ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, July 1, 2009


இறந்து போன மக்களின் சாம்பலை அள்ளிப்பூசி

"புதினம்" இணையத்தளத்தில் ஒரு புண்ணாக்கு எழுதியிருக்கின்றது.பாரத மாதாவின் முந்திக்குள் தலை வைத்துப் படுப்பதே ஈழத்தமிழனுக்கு முத்தி கிடைக்கச் செய்யும் என்று புலம்பியிருக்கின்றது. மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் அவர்களுக்கு பூலோக பிராந்திய அரசியல் எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது என்ற தோரணையில் கையேந்திப் பிச்சை எடுக்க வேண்டும். அதுவும் 50 ஆயிரம் ஈழத்தமிழனை துடிக்கத் துடிக்கப்பொசுக்கிப் போட்ட பொஸ்பரஸ் குண்டினையும் இரசாயனக் குண்டுகளையும் அள்ளியள்ளிக் கொடுத்து மக்கள் அழிவைக்கண்டு கை கொட்டிச் சிரித்த கயவர்களிடம் மண்டியிட வேண்டும் என்று கட்டுரை எழுத என்ன நெஞ்சத்துணிவு வேண்டும்.

அதனைப் "புதினமும் "வெளியிட்டதன் உள்நோக்கம் குறித்து சந்தேகம் எழுகின்றது.

"ஈழத் தமிழன் ஒவ்வொருவனினதும் பிறப்பிலும் இறப்பிலும் பாரதத்தின் பார்வை ஏதோ ஒருவிதத்தில் ..." -புதினம் . ஏதோ ஒரு விதத்தில் அல்ல ஏழரைச் சனியின் பார்வையாக விழுந்திருக்கின்றது. பிராந்திய வல்லரசுக் கனவுடன் தன் உற்பத்திப் பொருட்களுக்கு நிரந்தரச் சந்தையை தன் அயலில் உருவாக்கி வைத்திருக்க விரும்பும் பேராசை என்ற பிசாசாக பாரத மாதா உருமாறி பலகாலம் ஆகிவிட்டது.

இன்னும் காந்தித் தாத்தாவையும் நேரு மாமாவையும் தான் ஈழத்துக் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற படு முட்டாள்த்தனமான உளறல்களுடன் வாங்கிய காசிற்கு கதை அளந்து விட்டிருக்கின்றது இந்த முட்டாள் தத்துப்பித்து.

மார்க்ஸும் ஏங்கல்ஸும் எங்கள் தெருவில் காலாறா நடந்து திரியும் காலம் என்பதையெல்லாம் வாகாக இந்த கரிச்சான் குஞ்சு மறந்து விட்டது. முதலாளித்துவம் மாக்ஸிஸம் கலப்புப்பொருளாதாரம் எல்லாம் கரைத்துக் குடித்த தமிழன் உலகத்தின் கோடிகளிலெல்லாம் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவும் அதை அலசிப்பார்க்கவும் தன் விடுதலைக்கு எது அவசியம் என்பதையும் துணிந்து புரிந்து கொண்டு விட்டான் என்பதையும் இது அறியவில்லை போலும்.

இவ்வளவு நடந்த பின்னரும்கூட - ஈழத் தமிழ் இனம் இந்தியாவையே தமது ஒரே நட்பு சக்தியாக - நேச சக்தியாக - ஆதார சக்தியாக - ஆதரவு தரும் சக்தியாக - கை நீட்டி நிற்கின்றது.-புதினம்

ஆமாம் ஆமாம்.. கை நீட்டிப் பிச்சை எடுக்கும் எச்சக் கலைகளுக்கு வேறு வழி..? ஆனால் மக்களுக்கு தங்கள் வழி நன்றாகவே தெரிந்திருக்கின்றது.

வன்னி மண்ணிலே கடைசி வரை தங்கள் உயிரைக்காப்பாற்றுங்கள் என்று கதறி அழுத மக்களைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அளவில் போராடிய பிரிட்டனின் மில்லி பாண்டையும் பிரான்ஸின் குச்னரையும் அமெரிக்காவின் கிளாரி கிளிண்டனையும் மனித உரிமை அமைப்புகளையும் தன் தந்திரங்களாலும் சலுகைகளாலும் தகிடு தத்தங்களாலும் வாய் மூடச் செய்து அத்தனை தமிழ் மக்களையும் குழி தோண்டிப் புதை குழியில் போட்டு மூடச் செய்தது இந்தியா. அதைச் செய்து முடித்தது அதன் ஏவல் நாய்களான சிவசங்கர்மேனனும் எம்.கே நாராயணனும் .

இலங்கையில் நடக்கும் தமிழர் கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பேச செல்லும்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் பச்சைத் துரோகிகள்.நாலரை ஆண்டுகளுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்து, இந்தியாவின் உதவியை கேட் டார். நான் அப்போதே இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாது என்றேன். அதை மீறி ராடர்கள், ஏவுகணைகள், நிபுணர்களையும் மன்மோகன் சிங்கும், சோனியாவும் அனுப்பி வைத்தனர். மேலும், வேண்டிய பண உதவியையும் செய்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலும் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கி குவிக்க உதவினர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இந்தியா உதவியுடனே தமிழர்களை இலங்கை அழித்து வருகிறது.

இதைச் சொன்னது வை.கோ. ஒரு இந்தியத் தமிழன் தன் நாட்டின் கபடத்தனத்தை பகிரங்கமாகப் போட்டுடைக்கும் போது ஒரு ஈழத்துச் செருப்பு சொம்பு தூக்கிப் போகின்றது.


ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விவரிக்க வேறு விளக்கம் தேவையில்லை.
இந்தப் பிணைப்பு - இந்த இறுக்கம் - இந்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இனிமேல் எவ்வாறு அமையப் போகின்றது?
அதற்கு ஏதுவான களம் எந்த அரசியல் வியூகத்தின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்?
ஆகியவை காலத்தின் தேவையாக கருதப்படுகின்ற கட்டாய கேள்விகள்.
-புதினம்

இன்னும் சேர்த்துக் கொள்ள வேண்டும்...இத்தனை இரத்தம்..இத்தனை உயிர்கள்..இத்தனை வலி வேதனை துயரம்...தலைமுறை கடந்தாலும்.. தந்தையை தாயை தங்கையை தம்பியை இழந்த சோகம் அங்கம் இழந்து நொண்டியாய் முடமாய் தன் ஜென்மம் முழுவதும் வாழ்ந்து தொலைக்க வேண்டிய ஆற்றாமை..உயிர் கொல்லும் பாஸ்பரஸிலும் இரசாயன நச்சிலும் ஜீவன் நசிந்து போன துக்கம் தலை முறைக்கும் ஜீவனில் கடத்தப்பட்டு அங்கவீனமாய் புத்தி பிறழ்ந்து பிறக்கும் பரம்பரையைப் பார்த்து ஆறாது அழுது நிற்கும் சோகம்...

இது காலத்தின் கட்டாயத் தேவையில்லை. கை நீட்டி காசு வாங்கிய இந்தக் களவாணியின் தேவை.


2002 ஆம் ஆண்டில் சிறிலங்காவுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் விடுதலைப் புலிகள் மேற்குலகம் சார்ந்து போய்விட்டனர் என்று இடி விழுந்தாற்போல் இருந்த இந்தியா -

விடுதலைப் புலிகள் சகலதுக்கும் தம்மை நோக்கியே இருக்கவேண்டும் என்பதற்காக திடீரென எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாடுதான் அமெரிக்க ஆதரவுப்போக்கு.

இந்தியா தனது ஏக சொத்தாக எண்ணிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் விவகாரத்தை மையமாக வைத்து, அமெரிக்கா தனது அக்குளுக்குள் புகுந்துவிட்டதை சற்றும் எதிர்பாராத இந்தியா, வேறு வழி இல்லாமல் மேற்கொண்ட திடீர் இராஜதந்திர நகர்வு இந்த அமெரிக்க ஆதரவு போக்கு என்று குறிப்பிடலாம்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்த கைச்சாத்து உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுடன் நெகிழ்வுப் போக்கை காண்பித்த இந்தியா,
-புதினம்


ஈழத் தமிழனுக்காகவே அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் போட்ட இந்தியா... பலே பலே. என்னமாய் மக்களுக்குப் பூச்சுத்துகின்றது இந்த மர மண்டூ.

"நாம் இருவரும் சேர்ந்து இந்து சமுத்திரத்தை ஆளலாம் வாருங்கள். ஆனால், சீனாவை இங்கு விட்டுவிடக்கூடாது" - என்ற கொள்கையை வகுத்து -

நேர இருந்த ஆபத்தை win - win சமரச கோட்பாட்டின் ஊடாக சாமர்த்தியமாக சமாளித்துக்கொண்டது.

இந்த விடயத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சாதுரியமாக காய்களை நகர்த்தினார் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்து சமுத்திர ஆளுமை கனவு, அங்கு கடல் பாதைகளுக்கான தேவை மற்றும் இந்தியா எனப்படுகின்ற பல கோடி டொலர்கள் மதிப்புள்ள இராஜ சந்தை ஆகியவற்றுக்கு கணக்கு போட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு வலிய வந்த இந்தியாவின் இந்த அரவணைப்பு
-புதினம்

இத்துடன் இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேட்பதற்கு நாதியில்லா ஈழத்தமிழினம்.. வெட்டிப்போட்டாலும் கொத்திப் போட்டாலும் யாரும் ஏன் என்று கேட்க முடியாது.. நீங்கள் மனச்சாட்சியுள்ளவர்கள் ஒதுங்கி நில்லுங்கள். நான் செய்து காட்டுகின்றேன்..என்று 50 ஆயிரம் மக்களை துடிக்கத் துடிக்க புல்டோசர் வைத்து மண்ணோடு மண்ணாக பாஸ்பரஸ் குண்டின் தீச்சுவாலைக்குள் பொசுங்கித் துடித்து மரணித்துப் போகச் செய்து காட்டியது அகிம்சை தேசம்.

மேற்குலகம் மூக்கில் விரலை வைத்து அதிர்ந்து போய் நின்றது. கொலை செவதும் கொலைக்கு உடந்தையாய் இருப்பதுவும் குற்றம். முதலில் கொலை செய்தவனை நீதியின் முன் நிறுத்துவோம். பின்னர் கொலைக்கு உடந்தையாய் இருந்தவனைப்பார்ப்போம் என்று இன்னும் கருணையை உதறாத மனச்சாட்சியை ஒறுக்காத நாகரீக மனிதர்களாக வாழ ஆசைப்படும் பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவும் ஐ.நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றங்களுக்கான பிரேரணையைக் கொண்டு வர முற்பட்டபோதெல்லாம் யாரை இந்து சமுத்திரப்பிராந்தியத்திற்குள் நுழைய அமெரிக்காவுடன் இந்தியா கூட்டுச் சேர்ந்தது என்று இந்த முட்டாள் உளறியதோ அதே சீனாவுடனும் யாரை ஜென்மத்துப் பகையாளியாக இதுவரை தன் நாட்டு மக்களுக்கு காட்டி, கருத்தை புகட்டி, விசத்தை ஊட்டி வந்ததோ அதே பாகிஸ்தானுடனும் கூட்டுச் சேர்ந்து மனிதமே வெட்கித் தலை குனிய இந்த நூற்றாண்டின் மனிதப் பேரழிவை நடாத்தி முடித்த சிறிலங்காவைக் காப்பாற்றியது.

அழிந்து பட்ட அவலத்திற்காளான ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு ஆறுதலையேனும் கொடுத்து விட கங்கணம் கட்டி சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவிற்கு வழங்கவிருந்த கடன் தொகையைத் தடுத்து விட அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முயன்றபோது கடன் கிடைக்காது விட்டாலும் கவலை வேண்டாம் அதனிலும் மேலான தொகையை தான் தருவதாக இதே பாரத மாதாகி இந்தியா தான் அபயம் கொடுத்தது. கோடிக்கணக்கான தன் மக்கள் சேரியில் கிடந்து புரண்டாலும் சிறிலங்காவிற்கு அள்ளிக் கொடுக்க ஏன் முன் வந்தது இந்த கூறு கெட்ட இந்தியா?

இதோ... இத்தனை நன்மைகளையும் ஓடியோடி ஈழத்தமிழனுக்கு செய்த இந்தியாவின் காலடியில் சரணடையச் செய்ய இந்த ஓதுவாருக்குத் தேவை என்ன வந்தது என்று ஒவ்வொரு தமிழ் மகனும் எண்ணிப்பார்க்க வேண்டும். இத்தகைய நச்சு விதையை "ஊடகங்கள்"என்ற போர்வையில் மக்களிடம் கொண்டு வரும் "புதினம்" போன்ற பச்சோந்திகளை இனஙகாண வேண்டும்.


சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் அடுத்த அடுத்த அரசியல் காண்டீபங்கள்; சிறிலங்காவை சிக்கலுக்குள் மாட்டுபவையாக இருக்கப்போகின்றன என்பது அடுத்த விடயம்.
-புதினம்

சிறிலங்காவிற்கு எதிராக இந்தியா ஒரு போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லையே. இந்தியா சிறிலங்காவைக் காப்பாற்றிய சந்தர்ப்பங்களைப் பட்டியல் இடலாம்.

போர்நிறுத்தம் வேண்டி கலைஞர் கடிதம் எழுதிய போது, " சிறிலங்கா இறைமையுள்ள நாடு அதன் உள்நாட்டு விடயங்களில் தலையிட முடியாது" என்று சிறிலங்காவைக் காப்பாற்றியது பிரணாப் முகர்ஜி.

ஐ.நாடுககள் பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக சிறிலங்காவின் களநிலவரத்தைப் பார்க்கப் போய் வந்து தன் "உத்தியோக பொறுப்பினையும்" தட்டிக்கழித்து ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபைக்கே உண்மையைச் சொல்லமுடியாது என்று தண்ணீ காட்டியது விஜய நம்பியார் என்ற இந்தியப் பருப்பு.

கலைஞரின் "அதிரடி மூன்று மணித்தியால" உண்ணாவிரத நேரத்தில் "போலிப் போர் நிறுத்தத்தை" அறிவித்து சிறிலங்காவைக் காப்பாற்றியது சிதம்பரம் என்ற போலித் தமிழன்.

புலிகளின் உயர் தலைமைப்பீடம் மேற்கு நாடுகளின் அரசியல் மட்டங்களுடன் கொண்ட உடன் பாட்டால் மிக நிச்சயமாக உண்டாகவிருந்த போர் நிறுத்தத்தை,தடுத்து நிறுத்த "தானாக கபடமாக உள்நுழைந்து" சிறிலங்கா அரச தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லி உடன் பாட்டிற்கு ஒத்துக் கொள்ள வைப்பதாகப் போக்குக் காட்டி தமிழர்களைக் கொன்று புதைப்பதற்கான போதுமான கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மலையாளி நச்சுக்கள் சிவசங்கர் மேனனும் எம்.கே நாராயணனும்.

சரித்திரம் இவ்வாறு இருக்க, சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் அடுத்த அடுத்த அரசியல் காண்டீபங்கள் -புதினம்

என்று இந்தப் புல்லுருவி ஏன் போக்குக் காட்டுகின்றது என்று ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இந்தியா வழிமொழிவதை அனுசரித்து அதன்மூலம் இந்தியாவை அனுசரித்து அதன் வழியாக இந்தியாவை தமிழ்மக்களின் வசப்படுத்தும் ஒரு படிமுறைக்குள் ஈழத் தமிழ் இனம் சென்று கொண்டால் மாத்திரமே எதிர்கால நடவடிக்கைகளுக்கும் - -புதினம்

இதை இதனிலும் நல்ல வார்த்தைகளில் சொல்லலாமே... இந்தியா இடும் பிச்சையை ..அது இடும் ஏவலை வாலையாட்டிக் கொண்டு செய்து எசமான விசுவாசம் காட்டினாலே எலும்புத் துண்டுகளைச் சுவைக்கலாம்...

தமிழ் இனம் தனது தேசியத் தலைவனது தலைமையின் கீழ் தனது வீரத்தை பார் எங்கும் பறைசாற்றி விட்டது. 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து 30 வருடங்களுக்கு மேலாக தமிழர் சேனை மேற்கொண்ட போராட்டம் உலகுக்கே சிம்ம சொப்பனமாக அமைந்தது. பிரபாகரன் என்ற ஒரு தலைவனாலும் அந்த தலைமையின் கீழ் போராடிய மக்களாலும்தான்....

-அடக்கப்பட்ட இனத்தின் கோரிக்கைகளை வீரத்தின் ஊடாக எடுத்துக்கூறினாலும் கூட மனிதாபிமான ரீதியான கோரிக்கைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் ஊடாக எடுத்துக்கூறினால் மாத்திரமே இன்றைய உலகம் செவிசாய்த்து செயலில் இறங்குகின்றது-
-புதினம்

இதைப் பிரபாகரனிடம் போய் சொல்லியிருக்க வேண்டியது தானே.. நல்ல தலைவனுக்கு நல்ல ஆலோசனைகள் தேவைபட்டிருக்குமே.. 1/3 பகுதி மண் பிரதேசத்தையும் 2/3 பகுதி கடற் பிரதேசத்தையும் விடுவித்து வைத்திருந்த போது இந்த அறிவுக்கொழுந்து பிரபாகரனுக்கு ஒரு மொட்டைக் கடிதமாவது அனுப்பியிருக்கலாமே... அண்ணா.அண்ணா...அடக்கப்பட்ட இனத்தின் கோரிக்கைகளை வீரத்தின் ஊடாக எடுத்துக்கூறினாலும் கூட மனிதாபிமான ரீதியான கோரிக்கைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் ஊடாக எடுத்துக்கூறினால் மாத்திரமே...

அப்படிச் செய்திருந்தால் ஒரு வேளை,

புலிகளும் தோற்றிருக்க மாட்டார்கள் ...50 ஆயிரம் இனிய தமிழ் உயிர்களும் காற்றில் கரைந்திருக்க மாட்டார்கள்...

அப்போது இந்தப் புல்லுருவி தன் புண்ணாக்கு மூளையை எங்கே பொத்தி வைத்திருந்தது.


உலகின் அனுதாபத்தையும் இந்தியாவின் இரக்கத்தையும் ஆழத்தொட்டுச் செல்லும் -புதினம்

உலகத்தின் அனுதாபம் எப்போதும் இருக்கின்றது.. இன்னும் நாங்கள் மனிதாபிமானம் சாகாத உலகில்த் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழனைப் பார்த்து இரக்கப்படுகின்ற மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்தியாவோ ஈழத்தமிழனின் இரத்தத்தையும் சுவைத்து அவன் எலும்பையும் முறிக்க இன்னும் கங்கணம் கட்டி நிற்கின்றது. அதை இப்படியான கூலிக்கும்பல் அடிக்கடி எங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலை எம்மக்களின் கைகளிலேயே தவிர இக்குடுமிகளின் கைகளிலேயோ அல்லது இவர்களுக்கு வேப்பிலை அடிக்கும் பூசாரிகளின் கைகளிலேயோ இல்லை என்பதில் நம் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

3 comments:

கண்டும் காணான் said...

புதினம் படித்து நொந்து போனவர்களில் நானும் ஒருவன். எமது இனத்தின் கதி இப்படியாகிவிட்டதே , ஆனால் இலங்கை ராணுவத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து , பயங்கரவாததிற்கு இதுவே பதில் என்றவர் மில்பான்ட் என்பதை மறந்து விட்டீர்களா ?

பதி said...

ஒன்றை தெளிவுபடுத்தி மக்களிடம் சொல்லுங்கள், இந்திய நலன், அதன் அதிகாரவர்க்கமுமே தமிழ் இனத்தின் நிரந்தர/ஆபத்தான எதிரி என...

நேற்று நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைக் குப்பையினை புதினத்தில் பார்த்த பொழுது எழுந்த உணர்வுகளில் சிலவற்றை உங்களது இந்த இடுகையில் காண்கின்றேன்...

புதினத்தின் நடவடிக்கைகள் உண்மையிலுமே சந்தேகம் வரவழைக்கின்றன...

இது போன்ற கட்டுரைகளைக் காட்டிலும், "சிங்களத்திடமே ஏன் அடிமையாக இருக்கக் கூடாது, அவர்கள் தருவதாக கதைவிட்டுத் திரியும் தீர்வுத் திட்டம் கூட நமக்குத் தேவையில்லை" போன்ற கட்டுரைகள் சற்றே நம்பும்படியாக இருக்கும்....

பாரதி said...

கட்டுரை ஆசிரியரைத் தலைவரே காசு கொடுத்து அமெரிக்கா அனுப்பியதாகவும், அது வந்த பிறகு தன் பாட்டில் தினவெடுத்துத் திரிகின்றது எனவும் கேள்வி.எது எப்படியோ புதினம் +தமிழ்நாதம் எல்லாம் பிழைப்புக்காகப் புலிப்பெயரை சொல்லிக்கொண்டிருக்கிற துரோகிகள். இன்னமும் இந்த இணயங்களை நம்பிச்சீரழிய வேண்டாம் என பலர் எச்சரிக்கை பண்ணியும் இவர்கள் தாங்கள் தான் தமிழர் முதலாளிமார் எண்டு அறிக்கை விடுகினம்.மேலும் ஒரு போர் வந்தால் தானே மரண அறிவித்தல் மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கும் அவர்களின் தமிழ்வின் மற்றும் லங்காசிறிகளுக்கு.அதானால் தான் இருக்கிற சனத்தை கொல்ல 3 வது போர் என்று கட்டுரை எழுதுகிறார் தெருப்புழுதி.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil