ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, June 3, 2009


இராயா என்ற இலக்கில்லாத விட்டில் பூச்சி -பகுதி 2


இந்தத் தலைப்பிற்கும் சொல்லப்போகும் விடயத்திற்கும் நேரடித் தொடர்பில்ல..ஆனால் தொடைசல் இருக்கின்றது.பல விடயங்கள் இதன் தொடர்பாகவே புரிந்து கொள்ள வேண்டியது. ஈழப்போராட்டம் தமிழீழ மண்ணில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது அல்லது முடித்து வைக்கப்பட்டுள்ளது. இப்படியான கருத்துக்கள் இப்போது பலமாக பேசப்படுக்கின்றன. காரணம் இதுவரை அம்மண்ணில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்த புலிகளின் மறைவே காரணமாகச் சொல்லப்படுகின்றது.

அப்படியாயின் அங்கே தப்பிப் பிழைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்..? அவர்கள் ஈழப்போராட்டத்திற்கானவர்கள் என்று யாராலும் எப்போதும் ஒப்புக் கொள்ளப்பட்டவர்களோ ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களோ அல்ல. ஈழப்போராட்டத்தின் எதிர் விளைவுகளை தமக்கு இலாபமாக்கிக் கொண்டவர்கள். இதில் அந்த நாள் உதிரிகள் துரோகிகள் டக்ளஸ் வகையறாக்கள் முதற்கொண்டு இந்த நாள் உதிரிகள் துரோகிகள் கருணா பிள்ளையான் வகையறாக்கள் வரை அடங்குவர்.

இங்கு நான் இவர்களைத் துரோகிகள் என்று குறிப்பிடுவது இவர்கள் புலிகளின் எதிரிகளாக இருந்தார்கள் என்பதனால் அல்ல. இவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துடன் எதிரிகளாக இருந்தமையினால். எந்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈழப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதே சிங்கள ஏகாதிபத்தியத்தின் நட்பு பெற்றவர்கள்(போராட்டத்தைத் துறந்து) துரோகிகளே. அதை வேறு எவ்விதமாகவும் பொருட்படுத்த முடியாது.

இப்போது ஈழப்போராட்டத்தின் பங்களிப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இப்போராட்டத்தினால் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தவர்கள்.சொந்த மன்ணிலேயே வாழமுடியாது துரத்தியடிக்கப்பட்டவர்கள். ஆனாலும் இன்று பல தேசங்களில் பல தேசங்களின் அங்கீகரிக்கப்பட்ட குடியாளர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.இவர்களுள் அந்த நாள் போராட்ட உதிரிகள் ஆனாலும் துரோகி ஆகாது போராட்ட சிந்தனையுடன் இருந்து கொண்டிருக்கும் மாக்ஸிஸ சித்தாந்தவாதிகள் ,பல்வேறு இயக்கத் தோழர்கள், இவர்களே கூறுவதைப் போல புலிப்பினாமிகள் மற்றும் அவர்களின் தலைமுறைகள் என்று ஒரு பெரிய கூட்டமே இருக்கின்றது. இது வரை பெரிய ஒரு பங்களிப்பை விடுதலைப் போராட்டத்தின் மீது செலுத்த முடியாது தடுக்கப்பட்டவர்கள்.

இன்று இவர்கள் தாம் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில் பலதுறைகளிலும் வளர்ந்து அந்த அந்த நாடுகளின் அரசியல் பொருளாதார துறைகளில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பவர்கள். ஒப்பீட்டளவில் 60 ஆண்டுகளின் முன்னர் இஸ்ரேல் உருவாக முன்னர் யூதர்களின் தலை முறை எவ்வாறு இருந்ததோ அப்படியான ஒரு செல்வாக்கான சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது.

அடுத்த தலைமை இவர்களாலேயே உருவாக்கப்படக் கூடியது. அது அரசியல் இராஜதந்திர வெளிகளில் 5 ஆம் கட்டப்போராட்டத்தை நகர்த்திச் செல்லும். இது வரை அடைந்த தவறுகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்ளும். பல்வேறு இனங்களின் முற்போக்குவாதிகளின் ஆதரவை சுவீகரித்துச் செல்லும். சர்வதேச அமைப்புகளின் நீதிக்கும் நியாயத்திற்குமான அலகுகளை இப்போராட்டத்தின் பால் திசைதிருப்பிச் செல்லும். சர்வதேச நாடுகளின் கட்டமைப்புகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு இனத்தின் சமத்துவத்திற்கும் நீதிக்கும் சுதந்திரத்திற்குமான அடையாளங்களைக் காவிச்சென்று தமிழ் இனத்தின் சுதந்திர வாழ்வுக்காக வழியமைக்கும்.

இதைச் செய்யப்போவது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் இருந்து உருவாகும் புதிய தலைமை. அதில் எல்லோரும் இணைந்து கொள்ளலாம்.

தலைப்பைப்பற்றியும் ஒரு வரி கூறாவிட்டால் எப்படி? இப்போது இப்படியான பழைய பேஷன் குளாயடிச் சண்டைகளுக்கு இடம் கிடையாது. முடிந்தவற்றை உடைப்பில் போட்டு விட்டு புதியவற்றிற்கு முயலுங்கள். பழைய வேஷங்களைக் களைந்து விட்டு புதிதாய் வந்து இணைந்து கொள்ளுங்கள். ஒரு இஞ்சி கதியால் அகட்டி நட்டு சண்டை போட்டு, கோட்டு கச்சேரி என்று அலைந்து திரிந்த யாழ்ப்பாணத்து மனநிலையில் இருந்து மாறுங்கள்.

தமிழ்த் தேசியம் காக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழர்கள் காக்கப்படுவார்கள். தமிழர்கள் இருந்தால் தான் மனிதர்கள் இருப்பார்கள். மனிதர்கள் இருந்தால் அப்போது பார்ப்போம் அவர்களுக்கிடையிலுள்ள பேதங்களை அகற்ற. அது வரை தோழர்கள் தமிழர்களைக் காக்கப் போராடுங்கள்.

1 comment:

தமிழினி said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil