ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 6, 2009


மனிதம் தின்னிகளும் கிரிக்கெட்டும்

மனிதர்களைக் கொல்லும் மானக்கேடான நாடுகளுக்கு எதற்கு கிரிக்கட்? கேட்க வேண்டிய கேள்விதான். தனியாக சிறிலங்காவை மட்டும் கேரோ பண்ணிலால் போதுமா? ஆயுத சப்ளை பண்ணிய இந்தியாவை ...அதனையும் தான் அம்பலப்படுத்த வேண்டும். கொத்துக்குண்டுகளையும் கெமிக்கல் குண்டுகளையும் கொடுத்து ஈவிரக்கமேயில்லாது தமிழ் மக்களை அழித்து ஒழித்துப்போட்ட இந்தியாவிற்கும் கிரிக்கட் தேவையில்லை. கிரிக்கட் ஜெண்டில்மன்ஸ் ஆட்டம்... இந்த மனிதம் தின்னிகளுக்கு எதற்கு?



லண்டனில் நடைபெற்று வரும் 20 ஓவர் கொண்ட உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றிருக்கும் சிறிலங்கா அணியை புறக்கணிக்குமாறு கோரி அங்கு வாழும் தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியானது லோர்ட்ஸ், ஓவல், நோட்டிங்காம் ஆகிய மைதானங்களில் எதிர்வரும் 21 ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.

20 ஓவர் கொண்ட இரண்டாவது உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் இந்தியா, பங்களாதேஸ், அயர்லாந்து, பாகிஸ்தான், பிரித்தானியா, ஹொலன்ட், அவுஸ்திரேலியா, சிறிலங்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டியில் சிறிலங்கா அணி கலந்து கொண்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான விபரங்கள் தற்போது பிரித்தானிய ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

மனித உரிமைகளைக் காக்கத் தவறும் நாடுகளை துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து விலக்கிவைப்பது உண்டு. அந்த வகையில் முன்னர் தென்னாபிரிக்க துடுப்பாட்ட அணி விலக்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று சிறிலங்கா அணியையும் விலக்கி வைக்க வேண்டும் எனக் கோரி தமிழ் மாணவர்கள் நேற்று லோட்ஸ் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா அணியின் பிரித்தானிய வருகையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என முன்னரே பல ஊடகங்களால் கணிக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

Suresh Kumar said...

இனி என்ன செய்ய போகிறது இந்தியா ?

http://www.sureshkumar.info/2009/06/blog-post_06.html

இட்டாலி வடை said...

வாருங்கள் சுரேஸ்குமார்!
எங்களைப்பற்றி கவலைப்படாதவர்களைப் பற்றி நமக்கென்ன? இந்தியா உட்பட..

இருக்கும் ஒப்பசூனிரிகளை கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்..குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவத விட அது சிறந்தது..

உதவிக்கு வந்தால் பாகிஸ்தானையும் வரவேற்பது தவறல்ல என்று தான் சொல்வேன்..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil