ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, July 5, 2009


சீனாவே எங்கள் உண்மையான வாழ்நாள் நண்பன் - இலங்கை


இலங்கையின் வாழ்நாள் நட்பு சீனாவே. அந்த இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லாகம நேற்று கூறியுள்ளார்.

சீனவுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் செய்துள்ளார் ரோஹித பொகல்லாகம. பீஜிங்கில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:

இலங்கை அரசுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சீனா தான் உதவியாக இருந்தது. எங்களுக்கு எல்லாவித ஒத்துழைப்பு கொடுப்பது சீனா மட்டும்தான்.

சீனா மட்டும்தான் எங்களுக்கு வாழ்நாள் நண்பனாக உள்ளது. வேறு எந்த நாடும் அப்படி இல்லை. சீனாவின் இடத்தில் வேறு நாட்டை வைத்துப் பார்க்கவும் முடியாது.

இன்று உலகில் சீனா மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது. ஆசிய மண்டலத்திலும் சீனாதான் ஆளுமை மிகுந்த நாடாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

உலக அளவிலும் சீனாவின் ஆதிக்கம் தற்போது மிகுந்துள்ளது. சீனா எப்போதும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்படும்.

தடையில்லாத வர்த்தக நிலையை சீனாவுக்கு இலங்கையில் ஏற்படுத்தித் தருவோம். அந்த நோக்கத்துடன்தான் நான் சீனாவுக்கு 5 நாள் பயணம் வந்துள்ளேன் என்றார்.

மருந்துகள் உள்பட சீனத்துப் பொருட்களுக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை முழுமையாக சந்தையைத் திறந்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவைச் சீண்டும் விதமாக இலங்கை நடந்து கொள்கிறது. புலிகளை ஒடுக்குவதில் இந்தியாவின் தேவை தீர்ந்ததும், இப்போது பீஜிங் போய் பல்லிளிக்கிறார் பொகல்லாகம.

சில தினங்களுக்கு முன் கோத்தபாய ராஜபக்ச கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ இணைய தளத்திலும் இந்தியாவைப் பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் குறித்தும் மிகக் கேவலமாக எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

2 comments:

மாசிலன் said...

மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி. இந்திய மத்திய அரசாங்கத்தின் அடாவடி அரசியல், இலங்கையின் இனப்பிரச்சினை ஆகியவைகளை சீனா தனக்கு சாதகமாக்கி தெற்கு ஆசியாவில் காலபதிக்க புத்தியற்ற சிங்களனுக்கு ஆசைகாட்டி தன்பக்கம் கவர்ந்திழுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் 'வீட்டோ' உரிமை பெற்ற, உலக பாதுகாப்பு கவுன்சிலில் அங்கத்தினரான சீனாவின் வால்பிடித்து சிங்களவனின் தமிழின அழிப்பு விவகாரங்கள் உலக அரங்கில் எடுபடாமல் புதைக்க, சீனனின் செலவில் இலவசத்தில் இலங்கைத்தீவில் பாலங்கள், ரோட்டு வசதிகள், பெரிய கட்டுமான பணிகள், எண்ணை கிணற்று சுத்திகரிப்பு பொறுப்புகள், பட்டாள பாதுகாப்பு பணிகள் ஆகியவை போன்றவைகளை பெறுவதற்கும் இலங்கைக்கு சீனாவின் தயவு முக்கிய தேவை. சிங்களவர்கள் இலங்கைத்தீவை சீனனுக்கு அடகுவைத்துவிட்டார்கள் அல்லது சீனா இலைங்கைத்தீவு முழுதையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது எனதான் சொல்லவேண்டும்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil