப் புலிகளுக்காக வந்த 14 கப்பல்களை கடலில் மூழ்கடித்தது இந்திய அரசு. 5 ஆண்டுகளாக இதற்கு உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி.

தனது குடும்பத்துக்கு பதவிகளைப் பெற சோனியா குடும்பத்தினரின் ஆதரவு தேவை. அதனால் தமிழினத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப் போவதில்லை.

தமிழர்களின் உள்ளத்தில் எழுந்துள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கருணாநிதி முன் வைத்துள்ளார். பிரச்னையை திசை திருப்புவதற்காக இலங்கை அகதிகள் மீது திடீரென கரிசனம் காட்டுகிறார் என்றார் வைகோ

Monday, November 16, 2009


குரங்கும் மனிதரும்

இன்று கேட்ட இரண்டு நிகழ்வுகள் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. இரண்டும் நடந்தது வல்லரசு கனவுடன் அண்டை நாடுகளில் அடாவடியில் இறங்கியிருக்கும் இந்தியாவில் தான்.

மனிதர்கள் சில வேளைகளில் தங்கள் உயர்வான குணத்தால் தேவர்களாகி விடுகின்றார்கள். அதே போல சில வேளைகளில் தங்கள் கீழான குணத்தால் அசுரர்களாகி விடுகின்றார்கள். மனிதர்களாக இருக்கத்தான் மறந்து விடுகின்றார்கள்.ஆனாலும் இத்தகைய அரக்கத்தனத்தை இந்தியாவிலன்றி வேறு எங்கும் காணமுடியாது.

குரங்கிற்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கூட சக மனிதருக்கு தரவிடாத வெறுப்பிற்கு காரணம் என்னவாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா?

செய்தி1:

தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது.
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்கை விரட்டி அடித்து வருகின்றனர். ஆனாலும் ஆண் குரங்கு குட்டி குரங்கை குறிவைத்து சுற்றி சுற்றி வருகிறது.

இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். தாய் குரங்கு நேரடியாக புகார் கொடுப்பது போல ஒரியா மொழியில் மனு ஒன்றை தயாரித்தனர். அதன் கீழ் கைரேகைக்கு பதில் குரங்கின் வால்பகுதியை மையில் நனைத்து பதிவு செய்தனர்.

அதை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். தாய் குரங்குக்கு சிமியன் என்றும், ஆண் குரங்குக்கு ராஜா என்றும், குட்டி குரங்குக்கு குணா என்றும் மக்கள் பெயரிட்டு இருந்தனர்.

சிமியன் கொடுத்துள்ள புகாரில், என் குழந்தையை எனது கணவர் ராஜா கொல்ல முயற்சித்து வருகிறார். அவரிடம் இருந்து என் குழந்தையை பாதுகாக்க வேண்டும். கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தந்தை குரங்கு ராஜா மீது இந்தியன் பியனல் கோடு 307 (கொலை முயற்சி), 363 (கடத்தல்), 366 (அடிமைப்படுத்த கடத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தி 2:

அசுரர்களால் மனிதர்கள் அடித்துக் கொல்லப்படும் அசுரக் காட்சி. நான்கு வேதங்கள், திருமறைகள், புத்தர்,இராமகிருஷ்ணர் போன்ற புனிதர்கள் தோன்றியும் மாற்றி விட முடியாத பாவியர் நிறைந்த பூமி தான் இந்தியா. அதை மீண்டும் மீண்டும் வரலாற்றில் பதிந்து கொண்டேயிருக்கின்றது.இந்தியா - ஈழம் எதிர் முனைகளின் ஒவ்வாமை
இது காந்தத்தின் கவர்ச்சி அல்ல. காத்திரமான மக்களின் இருப்பு. பொருண்மிய அரசியல் இராணுவ மேலாண்மையை வலிந்து திணிக்க முயலும் இந்தியாவிற்கு எதிரான போராட்டம். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தை விரித்துக் கொள்ள முற்படும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம். இந்த அச்சு ஒன்றிலேயே ஈழம் இந்தியாவுடன் தொடர்பு படுகின்றது. அதாவது ஆக்கிரமிப்பாளர்களும் அதை எதிர்த்து நிற்கும் விடுதலையுணர்வாளர்களும். இது தான் யதார்த்தம்.

ஈழ மக்களின் போராட்டம் நாடு கடந்தது. இந்தியாவின் ஆசை அளவு கடந்தது. ஏற்றுக்கொள்ள முடியாதது. திறந்த பொருளாதாரத்தின் விசப்பல். நச்சு நிறைந்தது. இதற்கான போராட்டம் இன விடுதலையுடன் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது மிக அவசியமானது. மக்கள் சக்தியை அவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமே ஒருங்கிணைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் பின்னடைவிற்கு முக்கிய காரணம் மக்கள் சக்தியைப் போதிய அளவு ஒருங்கிணைக்கத் தவறியதே.எதிரியைப் பட்டவர்த்தனமாக அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவின் தயவை நம்பியிருத்தலையும் நாடுவதையும் அறவே துண்டிக்க வேண்டும்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் அவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்த முடியாது.அவர்களை அலட்சியப்படுத்தி மக்களை முன்னிறுத்தி மக்கள் போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும். ஏழைத் தொழிலாள மக்களை முன்னிறுத்தி எடுக்கப்படும் போராட்டத்தின் மூலமே இந்தியாவின் இக்கபடத்தை உடைத்தெறிய முடியும்.

இந்தியாவின் விசப்பல் இன்று தமிழ் மக்களை மட்டுமல்லாது இலங்கையின் அனைத்து மக்களையும் கடித்துக் குதறிக்கொண்டிருக்கின்றது. அதை அறிந்தும் இந்திய அநாகரீகத்திற்கும் உறிஞ்சலுக்கும் சிங்கள அரசியல்வாதிகள் துணை போகின்றார்கள். அது அவர்களின் முதலாளித்துவ அடக்கு முறை மனப்பான்மையில் இருந்து வெளிப்படுகின்றது.

தொழிலாளர் கட்டமைப்பு பலமாக இல்லாத விவசாயத் தொழிலாளர்களையும் உதிரித்தரம் வாய்ந்த தொழிலாளர்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் கொண்ட ஈழத் தமிழ் சமூகத்தால் இதை எவ்வாறு சாதிப்பது என்பது பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சீனா,கியூபா போன்ற நாடுகளின் முன்னுதாரணங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். காலத்தின் மாற்றத்திற்கொப்ப நவீன உத்திகளையும் இணைந்த சக்திகளையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

புலம் பெயர்ந்த சமூகத்தால் உலகின் பல நாடுகளிலும் இருக்கக் கூடிய முற்போக்குச் சக்திகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயல்வது எங்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும். இந்திய இலங்கை அரசுகளின் செயற்பாடுகளை ஒடுக்கவும் தடுக்கவும் இவ்வாறு ஒருங்கு படுத்தும் அன்னிய முற்போக்குச் சக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய சுதந்திர வாழ்வுக்கான உரிமையை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

தெற்கின் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து சிங்களப் பாசிச ஆட்சியின் அவலத்தை உலக நாடுகளின் முன்னால் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பாசிச அரச முகமூடியைக் கிழித்தெறிந்து அம்பலமாக்குவதுடன் இந்தியா என்ற கட்டமைப்பில் மூச்சுத்திணறி விழிபிதுங்கும் இன, வர்க்கக் குழுமங்களின் விடுதலைக்கும் உந்துகோலாக இருக்க வேண்டும்.

இதை நினைவிற்கொண்டு செய்யப்படும் முயற்சிகளுக்கு எம்பூரண ஆதரவை நல்கவேண்டும். சுயநல அரசியலையும் ஒரு கட்சி இயக்கத்தையும் துடைத்தெறிய வேண்டும். முதிர்ச்சியற்ற இவ்வகையான நடவடிக்கைகளால் நாம் நிறையவே இழந்தாயிற்று.பாதிக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க நாம் அயராது போராட வேண்டும். சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதனை நாம் யாரிடமும் கெஞ்சிப்ப்பெறத் தேவையில்லை. அதைப் போராடியே பெறவேண்டும்.

அந்தப்போராட்டத்திற்கு நம்மை நாமே தாயார்ப்படுத்திக் கொள்ளலே இப்போதைய அவசியமாகின்றது.

Sunday, November 15, 2009


இலங்கை,இராணுவப்புரட்சி,இந்தியா,வல்லரசுக்கனவு

சிங்கள அரசு கூறுவதைப் போல யுத்தத்தின் பின்னாலான வெற்றி இன்னும் கிடைத்தபாடில்லை. இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மகிந்த ராஜபக்ஸவால் விரைந்து முன்னேறமுடியாது பல தடைகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால் மகிந்தவை விட அதிகம் பதட்டப்பட்டிருப்பது இந்தியாதான். தமிழ் மக்களின் எதிர்ப்புச் சக்தியை அழித்தொழித்து இந்தியா விரும்பும் பொருளாதார மேலாண்மைக்கு அமைவாக "பதப்படுத்தும்" நிகழ்ச்சித் திட்டத்தில் மனிதாபிமானத்தைக் காலில் போட்டு இரத்தம் தோய்ந்த வழி முறைகளைக் கடைப் பிடித்ததே இன்று மகிந்த ராஜபக்ஸேயிற்கு சங்கடமாகவும் இந்திய மேலாண்மை ஆசைக்கு தடைக்கல்லாகவும் வந்து நிற்கின்றது.

அமெரிக்காவின் ஆசீர்வாதம் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்திருந்த போதிலும் சர்வதேச சமூகத்தால் வெளிக்கொணரப்பட்ட போர்க்கால அத்து மீறல் குறித்த சாட்சியங்கள் அமெரிக்காவை சற்றே யோசிக்க வைத்துள்ளது. போர்க்கால அத்து மீறல்களின் அழிக்க முடியாதா சாட்சியங்களை இலகுவாகத் திரட்டிக்கொண்ட சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்து அதிர்ந்து போயிருக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது போர்க்கால குற்றங்களுக்கான பொறுப்பின் மீது சிலரைப்" பலிக்கடா"வாக்க வேண்டி நிற்கின்றது. போர்க்காலக் குற்றங்களுக்கான பலிக்கடாவாக முன்மொழியப்பட்டிருந்த இராணுவத் தளபதி பொறியில் இருந்து நழுவி எதிர்ச்சக்தியாக பிரமாண்டம் எடுத்திருப்பது இந்தியாவை மலைக்க வைத்திருக்கின்றது.

சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவையில் பலிக்கடாவாக இப்போது எஞ்சியிருப்பது மகிந்தவின் சகோதரர்கள் என்ற நிலைமையானது மகிந்த ராஜபக்ஸேயை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கள அரசிற்கும் அதன் அத்து மீறல்கள், கொடுமைகள் அனைத்திற்கும் ஒத்துழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டு இப்போது இந்தியா மீது விழுந்துள்ளது. மகிந்தவும் அவரின் சகோதரர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் இந்தியாவின் அப்பட்டமான அநீதியான மனிதாபிமானத்திற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளும் வெளிச்சத்திற்கு வரும்.

இத்தகைய ஒரு ஆபத்தான நிலையை இலங்கை விடயத்தில் இந்தியா ஏன் எடுத்தது என்ற கேள்வி பலரையும் வியப்பிலாழ்த்தும். இராஜீவின் கொலை என்பது பொது மக்களுக்காகச் சொல்லப்படும் மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அமெரிக்காவினதும் உலக வங்கியினதும் பிராந்திய பொருளாதார மேலாண்மை குறித்த சிந்தனையுடன் மன்மோகன் சிங் தலைமையிலான அரசினை வழி நடாத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தின் சிந்தனையும் இணைந்து கொண்டதே முக்கிய காரணமாகும்.

திறந்த பொருளாதாரத் திட்டங்களின் மூலம் இலங்கையின் இயற்கை வளங்களை மட்டுமன்றி மனித வளங்களையும் கைப்பற்றும் திட்டமே புலிகளை அழித்தொழிக்கும் முன்முயற்சிக்கு இந்தியாவை உந்தித் தள்ளியது.

நீண்ட நாட்களாக சந்தர்ப்பம் எதிர்பார்க்கப்பட்டு காத்திருந்த இத்திட்டமானது சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை முறியடித்து விடும் நோக்கில் முடுக்கி விடப்பட்டது. சீனாவின் அண்மைக்கால அபரிமித பொருளாதார வளர்ச்சியும் நேபாளம் ,தீபெத் போன்ற இமயமலைப்பிரதேச நாடுகளின் மீதான பிடியும் சீன பாகிஸ்தானிய நெருக்கமும் சிறிலங்கா, பங்களாதேஸ்,மாலை தீவு போன்ற நாடுகளினுடனான நெருக்கமும் இந்தியாவைக் கிலி கொள்ளச் செய்து விட்டது.

சீனாவின் வளர்ச்சியை உள்ளத்தளவில் விரும்பாத அமெரிக்கா இந்தியாவை மறைமுகமாகத் தூண்டி விட்டுள்ளது. ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடி என வரும் போது அமெரிக்காவால் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது போய் விடும். சர்வதேச சமூகத்தின் வாயை அடைக்க அல்லது இந்தப் பிரச்சினையை கால வரையறையின்றி இழுத்தடிக்க தொடர்ந்தும் மகிந்தவின் ஆட்சி இலங்கையில் இருப்பது இந்தியாவிற்கு அவசியமாகும்.

அவ்வாறிலாது ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுமாயின் அது மகிந்த சகோதரர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கும் பெரும் தலையிடியாகவே அமையப் போகின்றது. இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தன்னைக் காத்துக் கொள்ள கோத்தபாய மகிந்த ராஜபக்ஸ ஆகியோரைப் பலியிடத் தயாராகவே இருப்பார். இறுகி வரும் சிக்கலில் பகடைக்காயாக பலியிட இப்போது முன்னைநாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரும் அடிபடுகின்றது. இத்தனை காலம் எதுவித பிரச்சினையுமற்று இருந்த சந்திரிகாவின் பெயரும் போர்க்கால குற்றங்களுக்கான விசாரணையில் முன்மொழியப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் தன்மையை விளங்கிக்கொள்ளவும் மகிந்த ராஜபக்ஸே அரசு தன்னைக்காத்துக் கொள்ள யாரையும் பலியிடத் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் நடக்கவிருந்த இராணுவப் புரட்சி பற்றிய புரளியும் இந்திய இராணுவம் இலங்கையில் அத்து மீறி நுழையவிருந்த ஏற்பாடும் ஏதோ காரணத்தால் தடைப்பட்டுப்போய் விட்டது. அது இந்தியாவின் துரதிர்ஷ்டம் அல்லது சரத் பொன்சேகாவின் அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். அல்லது அமெரிக்காவுடன் ஒத்துப்போக சரத் பொன்சேகா இணங்கியமையும் காரணமாக இருக்கலாம். அதற்கு சீனாவால் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன் பாடும் காரணமாக இருக்கலாம்.

ஏற்பட்டுவரும் அமெரிக்க டாலரின் வீழ்ச்சியும் சீனாவால் சேமிப்பாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலரின் அபரிமிதமான அளவும் அமெரிக்காவை சீனாவுடன் இணங்கிப் போகும் நிலையை உண்டாக்கியிருக்கின்றது. எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றான கரன்ஸியை உலக நாடுகள் தேடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சீனாவில் இருப்பில் இருக்கும் டாலருக்கான பெறுமதியை வழங்குவதால் உண்டாகக் கூடிய சங்கடத்தையும் அதனால் ஏற்படக் கூடிய அமெரிக்கப் பொருளாதார பின்னடைவையும் அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

"சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை" என்ற ஒபாமாவின் அண்மைய கூற்று அமெரிக்கா சீனாவுடன் இணைந்து போகவே விரும்புகின்றது என்பதை உறுதிப் படுத்துகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிராக இந்தியாவை வளர்த்து விட அமெரிக்கா விரும்பினாலும் "தனக்குப் பின் தான் தானம்" என்ற நிலையில் அமெரிக்கா இருக்கின்றது.

மாறி வரும் இந்த பிராந்திய அரசியல் சூழ்நிலையை ஈழத் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டு காய் நகர்த்த வேண்டும். இறையாண்மையுடன் வாழ்வதற்கோ பிரிந்து செல்வதற்கோ தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய உரிமையை அதிக காலத்திற்கு எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இன்று தமிழ் மக்களின் பிரச்சினை தோல்வி முகத்தில் இருப்பது போலத் தோன்றினாலும் சுயநிர்ணய உரிமை கிடைக்கும் வரை ஓய்ந்து விடப்போவதில்லை.

இந்தியாவின் அராஜகம் இதை விட இனி வேறு எல்லைகளுக்குப் போய் விட முடியாது. ஜனநாயக அகிம்சா வேடம் போட்ட இந்தியாவின் முகம் இன்று சர்வதேச சமூகத்தால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அதே போல் இந்தியாவின் துரோகமும் ஈழத் தமிழ் மக்களால் மறக்கப்பட முடியாதிருக்கின்றது. அதற்கான பதிலை இந்தியா கூறவேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது.

இலங்கை அணி இந்தியாவில் விளையாடத் தடை

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி வருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.ஜோயல்பவுல் அன்ரனி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு
இந்தியாவில் வரும் 16 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் திகதிவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டி, ருவென்ரி 20 போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளில் இலங்கை அணியும் கலந்து கொள்ளவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

இருந்த போதிலும் இலங்கை அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கையை நிறுத்தவில்லை. போராளிகளை அழித்து வருகிறோம் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். தமிழர்கள் படும் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத 20 பேர் உயிர் நீத்தனர். மத்திய அரசும் உயர்மட்டக்குழுவை அனுப்பி மனித உரிமை மீறல்களை தடுக்கக்கோரியது.

கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது தமிழர்கள் அந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது போர் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டதால் இலங்கைக் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிப்பது மிகப்பெரிய அவமானமாகும்.

அதுபோன்று விளையாட அனுமதிப்பது, மனித உரிமை மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதரின் மனதையும் புண்படுத்தும் செயலாகும். எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிடக்கோரி ஏற்கனவே சட்டத்தரணி ஜோயல் மனுத் தாக்கல் செய்திருந்தார். வெளிவிவகாரக் கொள்கையில் நீதிமன்று தலையிட முடியாது என்று கூறி ஜோயல் தாக்கல் செய்த துணை மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இத்தகைய முன்மாதிரியான முயற்சிகளுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்.

Saturday, November 14, 2009


பயங்கர வாதமும் இந்தியாவும்
சர்வதேச அளவில், பயங்கரவாதத் தக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு இந்தியா என்று, மும்பையில் செயல்பட்டு வரும் என்ஜிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது இராக். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஆண்டில் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3,674 பேர் உயிரிழந்துள்ளனர்.

மிகவும் சுவையான தகவல் இது. பயங்கரவாதமும் இந்தியாவும் இவ்விதம் இருக்க இந்திய அரசபயங்கரவாதம் எவ்வாறு இந்தியக் குடிமக்களையும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை ஏன் இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 3,674 பேர் மட்டுமே. ஆனால் இந்தியாவின் உதவியுடனும் தூண்டுதலாலும் முள்ளிவாய்க்காலில் மட்டும் கொல்லப்பட்டவர்கள் 30,000 இற்கும் மேலாகும்.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண கூறுவதைப்போல்;

உண்மையிலேயே மகிந்த இந்தியாவின் அழுத்த மற்றும் ஆதரவு காரணமாகவே இந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இந்தியாதான் உண்மையான குற்றவாளி. அவர்கள்தான் இந்தச் சூழ்நிலையை உருவாக்கினார்கள். மகிந்த அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அவர்கள் மகிந்தவின் பின்னால் இருந்து கொண்டு இந்தச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

நான் நினைக்கின்றேன்; இந்தியாவுக்கு ஒரு பொருண்மிய நிகழ்ச்சித் திட்டம் இருக்கின்றது. அவர்கள் வளங்களைக் கைப்பற்ற நினைப்பது தெளிவாகப் புரிகின்றது. இயற்கை வளங்களை மட்டுமன்றி மனித வளங்களையும் கைப்பற்ற அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். அதனாலேயே மகிந்தவை அவர்கள் இதற்கு நிர்ப்பந்தித்துள்ளார்கள்.


இந்தியாவின் தலையீடு இலங்கையில் இருந்தது என்பதை காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் இராகுல் பின்வரும் கேள்வி பதிலொன்றில் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.

நிருபர் கேள்வி: இலங்கையில் லட்சம் மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் பிரபாகரன் மரணத்துக்குபின்பும் அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய வசதிகள் இல்லை.முன்வேலியில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்வு மக்கள் குடியேற்றம் செய்ய, முகாமிலிருந்து விடுவிக்க இந்தியா எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்கறை காட்டவில்லை. இலங்கைக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள், சேனல் 4 ல் 4 தமிழர்கள் நிர்வணாப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பற்றி காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை.?

ராகுல்: இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன் ஒன்றை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் இலங்கை பிரச்சனையில் அக்கறையோடு உள்ளோம். இந்தியா கடுமையாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துவருகிறது. இதை தவிர வேறு எதுவும் பிரதமர் ஏற்க மாட்டார். அமைச்சர்களை, உயர்அதிகரிகளையும் இலங்கைக்கு அனுப்பினார்கள் இதை விட வேறு எப்படி அழுத்தம் கொடுக்க முடிவும். தமிழர்கள் உரிமை பெறவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் நிலை.இதற்கு மேல் கேள்விகளுக்கு இடம் இல்லை.


இந்தியாவிற்கு இலங்கையின் மேல் உள்ள அக்கறை எத்தகையது என்பதை கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண மேலே தெளிபு படுத்தியுள்ளார்.

இப்போது மகிந்த ராஜபக்ஸவிற்கும் யுத்த கால இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீழ்ச்சியடைந்த ராஜபக்ஸேயின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த இந்தியா துடிதுடிக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இந்திய அரசபயங்கரவாதம் இலங்கையில் தமிழினப் படுகொலையை வலிந்து முன்னிறுத்தியது.

ஐ.நா. சபை 1948-ம் ஆண்டிலேயே இனப்படுகொலைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அதில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 'இனப்படுகொலை என்றால் என்ன?' என்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

''ஒரு தேசிய, இன, மத, சமூகக் குழுவை முற்றிலுமாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது; உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ காயப்படுத்துவது; அக்குழுவை அழிக்கும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்துவது; அக்குழுவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது; அக்குழுவிலிருந்து குழந்தை களை வேறு குழுவுக்கு மாற்றுவது ஆகியவை இனப்படுகொலை எனப்படும்...'' என்று ஐ.நா. ஒப்பந்தம் தெளிவு படுத்தியிருக்கிறது.

இனப்படுகொலையைச் செய்தாலும், இனத்தை அழிக்க சதி செய்தாலும், அப்படிச் செய்வதற்குத் தூண்டினாலும், செய்ய முயன்றாலும், இனப்படுகொலைக்கு ஒத்துழைத் தாலும் குற்றமாகக் கருதப்படும். அந்தக் குற்றத்தை செய்தது, தனி மனிதராகவோ ஒரு அரசாகவோ இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின்கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது.


அமெரிக்க முன்னாள் 'டெபுடி அசோசியேட் அட்டர்னி ஜெனரல்' புரூஸ் ஃபெயின் இதுபற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாகச் சொல்லியிருப்பதை நாம் அறிவோம். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபக்ஷே மற்றும் அமெரிக்க கிரீன்கார்டு பெற்றவரான இலங்கை ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்போவதாக ஃபெயின் கூறியிருந்தார். இனப்படுகொலைகளைச் செய்ததாகத்தான் அவர்கள்மீது ஃபெயின் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது இலங்கையில் நடந்துவருவது இன அழித்தொழிப்புதான், இனப் படுகொலைதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை புரூஸ் ஃபெயின் திரட்டியிருக்கிறார். 1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின்போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது முதல்... இப்போதுசிங்கள ராணுவத்தின் மூன்று படைகளும் சேர்ந்து தமிழர் மீது நடத்திவரும் தாக்குதல் வரை அவர் ஏராளமான சான்றுகளை இதற்காகச் சேர்த்திருக்கிறார்.


இலங்கை அரசியலமைப்புச் சட்டமே இனச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதையும், இன்றைய ஆட்சியாளர்கள் 'ஒற்றைத் தன்மை கொண்ட ஆட்சிமுறைதான் சாத்தியம்' என்று சொல்வதையும்கூட அவர் உதாரணங்களாகக் காட்டுகிறார். சிங்கள இனவெறிக்கு ஆதாரமாக அவர்களின் புராணக் கதையான மகாவம்சம் எவ்வாறு விளங்குகிறது, அங்குள்ள பௌத்த பிக்குகள் எப்படி இனவெறியைப் பிரசாரம் செய் கிறார்கள் என்பதையெல்லாம் புரூஸ் ஃபெயின் விரிவாகத் தொகுத்திருக்கிறார்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை நாம் அடுக்க முடியும். இப்படியான இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட பல்வேறு சர்வாதிகாரிகள் இன்று சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், அதில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதும் அண்மைக் கால உதாரணங் களாகும். அதுபோல, கோத்தபய ராஜபக்ஷேவும், சரத் ஃபொன்சேகாவும் தண்டிக்கப் படுகிற காலம் வெகுதொலைவில் இல்லை. இனப்படுகொலை குற்றத்தி லிருந்து ராஜபக்ஷேவும் தப்பிக்க முடியாது. ஆனால், குற்ற வாளிகள் அவர்கள் மட்டுமல்ல... இதில் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறது.

'இனப்படுகொலைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தின் உறுப்பு 3 பிரிவு 5-ல் இனப்படுகொலைக்-கு ஒத்துழைப்பு நல்குவதும்கூட குற்றமாகவே கருதப்படுமெனச் சொல்லப் பட்டிருக்கிறது

இலங்கை அரசின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக்கிற இந்தியாவும் குற்றவாளியாகவே கருதப்படக் கூடிய ஆபத்து உள்ளது' என சட்ட நிபுணர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, ராடார் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவது, தமிழர் களுக்கு எதிரான போரில் ராணுவ ரீதியான வியூகங்களை வகுத்துத் தருவது, நிபுணர்களின் ஆலோசனைகளை அளிப்பது உட்பட பல உதவிகளை இந்தியா அளித்து வருவதான குற்றச்சாட்டுகள் இலங்கை தமிழ் அமைப்புகளாலும், இங்குள்ள அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றை இந்திய அரசு மறுத்துவிடவில்லை. ராஜதந்திர ரீதியான நடவடிக் கைகள் என்று அவற்றையெல்லாம் இந்திய அரசு நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், ஐ.நா. ஒப்பந்தப்படி இவையெல்லாம் இனப்படுகொலைக்கு உதவிய குற்றமாகவே கருதப்படும்' என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்தியாவை வல்லரசாக்கும் கனவுகளுடன் தமிழகத் தமிழர்களும் அதற்குத் துணை போவது தான் அதிபயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

மனுஷபுத்திரனின் சக்கரநாற்காலியும் சாருவின் நொண்டித்தனமும்மனிதன் ஒரு விலங்கு என்பது தான் இயற்கையின் விதி. அதை மீறி நாம் மனதளவில் கற்பித்து வைத்திருக்கும் உயர்வுகள் அனைத்தும் நமக்கு நாமே வரித்துக் கொண்டது தான். அது சிந்திக்கத் தெரிந்த மனிதர்களாகிய எங்களின் சுய கற்பிதம். இயற்கை என்ற பிரமாண்டம் அனைத்து தாவர, விலங்குகள் போன்றே மனிதர்களையும் அடக்கியிருக்கின்றது. அனர்த்தங்களோ அழிவுகளோ நேரும் போது மனிதர்களுக்கென்று எந்த விதி விலக்கும் கிடையாது.

அழிபவர்கள் போக மீண்டவர்கள் தொடர்ந்து வாழ்வார்கள். மற்றைய விலங்குகள் தாவரங்கள் போலவே மனிதர்களுக்கும் ஆகக் கூடிய காரியம் இதுவாகவே இருக்கின்றது. எங்களுக்கு நாங்களே செய்து கொள்ளும் உதவிகள் மனிதர்களின் சிந்திக்கத் தெரிந்த தன்மையினால் உண்டாகியிருப்பது. ஒரு தேவையாக இன்று செய்வது நாளை நமக்கும் வேண்டியிருக்கக் கூடியது.

மனிதனை விலங்கு நிலையிலிருந்து உயர்த்தி வைத்திருப்பது இவ்வகையான சிந்தனையினால் ஏற்பட்டிருக்கும் கொடுக்கல் வாங்கல். இன்று நாம் செய்யும் உதவி நாளை சகாயமாகக் கூடும். இது ஒரு வகை சுயநலம் தான். இதையே மனித மேன்மையாக மகான்களும் மகா அனுபவங்களும் எடுத்துக் கூறுகின்றன. துன்பப்படும் மனிதர்களைக் கண்டு அவ்வகைத் துன்பங்களில் இருந்து விடுபடத் துடித்ததே புத்தரின் அனுபவங்கள்.

மதங்கள் அனைத்தும் இரக்க்கம் காட்டுவதன் தேவையையும் நேசிக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

"இரக்கம் காட்டுபவர்கள் எவர்களோ-அவர்கள்
இரக்கம் காட்டப்படுவார்கள்" என்று உயரிய விவிலியம் கூறுகின்றது. உன்னைப்போலவே அயலவனை நேசி என்று இயேசு கூறியிருக்கின்றார்.

"பல்லுயிர் ஓம்புதல்" இந்து சமயம் கூறுகின்றது.

"உன் வலது கை இடது கையைக் கழுவட்டும், இடது கை வலது கையைக் கழுவட்டும் இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவட்டும்" என்று ஒருவருக்கு ஒருவர் உதவி வாழும் தன்மையைத் திருக்குர்ரான் இயம்புகின்றது.

இது சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால் இயற்கையின் சீற்றங்களிலிருந்தும் உற்பாதைகளிலிருந்தும் மனித சமூகத்தைக் காத்துக் கொள்ள மகான்கள் கூறிய நல்லுரைகள்.

ஆனால் பெருந்துயரம் என்னவென்றால் இயற்கையால் ஏற்படும் தொல்லைகளை விட மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துயரங்கள் தான் இப்போது பல்கிப் பெருகிப்போய்விட்டது. இரக்கங்காட்டும் தன்மையும் சகமனிதனை நேசிக்கும் தன்மையும் தேய்ந்து குறைந்து போய்விட்டது. வஞ்சித்து கருவறுக்கும் கயமையே பல்கிப் பெருகிவிட்டது.

விழுந்து கிடக்கும் மனிதனை இடறி மிதித்துச் செல்லும் தன்மையே இன்றைய மனித நடைமுறையாகி விட்டது. அதற்குள்ளும் ஈரம் கொண்ட மனிதர்கள் சிலராவது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே சிறிது ஆறுதல்.

இந்த ஈரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு வாதமாகத் தான் சாருவின் இந்த வார்த்தைகளைப் பார்க்கின்றேன். தாழ்வு மனப்பான்மையின் ஆத்திரமாக அல்லது அறிவற்ற தன்மையின் முரட்டுப்பாய்ச்சலாக இது எனக்குத் தெரிகின்றது.


"உங்கள் கடிதத்தில் தெரியும் மனிதாபிமானம் இன்றைய தமிழர்களின் பொதுப் பிரச்சினை என்பதால்தான். வெளிப்பார்வைக்கு மனிதாபிமானமாகத் தெரியும் உங்கள் வாதம் உண்மையில் ஃபாஸிச மனோபாவத்திலிருந்துதான் எழுகிறது. அதனால்தான் இப்படிப்பட்ட போலி மனிதாபிமானத்தை 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறேன். அதனால்தான் நான் மனிதாபிமானத்துக்கு எதிரி போலவும், மனிதாபிமானம் பேசுபவர்கள் மனிதாபிமானிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. மனிதாபிமானத்துக்கு எதிராகப் பேச வேண்டும் என்று எனக்கு ஆசையா என்ன? உங்கள் மனிதாபிமானத்தில் ஒளிந்திருக்கும் ஃபாஸிசம்தான் எங்களை பயமுறுத்துகிறது.

மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. "


இதில் இரக்கம் காட்டப்படும் ஒருவர் தாழ்ந்தவன் என்றும் இரக்கம் காட்டுபவர் உயர்ந்தவர் என்றும் யார் சொன்னது. ஒருவருக்கு இருக்கும் "தேவை" இற்கு வழங்கப்படும் "உதவி" என்பது தான் முக்கியமானது. கால் நடக்க முடியாத ஒருவருக்கு வழங்கப்பட்ட உதவிதான் சக்கர நாற்காலி. யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட இரக்கம் தான் சக்கர நாற்காலி என்ற ஒன்றை உருவாக்கி கால் இல்லாதவர்களை நடமாட விட்டிருக்கின்றது. அவர்கள் தேவையை அவர்களாகவே பார்த்துக்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. ஒரு சக்கரநாற்காலி கொடுக்கும் இரக்கமும் இல்லாது அவர்களை சப்பாணிகளாக இருக்கச் செய்வதா? இவ்வாறு இரக்கப்படுவதைத்தான் பாஸிஸம் என்று சாரு கருதுகின்றாரா?

பட்டினியால் வாடும் மக்களுக்கான உணவு வழங்கும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்கள், போர்களினால் துன்பப்படும் மக்களுக்கான உதவிகளை வழங்கும் ரெட் குரொஸ், எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு அனைத்தும் பாஸிஸத்தின் செயற்பாடுகளா? ஏனெனில் சாருவின் வார்த்தைகளில் "மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்." ஆயிற்றே.

உலகில் காணப்படும் சமநிலையற்ற தன்மையைச் சீர் செய்ய முயற்சிக்கும் அனைத்துக் கருமங்களும் பாஸிஸம் தானா?

மனுஸபுத்திரனின் சக்கர நாற்காலிக்குள் ஒளிந்திருந்தது அவருக்குத் தேவையான மற்றவர்களிடம் கேட்கப்படும் இரக்கம். அல்லது கால்கள் இருக்கும் மற்றவர்கள் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் அசூசை.

"புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை"

"இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை"

கால்கள் இருக்கும் மனிதர்களின் மேலான அசூசையை அவர் இவ்வரிகளால் தான் நிரூபித்திருக்கின்றார். மற்றவர்களை விட தான் வேறு பட்டவன் திமிரானவன் என்பதை இவ்வார்த்தைகளின் வெளிப்படுத்துதலில் தம்பட்டம் அடிக்க முயல்கின்றார்.

ஆனாலும் ஒன்றை மறந்து போகின்றார்."புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை" அவரை மட்டுமல்ல காலுள்ள மனிதர்களையும் தான் யாரும் மண்டியிட கட்டாயப்படுத்துவதில்லை. நாமே எம் சுய விருப்பத்தால் தான் நாம் மண்டியிடுகின்றோம். அதனால் நாம் அவமானப்பட்டுப் போவதில்லை. உயர்வாகவே உணர்கின்றோம். அடக்கமாக நடந்து கொள்வது உயர்வான குணமாகவே பார்க்கப்படுகின்றது.

சுய தம்பட்டம் அல்லவென்பதை சாருவும் மனுஸபுத்திரனும் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் சுய எள்ளல் செய்வதில்லை. ஒரு கால் இல்லாத ரெரி பொக்ஸ் தன் குறை பற்றிச் சிந்தித்துக் கொண்டிராது தொடரோட்டங்களை ஓடி நிதி சேகரித்தது, அத்தகைய குறைபாடுள்ளவர்களுக்கு உதவி செய்யவே. அவர் இன்று எங்களோடு இல்லாவிட்டாலும் சக மனிதர்கள் இன்றும் அவருக்காக அவரைப் போன்றவர்களுக்காக ஓடி நிதி சேகரித்துக் கொண்டிருக்கின்றார்களே. இவர்கள் எல்லாம் பாஸிஸ வாதிகளா?


"அப்போது எங்களை நோக்கி வந்த அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் வந்து மனுஷ்ய புத்திரனிடம் “உங்களுக்கு இது பிறவியிலேயே உள்ளதா? இடையில் வந்ததா? ” என்று கேட்டார். மனுஷ்ய புத்திரன் என்ன பதில் சொன்னார் என்று ஞாபகமில்லை. ஆனால் அந்த ஆளை உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ’ குறைந்த பட்சம் அசிங்கமாகத் திட்டியாவது இருக்க வேண்டும்; தவறு செய்து விட்டோம் ’ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது."

ஆமாம் ஐயா, அவரை உதைக்கத்தான் வேண்டும். யார் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்ற அறிவில்லாது உங்கள் மீது இரக்கம் காட்ட வந்த அவரை உதைக்கத் தான் வேண்டும். மனுஸ புத்திரன் வசதிகளில் கொழித்திருக்கலாம். அவருக்கு யாருடைய உதவியும் வேண்டாது இருக்கலாம். ஆனால் உதவி தேவைப்படும் விளிம்பு நிலை மனிதர்கள் இந்த பூமியில் நிறைந்து தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீது நிறையவே இரக்கம் காட்டப்படும் தேவை இருக்கின்றது. சக மனிதனுக்கு உள்ள கடமையாகவே அது இருக்கின்றது. அடுத்த நேர உணவிற்கு வழியில்லாத ஏழையின் முன்னால் அமர்ந்து விருந்தோடு உண்ணும் பழக்கம் எமக்கு வேண்டாம்.

அத்தகைய குரூர மனம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்களே கொண்டாடுங்கள். புரட்சி முலாம் பூசி வெளியில் விடாதீர்கள். இப்படியெல்லாம் புரட்சி செய்யும் சாரு தான் வங்கி கணக்கு எண்ணை வெளியிட்டு "தண்டல்" அறவிடும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். அப்படித் தண்டல் வழங்குவது சமுதாயத்தின் கடமையாகவும் கடிந்து கொள்கின்றார்.

ஒரு எழுத்தாளராக கல்வியாளராக கருத்துக் கூறுபவராக இருப்பதை விட "மனிதனாக" இருப்பதன் தேவை பெரிதல்லவா?

இறுதியாக, மனுஸபுத்திரன் என்ன நோக்கத்தில் அந்தக் கவிதையை எழுதினாரோ என்னவோ அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் சாருவின் குதர்க்கம் நிறைந்த எழுத்துக்கள் அவரையும் கல்லெறி வாங்கும் நிலைக்கு உள்ளாக்கி விட்டன என்றே தோன்றுகின்றது.

"எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை"


நியாயமான காரணங்களுக்காகத் தானே எழுதுவதாக கூறுகின்றீர்கள்.

"மனுஷ்ய புத்திரனின் கவிதைகளிலுள்ள அரசியலும், அதிகாரத்துக்கு எதிரான குரலும் புரியாமல் ..."


நியாயமான காரணங்களுக்காக நீங்கள் போராடவில்லையா மனுஸபுத்திரன்? உங்களுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் சாருவின் "அரசியல்" உங்களுக்குப் புரிகின்றதா?

"ஒருமுறை தற்கொலை பற்றி கவிதை எழுத, உடனே அவர் மீது பிரியம் கொண்ட நூறு பேர் அவரை உங்களைப் போல் மனிதாபிமானம் பொங்க விசாரித்து விசாரித்து அதனாலேயே தற்கொலை உணர்வு தோன்றியது என்றார். அதாவது, இப்படி ஒரு கொடுமையான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறோமே என்ற ஆயாசத்தில்."

வாழ்க்கை பற்றிய நம்பிக்கையுள்ள ஒருவர் ஏன் எதிர் மறையான விடங்களைத் தெரிவு செய்து எழுத வேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதானே. உங்கள் மீது அன்பு கொண்டவர்கள் அனுதாபம் கொள்வதும் முறைதானே..

எழுத்தாளனின் எழுத்தை ஏன் ஒரு அனுபவமாகப் பார்க்க மறுக்கிறீர்கள்? கால் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கால் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும், கண் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கண் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்காதா? அதை ஒருவர் எழுத்தில் பதிவு செய்யக் கூடாதா?

உங்களுக்கு இப்படியான ஒரு அனுபவம் அல்லது எண்ணம் ஏற்பட்டிருக்கின்றது என்று மற்றவர்கள் எண்ணுவதில் என்ன தவறு? ஏன் சாரு ..நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள் என்ற பிரக்ஞை உங்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றதா? ஒன்றுக்கொன்று முரணாக எழுதுவது தான் உங்கள் குனாம்சமா?

இப்போது நான் தமிழிலேயே இதுவரை இப்படி ஒரு ஆபாச நாவல் வந்ததில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு ஒரு ஆபாச நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். டிசம்பரில் அது வெளிவந்தவுடன் நோர்வேவுக்குத் தப்பி ஓடி விடலாம் என்ற திட்டத்தோடுதான் அதை ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் மனுஷ்ய புத்திரனிடம் சென்று அறிவுரை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

நீங்கள் எழுதுவதெல்லாம் ஆபாசம் என்று நீங்களே ஒத்துக் கொள்கின்றீர்கள். அதையே நாங்கள் சொல்ல வந்தால் இதுதான் ’ காமன்மேன் ’ இலக்கியத்துக்குள் நுழையும் போது ஏற்படும் ஆபத்து. இப்படி தினந்தோறும் காமன்மேன்களையே எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்கொண்டிருந்தால் எங்கள் நிலைமை என்ன ஆவது?


என்கின்றீர்கள். நீங்கள் சொல்வதைத் தானே நாங்களும் சொல்கின்றோம். நீங்கள் எழுதுவதெல்லாம் வெறும் குப்பைகள்..ஆபாசக் குப்பைகள் என்று.

" டிசம்பரில் அது வெளிவந்தவுடன் நோர்வேவுக்குத் தப்பி ஓடி விடலாம் என்ற திட்டத்தோடுதான் அதை ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்."

நீங்கள் இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒருவர் என்பதை உங்கலைப் போலவே நாங்களும் புரிந்து கொண்டிருக்கின்றோம். அதைச் சொல்ல வந்தால் அது என்ன? எங்களைக் "காமன் மேன்" என்று ஒதுக்கி விடுகின்றீர்கள். குறைந்தபட்சம் ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்குக் கூட நீங்கள் தயாராகவில்லாத ஒரு மூர்க்கம் காட்டுகின்றீர்கள். தயவு தாட்சண்யமின்றி காலில் போட்டு மிதிக்கும் மூர்க்கம் கொள்கின்றீர்கள்.

உங்கள் மீதுள்ள மற்றவர்களுக்கான சகமனித இரக்கம் தான் உங்களை இன்னும் வாழ வைத்திருக்கின்றது.நம்புங்கள். அது போலல்லாது உங்களைப் போலவே அடிக்கு அடி உதைக்கு உதை என்று எல்லோரும் இருந்திருந்தால் உங்கள் நிலை ..நினைக்கவே பரிதாபமாக இருக்கின்றது. இதை எழுதியதற்காக உங்கள் விஷப்பற்களில் நான் அரைபடக் கூடும். ஆனாலும் செல்வராஜ் ஜெகதீசன் போன்ற சாதாரணர்களையும் என்னைப் போன்ற சக மனிதர்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

தமிழுக்குத் தொண்டும் தமிழருக்குத் துரோகமும்ஈழத்தமிழினம் பாரிய படுகொலைக்குள்ளாகி பரிதவித்து நிற்கும் போது தங்கள் சுய மன வக்கிரத்தைச் சொறிந்து கொள்ள நினைக்கும் சிலரால் தமிழ் மகாநாடு தமிழுக்கு செம்மொழி மகாநாடு என்ற போர்வையில் கேலிக்கூத்து நாடகம் ஒன்று அரங்கேற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழைத் தாய் மொழியாகப் பேசியதாலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்று வகைதொகையின்றி இந்திய, சிங்கள ஆக்கிரமிப்புவாதிகளால் இரசாயன உயிரியற்குண்டுகளால் கருக்கிப் போடப்பட்டவர்கள் இந்த அப்பாவிகள். இறந்தவர்களின் குருதியின் செவ்வீரம் காயமுன்னர் தமிழுக்கு செம்மொழி மகாநாடு அவசியமா? என்ற கேள்வி தமிழ் மக்கள் ஒவ்வொருவர் நெஞ்சையும் குடைந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் அனைவரின் கருத்தும் இவ்வாறு இருக்கையில் பாடையில் போக இருக்கும் முதியவர் ஒருவரின் மன வக்கிரத்தைப் பூர்த்தி செய்யும் முயற்சியே இது வென்பதும் அவரின் சாதனைப் பட்டியலில் "தமிழுக்கு விழா எடுத்த" பெருமையையும் சேர்த்துக் கொள்ளவே இந்த முயற்சி என்பதையும் உள்ளம் பதைக்கும் சினத்துடன் தமிழுலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சுய வக்கிரச்சொறியலை உலகத்தரத்தில் நிலை நாட்டும் முயற்சியாகவே பல்நாட்டு தமிழ் அறிஞர்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சி எடுக்கப்படுகின்றது. பிறநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளாது புறக்கணித்தாலே அது அவர்கள் வீட்டு இழவு வீடு போல அடங்கி உயிர்ப்பிழந்து விடும்.

இந்த நேரத்தில் தான் ஈழத்து தமிழறிஞர் சிவத்தம்பியின் அறிவிப்பு ஒருவித குரூரத்துடன் வெளிவந்திருக்கின்றது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நீங்கள் பங்கேற்பது பற்றி பல முரண்பட்ட தகவல்கள் நிலவுகிறது. நீங்கள் கலந்துகொள்வீர்களா?

“உலகில் உள்ள மொழிகளில் மூத்த ஒன்று தமிழ். தி.மு.க. அரசானாலும் சரி, வேறு எந்தவோர் அமைப்பானாலும் சரி, தமிழுக்கு மாநாட்டை முன்னெடுக்கும்போது அதில் நான் பங்கேற்பதை தமிழாசிரியர் என்ற முறையில் கடமையாகக் கருதுகிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அரிதாக எடுக்கப்படும் இதுபோன்ற முன்முயற்சிகளுக்கு நான் மட்டுமல்ல, எல்லோரும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறேன். மற்றபடி எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னணியாக அரசியல் இருக்கிறது என்பதை நான் அறிவேன். இவ்விடத்தில் என்னுடைய நிலைப்பாடு அரசியல் அல்ல. தமிழ்மொழிக்கான ஆதரவு என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.”


ஈழத்துச் சொந்தச் சகோதரர்கள் இறந்தும் சிறைப்பட்டும் ஆற்றவொண்ணா துயரத்தில் அல்லல்ப்பட்டுக்கொண்டிருக்கையில் தமிழாசிரியர் என்ற கடமையின் முன்னால் உள்ள சகமனிதன் என்ற கடமையின் தாற்பரியத்தையும் மனித நேயத்தையும் இவர் கருத்தில் கொள்ளவேண்டும் என்றே தமிழுலகம் அதிலும் ஈழத்துத் தமிழுலகம் வேண்டி நிற்கின்றது.


கருங்காலி கருணாநிதி மீது ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய காழ்ப்பு என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை சிவத்தம்பியின் வார்த்தைகளிலேயே தருகின்றேன்.

மாநில கட்சியான தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்னையில் இதற்குமேல் என்ன செய்திருக்க முடியுமென எதிர்பார்க்கிறீர்கள்?

“இப்போதுள்ள இந்திய அரசியல் சூழலில் தி.மு.க.வை மாநிலக்கட்சி என்று சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. மத்திய ஆட்சியில் பங்கேற்கிறது; மிகப்பெரும் உயிர்ப் பலியை தடுக்க கலைஞர் கூடுதல் அழுத்தம் தந்திருக்கலாம். மற்றவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை இப்போது இங்கு பலவீனப் பட்டிருக்கிறது புலம்பெயர்ந்த வர்கள், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உதவியால் எங்களுடைய உரிமையை நாங்களே போராடி பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்.


இதனையும் விட மேலான தெளிவுடன் ஈழத்தமிழர்கள் இப்போது இருக்கின்றார்கள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் கருணாநிதி போன்ற துரோகிகள் புரிந்து கொள்ளவைக்க இது ஒரு சந்தர்ப்பமாக சிவத்தம்பிக்கு வாய்த்திருக்கின்றது என்றே ஈழத்தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்.


அவ்வாறில்லாது ஈழத்தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருங்காலி கருணாநிதியின் மன வக்கிரச் சொறியலுக்குத் துணை போனால் இன்னுமொரு கருங்காலி என்ற பட்டத்துடன் தமிழுலகத்தில் இருந்து ஒதுக்கப்படும் இழிநிலையே வந்து சேரும் என்பதை அவரும் மற்றும் ஈழத்துக் கல்வியியலாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழுக்குத் தொண்டும் தமிழருக்குத் துரோகமும் செய்யும் எவரையும் அந்த தமிழணங்கே மன்னிக்க மாட்டாள்.

Thursday, November 5, 2009


மனங்களின் சந்திப்பும் மசாலாக்களின் வசீகரிப்பும்


எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்ற பிரமிப்பும் பிரமையும் இப்போது இணைய எழுத்தாளர்களையும் ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக் கொல்வது வரை நீட்சி பெற்றிருக்கின்றது. ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக்கொள்வது பற்றிய கருத்துக்கள் யாரால் கூறப்படக்கூடும். வாசகர்கள் அல்லது பயனாளர்களால் மட்டுமே இவ்வாறு கூறமுடியும் என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் எழுத்துக்கள் தேடப்படுவதும் வாசிக்கப்படுவதும் வாசகர்களாலேயே நடக்கின்றது. வாசகர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக அல்லாவிட்டாலும் எழுத்தாளர்கள் எல்லோரும் வாசகர்களாக அறியப்பட்டவர்களே.

தற்போதைய வாசிப்பு இணையத்தின் வாயிலாகவே பெரிய அளவில் நடைபெறுகின்றது. உலகத்தின் எந்தமூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்வுகளும் நிமிடத்தில் வாசகன் முன்பு கொண்டுவரப்படுகின்றது. உலக நடப்பியலை வாசகன் முன்பு கொண்டு வரும் தெரிவு முன்னர் பத்திரிகைகளிடம் மட்டுமே இருந்தது. பெரும் பத்திரிகைகளால் சார்பு, சார்பற்ற நிலையில் கொடுக்கப்பட்ட விடயங்களே உலக அறிவை போதித்தது. ஆனால் இப்போதோ உலக நடப்பியலை தெரிவு செய்யும் வசதி சார்பு, சார்பற்ற வகையில் வாசகன் முன்பு விடப்பட்டிருக்கின்றது. அத்தனை தூரம் நிகழ்வுகள் வெளிச்சம் போடப்பட்டு அம்பாரமாக இணைய வெளியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

இதைச் சாத்தியமாக்கியவர்கள் இணைய எழுத்தாளர்களே.முக்கியமாகப் பதிவர்கள். இவர்கள் நிகழ்வுகளைப் பதிவு செய்வதையும் தாண்டி கலை இலக்கிய உலகிலும் கால் பதிக்கின்றார்கள். காத்திரமான படைப்புக்களை சகல வெளிகளிலும் படைக்கின்றார்கள். இப்படைப்புக்களை வாசிக்கும் ஒரு வாசகர் வட்டத்தையும் கட்டியெழுப்புகின்றார்கள்.

இது இவ்வாறு இருக்க சகல அல்லது பெரும்பான்மை தமிழக வாசக வட்டத்தால் இது வரை ஏற்றுக்கொள்ளப்படாத சாருநிவேதிதா, தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறியிருக்கின்றார்.

சாருநிவேதிதா பற்றிய முன்னறிவிற்கு இதைப்போன்ற பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றது. தன்னை ஒரு எழுத்தாளர் என்று நிரூபிக்க முயலும் ஒருவரின், மற்றவர்களை ஊக்குவிக்க அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாது மறுதலிக்கும் மூர்க்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது.

சமூகத்தில் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் காலத்திற்குக் காலம் பிரதியீடு செய்யப்படுகின்றார்கள். ஒரு காலத்தில் போற்றப்பட்டவர்கள் பின்னர் கண்டு கொள்ளப்படுவதில்லை.சிலர் காலத்திற்கும் போற்றப்படுக்கின்றார்கள். இவ்வகையான ஏற்றமும் இறக்கமும் கொண்டதான தாக்கமே எழுத்தாளர்களால் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணங்கள், புதுமைப்பித்தன் அவரைத்தொடர்ந்து ஜெயகாந்தன். வாசக உலகத்தால் கொண்டாடப்பட்டவர்கள் இவர்கள்.

இத்தகைய காத்திரமான தாக்கத்தைச் சமுதாயத்தில் உருவாக்க முடியாது தத்தளிக்கும் சாருநிவேதிதா போன்றவர்கள் ஒரு எதிர்காலத்தையே நிராகரிக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. தாங்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களாகவே இவர்கள் இருக்கின்றார். இந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் போற்றப்படக்கூடியவர். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறியிருக்கின்றார். இதனால் குறைந்த பட்சம் தன் வாசிக்கும் மனோபாவத்தையும் தன் உருவாக்கத்தின் மூலத்தையும் மறக்காத நிலையை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு எழுத்தாள அங்கீகாரத்தை இவ்வாறு வாசக அனுபவத்தின் மூலமாகப் பெறும் நேரத்தில் சாருநிவேதாவால் முன்வைக்கப்படும் குப்பைகள், மொக்கைகள் என்ற கருத்துருவாக்கம் பற்றியும் பார்க்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

இணைய எழுத்தாளர்களின், பதிவர்களின் எழுத்துக்கள் வாசக அனுபவத்தை மேவிய எழுத்தாள வெளிப்பாடுகளின் முகையவிழ்ப்புக்களே. அவர்களின் சூழல், தகமை, உலகம் பற்றிய பார்வையின் விசாலம் என்பவையே அவர்களை போற்றப்படும் எழுத்தாளத் தகமைக்கு உந்தித் தள்ளுகின்றது.

அவர்களால் கொள்ளப்படும் சமுதாய அக்கறையும் வெளிப்படுத்துகையும் அவர்களுக்கான இடத்தை வாசகர் வட்டத்தில் உருவாக்கும். அவர்களுக்கான அங்கீகாரம் தீர்மானிக்கப்படும். வெறும் மொக்கைகள் பத்தோடு பதினொன்றாக அவர்களை வெளியேற்றிவிடும். தமிழ், தமிழக சூழலில் இந்த சமுதாய அக்கறை மிகவும் உயர்ந்த பட்ச தேவையோடு இருக்கின்றது. எழுத்தாளர்களால் நிரப்பப்பட பெரும் வெளியொன்று காத்திருக்கின்றது. அத்தனை தூரம் உலக சமூகத்துடன் ஒப்பிடும் போது நமது சுழல் அழுகி நாற்றமெடுத்துப் போய் இருக்கின்றது. ஒரு சில பேனாக்கள் கூர்மையுடன் இதனை எதிர்கொண்டிருந்தாலும் பலர் பயங்காரணமாகவோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தாலோ பட்டும் படாமல் விலகி நிற்கின்றார்கள்.

இத்தகைய சமூக அக்கறைக்கு அப்பால் விலகி நின்று எழுத முற்படுபவர்கள் மொக்கைகளை மட்டுமே பிரசவிக்கின்றார்கள். சிலர் தங்களைக் காத்துக் கொள்ளும் உத்தியுடன் அரச இயந்திரத்தின் சீற்றத்தில் இருந்து விலகி நிற்கும் வசதியுடன் சுற்றி வளைத்து எழுதுகின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் என்பவர்கள் சமூக அக்கறையுடன் சமூகத்தை வழிநடாத்தித் செல்பவர்களே ஒழிய சமூகத்தில் நடப்பவற்றைப் பதிவு செய்பவர்கள் மட்டுமல்ல.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil